و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ ح و حَدَّثَنَاه ابْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ الْحَكَمِ عَنْ مُجَاهِدٍ عَنْ ابْنِ أَبِي لَيْلَى عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ :
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عِنْدَ أَضَاةِ بَنِي غِفَارٍ قَالَ فَأَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فَقَالَ إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تَقْرَأَ أُمَّتُكَ الْقُرْآنَ عَلَى حَرْفٍ فَقَالَ أَسْأَلُ اللَّهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ وَإِنَّ أُمَّتِي لَا تُطِيقُ ذَلِكَ ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ فَقَالَ إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تَقْرَأَ أُمَّتُكَ الْقُرْآنَ عَلَى حَرْفَيْنِ فَقَالَ أَسْأَلُ اللَّهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ وَإِنَّ أُمَّتِي لَا تُطِيقُ ذَلِكَ ثُمَّ جَاءَهُ الثَّالِثَةَ فَقَالَ إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تَقْرَأَ أُمَّتُكَ الْقُرْآنَ عَلَى ثَلَاثَةِ أَحْرُفٍ فَقَالَ أَسْأَلُ اللَّهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ وَإِنَّ أُمَّتِي لَا تُطِيقُ ذَلِكَ ثُمَّ جَاءَهُ الرَّابِعَةَ فَقَالَ إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تَقْرَأَ أُمَّتُكَ الْقُرْآنَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَأَيُّمَا حَرْفٍ قَرَءُوا عَلَيْهِ فَقَدْ أَصَابُوا
و حَدَّثَنَاه عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ
நபி (ஸல்), (ஒரு முறை) பனூ ஃகிஃபார் குலத்தாரின் நீர்நிலை அருகே இருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) வந்து, “குர்ஆனை உங்கள் சமுதாயத்தார் ஒரேயொரு மொழிநடையில் ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்” என்று கூறினார். உடனே நபி (ஸல்), “நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் வேண்டுகின்றேன். (பல்வேறு மொழிவழக்குகள் கொண்ட) என் சமுதாயத்தார் இதற்குச் சக்தி பெறமாட்டார்கள்” என்று கூறினார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) (இறைவனிடம் சென்றுவிட்டுத் திரும்பி) நபியவர்களிடம் வந்து, “குர்ஆனை உங்கள் சமுதாயத்தார் இரண்டு மொழிநடைகளில் ஓதிக்கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்” என்று கூறினார். நபி (ஸல்) (மீண்டும்), “நான் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் வேண்டுகிறேன். என் சமுதாயத்தார் இதற்குச் சக்தி பெறமாட்டார்கள்” என்று கூறினார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) மூன்றாவது முறை (இறைவனிடம் சென்று விட்டுத் திரும்பி)வந்து, “உங்கள் சமுதாயத்தார் குர்ஆனை மூன்று நடைகளில் ஓதிக்கொள்ளலாம் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்” என்று கூறினார். நபி (ஸல்), “நான் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் வேண்டுகிறேன். இதற்கும் என் சமுதாயத்தார் சக்தி பெறமாட்டார்கள்” என்று (மீண்டும்) கூறினார்கள். பிறகு நான்காவது முறை ஜிப்ரீல் (அலை) (இறைவனிடம் சென்றுவிட்டுத் திரும்பி)வந்து, “குர்ஆனை உங்கள் சமுதாயத்தார் ஏழு மொழிநடைகளில் ஓதிக்கொள்வதற்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அவர்கள் (ஏழின்) எந்த முறைப்படி ஓதினாலும் அவர்கள் சரியாகவே ஓதியவர்களாவர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி)