அத்தியாயம்: 6, பாடம்: 29, ஹதீஸ் எண்: 1305

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ تَعَالَى أَدْوَمُهَا وَإِنْ قَلَّ قَالَ وَكَانَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏إِذَا عَمِلَتْ الْعَمَلَ لَزِمَتْهُ

“நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது குறைந்த அளவாக இருப்பினும் (வழக்கமாகச் செய்யப்படும்) நிலையான நற்செயலாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு:

“ஆயிஷா (ரலி), ஒரு நற்செயலைச் செய்தால் அதை வழக்கமாகச் செய்துவருவார்கள்” என்று அறிவிப்பாளர் காஸிம் பின் முஹம்மது (ரஹ்) கூறினார்.

அத்தியாயம்: 6, பாடம்: 29, ஹதீஸ் எண்: 1304

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏قَالَ : ‏

‏سَأَلْتُ ‏ ‏أُمَّ الْمُؤْمِنِينَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَ قُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ كَيْفَ كَانَ عَمَلُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ كَانَ يَخُصُّ شَيْئًا مِنْ الْأَيَّامِ قَالَتْ ‏ ‏لَا كَانَ عَمَلُهُ ‏ ‏دِيمَةً ‏ ‏وَأَيُّكُمْ يَسْتَطِيعُ مَا كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَسْتَطِيعُ

நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (வழிபாட்டுச்) செயல் எவ்வாறிருந்தது? சிறப்பு (வழிபாட்டு) செயலுக்கென குறிப்பிட்ட நாட்கள் எதையும் அவர்கள் ஒதுக்கியிருந்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு, “இல்லை. அவர்களின் (வழிபாட்டுச்) செயல்பாடு என்பது நிரந்தரமானதாகவே இருந்தது” என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இயன்ற(வழிபாடுகளில் நிரந்தரம் என்ப)தைப் போன்று உங்களில் எவரால் இயலும்?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அல்கமா (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 29, ஹதீஸ் எண்: 1303

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا سَلَمَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَائِشَةَ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سُئِلَ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ ‏ ‏أَدْوَمُهُ وَإِنْ قَلَّ

“நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “குறைவாக இருந்தாலும் (வழக்கமாகச் செய்யப்படும்) நிலையான நற்செயலே” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 29, ஹதீஸ் எண்: 1302

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ يَعْنِي الثَّقَفِيَّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ :‏ ‏

‏كَانَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَصِيرٌ وَكَانَ ‏ ‏يُحَجِّرُهُ ‏ ‏مِنْ اللَّيْلِ فَيُصَلِّي فِيهِ فَجَعَلَ النَّاسُ يُصَلُّونَ بِصَلَاتِهِ وَيَبْسُطُهُ بِالنَّهَارِ ‏ ‏فَثَابُوا ‏ ‏ذَاتَ لَيْلَةٍ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ ‏ ‏عَلَيْكُمْ مِنْ الْأَعْمَالِ مَا تُطِيقُونَ فَإِنَّ اللَّهَ ‏ ‏لَا يَمَلُّ ‏ ‏حَتَّى ‏ ‏تَمَلُّوا ‏ ‏وَإِنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ مَا دُووِمَ عَلَيْهِ وَإِنْ قَلَّ وَكَانَ آلُ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا عَمِلُوا عَمَلًا ‏ ‏أَثْبَتُوهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. அதை அவர்கள் இரவில் அறைத்தடுப்புப் போன்று அமைத்துக்கொண்டு அதனுள் தொழுவார்கள். (அதில் அவர்கள் தொழும்போது) அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழலாயினர். பகலில் அந்தப் பாயை விரிப்பாக பயன்படுத்துவார்கள். ஓர் இரவில் மக்கள் கூடிவிட்டனர். அப்போது, நபி (ஸல்), “மக்களே! நற்செயல்களுள் உங்களால் (வழக்கமாகச் செய்ய) முடிந்தவற்றைச் செய்யுங்கள். நீங்கள் சடைவடையாதவரை அல்லாஹ்வும் சடைவதில்லை. குறைவாகச் செய்தாலும் வழக்கமாகச் செய்யப்படும் நற்செயல்கள்தாம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று கூறினார்கள்.

முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் ஒரு நற்செயலைச் செய்தால் அதை நிலையாக(த் தொடர்ந்து) செய்வார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)