அத்தியாயம்: 43, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4243

حَدَّثَنَا أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ – قَالُوا حَدَّثَنَا مُعَاذٌ، – وَهُوَ ابْنُ هِشَامٍ – حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيِّ، عَنْ ثَوْبَانَ :‏

أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ إِنِّي لَبِعُقْرِ حَوْضِي أَذُودُ النَّاسَ لأَهْلِ الْيَمَنِ أَضْرِبُ بِعَصَاىَ حَتَّى يَرْفَضَّ عَلَيْهِمْ ‏”‏ ‏.‏ فَسُئِلَ عَنْ عَرْضِهِ فَقَالَ ‏”‏ مِنْ مَقَامِي إِلَى عَمَّانَ ‏”‏ ‏.‏ وَسُئِلَ عَنْ شَرَابِهِ فَقَالَ ‏”‏ أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ يَغُتُّ فِيهِ مِيزَابَانِ يَمُدَّانِهِ مِنَ الْجَنَّةِ أَحَدُهُمَا مِنْ ذَهَبٍ وَالآخَرُ مِنْ وَرِقٍ ‏”‏


وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، بِإِسْنَادِ هِشَامٍ ‏.‏ بِمِثْلِ حَدِيثِهِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏”‏ أَنَا يَوْمَ الْقِيَامَةِ عِنْدَ عُقْرِ الْحَوْضِ ‏”‏ ‏.‏

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ مَعْدَانَ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَدِيثَ الْحَوْضِ فَقُلْتُ لِيَحْيَى بْنِ حَمَّادٍ هَذَا حَدِيثٌ سَمِعْتَهُ مِنْ أَبِي عَوَانَةَ فَقَالَ وَسَمِعْتُهُ أَيْضًا مِنْ شُعْبَةَ فَقُلْتُ انْظُرْ لِي فِيهِ فَنَظَرَ لِي فِيهِ فَحَدَّثَنِي بِهِ ‏.‏

நபி (ஸல்), “நான் எனது (‘அல் கவ்ஸர்’) தடாகத்தில் நீர் அருந்தும் பகுதியில் நின்றுகொண்டு யமன்வாசிகளுக்(கு முன்னுரிமை அளிப்பதற்)காக மற்றவர்களை விரட்டுவேன். யமன்வாசிகளுக்குத் நீர் கிடைப்பதற்காக எனது (கையிலுள்ள) தடியின் மூலம் மற்றவர்களை அடிப்பேன்” என்று சொன்னார்கள்.

அப்போது நபியவர்களிடம் அத்தடாகத்தின் அகலம் குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “அது, எனது வசிப்பிட(மான மதீனா நகர)த்திலிருந்து ‘அம்மான்’வரை உள்ள தொலைவிற்கு அகலமானதாகும்” என்றார்கள்.

அத்தடாகத்தின் பானம் குறித்து வினவப்பட்டபோது, “அது, பாலைவிட வெண்மையானது; தேனைவிட இனிமையானது. சொர்க்கத்திலிருந்து நீளுகின்ற இரு வடிகுழாய்கள் அத்தடாகத்திற்குள் தொடர்ச்சியாகத் நீரைப் பாய்ச்சிக்கொண்டிருக்கும். அக்குழாய்களில் ஒன்று தங்கத்தாலானது; மற்றொன்று வெள்ளியாலானது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரலி)


குறிப்புகள் :

ஷைபான் (ரஹ்) வழி அறிவிப்பு, “நான் மறுமை நாளில் (அல்கவ்ஸர்) தடாகத்தில் நீர் அருந்தும் பகுதியில் இருப்பேன்…” என்று ஆரம்பமாகிறது.

யஹ்யா பின் ஹம்மாது (ரஹ்) வழி அறிவிப்பில், முஹம்மது பின் பஷ்ஷார் (ரஹ்) பின்வருமாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது:

நான் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த யஹ்யா பின் ஹம்மாது (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் இந்த ஹதீஸை அபூஅவானா (ரஹ்) அவர்களிடமிருந்தே செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு யஹ்யா (ரஹ்), “இதை நான் ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்தும் செவியுற்றுள்ளேன்” என்று பதிலளித்தார்கள். உடனே நான், “அது குறித்து நன்கு சிந்தித்துச் சொல்லுங்கள்” என்று கேட்டேன். அப்போது அவர்கள் நன்கு சிந்தித்துவிட்டு, அவ்வாறே (ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்து) எனக்கு அறிவித்தார்கள்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 43, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4242

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، – وَاللَّفْظُ لاِبْنِ أَبِي شَيْبَةَ – قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ الْعَمِّيُّ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ :‏

قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا آنِيَةُ الْحَوْضِ قَالَ ‏ “‏ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لآنِيَتُهُ أَكْثَرُ مِنْ عَدَدِ نُجُومِ السَّمَاءِ وَكَوَاكِبِهَا أَلاَ فِي اللَّيْلَةِ الْمُظْلِمَةِ الْمُصْحِيَةِ آنِيَةُ الْجَنَّةِ مَنْ شَرِبَ مِنْهَا لَمْ يَظْمَأْ آخِرَ مَا عَلَيْهِ يَشْخُبُ فِيهِ مِيزَابَانِ مِنَ الْجَنَّةِ مَنْ شَرِبَ مِنْهُ لَمْ يَظْمَأْ عَرْضُهُ مِثْلُ طُولِهِ مَا بَيْنَ عَمَّانَ إِلَى أَيْلَةَ مَاؤُهُ أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ ‏”‏ ‏

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (அல்கவ்ஸர் எனும்) அத்தடாகத்தின் கோப்பைகள் (எண்ணிக்கை) என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “முஹம்மதின் உயிர் கையிலுள்ளவன்மீது ஆணை! அதன் கோப்பைகள் (எண்ணிக்கையானது), மேகமோ நிலவோ இல்லாத இரவில் காட்சியளிக்கும் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானதாகும். அவை சொர்க்கத்தின் கோப்பைகளாகும்.

யார் அ(த்தடாகத்)தில் அருந்துகிறாரோ அவருக்கு இறுதிவரை தாகமே ஏற்படாது. அதில் சொர்க்கத்திலிருந்து இரு வடிகுழாய்கள் வழியாக நீர் வந்துசேருகிறது. அதில் அருந்துபவருக்குத் தாகமே ஏற்படாது. அத்தடாகத்தின் அகலம் அதன் நீளத்தைப் போன்று (சம அளவில்) இருக்கும். அதன் தொலைதூரம் (ஷாம் நாட்டின்) ‘அம்மானு’க்கும் ‘அய்லா’வுக்கும் இடையேயுள்ள தொலைதூரத்தைக் கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது; தேனைவிட இனிமையானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4241

وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِنَّ أَمَامَكُمْ حَوْضًا كَمَا بَيْنَ جَرْبَا وَأَذْرُحَ فِيهِ أَبَارِيقُ كَنُجُومِ السَّمَاءِ مَنْ وَرَدَهُ فَشَرِبَ مِنْهُ لَمْ يَظْمَأْ بَعْدَهَا أَبَدًا ‏”‏

“உங்களுக்கு எதிரில் (மறுமை நாளில்) தடாகம் ஒன்று உள்ளது. (அதை நீங்கள் காண்பீர்கள். அதன் நீளம், ஷாம் நாட்டி லுள்ள) ‘ஜர்பா’ மற்றும் ‘அத்ருஹ்’ ஆகியவற்றுக்கிடையே உள்ள(தொலைதூரத்)தைப் போன்றதாகும். அதில் விண்மீன்களைப் போன்று கோப்பைகள் உள்ளன. யார் அங்கு வந்து அதிலிருந்து அருந்துகிறாரோ அவருக்கு அதற்குப் பின்னர் ஒருபோதும் தாகமே ஏற்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4240

حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، – وَهُوَ ابْنُ زَيْدٍ – حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّ أَمَامَكُمْ حَوْضًا مَا بَيْنَ نَاحِيَتَيْهِ كَمَا بَيْنَ جَرْبَا وَأَذْرُحَ ‏”‏ ‏


حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالُوا حَدَّثَنَا يَحْيَى، – وَهُوَ الْقَطَّانُ – عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ إِنَّ أَمَامَكُمْ حَوْضًا كَمَا بَيْنَ جَرْبَا وَأَذْرُحَ ‏”‏ ‏.‏ وَفِي رِوَايَةِ ابْنِ الْمُثَنَّى ‏”‏ حَوْضِي ‏”‏

وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ وَزَادَ قَالَ عُبَيْدُ اللَّهِ فَسَأَلْتُهُ فَقَالَ قَرْيَتَيْنِ بِالشَّامِ بَيْنَهُمَا مَسِيرَةُ ثَلاَثِ لَيَالٍ ‏.‏ وَفِي حَدِيثِ ابْنِ بِشْرٍ ‏.‏ ثَلاَثَةِ أَيَّامٍ ‏

وَحَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ ‏

“உங்களுக்கு எதிரில் (மறுமையில்) ஒரு தடாகம் உள்ளது. (அதை நீங்கள் காண்பீர்கள்) அதன் இரு மூலைகளுக்கு இடையேயுள்ள தொலைதூரம் (ஷாம் நாட்டின்) ‘ஜர்பா’ மற்றும் ‘அத்ருஹ்’ ஆகிய நகரங்களுக்கிடையே உள்ள தூரத்தைப் போன்றதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்புகள் :

யஹ்யா அல்கஹ்தான் (ரஹ்) வழி அறிவிப்பிலும் “உங்களுக்கு எதிரில் (மறுமை நாளில்) ஒரு தடாகம் உள்ளது. (அதை நீங்கள் காண்பீர்கள்). அது (ஷாம் நாட்டின்) ‘ஜர்பா’ மற்றும் ‘அத்ருஹ்’ ஆகியவற்றுக்கு இடையே உள்ளதைப் போன்ற(தொலைதூரத்தைக் கொண்ட)தாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

முஹம்மது பின் அல்முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில் “எனது தடாகம்“ எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் (அவ்விரு ஊர்களின் தூரத்தைப் பற்றிக்) கேட்டேன். அதற்கு நாஃபிஉ (ரஹ்), “(அவ்விரண்டும்) ஷாம் நாட்டிலுள்ள இரு ஊர்களாகும். அவ்விரண்டுக்குமிடையே மூன்று இரவு பயணத் தொலைவு உள்ளது” என்று பதிலளித்தார்கள் என்பதாக உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்), கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. முஹம்மது பின் பிஷ்ரு (ரஹ்)வழி அறிவிப்பில், “மூன்று நாள்கள் பயணத் தொலைவு உள்ளது” என்று நாஃபிஉ (ரஹ்) கூறியதாகக் காணப்படுகிறது.

அத்தியாயம்: 43, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4239

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ عَنْ حَارِثَةَ :‏

أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ حَوْضُهُ مَا بَيْنَ صَنْعَاءَ وَالْمَدِينَةِ ‏”‏ ‏.‏ فَقَالَ لَهُ الْمُسْتَوْرِدُ أَلَمْ تَسْمَعْهُ قَالَ ‏”‏ الأَوَانِي ‏”‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ فَقَالَ الْمُسْتَوْرِدُ ‏”‏ تُرَى فِيهِ الآنِيَةُ مِثْلَ الْكَوَاكِبِ ‏”‏


وَحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَرْعَرَةَ، حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ أَنَّهُ سَمِعَ حَارِثَةَ بْنَ وَهْبٍ الْخُزَاعِيَّ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏.‏ وَذَكَرَ الْحَوْضَ بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرْ قَوْلَ الْمُسْتَوْرِدِ وَقَوْلَهُ ‏.‏

“எனது (‘அல்கவ்ஸர்’ எனும்) தடாக(த்தின் விசால)மானது, (யமனிலுள்ள) ‘ஸன்ஆ’விற்கும் மதீனாவிற்கும் இடையேயான தொலைதூரம் கொண்டதாகும்” என நபி (ஸல்) கூறக் கேட்டேன் என்று நான் சொன்னேன்.

அப்போது முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) என்னிடம், “அதன் கோப்பைகள் குறித்து நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறவில்லையா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை“ என்றேன். அதற்கு முஸ்தவ்ரித் (ரலி), “(அல்கவ்ஸர்) தடாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்பைகள் (எண்ணிக்கையில்) நட்சத்திரங்களைப் போன்று காணப்படும்” என நபி (ஸல்) தெரிவித்ததாகச் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)


குறிப்பு :

ஹரமீ பின் உமாரா (ரஹ்) வழி அறிவிப்பில், ‘அல்கவ்ஸர்’ தடாகத்தைப் பற்றி மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி அறிவித்தார்கள் என்று மட்டும் இடம்பெற்றுள்ளது. முஸ்த்தவ்ரித் (ரலி) அவர்களின் கேள்வியும் அவர்களுக்கு ஹாரிஸா (ரலி) அளித்த பதிலும் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 43, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4238

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَابْنُ نُمَيْرٍ قَالُوا حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ وَلأُنَازِعَنَّ أَقْوَامًا ثُمَّ لأُغْلَبَنَّ عَلَيْهِمْ فَأَقُولُ يَا رَبِّ أَصْحَابِي أَصْحَابِي ‏.‏ فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ ‏”‏


وَحَدَّثَنَاهُ عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ جَرِيرٍ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَلَمْ يَذْكُرْ ‏ “‏ أَصْحَابِي أَصْحَابِي ‏”‏

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، كِلاَهُمَا عَنْ جَرِيرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، جَمِيعًا عَنْ مُغِيرَةَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِنَحْوِ حَدِيثِ الأَعْمَشِ وَفِي حَدِيثِ شُعْبَةَ عَنْ مُغِيرَةَ، سَمِعْتُ أَبَا وَائِلٍ،

وَحَدَّثَنَاهُ سَعِيدُ بْنُ عَمْرٍو الأَشْعَثِيُّ، أَخْبَرَنَا عَبْثَرٌ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي، شَيْبَةَ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، كِلاَهُمَا عَنْ حُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ الأَعْمَشِ وَمُغِيرَةَ

“நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’ எனும்) தடாகத்திற்குச் சென்று (உங்களுக்கு நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது மக்களில் சிலருக்காக நான் வாதாடுவேன். ஆனால், அதில் நான் தோற்றுவிடுவேன். அப்போது நான் ‘இறைவா! என் தோழர்கள்; (இவர்கள்) என் தோழர்கள்’ என்பேன். அதற்கு, ‘உமக்குப் பின்னர் இவர்கள் (மார்க்கத்தில்) புதிது புதிதாக என்னென்ன செய்தார்கள் என்பதை நீர் அறியமாட்டீர்’ என்று சொல்லப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பில்,  “என் தோழர்கள்; (இவர்கள்) என் தோழர்கள் (என்பேன்)” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 43, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4237

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا وَهْبٌ، – يَعْنِي ابْنَ جَرِيرٍ – حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ يَحْيَى بْنَ أَيُّوبَ، يُحَدِّثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ :‏

قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى قَتْلَى أُحُدٍ ثُمَّ صَعِدَ الْمِنْبَرَ كَالْمُوَدِّعِ لِلأَحْيَاءِ وَالأَمْوَاتِ فَقَالَ ‏ “‏ إِنِّي فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ وَإِنَّ عَرْضَهُ كَمَا بَيْنَ أَيْلَةَ إِلَى الْجُحْفَةِ إِنِّي لَسْتُ أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي وَلَكِنِّي أَخْشَى عَلَيْكُمُ الدُّنْيَا أَنْ تَنَافَسُوا فِيهَا وَتَقْتَتِلُوا فَتَهْلِكُوا كَمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ ‏”‏ ‏.‏ قَالَ عُقْبَةُ فَكَانَتْ آخِرَ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவு மேடை மீதேறி(உரை நிகழ்த்தி)னார்கள். அ(வ்வுரையான)து உயிரோடுள்ளவர்களிடமும் இறந்தவர்களிடமும் (மறுமைப் பயணத்திற்கு) விடை பெறுவது போலிருந்தது.

அவ்வுரையில் அவர்கள், “நான் (‘அல்கவ்ஸர்’ எனும் எனது) தடாகத்தினருகில் உங்களுக்(கு நீர் புகட்டுவதற்)காகக் காத்திருப்பேன். அத்தடாகத்தின் பரப்பளவு ‘அய்லா’விலிருந்து ‘ஜுஹ்ஃபா’ வரையுள்ள தொலைதூரத்தைப் போன்றதாகும். எனக்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொருவர் போட்டியிட்டு, சண்டையிட்டுக்கொண்டு, உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்ததைப் போன்று நீங்களும் அழிந்துவிடுவீர்களோ என்றே நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.

இதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இறுதியாகச் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நான் பார்த்த நிகழ்வாகும்.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4236

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمًا فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى الْمَيِّتِ ثُمَّ انْصَرَفَ إِلَى الْمِنْبَرِ فَقَالَ ‏ “‏ إِنِّي فَرَطٌ لَكُمْ وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ وَإِنِّي وَاللَّهِ لأَنْظُرُ إِلَى حَوْضِيَ الآنَ وَإِنِّي قَدْ أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنِ الأَرْضِ أَوْ مَفَاتِيحَ الأَرْضِ وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي وَلَكِنْ أَخَافُ عَلَيْكُمْ أَنْ تَتَنَافَسُوا فِيهَا‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு நாள் வந்து, இறந்தவர்களுக்காகத் தொழுவிப்பதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழுதார்கள்.

பிறகு சொற்பொழிவு மேடைக்குத் திரும்பிவந்து “உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (‘அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகத்தைக் காண்கின்றேன். எனக்கு பூமியின் திறவுகோல்கள் (அ) பூமியின் கருவூலத் திறவுகோல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (ஏக இறைவனுக்கு) இணை கற்பிப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகச் செல்வங்களுக்காக நீங்கள் ஒருவரோடொருவர் போட்டியிட்டு(மோதி)க்கொள்வீர்களோ என்றுதான் அஞ்சுகின்றேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4235

وَحَدَّثَنِي يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّدَفِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، – وَهُوَ ابْنُ الْحَارِثِ – أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ عَنِ الْقَاسِمِ بْنِ عَبَّاسٍ الْهَاشِمِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ مَوْلَى أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ :‏

كُنْتُ أَسْمَعُ النَّاسَ يَذْكُرُونَ الْحَوْضَ وَلَمْ أَسْمَعْ ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا كَانَ يَوْمًا مِنْ ذَلِكَ وَالْجَارِيَةُ تَمْشُطُنِي فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ أَيُّهَا النَّاسُ ‏”‏ ‏.‏ فَقُلْتُ لِلْجَارِيَةِ اسْتَأْخِرِي عَنِّي ‏.‏ قَالَتْ إِنَّمَا دَعَا الرِّجَالَ وَلَمْ يَدْعُ النِّسَاءَ ‏.‏ فَقُلْتُ إِنِّي مِنَ النَّاسِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنِّي لَكُمْ فَرَطٌ عَلَى الْحَوْضِ فَإِيَّاىَ لاَ يَأْتِيَنَّ أَحَدُكُمْ فَيُذَبُّ عَنِّي كَمَا يُذَبُّ الْبَعِيرُ الضَّالُّ فَأَقُولُ فِيمَ هَذَا فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ ‏.‏ فَأَقُولُ سُحْقًا ‏”‏


وَحَدَّثَنِي أَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالُوا حَدَّثَنَا أَبُو عَامِرٍ – وَهُوَ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو – حَدَّثَنَا أَفْلَحُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَافِعٍ قَالَ كَانَتْ أُمُّ سَلَمَةَ تُحَدِّثُ أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ عَلَى الْمِنْبَرِ وَهِيَ تَمْتَشِطُ ‏ “‏ أَيُّهَا النَّاسُ ‏”‏ ‏.‏ فَقَالَتْ لِمَاشِطَتِهَا كُفِّي رَأْسِي ‏.‏ بِنَحْوِ حَدِيثِ بُكَيْرٍ عَنِ الْقَاسِمِ بْنِ عَبَّاسٍ

மக்கள் (‘அல்கவ்ஸர்’ எனும் சிறப்புத்) தடாகம் குறித்துக் கூறுவதை நான் கேள்விப்படுபவளாக இருந்தேன். ஆனால், அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எதையும் நான் செவியுறவில்லை. இந்நிலையில் ஒரு நாள் என் பணிப்பெண் எனக்குத் தலைவாரிக்கொண்டிருந்தாள்.

அப்போது (பள்ளிவாசலின் சொற்பொழிவு மேடையிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மக்களே!“ என்று அழைத்தார்கள். உடனே நான் அந்த பணிப்பெண்ணிடம், “ என்னைவிட்டு (சிறிது) விலகிக்கொள்” என்று சொன்னேன். அதற்கு அவள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆண்களைத்தான் அழைத்தார்கள். பெண்களை அழைக்கவில்லை” என்று சொன்னாள். அதற்கு நான், “நானும் மக்களில் ஒருத்தியே” என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

“நான் (எனது ‘அல்கவ்ஸர்’ எனும்) தடாகத்தினருகில் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அங்கு என்னிடம் வருவோருக்கு ஓர் எச்சரிக்கை! உங்களில் எவரும் வழி தவறிவந்த ஒட்டகம் விரட்டப்படுவதைப் போன்று (என்னை நெருங்கவிடாமல்) என்னிடமிருந்து விரட்டப்பட வேண்டாம்.

அப்போது நான், ஏன் இவ்வாறு (விரட்டுகிறீர்கள்)? என்று கேட்பேன்”. அதற்கு, “உங்களுக்குப் பின்னால் இவர்கள் புதிது புதிதாக (மார்க்கத்தில்) எதையெல்லாம் உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது” என்று சொல்லப்படும். அப்போது நான், “தொலையட்டும்! (அவர்கள்)” என்பேன்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி)


குறிப்பு :

அபூஆமிர் (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி ‘மக்களே!’ என்று அழைத்ததை நான் கேட்டேன். அப்போது நான் தலைவாரிக்கொண்டிருந்தேன். உடனே நான் எனக்குத் தலைவாரிவிட்டுக்கொண்டிருந்த பணிப்பெண்ணிடம், தலை முடியைச் சேர்த்து (கொண்டை போட்டு)விடு என்று சொன்னேன் …” என உம்மு ஸலமா (ரலி) கூறியதாக ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 43, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4234

وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنِ ابْنِ خُثَيْمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ أَنَّهُ سَمِعَ عَائِشَةَ تَقُولُ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ وَهُوَ بَيْنَ ظَهْرَانَىْ أَصْحَابِهِ ‏ “‏ إِنِّي عَلَى الْحَوْضِ أَنْتَظِرُ مَنْ يَرِدُ عَلَىَّ مِنْكُمْ فَوَاللَّهِ لَيُقْتَطَعَنَّ دُونِي رِجَالٌ فَلأَقُولَنَّ أَىْ رَبِّ مِنِّي وَمِنْ أُمَّتِي ‏.‏ فَيَقُولُ إِنَّكَ لاَ تَدْرِي مَا عَمِلُوا بَعْدَكَ مَا زَالُوا يَرْجِعُونَ عَلَى أَعْقَابِهِمْ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தோழர்கள் முன்னிலையில் இருந்தபடி கூறினார்கள்: “நான் எனது (‘அல்கவ்ஸர்’ எனும்) தடாகத்தினருகில் உங்களில் என்னிடம் வருபவர் யார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னிடம் நெருங்கவிடாமல் தடுக்கப்படுவர். அப்போது நான், இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவேன்”. அதற்கு இறைவன், “இவர்கள் உமக்குப் பின்னால் செய்ததை நீர் அறியமாட்டீர். இவர்கள் புறமுதுக்கிட்டுத் (தம் பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்றவர்கள்” என்று கூறுவான்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)