அத்தியாயம்: 7, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1449

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ يُونُسَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏:‏

‏جَاءَ ‏ ‏سُلَيْكٌ الْغَطَفَانِيُّ ‏ ‏يَوْمَ الْجُمُعَةِ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَخْطُبُ فَجَلَسَ فَقَالَ لَهُ ‏ ‏يَا ‏ ‏سُلَيْكُ ‏ ‏قُمْ فَارْكَعْ رَكْعَتَيْنِ ‏ ‏وَتَجَوَّزْ ‏ ‏فِيهِمَا ثُمَّ قَالَ إِذَا جَاءَ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ ‏ ‏وَلْيَتَجَوَّزْ ‏ ‏فِيهِمَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெள்ளிக்கிழமையில் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது ஸுலைக் அல்ஃகதஃபானீ (ரலி) (பள்ளிக்கு) வந்து (தொழாமல்) அமர்ந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஸுலைக்! எழும்! சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழும்” என்றார்கள். பிறகு, “உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது (பள்ளிவாசலுக்கு) வந்தால், அவர் இரண்டு ரக்அத்கள் சுருக்கமாகத் தொழுதுகொள்ளட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1448

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏أَنَّهُ قَالَ :‏‏

‏جَاءَ ‏ ‏سُلَيْكٌ الْغَطَفَانِيُّ ‏ ‏يَوْمَ الْجُمُعَةِ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَاعِدٌ عَلَى الْمِنْبَرِ فَقَعَدَ ‏ ‏سُلَيْكٌ ‏ ‏قَبْلَ أَنْ يُصَلِّيَ فَقَالَ لَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرَكَعْتَ رَكْعَتَيْنِ قَالَ لَا قَالَ قُمْ فَارْكَعْهُمَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெள்ளிக்கிழமை அன்று மிம்பரில் அமர்ந்திருந்தபோது, ஸுலைக் அல்ஃகதஃபானீ (ரலி) (பள்ளிக்கு) வந்து தொழுவதற்கு முன் அமர்ந்துவிட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டீரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “எழுந்து அந்த இரண்டு ரக்அத்களைத் தொழுவீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1447

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ :‏‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَطَبَ فَقَالَ ‏ ‏إِذَا جَاءَ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ وَقَدْ خَرَجَ الْإِمَامُ فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ

“வெள்ளிக்கிழமை அன்று இமாம் புறப்பட்டு (பள்ளிவாசலுக்கு) வந்திருக்க, உங்களுள் ஒருவர் (பள்ளிவாசலுக்கு) வந்தால், அவர் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளட்டும்!” என்று நபி (ஸல்) உரையாற்றும்போது குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1446

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ :‏ ‏

‏جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ يَخْطُبُ فَقَالَ لَهُ ‏ ‏أَرَكَعْتَ رَكْعَتَيْنِ قَالَ لَا فَقَالَ ارْكَعْ

நபி (ஸல்) வெள்ளிக்கிழமை மிம்பர் மீது (நின்று) உரையாற்றிக்கொண்டிருக்கும்போது ஒருவர் வந்(து அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவரிடம், “இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “அவ்வாறாயின் தொழுவீராக!” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1445

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا وَقَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ :‏ ‏

‏دَخَلَ ‏ ‏رَجُلٌ ‏ ‏الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ ‏ ‏أَصَلَّيْتَ قَالَ لَا قَالَ قُمْ فَصَلِّ الرَّكْعَتَيْنِ ‏


‏وَفِي رِوَايَةِ ‏ ‏قُتَيْبَةَ ‏ ‏قَالَ صَلِّ رَكْعَتَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒருவர் பள்ளிவாசலுக்குள்ளே வந்(து அமர்ந்)தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் தொழுதீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை” என்றார். “எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸின் குதைபா (ரஹ்) வழி அறிவிப்பிலும், ’இரண்டு ரக்அத்‘ எனும் எண்ணிக்கை இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 7, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1444

و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ وَهُوَ ابْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏:‏

‏بَيْنَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ جَاءَ ‏ ‏رَجُلٌ ‏ ‏فَقَالَ لَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَصَلَّيْتَ يَا فُلَانُ قَالَ لَا قَالَ قُمْ فَارْكَعْ ‏


‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَمَا قَالَ ‏ ‏حَمَّادٌ ‏ ‏وَلَمْ يَذْكُرْ الرَّكْعَتَيْنِ

நபி (ஸல்) வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒருவர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்), “இன்னவரே, தொழுதீரா?” என்று (அவரை நோக்கிக்) கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை” என்றார். “எழுந்து, தொழுவீராக!” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸின் வேறு பல அறிவிப்புகள், “எழுந்து, இரண்டு ரக்அத் தொழுவீராக!” என்று எண்ணிக்கை பற்றிய குறிப்போடு வந்துள்ளன. ஹம்மாத் (ரஹ்) வழி அறிவிப்புகளில் ’இரண்டு ரக்அத்‘ எனும் எண்ணிக்கை இடம்பெறவில்லை.