அத்தியாயம்: 5, பாடம்: 56, ஹதீஸ் எண்: 1104

و حَدَّثَنَا ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُثَنَّى ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ :‏‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا رَقَدَ أَحَدُكُمْ عَنْ الصَّلَاةِ أَوْ غَفَلَ عَنْهَا فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا فَإِنَّ اللَّهَ يَقُولُ أَقِمْ الصَّلَاةَ لِذِكْرَى

“உங்களில் ஒருவர் தொழாமல் உறங்கிவிட்டால், அல்லது கவனமில்லாமல் இருந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுதுகொள்ளட்டும். ஏனெனில், ‘என்னை நினைவுகூரும் பொருட்டுத் தொழுகையை நிலை நிறுத்துவீராக!’ என (20:14ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறுகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 56, ஹதீஸ் எண்: 1103

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ :‏‏

قَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ نَسِيَ صَلَاةً أَوْ نَامَ عَنْهَا فَكَفَّارَتُهَا أَنْ يُصَلِّيَهَا إِذَا ذَكَرَهَا

“ஒரு தொழுகையைத் தொழ மறந்துவிட்ட, அல்லது தொழாமல் உறங்கிவிட்ட ஒருவருக்கு அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 56, ஹதீஸ் எண்: 1102

حَدَّثَنَا ‏ ‏هَدَّابُ بْنُ خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ نَسِيَ صَلَاةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا لَا كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ ‏


قَالَ ‏ ‏قَتَادَةُ ‏ ‏وَأَقِمْ الصَّلَاةَ لِذِكْرِي ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ لَا كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ

“ஒரு தொழுகையைத் தொழ மறந்தவர், அதன் நினைவு வந்ததும் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

கத்தாதா (ரஹ்) வழி அறிவிப்பில், “என்னை நினைவுகூரும் பொருட்டுத் தொழுகையை நிலை நிறுத்துவீராக” எனும் (20:14ஆவது) வசனம் இடம்பெற்றுள்ளது.

அபூ இவானா (ரஹ்) வழிவரும் அறிவிப்புகளில், “இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை” எனும் குறிப்பு இடம் பெறவில்லை.

அத்தியாயம்: 5, பாடம்: 56, ஹதீஸ் எண்: 1101

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ ‏ ‏قَالَ :‏‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا كَانَ فِي سَفَرٍ ‏ ‏فَعَرَّسَ ‏ ‏بِلَيْلٍ اضْطَجَعَ عَلَى يَمِينِهِ وَإِذَا ‏ ‏عَرَّسَ ‏ ‏قُبَيْلَ الصُّبْحِ نَصَبَ ذِرَاعَهُ وَوَضَعَ رَأْسَهُ عَلَى كَفِّهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் பயணத்தின்போது இரவின் இறுதிப் பகுதியில் ஓய்வெடுப்பார்கள். தமது வலப் பக்கத்தில் சாய்ந்து படுப்பார்கள். அதிகாலைக்குச் சற்று முன்பாக ஓய்வெடுத்தால் தமது காலை நட்டு வைத்து தம் உள்ளங்கைகள்மீது தலையை வை(த்து மல்லாந்து படுத்திரு)ப்பார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 56, ஹதீஸ் எண்: 1100

و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَلْمُ بْنُ زَرِيرٍ الْعُطَارِدِيُّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا رَجَاءٍ الْعُطَارِدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏قَالَ : ‏

كُنْتُ مَعَ نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي مَسِيرٍ لَهُ ‏ ‏فَأَدْلَجْنَا ‏ ‏لَيْلَتَنَا حَتَّى إِذَا كَانَ فِي وَجْهِ الصُّبْحِ ‏ ‏عَرَّسْنَا ‏ ‏فَغَلَبَتْنَا أَعْيُنُنَا حَتَّى ‏ ‏بَزَغَتْ ‏ ‏الشَّمْسُ قَالَ فَكَانَ أَوَّلَ مَنْ اسْتَيْقَظَ مِنَّا ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَكُنَّا لَا نُوقِظُ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ مَنَامِهِ إِذَا نَامَ حَتَّى يَسْتَيْقِظَ ثُمَّ اسْتَيْقَظَ ‏ ‏عُمَرُ ‏ ‏فَقَامَ عِنْدَ نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَجَعَلَ يُكَبِّرُ وَيَرْفَعُ صَوْتَهُ بِالتَّكْبِيرِ حَتَّى اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمَّا رَفَعَ رَأْسَهُ وَرَأَى الشَّمْسَ قَدْ ‏ ‏بَزَغَتْ ‏ ‏قَالَ ارْتَحِلُوا فَسَارَ بِنَا حَتَّى إِذَا ‏ ‏ابْيَضَّتْ ‏ ‏الشَّمْسُ نَزَلَ فَصَلَّى بِنَا ‏ ‏الْغَدَاةَ ‏ ‏فَاعْتَزَلَ رَجُلٌ مِنْ الْقَوْمِ لَمْ يُصَلِّ مَعَنَا فَلَمَّا انْصَرَفَ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا فُلَانُ ‏ ‏مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ مَعَنَا قَالَ يَا نَبِيَّ اللَّهِ أَصَابَتْنِي جَنَابَةٌ فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَتَيَمَّمَ ‏ ‏بِالصَّعِيدِ ‏ ‏فَصَلَّى ثُمَّ ‏ ‏عَجَّلَنِي ‏ ‏فِي ‏ ‏رَكْبٍ ‏ ‏بَيْنَ يَدَيْهِ ‏ ‏نَطْلُبُ الْمَاءَ وَقَدْ عَطِشْنَا عَطَشًا شَدِيدًا فَبَيْنَمَا نَحْنُ نَسِيرُ إِذَا نَحْنُ بِامْرَأَةٍ ‏ ‏سَادِلَةٍ ‏ ‏رِجْلَيْهَا بَيْنَ ‏ ‏مَزَادَتَيْنِ ‏ ‏فَقُلْنَا لَهَا أَيْنَ الْمَاءُ قَالَتْ ‏ ‏أَيْهَاهْ ‏ ‏أَيْهَاهْ لَا مَاءَ لَكُمْ قُلْنَا فَكَمْ بَيْنَ أَهْلِكِ وَبَيْنَ الْمَاءِ قَالَتْ مَسِيرَةُ يَوْمٍ وَلَيْلَةٍ قُلْنَا انْطَلِقِي إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ وَمَا رَسُولُ اللَّهِ فَلَمْ نُمَلِّكْهَا مِنْ أَمْرِهَا شَيْئًا حَتَّى انْطَلَقْنَا بِهَا فَاسْتَقْبَلْنَا بِهَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَهَا فَأَخْبَرَتْهُ مِثْلَ الَّذِي أَخْبَرَتْنَا وَأَخْبَرَتْهُ أَنَّهَا ‏ ‏مُوتِمَةٌ ‏ ‏لَهَا صِبْيَانٌ أَيْتَامٌ فَأَمَرَ ‏ ‏بِرَاوِيَتِهَا ‏ ‏فَأُنِيخَتْ ‏ ‏فَمَجَّ ‏ ‏فِي ‏ ‏الْعَزْلَاوَيْنِ ‏ ‏الْعُلْيَاوَيْنِ ثُمَّ بَعَثَ ‏ ‏بِرَاوِيَتِهَا ‏ ‏فَشَرِبْنَا وَنَحْنُ أَرْبَعُونَ رَجُلًا عِطَاشٌ حَتَّى رَوِينَا وَمَلَأْنَا كُلَّ قِرْبَةٍ مَعَنَا وَإِدَاوَةٍ وَغَسَّلْنَا صَاحِبَنَا غَيْرَ أَنَّا لَمْ نَسْقِ بَعِيرًا وَهِيَ تَكَادُ ‏ ‏تَنْضَرِجُ ‏ ‏مِنْ الْمَاءِ ‏ ‏يَعْنِي ‏ ‏الْمَزَادَتَيْنِ ‏ ‏ثُمَّ قَالَ هَاتُوا مَا كَانَ عِنْدَكُمْ فَجَمَعْنَا لَهَا مِنْ كِسَرٍ وَتَمْرٍ ‏ ‏وَصَرَّ ‏ ‏لَهَا صُرَّةً فَقَالَ لَهَا اذْهَبِي فَأَطْعِمِي هَذَا عِيَالَكِ وَاعْلَمِي أَنَّا لَمْ ‏ ‏نَرْزَأْ ‏ ‏مِنْ مَائِكِ فَلَمَّا أَتَتْ أَهْلَهَا قَالَتْ لَقَدْ لَقِيتُ أَسْحَرَ الْبَشَرِ أَوْ إِنَّهُ لَنَبِيٌّ كَمَا زَعَمَ كَانَ مِنْ أَمْرِهِ ‏ ‏ذَيْتَ ‏ ‏وَذَيْتَ فَهَدَى اللَّهُ ذَاكَ ‏ ‏الصِّرْمَ ‏ ‏بِتِلْكَ الْمَرْأَةِ فَأَسْلَمَتْ وَأَسْلَمُوا ‏


حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏النَّضْرُ بْنُ شُمَيْلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَوْفُ بْنُ أَبِي جَمِيلَةَ الْأَعْرَابِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ ‏ ‏قَالَ ‏ ‏كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ ‏ ‏فَسَرَيْنَا ‏ ‏لَيْلَةً حَتَّى إِذَا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ قُبَيْلَ الصُّبْحِ ‏ ‏وَقَعْنَا ‏ ‏تِلْكَ ‏ ‏الْوَقْعَةَ ‏ ‏الَّتِي لَا ‏ ‏وَقْعَةَ ‏ ‏عِنْدَ الْمُسَافِرِ أَحْلَى مِنْهَا فَمَا أَيْقَظَنَا إِلَّا حَرُّ الشَّمْسِ وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ‏ ‏سَلْمِ بْنِ زَرِيرٍ ‏ ‏وَزَادَ وَنَقَصَ وَقَالَ فِي الْحَدِيثِ فَلَمَّا اسْتَيْقَظَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏وَرَأَى مَا أَصَابَ النَّاسَ وَكَانَ ‏ ‏أَجْوَفَ ‏ ‏جَلِيدًا ‏ ‏فَكَبَّرَ وَرَفَعَ صَوْتَهُ بِالتَّكْبِيرِ حَتَّى اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِشِدَّةِ صَوْتِهِ بِالتَّكْبِيرِ فَلَمَّا اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَكَوْا إِلَيْهِ الَّذِي أَصَابَهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا ‏ ‏ضَيْرَ ‏ ‏ارْتَحِلُوا وَاقْتَصَّ الْحَدِيثَ

நபி (ஸல்) மேற்கொண்ட ஒரு பயணத்தில் நானும் அவர்களுடன் கலந்து கொண்டிருந்தேன். அன்று நாங்கள் இரவு முழுவதும் பயணம் செய்தோம். அதிகாலை நேரம் நெருங்கியபோது நாங்கள் (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தோம். அப்போது எங்களையும் அறியாமல் கண்ணயர்ந்து, சூரியன் உதயமாகும்வரை உறங்கிவிட்டோம். எங்களில் அபூபக்ரு (ரலி) அவர்கள்தாம் முதலில் விழித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உறங்கிவிட்டால் அவர்கள் தாமாகவே கண் விழிக்காதவரை அவர்களை நாங்கள் உறக்கத்திலிருந்து எழுப்புவதில்லை. பிறகு உமர் (ரலி) எழுந்து நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று உரத்த குரலில் தக்பீர் கூறலானார்கள். (உமர் (ரலி) அவர்களின் தக்பீரைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விழித்துத் தலையை உயர்த்திப் பார்த்தபோது சூரியன் உதித்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே, “இங்கிருந்து புறப்படுங்கள்” என்று கூறினார்கள். பிறகு எங்களுடன் பயணம் புறப்பட்டார்கள். சூரியன் வெண்மையானபோது ஓரிடத்தில் இறங்கி எங்களுக்கு வைகறைத் தொழுகை (ஃபஜ்ருத்) தொழுவித்தார்கள்.

அப்போது ஒருவர் எங்களுடன் தொழாமல் மக்களைவிட்டு விலகியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்துத் திரும்பியதும் அவரிடம், “நீங்கள் எங்களுடன் தொழாமலிருக்கக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள், அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு(க்குளியல் கடமையாகி) விட்டது” என்றார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி அவர் மண்ணில் ‘தயம்மும்’ செய்துவிட்டுத் தொழுதார். அப்போது எங்களுக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டிருந்தது. எனவே, தம் முன்னிருந்த ஒரு பயணக் குழுவினருடன் சேர்ந்து தண்ணீர் தேடிவருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னை வேகப்படுத்தினார்கள். அவ்வாறே நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெண் தண்ணீர் நிரம்பிய இரு தோல் பைகளுக்கிடையே தன் கால்களைத் தொங்க விட்டபடி (ஒட்டகத்தில் வந்துகொண்டு) இருந்தாள்.

நாங்கள் அப்பெண்ணிடம், “தண்ணீர் எங்கே (கிடைக்கும்)?” என்று கேட்டோம், அதற்கு அப்பெண், “அது வெகு தொலைவில் உள்ளது. (இங்கு எங்கும்) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது” என்றாள். நாங்கள் “உன் குடும்பத்தா(ர் தங்கியி)ருக்கும் தண்ணீரு(ள்ள இடத்து)க்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது?” என்று கேட்டோம். அதற்கு அப்பெண், “ஒரு பகல் ஓர் இரவு பயண தூரம்” என்று பதிலளித்தாள்.

நாங்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீ நட!” என்றோம். அதற்கு அவள், “அல்லாஹ்வின் தூதரா? அவர் யார்?” என்று கேட்டாள். நாங்கள் என்ன சொல்லியும் அந்தப் பெண்ணை எங்களால் (தண்ணீர் தர) இசைய வைக்க முடியவில்லை. இறுதியில் அவளை அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துக்கொண்டு வந்தோம். அப்பெண்ணை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் கொண்டு நிறுத்தியபோது அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தண்ணீர் கேட்டார்கள். அவள் எங்களிடம் சொன்னதைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் சொன்னாள். மேலும், அவள் (தண்ணீர் சுமக்கும் தனது ஒட்டகத்திலிருந்தபடி) தான் அநாதைக் குழந்தைகளின் தாய் என்று கூறினாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கூறியதற்கிணங்க அவளது ஒட்டகம் மண்டியிட்டுப் படுக்கவைக்கப்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வாய் கொப்புளித்து அந்தத் தண்ணீர் பைகளின் மேவாயினூடே உமிழ்ந்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தைக் கிளப்பிவிட (அது எங்கள் அருகில் வந்தது) நாங்கள் தண்ணீர் அருந்தினோம். அங்கிருந்த நாங்கள் நாற்பது பேரும் தாகத்துடன் இருந்தோம். எங்கள் ஒட்டகங்களைத் தவிர நாங்கள் அனைவரும் தாகம் தீர நீரருந்தினோம். மேலும், எங்களிடமிருந்த அனைத்துத் தோல் பைகளிலும் பாத்திரங்களிலும் நீரை நிரப்பிக்கொண்டோம். (குளியல் கடமையாகிருந்த) எங்கள் தோழரைக் குளிக்கவைத்தோம். (ஆயினும்) அவ்விரு தண்ணீர் பைகளும் ஊதி வெடித்துவிடுமளவுக்கு நீர் (குறையாமல்) நிரம்பியிருந்தது.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களிடமுள்ள(உணவுப் பண்டத்)தைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் அந்தப் பெண்ணுக்காக ரொட்டித் துண்டுகளையும் பேரீச்சம் பழங்களையும் திரட்டினோம். பின்னர் அவற்றை ஒரு பையில் வைத்துக் கட்டியபின் அல்லாஹ்வின் தூதர் அவளிடம், “நீ சென்று உன் குடும்பத்தாருக்கு இதை ஊட்டுவாயாக! உனது தண்ணீரில் சிறிதும் நாங்கள் குறைத்துவிடவில்லை என்பதை அறிந்துகொள்வாயாக!” என்று கூறினார்கள்.

அப்பெண் தன் குடும்பத்தாரிடம் சென்று, “நான் (இன்று) சந்தித்தவர் மகாமந்திரவாதியாக இருக்க வேண்டும். அல்லது அவரே கூறியதைப் போன்று அவர் ஓர் இறைத்தூதராக இருக்க வேண்டும். அவர் மூலம் இன்னின்னவாறு (அற்புதம்) நிகழ்ந்தது!” என்று விவரித்துக் கூறினாள். அந்தப் பெண்ணால் அவளைச் சுற்றிலும் வாழ்ந்தவர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டினான். அவளும் அவர்களும் இஸ்லாத்தை ஏற்றனர்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸெய்ன் (ரலி)


குறிப்புகள் :

அவ்ஃப் பின் அபீஜமீலா அல்அஃராபீ (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தபோது ஓரிரவில் பயணித்தோம். இரவின் இறுதிப் பகுதியில் அதிகாலைக்கு முன்பாக ஓரிடத்தில் ஒரு தூக்கம் தூங்கினோம். ஒரு பயணிக்கு அதைவிட இனிமையான தூக்கம் வேறெதுவும் இருக்க முடியாது. (அந்த ஆழ்ந்த உறக்கத்திலிருந்து) எங்களைச் சூரிய வெப்பம்தான் விழிக்கச் செய்தது …” என்றும்

“..உரத்த குரலுக்கும் நெஞ்சுரத்துக்கும் உரிய உமர் பின் அல்கத்தாப் (ரலி), கண்விழித்து மக்களின் நிலையைக் கண்டபோது உரத்த குரலில் தக்பீர் சொன்னார்கள். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கண்விழித்தார்கள். அவர்களிடம் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட(உறக்கம் மிகைத்துவிட்ட)தைப் பற்றி முறையிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘போகட்டும், இங்கிருந்து புறப்படுங்கள்’ என்று கூறினார்கள்” என்றும் ஒரிரு சொற்கள் கூடுதல்-குறைவாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 56, ஹதீஸ் எண்: 1099

و حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ يَعْنِي ابْنَ الْمُغِيرَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ ‏ ‏قَالَ : ‏

خَطَبَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنَّكُمْ تَسِيرُونَ عَشِيَّتَكُمْ وَلَيْلَتَكُمْ وَتَأْتُونَ الْمَاءَ إِنْ شَاءَ اللَّهُ غَدًا فَانْطَلَقَ النَّاسُ لَا ‏ ‏يَلْوِي ‏ ‏أَحَدٌ عَلَى أَحَدٍ قَالَ ‏ ‏أَبُو قَتَادَةَ ‏ ‏فَبَيْنَمَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَسِيرُ حَتَّى ‏ ‏ابْهَارَّ ‏ ‏اللَّيْلُ وَأَنَا إِلَى جَنْبِهِ قَالَ فَنَعَسَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَمَالَ عَنْ ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏فَأَتَيْتُهُ ‏ ‏فَدَعَمْتُهُ ‏ ‏مِنْ غَيْرِ أَنْ أُوقِظَهُ حَتَّى اعْتَدَلَ عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏قَالَ ثُمَّ سَارَ حَتَّى ‏ ‏تَهَوَّرَ ‏ ‏اللَّيْلُ مَالَ عَنْ ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏قَالَ ‏ ‏فَدَعَمْتُهُ ‏ ‏مِنْ غَيْرِ أَنْ أُوقِظَهُ حَتَّى اعْتَدَلَ عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏قَالَ ثُمَّ سَارَ حَتَّى إِذَا كَانَ مِنْ آخِرِ ‏ ‏السَّحَرِ ‏ ‏مَالَ مَيْلَةً هِيَ أَشَدُّ مِنْ الْمَيْلَتَيْنِ الْأُولَيَيْنِ حَتَّى كَادَ ‏ ‏يَنْجَفِلُ ‏ ‏فَأَتَيْتُهُ ‏ ‏فَدَعَمْتُهُ ‏ ‏فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ مَنْ هَذَا قُلْتُ ‏ ‏أَبُو قَتَادَةَ ‏ ‏قَالَ مَتَى كَانَ هَذَا مَسِيرَكَ مِنِّي قُلْتُ مَا زَالَ هَذَا مَسِيرِي مُنْذُ اللَّيْلَةِ قَالَ حَفِظَكَ اللَّهُ بِمَا حَفِظْتَ بِهِ نَبِيَّهُ
‏ثُمَّ قَالَ هَلْ ‏ ‏تَرَانَا ‏ ‏نَخْفَى عَلَى النَّاسِ ثُمَّ قَالَ هَلْ ‏ ‏تَرَى مِنْ أَحَدٍ قُلْتُ هَذَا رَاكِبٌ ثُمَّ قُلْتُ هَذَا رَاكِبٌ آخَرُ حَتَّى اجْتَمَعْنَا فَكُنَّا سَبْعَةَ رَكْبٍ
‏قَالَ فَمَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الطَّرِيقِ فَوَضَعَ رَأْسَهُ ثُمَّ قَالَ احْفَظُوا عَلَيْنَا صَلَاتَنَا فَكَانَ أَوَّلَ مَنْ اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالشَّمْسُ فِي ظَهْرِهِ قَالَ فَقُمْنَا ‏ ‏فَزِعِينَ ‏ ‏ثُمَّ قَالَ ارْكَبُوا فَرَكِبْنَا فَسِرْنَا حَتَّى إِذَا ارْتَفَعَتْ الشَّمْسُ نَزَلَ ثُمَّ دَعَا ‏ ‏بِمِيضَأَةٍ ‏ ‏كَانَتْ مَعِي فِيهَا شَيْءٌ مَنْ مَاءٍ قَالَ فَتَوَضَّأَ مِنْهَا وُضُوءًا دُونَ وُضُوءٍ قَالَ وَبَقِيَ فِيهَا شَيْءٌ مِنْ مَاءٍ ثُمَّ قَالَ ‏ ‏لِأَبِي قَتَادَةَ ‏ ‏احْفَظْ عَلَيْنَا ‏ ‏مِيضَأَتَكَ ‏ ‏فَسَيَكُونُ لَهَا نَبَأٌ
ثُمَّ أَذَّنَ ‏ ‏بِلَالٌ ‏ ‏بِالصَّلَاةِ فَصَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَكْعَتَيْنِ ثُمَّ صَلَّى ‏ ‏الْغَدَاةَ ‏ ‏فَصَنَعَ كَمَا كَانَ يَصْنَعُ كُلَّ يَوْمٍ
قَالَ وَرَكِبَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَرَكِبْنَا مَعَهُ قَالَ فَجَعَلَ بَعْضُنَا يَهْمِسُ إِلَى بَعْضٍ مَا كَفَّارَةُ مَا صَنَعْنَا بِتَفْرِيطِنَا فِي صَلَاتِنَا ثُمَّ قَالَ أَمَا لَكُمْ فِيَّ أُسْوَةٌ ثُمَّ قَالَ أَمَا إِنَّهُ لَيْسَ فِي النَّوْمِ ‏ ‏تَفْرِيطٌ ‏ ‏إِنَّمَا ‏ ‏التَّفْرِيطُ ‏ ‏عَلَى مَنْ لَمْ يُصَلِّ الصَّلَاةَ حَتَّى يَجِيءَ وَقْتُ الصَّلَاةِ الْأُخْرَى فَمَنْ فَعَلَ ذَلِكَ فَلْيُصَلِّهَا حِينَ يَنْتَبِهُ لَهَا فَإِذَا كَانَ الْغَدُ فَلْيُصَلِّهَا عِنْدَ وَقْتِهَا
ثُمَّ قَالَ مَا تَرَوْنَ النَّاسَ صَنَعُوا قَالَ ثُمَّ قَالَ أَصْبَحَ النَّاسُ فَقَدُوا نَبِيَّهُمْ فَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَعُمَرُ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعْدَكُمْ لَمْ يَكُنْ لِيُخَلِّفَكُمْ وَقَالَ النَّاسُ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَ أَيْدِيكُمْ فَإِنْ يُطِيعُوا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏يَرْشُدُوا
قَالَ فَانْتَهَيْنَا إِلَى النَّاسِ حِينَ امْتَدَّ النَّهَارُ وَحَمِيَ كُلُّ شَيْءٍ وَهُمْ يَقُولُونَ يَا رَسُولَ اللَّهِ هَلَكْنَا عَطِشْنَا فَقَالَ لَا ‏ ‏هُلْكَ عَلَيْكُمْ ثُمَّ قَالَ أَطْلِقُوا لِي ‏ ‏غُمَرِي ‏ ‏قَالَ وَدَعَا ‏ ‏بِالْمِيضَأَةِ ‏ ‏فَجَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصُبُّ ‏ ‏وَأَبُو قَتَادَةَ ‏ ‏يَسْقِيهِمْ فَلَمْ يَعْدُ أَنْ رَأَى النَّاسُ مَاءً فِي ‏ ‏الْمِيضَأَةِ ‏ ‏تَكَابُّوا ‏ ‏عَلَيْهَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحْسِنُوا الْمَلَأَ كُلُّكُمْ ‏ ‏سَيَرْوَى
قَالَ فَفَعَلُوا فَجَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصُبُّ ‏ ‏وَأَسْقِيهِمْ حَتَّى مَا بَقِيَ غَيْرِي وَغَيْرُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ثُمَّ صَبَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لِي ‏ ‏اشْرَبْ فَقُلْتُ لَا أَشْرَبُ حَتَّى تَشْرَبَ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ سَاقِيَ الْقَوْمِ آخِرُهُمْ شُرْبًا قَالَ فَشَرِبْتُ وَشَرِبَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَأَتَى النَّاسُ الْمَاءَ ‏ ‏جَامِّينَ رِوَاءً


قَالَ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ رَبَاحٍ ‏ ‏إِنِّي لَأُحَدِّثُ هَذَا الْحَدِيثَ فِي ‏ ‏مَسْجِدِ الْجَامِعِ ‏ ‏إِذْ قَالَ ‏ ‏عِمْرَانُ بْنُ حُصَيْنٍ ‏ ‏انْظُرْ أَيُّهَا الْفَتَى كَيْفَ تُحَدِّثُ فَإِنِّي أَحَدُ ‏ ‏الرَّكْبِ ‏ ‏تِلْكَ اللَّيْلَةَ قَالَ قُلْتُ فَأَنْتَ أَعْلَمُ بِالْحَدِيثِ فَقَالَ مِمَّنْ أَنْتَ قُلْتُ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏قَالَ حَدِّثْ فَأَنْتُمْ أَعْلَمُ بِحَدِيثِكُمْ قَالَ فَحَدَّثْتُ الْقَوْمَ فَقَالَ ‏ ‏عِمْرَانُ ‏ ‏لَقَدْ شَهِدْتُ تِلْكَ اللَّيْلَةَ وَمَا شَعَرْتُ أَنَّ أَحَدًا حَفِظَهُ كَمَا حَفِظْتُهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (கைபர் போரிலிருந்து திரும்பும்போது) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது “இன்று மாலையும் இரவும் நீங்கள் பயணம் செய்தால் இன்ஷா அல்லாஹ் நாளை(காலை) ஒரு நீர்நிலையை அடைவீர்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே மக்கள் யாரும் யாரையும் கவனிக்காமல் பயணத்தில் கண்ணாயினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நடுநிசி நேரம்வரைப் பயணம் செய்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இலேசாக உறக்கம் வரவே, அவர்கள் தமது வாகனத்திலிருந்து சற்றே சாய்ந்தார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அவர்களது உறக்கத்தைக் கலைக்காமல் அவர்களைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளவே, தமது வாகனத்தில் நேராக அமர்ந்துகொண்டார்கள். பிறகு தொடர்ந்து பயணம் செய்து இரவின் பெரும்பகுதி கடந்தபோது (மீண்டும்) உறங்கித் தமது வாகனத்திலிருந்து சற்றே சாய்ந்தார்கள். அப்போதும் நான் அவர்களது உறக்கத்தைக் கலைக்காமல் அவர்களைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளவே, தமது வாகனத்தில் நேராக அமர்ந்துகொண்டார்கள். பிறகு இன்னும் (சிறிது தூரம்) பயணம் செய்து இரவின் இறுதிப் பகுதியானபோது முன்னர் இரு முறை சாய்ந்ததைவிட அதிகமாகச் சாய்ந்து கீழே விழப்போனார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அவர்களை (மீண்டும்) தாங்கிப் பிடித்துக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  தமது தலையை உயர்த்தி, “யார்?” என்று கேட்டார்கள். “அபூகத்தாதா” என்றேன். “நீங்கள் எப்போதிருந்து என்னருகில் பயணம் செய்துவருகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். நான் “இரவிலிருந்து இவ்வாறு உங்கள் அருகிலேயே பயணம் செய்துவருகின்றேன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அல்லாஹ்வின் தூதரை நீங்கள் காத்த காரணத்தால் அல்லாஹ்வும் உங்களைக் காப்பானாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

பிறகு “நாம் மக்களைவிட்டு மறைந்து (வெகு தொலைவிற்கு வந்து)விட்டோமா?” எனக் கேட்டார்கள். பின்னர் “மக்களில் யாரேனும் தென்படுகிறார்களா (என்று பாருங்கள்!)?” என்றார்கள். நான், “இதோ ஒரு பயணி” என்றேன். பிறகு “இதோ மற்றொரு பயணி” என்றேன். இறுதியில் நாங்கள் ஏழு பயணிகள் ஒன்றுசேர்ந்துவிட்டோம்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது பயண வழியிலிருந்து விலகி (ஓரிடத்திற்குச் சென்று உறங்குவதற்காகத்) தமது தலையை (ஓரிடத்தில்) சாய்த்தார்கள். பிறகு, “நீங்கள் எமது தொழுகையைக் காக்க (என்னைத் தொழுகைக்காக எழுப்ப) வேண்டும்” என்றார்கள். (ஆனால், நாங்கள் அனைவரும் உறங்கிவிட்டோம்) சூரிய ஒளி முதுகில் பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் முதலில் கண் விழித்தார்கள். உடனே நாங்கள் திடுக்கிட்டு விழித்தெழுந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (எங்களிடம்), “(இங்கிருந்து உடனே உங்கள் வாகனங்களில்) ஏறிப் புறப்படுங்கள்” என்றார்கள். உடனே நாங்கள் வாகனங்களில் ஏறிப் புறப்பட்டோம். சூரியன் நன்கு உதயமானபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது வாகனத்திலிருந்து) இறங்கினார்கள். பிறகு தண்ணீர் குவளையைக் கொண்டுவரச் சொன்னார்கள். அந்தக் குவளை என்னிடத்தில்தான் இருந்தது. அதில் சிறிதளவு தண்ணீரும் இருந்தது. பிறகு அதிலிருந்த தண்ணீரால் சிக்கனமாக உளூச் செய்தார்கள். அதில் சிறிதளவு தண்ணீர் எஞ்சியது. என்னிடம், “நமக்காக உமது தண்ணீர் குவளையைப் பத்திரப்படுத்திக் கொள்வீராக! விரைவில் இதில் ஒரு (அதிசய) நிகழ்வு நிகழவிருக்கிறது” என்றார்கள்.

அடுத்து பிலால் (ரலி) தொழுகைக்கான அழைப்புக் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரண்டு ரக்அத் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுதார்கள். பின்னர் அதிகாலைத் தொழுகையைத் தொழுதார்கள். (இதையெல்லாம்) எல்லா நாளும் செய்வதைப் போன்றே செய்தார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), வாகனத்தில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நாங்களும் வாகனங்களில் ஏறி அவர்களுடன் சென்றோம். அப்போது எங்களுக்குள், “நமது தொழுகை விஷயத்தில் நாம் செய்துவிட்ட குறைபாட்டிற்குப் பரிகாரம் என்ன?” என்று இரகசியமாகக் கேட்டுக்கொண்டோம். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அறிந்து கொள்ளுங்கள்! என்னிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கின்றதல்லவா?” என்று கேட்டுவிட்டு, “அறிந்து கொள்ளுங்கள்! உறக்கத்தால் குறைபாடு ஏற்பட்டு விடுவதில்லை; குறைபாடெல்லாம் ஒருதொழுகையை மறுதொழுகை நேரம் வரும்வரை தொழாமல் இருப்பதுதான். ஒரு தொழுகையை(த் தவற) விட்டவர் அது பற்றிய உணர்வு வந்தவுடன் தொழுதுகொள்ளட்டும். மறுநாளின் தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுதுகொள்ளட்டும்”என்றார்கள்.

பிறகு “மக்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்?” என்று (தம்முடன் இருந்த தோழர்களிடம்) கேட்டுவிட்டு, “மக்கள் தங்களுடைய நபியைக் காணாமல் தேடிக்கொண்டிருப்பார்கள்; அபூபக்ரும் உமரும் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்களைப் பின்னால் விட்டுவிட்டுச் சென்றுவிடமாட்டார்கள்’ என்று மக்களிடம் கூறுவார்கள். ஆனால், மற்றவர்களோ, ‘(இல்லை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களுக்கு முன்பே சென்றுவிட்டார்கள்’ என்று கூறுவார்கள். மக்கள் அபூபக்ருக்கும் உமருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் அவர்கள் நேர்வழியடைவார்கள்” என்று கூறினார்கள்.

பிறகு நாங்கள் மக்களிடம் நண்பகல் நேரத்தில் சென்றடைந்தோம். அப்போது (வெப்பத்தால்) பொருட்களெல்லாம் சூடேறி விட்டிருந்தன. மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அழிந்தோம்; எங்களுக்கு(க் கடுமையான) தாகம் ஏற்பட்டுள்ளது”என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களுக்கு அழிவு ஏற்படாது” என்றார்கள். பிறகு, “எனது சிறிய பாத்திரத்தை எடுத்து வாருங்கள்!” என்று கூறி அந்த நீர்குவளையைக் கேட்டார்கள். பின்னர் (அதிலிருந்து சிறிது தண்ணீரை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஊற்ற, அதை நான் மக்களுக்குப் புகட்டிக்கொண்டிருந்தேன். மக்கள் அந்தக் குவளைத் தண்ணீரைக் கண்டவுடன், (முண்டியடித்து) அதன் மீது விழுந்தனர். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கண்ணியம் காப்பீர்; உங்கள் அனைவரின் தாகமும் தீரும்” என்றார்கள். அவவாறே மக்கள் நடந்துகொண்டனர்.

இவ்விதம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தண்ணீர் ஊற்ற, அதை நான் மக்களுக்குப் புகட்டிக்கொண்டிருந்தேன். இறுதியில் என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர வேறெவரும் மிஞ்சவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தண்ணீரை (என்முன் ஊற்றி) “நீங்கள் பருகுங்கள்!” என்றார்கள். நான், “நீங்கள் பருகாதவரை நான் பருகமாட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மக்களுக்குத் தண்ணீர் புகட்டுபவரே அவர்களில் இறுதியாகப் பருக வேண்டும்” என்றார்கள். ஆகவே, நான் பருகினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (இறுதியாகப்) பருகினார்கள். பின்னர், அந்தத் தண்ணீரிடம் வந்த மக்கள் தாகம் தணிந்து, மனநிறைவுடன் காணப்பட்டனர்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் ரபாஹ் (ரஹ்) கூறுகின்றார்கள்:

நான் இந்த ஹதீஸை ஜுமுஆப் பள்ளிவாசலில் அறிவிக்கத் தொடங்கியபோது, (அங்கிருந்த) நபித்தோழர் இம்ரான் பின் ஹுஸெய்ன் (ரலி), “இளைஞரே! நீங்கள் அறிவிப்பதை கவனமாக அறிவியுங்கள். ஏனெனில்,அன்றிரவு பயணம் செய்த குழுவினரில் நானும் ஒருவனாக இருந்தேன்” என்றார்கள். நான், “அப்படியானால், நீங்கள்தாம் இந்த ஹதீஸ் தொடர்பாக நன்கு அறிவீர்கள்” என்றேன். அதற்கு இம்ரான் பின் ஹுஸெய்ன் (ரலி), “நீங்கள் யாரென்று சொல்லுங்களேன்?” என்று கேட்டார்கள். நான், “அன்ஸாரிகளில் ஒருவன்” என்றேன். அதற்கு அவர்கள், “அப்படியானால் நீங்களே அறிவியுங்கள். (அன்ஸாரிகளாகிய) நீங்கள்தாம் உங்களது ஹதீஸ் தொடர்பாக நன்கு அறிவீர்கள்” என்றார்கள். ஆகவே, நான் மக்களிடம் (இந்த ஹதீஸை முழுமையாக) அறிவித்தேன். அப்போது இம்ரான் பின் ஹுஸெய்ன் (ரலி), “அன்றிரவு (பயணத்தில்) நானும் கலந்துகொண்டேன். ஆனால், நீங்கள் இதை மனனமிட்டிருப்பதைப் போன்று வேறெவரும் மனனமிட்டிருப்பார்கள் என்று நான் கருதவில்லை” என்றார்கள்.

அத்தியாயம்: 5, பாடம்: 56, ஹதீஸ் எண்: 1098

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ كَيْسَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏

عَرَّسْنَا ‏ ‏مَعَ نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمْ نَسْتَيْقِظْ حَتَّى طَلَعَتْ الشَّمْسُ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِيَأْخُذْ كُلُّ رَجُلٍ بِرَأْسِ ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏فَإِنَّ هَذَا مَنْزِلٌ حَضَرَنَا فِيهِ الشَّيْطَانُ قَالَ فَفَعَلْنَا ثُمَّ دَعَا بِالْمَاءِ فَتَوَضَّأَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ وَقَالَ ‏ ‏يَعْقُوبُ ‏ ‏ثُمَّ صَلَّى سَجْدَتَيْنِ ثُمَّ أُقِيمَتْ الصَّلَاةُ فَصَلَّى ‏ ‏الْغَدَاةَ

நாங்கள் (ஓர்) இரவில் நபி (ஸல்) அவர்களுடன் ஓய்வெடுத்தோம். சூரியன் உதயமாகும்வரை நாங்கள் (யாரும்) விழிக்கவில்லை. பிறகு நபி (ஸல்) (எழுந்து), “ஒவ்வொருவரும் தமது வாகனத்தின் தலையைப் பிடித்து(க்கொண்டு இங்கிருந்து விரைந்து நகர்ந்து) செல்லட்டும். ஏனெனில், இந்த இடத்தில் நம்மிடம் ஷைத்தான் வந்துவிட்டான்” என்று கூறினார்கள். நாங்கள் அவ்வாறே (பயணம்) செய்தோம். பிறகு (சிறிது தூரம் சென்றதும்) தண்ணீர் கொண்டுவரச் சொல்லி உளூச் செய்தார்கள், பிறகு இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுதார்கள். பிறகு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட, வைகறைத் தொழுகை (ஃபஜ்ருத்) தொழுவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 5.56, ஹதீஸ் எண்: 1097

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ ‏ ‏قَفَلَ ‏ ‏مِنْ ‏ ‏غَزْوَةِ ‏ ‏خَيْبَرَ ‏ ‏سَارَ لَيْلَهُ حَتَّى إِذَا أَدْرَكَهُ ‏ ‏الْكَرَى ‏ ‏عَرَّسَ ‏ ‏وَقَالَ ‏ ‏لِبِلَالٍ ‏ ‏اكْلَأْ ‏ ‏لَنَا اللَّيْلَ فَصَلَّى ‏ ‏بِلَالٌ ‏ ‏مَا قُدِّرَ لَهُ وَنَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابُهُ فَلَمَّا تَقَارَبَ الْفَجْرُ اسْتَنَدَ ‏ ‏بِلَالٌ ‏ ‏إِلَى رَاحِلَتِهِ مُوَاجِهَ الْفَجْرِ فَغَلَبَتْ ‏ ‏بِلَالًا ‏ ‏عَيْنَاهُ وَهُوَ مُسْتَنِدٌ إِلَى رَاحِلَتِهِ فَلَمْ يَسْتَيْقِظْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَا ‏ ‏بِلَالٌ ‏ ‏وَلَا أَحَدٌ مِنْ أَصْحَابِهِ حَتَّى ضَرَبَتْهُمْ الشَّمْسُ فَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوَّلَهُمْ اسْتِيقَاظًا فَفَزِعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَيْ ‏ ‏بِلَالُ ‏ ‏فَقَالَ ‏ ‏بِلَالٌ ‏ ‏أَخَذَ بِنَفْسِي الَّذِي أَخَذَ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ بِنَفْسِكَ قَالَ ‏ ‏اقْتَادُوا ‏ ‏فَاقْتَادُوا ‏ ‏رَوَاحِلَهُمْ ‏ ‏شَيْئًا ثُمَّ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَمَرَ ‏ ‏بِلَالًا ‏ ‏فَأَقَامَ الصَّلَاةَ فَصَلَّى بِهِمْ الصُّبْحَ فَلَمَّا قَضَى الصَّلَاةَ قَالَ مَنْ نَسِيَ الصَّلَاةَ فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا فَإِنَّ اللَّهَ قَالَ ‏‏أَقِمْ الصَّلَاةَ لِذِكْرِي ‏


قَالَ ‏ ‏يُونُسُ ‏ ‏وَكَانَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏يَقْرَؤُهَا لِلذِّكْرَى

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கைபர் போரிலிருந்து திரும்பியபோது இரவு முழுவதும் பயணம் செய்து, இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்துவிடவே (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம் “இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக!” என்றார்கள். பிலால் (ரலி) (கண் விழித்து) அவர்களுக்கு இயன்றளவு தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (படுத்து) உறங்கினார்கள். வைகறை நேரம் நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) வைகறை(கிழக்கு)த் திசையை முன்னோக்கியபடி தமது வாகன(ஒட்டக)த்தில் சாய்ந்து அமர்ந்து, தம்மையும் அறியாமல் கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, பிலால் (ரலி) அவர்களோ, நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும்வரை விழிக்கவில்லை. முதலாமவராக விழித்தெழுந்தவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம். பதறியபடியே “பிலால்!” என்றழைத்தார்கள். பிலால் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! உங்களை (மிகைத்துப்) பிடித்துக் கொண்ட அதே(உறக்கம்)தான் என்னையும் பிடித்துக்கொண்டது”என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தோழர்களிடம்) “உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள்”என்று கூற, உடனே மக்கள் தம் வாகனங்களைச் செலுத்தி, சிறிது தூரம் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இறங்கி) உளூச் செய்தார்கள். பிலால் (ரலி) அவர்களிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். தொழுது முடிந்ததும், “தொழுகையை மறந்துவிட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுதுகொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ், “என்னை நினைவுகூரும் பொருட்டுத் தொழுகையை நிலைநிறுத்துவீராக!’ (20:14) என்று கூறுகின்றான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான யூனுஸ் (ரஹ்), “(மேற்கண்ட 20:14ஆவது வசனத்திலுள்ள ‘லிதிக்ரீ’ எனும் சொல்லை, இப்னு ஷிஹாப் (ரஹ்) ‘லித்திக்ரா’ என்று ஓதுவார்கள்” எனக் குறிப்பிடுகின்றார்.