அத்தியாயம்: 7, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1444

و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ وَهُوَ ابْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏بَيْنَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ جَاءَ ‏ ‏رَجُلٌ ‏ ‏فَقَالَ لَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَصَلَّيْتَ يَا فُلَانُ قَالَ لَا قَالَ قُمْ فَارْكَعْ ‏

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَمَا قَالَ ‏ ‏حَمَّادٌ ‏ ‏وَلَمْ يَذْكُرْ الرَّكْعَتَيْنِ

நபி (ஸல்) வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒருவர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்), “இன்னவரே, தொழுதீரா?” என்று (அவரை நோக்கிக்) கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை” என்றார். “எழுந்து, தொழுவீராக!” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

குறிப்பு: இந்த ஹதீஸின் வேறு பல அறிவிப்புகள், “எழுந்து, இரண்டு ரக்அத் தொழுவீராக!” என்று எண்ணிக்கை பற்றிய குறிப்போடு வந்துள்ளன. ஹம்மாத் (ரஹ்) வழி அறிவிப்புகளில் ’இரண்டு ரக்அத்‘ எனும் எண்ணிக்கை இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment