அத்தியாயம்: 7, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1453

و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏ضَمْرَةَ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏‏

‏كَتَبَ ‏ ‏الضَّحَّاكُ بْنُ قَيْسٍ ‏ ‏إِلَى ‏ ‏النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ‏ ‏يَسْأَلُهُ أَيَّ شَيْءٍ قَرَأَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ الْجُمُعَةِ سِوَى سُورَةِ ‏ ‏الْجُمُعَةِ ‏ ‏فَقَالَ كَانَ ‏ ‏يَقْرَأُ ‏ ‏هَلْ أَتَاكَ

ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்), நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களுக்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜும்ஆ நாளில் ‘அல்ஜும்ஆ’ (62ஆவது) அத்தியாயம் தவிர வேறு எந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்?’ என்று கேட்டுக் கடிதம் எழுதினார். அதற்கு, ‘ஹல் அத்தாக்க ஹதீஸுல் ஃகாஷியா’ எனும் (88ஆவது) அத்தியாயத்தை ஓதுவார்கள்” என நுஅமான் பின் பஷீர் (ரலி) பதில் எழுதினார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 7, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1452

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبِ بْنِ سَالِمٍ ‏ ‏مَوْلَى ‏ ‏النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ‏ ‏قَالَ :‏ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَأُ فِي الْعِيدَيْنِ وَفِي الْجُمُعَةِ ‏ ‏بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ‏ ‏وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ‏ ‏قَالَ وَإِذَا اجْتَمَعَ الْعِيدُ وَالْجُمُعَةُ فِي يَوْمٍ وَاحِدٍ يَقْرَأُ بِهِمَا أَيْضًا فِي الصَّلَاتَيْنِ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரு பெருநாள் தொழுகையிலும் ஜும்ஆவிலும் ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா’ மற்றும் ‘ஹல் அத்தாக்க ஹதீஸுல் ஃகாஷியா’ ஆகிய (87ஆவது), (88ஆவது) அத்தியாயங்களை ஓதுவார்கள்.

பெருநாளும் ஜும்ஆவும் ஒரே நாளில் வந்துவிட்டாலும், இரு தொழுகைகளிலும் அவ்விரு அத்தியாயங்களையே ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1451

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ وَهُوَ ابْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي رَافِعٍ ‏ ‏قَالَ ‏ ‏:‏

اسْتَخْلَفَ ‏ ‏مَرْوَانُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏عَلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏وَخَرَجَ إِلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏فَصَلَّى لَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏الْجُمُعَةَ فَقَرَأَ بَعْدَ سُورَةِ ‏ ‏الْجُمُعَةِ ‏ ‏فِي الرَّكْعَةِ الْآخِرَةِ ‏ ‏إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ ‏ ‏قَالَ فَأَدْرَكْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏حِينَ انْصَرَفَ فَقُلْتُ لَهُ إِنَّكَ قَرَأْتَ بِسُورَتَيْنِ كَانَ ‏ ‏عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ‏ ‏يَقْرَأُ بِهِمَا ‏ ‏بِالْكُوفَةِ ‏فَقَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَأُ بِهِمَا يَوْمَ الْجُمُعَةِ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ ‏ ‏قَالَ ‏ ‏اسْتَخْلَفَ ‏ ‏مَرْوَانُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏غَيْرَ أَنَّ فِي رِوَايَةِ ‏ ‏حَاتِمٍ ‏ ‏فَقَرَأَ بِسُورَةِ ‏ ‏الْجُمُعَةِ ‏ ‏فِي السَّجْدَةِ الْأُولَى وَفِي الْآخِرَةِ ‏ ‏إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ ‏ ‏وَرِوَايَةُ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ ‏ ‏مِثْلُ حَدِيثِ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بِلَالٍ

அபூஹுரைரா (ரலி) அவர்களை மதீனாவின் ஆளுநராக நியமித்துவிட்டு மர்வான் பின் ஹகம் மக்காவுக்குச் சென்றார். (அந்தக் காலகட்டத்தில்) அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு ஜும்ஆத் தொழுகை நடத்தினார்கள். அதில் ‘அல்ஜும்ஆ’ எனும் (62ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். இரண்டாவது ரக்அத்தில் ‘இதா ஜாஅக்கல் முனாஃபிக்கூன்’ (என்று தொடங்கும் 63ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். தொழுகை முடிந்ததும் அபூஹுரைரா (ரலி) அவர்களைச் சந்தித்து, “நீங்கள் இரண்டு அத்தியாயங்களை ஓதினீர்கள்.இவ்விரு அத்தியாயங்களும் அலீ பின் அபீதாலிப் (ரலி) கூஃபாவில் இருந்தபோது ஓதிவந்தவை” என்றேன். அதற்கு அபூஹுரைரா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜும்ஆ நாளில் இவ்விரு அத்தியாயங்களையும் ஓத நான் கேட்டுள்ளேன்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்)


குறிப்பு :

ஹாத்திம் பின் இஸ்மாயீல் (ரஹ்) வழி அறிவிப்பில், “முதல் ரக்அத்தில் ‘அல்ஜும்ஆ’ அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் ‘இதா ஜாஅக்கல் முனாஃபிக்கூன்’ அத்தியாயத்தையும் ஓதினார்கள்” என்று விபரமாக இடம்பெற்றுள்ளது.