அத்தியாயம்: 7, பாடம்: 11, ஹதீஸ் எண்: 1431

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُبَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ عُجْرَةَ ‏ ‏قَالَ : ‏

‏دَخَلَ الْمَسْجِدَ ‏ ‏وَعَبْدُ الرَّحْمَنِ ابْنُ أُمِّ الْحَكَمِ ‏ ‏يَخْطُبُ قَاعِدًا فَقَالَ ‏ ‏انْظُرُوا إِلَى هَذَا الْخَبِيثِ يَخْطُبُ قَاعِدًا وَقَالَ اللَّهُ تَعَالَى [وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا ‏ ‏انْفَضُّوا ‏ ‏إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا]

கஅப் பின் உஜ்ரா (ரலி), (ஜும்ஆ நாளில்) பள்ளிவாசலுக்குள் நுழைந்தபோது, அப்துர் ரஹ்மான் பின் உம்மில் ஹகம் உட்கார்ந்தபடியே (குத்பா) உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார். அதைக் கண்ட கஅப் (ரலி), “உட்கார்ந்துகொண்டு உரை நிகழ்த்தும் இந்த மோசமான ஆளைப் பாருங்கள். உயர்ந்தோன் அல்லாஹ்வோ “அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் உம்மை நிற்கவைத்துவிட்டு அவற்றை நோக்கிச் சென்றுவிடுகின்றனர்’ (62:11) என்று கூறுகின்றான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி) வழியாக, அபூஉபைதா ஆமிர் (ரஹ்)

அத்தியாயம்: 7, பாடம்: 11, ஹதீஸ் எண்: 1430

و حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ سَالِمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حُصَيْنٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سُفْيَانَ ‏ ‏وَسَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏

‏بَيْنَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَائِمٌ يَوْمَ الْجُمُعَةِ إِذْ قَدِمَتْ ‏ ‏عِيرٌ ‏ ‏إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏فَابْتَدَرَهَا ‏ ‏أَصْحَابُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى لَمْ يَبْقَ مَعَهُ إِلَّا اثْنَا عَشَرَ رَجُلًا فِيهِمْ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَعُمَرُ ‏ ‏قَالَ وَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ [ ‏وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا ‏ ‏إِلَيْهَا…] 

நபி (ஸல்) வெள்ளிக்கிழமையன்று நின்றவாறு உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது, (ஷாமிலிருந்து) மதீனாவிற்கு ஒட்டகக் கூட்டம் ஒன்று (உணவுப் பொருட்களுடன்) வந்தது. நபித்தோழர்கள் அதன் பக்கம் விரைந்தோடினர்; நபியவர்களுடன் அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) உட்பட பன்னிரண்டு பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். அப்போதுதான் “அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் உம்மை நிற்கவைத்துவிட்டு, அவற்றை நோக்கிச் சென்றுவிடுகின்றனர் …” எனும் இந்த (62:11 ஆவது) வசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 11, ஹதீஸ் எண்: 1429

و حَدَّثَنَا ‏ ‏رِفَاعَةُ بْنُ الْهَيْثَمِ الْوَاسِطِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي الطَّحَّانَ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏وَأَبِي سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ : ‏

‏كُنَّا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ الْجُمُعَةِ فَقَدِمَتْ ‏ ‏سُوَيْقَةٌ ‏ ‏قَالَ فَخَرَجَ النَّاسُ إِلَيْهَا فَلَمْ يَبْقَ إِلَّا اثْنَا عَشَرَ رَجُلًا أَنَا فِيهِمْ قَالَ فَأَنْزَلَ اللَّهُ ‏” ‏وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا ‏ ‏انْفَضُّوا ‏ ‏إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا“ ‏ إِلَى آخِرِ الْآيَةِ

நாங்கள் (ஒரு) வெள்ளிக்கிழமை அன்று நபி (ஸல்) அவர்களுடன் (பள்ளியில்) இருந்தபோது, வியாபார (ஒட்டகக்) கூட்டம் ஒன்று வந்தது. மக்கள் (பள்ளியிலிருந்து) வெளியேறி அதை நோக்கிச் சென்றுவிட்டனர்; பன்னிரண்டு பேர் மட்டுமே எஞ்சினர். அந்தப் பன்னிருவரில் நானும் ஒருவன் ஆவேன். அப்போதுதான் அல்லாஹ் “அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் உம்மை நிற்கவைத்துவிட்டு அவற்றை நோக்கிச் சென்றுவிடுகின்றனர்…” எனும் (62:11ஆவது) வசனத்தை முழுமையாக அருளினான்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 11, ஹதீஸ் எண்: 1428

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ : ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَخْطُبُ قَائِمًا يَوْمَ الْجُمُعَةِ فَجَاءَتْ ‏ ‏عِيرٌ ‏ ‏مِنْ ‏ ‏الشَّامِ ‏ ‏فَانْفَتَلَ ‏ ‏النَّاسُ إِلَيْهَا حَتَّى لَمْ يَبْقَ إِلَّا اثْنَا عَشَرَ رَجُلًا فَأُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ الَّتِي فِي الْجُمُعَةِ ‏ [وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا ‏ ‏انْفَضُّوا ‏ ‏إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا …]


‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ قَالَ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَخْطُبُ وَلَمْ يَقُلْ قَائِمًا

நபி (ஸல்) (ஒரு) வெள்ளிக்கிழமை உரையை நின்றவாறு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ஷாம் (சிரியா) நாட்டிலிருந்து ஓர் ஒட்டக(வணிக)க் கூட்டம் (உணவுப் பொருட்களுடன்) வந்தது. உடனே மக்கள் அனைவரும் கலைந்து அதை நோக்கிச் சென்று விட்டனர்; பன்னிரண்டு பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

அப்போதுதான் ‘அல்ஜும்ஆ’ (62ஆவது) அத்தியாயத்திலுள்ள, (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ கண்டால், உம்மை நின்ற வண்ணமே விட்டுவிட்டு, அதன்பால் சென்று விடுகின்றனர். “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக எனும் (11ஆவது) வசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள் …’ என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. ‘நின்றவாறு’ எனும் சொல் இடம்பெறவில்லை.