அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1114

حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ وَهُوَ ابْنُ زَيْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى الظُّهْرَ ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏أَرْبَعًا وَصَلَّى الْعَصْرَ ‏ ‏بِذِي الْحُلَيْفَةِ ‏ ‏رَكْعَتَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ருத் தொழுதார்கள்; (மக்காவுக்குச் செல்லும் பயணத்தில்) துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸ்ருத் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1113

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصِ بْنِ عَاصِمٍ ‏ ‏قَالَ ‏

مَرِضْتُ مَرَضًا فَجَاءَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏يَعُودُنِي ‏ ‏قَالَ وَسَأَلْتُهُ عَنْ ‏ ‏السُّبْحَةِ ‏ ‏فِي السَّفَرِ فَقَالَ ‏ ‏صَحِبْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي السَّفَرِ فَمَا رَأَيْتُهُ ‏ ‏يُسَبِّحُ ‏ ‏وَلَوْ كُنْتُ ‏ ‏مُسَبِّحًا ‏ ‏لَأَتْمَمْتُ وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى ‏‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ

நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிப்பதற்காக (என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) வந்தார்கள். அவர்களிடம் நான் பயணத்தில் (ஸுன்னத்தான) கூடுதல் தொழுகைகள் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணத்தில்) இருந்திருக்கிறேன். அவர்கள் (இந்தக்) கூடுதலான தொழுகைகள் தொழுவதை நான் பார்த்ததேயில்லை. நான் (பயணத்தில்) கூடுதலான தொழுகைகளைத் தொழுபவனாயிருந்தால் (கடமையான தொழுகையையே) நிறைவாகத் தொழுதிருப்பேன். ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது’ (33:21) என்று உயர்ந்தோனான அல்லாஹ் கூறுகின்றான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஹஃப்ஸிப்னு ஆஸிம் பின் உமர் பின் அல்கத்தாப் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1112

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِيسَى بْنُ حَفْصِ بْنِ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏ ‏صَحِبْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏فِي طَرِيقِ ‏ ‏مَكَّةَ ‏ ‏قَالَ فَصَلَّى لَنَا الظُّهْرَ رَكْعَتَيْنِ ثُمَّ أَقْبَلَ وَأَقْبَلْنَا مَعَهُ حَتَّى جَاءَ ‏ ‏رَحْلَهُ ‏ ‏وَجَلَسَ وَجَلَسْنَا مَعَهُ فَحَانَتْ مِنْهُ الْتِفَاتَةٌ نَحْوَ حَيْثُ صَلَّى فَرَأَى نَاسًا قِيَامًا فَقَالَ مَا يَصْنَعُ هَؤُلَاءِ قُلْتُ ‏ ‏يُسَبِّحُونَ ‏ ‏قَالَ لَوْ كُنْتُ مُسَبِّحًا لَأَتْمَمْتُ صَلَاتِي ‏

يَا ابْنَ أَخِي إِنِّي ‏ ‏صَحِبْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي السَّفَرِ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ وَصَحِبْتُ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ وَصَحِبْتُ ‏ ‏عُمَرَ ‏ ‏فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ ثُمَّ صَحِبْتُ ‏ ‏عُثْمَانَ ‏ ‏فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ وَقَدْ قَالَ اللَّهُ ‏‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ

நான் (என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர்களுடன் மக்கா செல்லும் பாதையில் (ஒரு பயணத்தில்) இருந்தபோது இப்னு உமர் (ரலி), லுஹ்ருத் தொழுகையை எங்களுக்கு இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். பிறகு தமது ஓய்விடம் நோக்கிச் சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம்; அவர்கள் அமர்ந்தபோது அவர்களுடன் நாங்களும் அமர்ந்தோம். அப்போது தாம் தொழுதுவிட்டு வந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தார்கள். அங்கு சிலர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டு, “அவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்டார்கள். “கூடுதல் (ஸுன்னத்) தொழுகைகளைத் தொழுது கொண்டிருக்கிறார்கள்” என்று நான் பதிலளித்தேன். “கூடுதல் தொழுகைகளை தொழுபவனாக நானிருந்தால் எனது (கடமையான) தொழுகையை (பயணத்தில்) நிறைவாகத் தொழுத்திருப்பேனே! என் சகோதரர் மகனே! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்திருக்கிறேன். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை பயணத்தின்போது (கடமையான) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாக (ஸுன்னத் தொழுகைகளை) அவர்கள் தொழுததில்லை.

நான் அபூபக்ரு (ரலி) அவர்களுடனும் (பயணத்தில்) இருந்திருக்கிறேன். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை அவர்களும் (பயணத்தின்போது) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். நான் உமர் (ரலி) அவர்களுடனும் (பயணத்தில்) இருந்திருக்கிறேன். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை அவர்களும் (பயணத்தின்போது) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். பிறகு நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும் (பயணத்தில்) இருந்திருக்கிறேன். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை அவர்களும் (பயணத்தின்போது) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது’ (33:21) என்று அல்லாஹ் கூறுகின்றான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஹஃப்ஸிப்னு ஆஸிம் பின் உமர் பின் அல்கத்தாப் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1111

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏مُوسَى بْنِ سَلَمَةَ الْهُذَلِيِّ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏

كَيْفَ أُصَلِّي إِذَا كُنْتُ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏إِذَا لَمْ أُصَلِّ مَعَ الْإِمَامِ فَقَالَ رَكْعَتَيْنِ سُنَّةَ ‏ ‏أَبِي الْقَاسِمِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ الضَّرِيرُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “(வெளியூர்வாசியான) நான் மக்காவில் இருக்கும்போது இமாமுடன் தொழாமல் (தனித்துத் தொழுபவனாக) இருந்தால் எவ்வாறு தொழ வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “அபுல்காசிம் (முஹம்மத் – ஸல்) அவர்களது வழிமுறைப்படி இரண்டு ரக்அத்களாக (தொழுதுகொள்ளுங்கள்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : மூஸா பின் ஸலமா அல்ஹுதலீ (ரஹ்) வழியாக இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1110

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَاسِمُ بْنُ مَالِكٍ الْمُزَنِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ بْنُ عَائِذٍ الطَّائِيُّ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرِ بْنِ الْأَخْنَسِ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏

إِنَّ اللَّهَ فَرَضَ الصَّلَاةَ عَلَى لِسَانِ نَبِيِّكُمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى الْمُسَافِرِ رَكْعَتَيْنِ وَعَلَى الْمُقِيمِ أَرْبَعًا وَفِي الْخَوْفِ رَكْعَةً

திண்ணமாக அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களது நாவின் மூலம் தொழுகையைப் பயணிக்கு இரண்டு ரக்அத்களாகவும் உள்ளூரிலிருப்பவருக்கு நான்கு ரக்அத்களாகவும் அச்ச நிலையில் (இருப்பவருக்கு) ஒரு ரக்அத்தாகவும் கடமையாக்கினான்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1109

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو الرَّبِيعِ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرِ بْنِ الْأَخْنَسِ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏

فَرَضَ اللَّهُ الصَّلَاةَ عَلَى لِسَانِ نَبِيِّكُمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْحَضَرِ أَرْبَعًا وَفِي السَّفَرِ رَكْعَتَيْنِ وَفِي الْخَوْفِ رَكْعَةً

அல்லாஹ், உங்கள் நபி (ஸல்) அவர்களது நாவின் மூலம் உள்ளூரிலிருக்கும்போது நான்கு ரக்அத்களாகவும் பயணத்திலிருக்கும்போது இரண்டு ரக்அத்களாகவும் அச்ச நிலையில் ஒரு ரக்அத்தாகவும் தொழுகையைக் கடமையாக்கினான்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1108

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي عَمَّارٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ بَابَيْهِ ‏ ‏عَنْ ‏ ‏يَعْلَى بْنِ أُمَيَّةَ ‏ ‏قَالَ ‏

قُلْتُ ‏ ‏لِعُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنْ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمْ الَّذِينَ كَفَرُوا ‏

فَقَدْ أَمِنَ النَّاسُ فَقَالَ عَجِبْتُ مِمَّا عَجِبْتَ مِنْهُ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ فَقَالَ ‏ ‏صَدَقَةٌ تَصَدَّقَ اللَّهُ بِهَا عَلَيْكُمْ فَاقْبَلُوا صَدَقَتَهُ ‏

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الرَّحْمنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عَمَّارٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ بَابَيْهِ ‏ ‏عَنْ ‏ ‏يَعْلَى بْنِ أُمَيَّةَ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِعُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ إِدْرِيسَ

நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம், “நீங்கள் பூமியில் பயணம் செய்தால், இறைமறுப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என நீங்கள் அஞ்சும்போது, தொழுகையைச் சுருக்கித் தொழுவதில் உங்கள்மீது தவறேதுமில்லை” (4:101) என்றுதானே அல்லாஹ் கூறுகின்றான்! தற்போது மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டதே? என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி), “நீங்கள் ஐயம் கொண்டது போன்று நானும் கொண்டதுண்டு. எனவே, இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது ‘(இது) அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடை (சலுகை) ஆகும். அவனது கொடையை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என பதிலளித்தார்கள்” என உமர் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : யஃலா பின் உமைய்யா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1107

و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏

أَنَّ الصَّلَاةَ أَوَّلَ مَا فُرِضَتْ رَكْعَتَيْنِ فَأُقِرَّتْ صَلَاةُ السَّفَرِ وَأُتِمَّتْ صَلَاةُ الْحَضَرِ ‏

قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏فَقُلْتُ ‏ ‏لِعُرْوَةَ ‏ ‏مَا بَالُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏تُتِمُّ فِي السَّفَرِ قَالَ إِنَّهَا تَأَوَّلَتْ كَمَا تَأَوَّلَ ‏ ‏عُثْمَانُ

தொழுகை, ஆரம்பத்தில் இரண்டு ரக்அத்களாகத்தான் கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை (இரண்டு ரக்அத்களாகவே) நீடித்தது; உள்ளூரில் தொழும் தொழுகை (நான்கு ரக்அத்களாக) முழுமைப்படுத்தப்பட்டது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், “(பயணத்தில் நிறைவாகத் தொழுத) ஆயிஷா (ரலி) அவர்களின் நிலைப்பாடு என்ன?” என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்), “(இது தொடர்பாக) உஸ்மான் (ரலி) அவர்கள் அளித்த விளக்கத்தைப் போன்றே ஆயிஷா (ரலி) அவர்களும் விளக்கம் அளித்துவந்தார்கள்” என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகிறார்.

“பயணத்தில் சுருக்கித் தொழுவது சலுகை; விரும்பியவர் நிறைவாகவும் தொழலாம்” எனும் கருத்துக் கொண்டு, பயணத்திலும் உஸ்மான் (ரலி) நிறைவாக(வும்) தொழுதிருக்கின்றார்கள்.

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1106

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ ‏

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ ‏

அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது (ஐவேளைத் தொழுகைகளையும்) இரண்டு ரக்அத்(தொழுகை)களாகக் கடமையாக்கினான். பின்னர் உள்ளூரில் தொழும் (லுஹ்ர், அஸ்ர், இஷா ஆகிய) தொழுகைகளை (நான்கு ரக்அத்களாக) முழுமைப்படுத்தினான்; பயணத் தொழுகை, தொடக்கத்தில் கடமையாக்கப்பட்டிருந்தவாறு (இரண்டு ரக்அத்தாகவே) நீடித்தது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1105

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحِ بْنِ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

فُرِضَتْ الصَّلَاةُ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فِي الْحَضَرِ وَالسَّفَرِ فَأُقِرَّتْ صَلَاةُ السَّفَرِ وَزِيدَ فِي صَلَاةِ الْحَضَرِ

தொழுகை (ஆரம்பத்தில்) உள்ளூரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாகவே கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை (தொடங்கியதுபோன்றே) நீடித்தது; உள்ளூரில் தொழும் தொழுகைகளில் (ரக்அத்கள்) கூடுதலாக்கப்பட்டன.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு:

மக்ரிபுத் தொழுகை, ஒரு ரக்அத் கூடுதல் செய்யப்பட்டு, பயணத்திலும் உள்ளூரிலிருக்கும்போதும் மூன்று ரக்அத்களானது. பயணத்தில் லுஹ்ரு, அஸ்ரு, இஷா ஆகியன இரண்டு ரக்அத்களாகவும் மாறுதல் இன்றியும் தொடர்ந்தன.

உள்ளூரிலிருக்கும்போது லுஹ்ரு, அஸ்ரு, இஷா ஆகியன இரண்டு ரக்அத் கூடுதல் செய்யப்பட்டு, நான்கு ரக்அத் தொழுகைகளாயின. ஸுப்ஹுத் தொழுகை, மாறுதல் ஏதுமின்றிப் பயணத்திலும் உள்ளூரிலிருக்கும்போதும் இரண்டு ரக்அத்ஆகவே தொடர்ந்தது.