حَدَّثَنِي الْحَكَمُ بْنُ مُوسَى أَبُو صَالِحٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَأَخْبَرَهُ :
أَنَّ النَّاسَ نَزَلُوا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْحِجْرِ أَرْضِ ثَمُودَ فَاسْتَقَوْا مِنْ آبَارِهَا وَعَجَنُوا بِهِ الْعَجِينَ فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُهَرِيقُوا مَا اسْتَقَوْا وَيَعْلِفُوا الإِبِلَ الْعَجِينَ وَأَمَرَهُمْ أَنْ يَسْتَقُوا مِنَ الْبِئْرِ الَّتِي كَانَتْ تَرِدُهَا النَّاقَةُ
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ، بِهَذَا الإِسْنَادِ . مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ فَاسْتَقَوْا مِنْ بِئَارِهَا وَاعْتَجَنُوا بِهِ
மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தபூக் பயணத்தில்) ஸமூதுக் கூட்டத்தார் வாழ்ந்த பகுதியான ’ஹிஜ்ரு’ பிரதேசத்தில் இறங்கி, அங்கிருந்த கிணறுகளில் நீரிறைத்தார்கள். அதைக் கொண்டு மாவு குழைத்தார்கள்.
அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைத்த நீரைக் கொட்டிவிடுமாறும், (அந்த நீரால்) குழைக்கப்பட்ட அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டுவிடுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும், (ஸாலிஹ் நபியின்) ஒட்டகம் வந்து நீரருந்திய கிணற்றிலிருந்து நீரிறைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
குறிப்பு :
அனஸ் பின் இஆழ் (ரஹ்) வழி அறிவிப்பில், (“கிணறுகளிலிருந்து” என்பதைக் குறிக்க “ஆபார்” என்பதற்குப் பதிலாக) “பிஆர்” என்ற சொல்லும், (“குழைத்தார்கள்” என்பதைக் குறிக்க “அஜனூ” என்பதற்குப் பதிலாக) “இஃதஜனூ” என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளன.