அத்தியாயம்: 35, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3633

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ :‏ ‏

ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ قَالَ وَرَأَيْتُهُ يَذْبَحُهُمَا بِيَدِهِ وَرَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا قَالَ وَسَمَّى وَكَبَّرَ ‏


وَحَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدٌ، – يَعْنِي ابْنَ الْحَارِثِ – حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي قَتَادَةُ قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِهِ ‏.‏ قَالَ قُلْتُ آنْتَ سَمِعْتَهُ مِنْ أَنَسٍ قَالَ نَعَمْ ‏‏

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ وَيَقُولُ ‏ “‏ بِاسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கொம்புள்ள கறுப்பு வெள்ளை கலந்த இரு செம்மறியாட்டுக் கிடாய்களை பலி கொடுத்தார்கள். அவர்கள் தமது பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்ததையும் அல்லாஹ்வின் பெயர் கூறி, தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லி அவற்றைத் தமது கையால் அறுத்ததையும் நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்புகள் :

காலித் இப்னுல் ஹாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், நான் கத்தாதா (ரஹ்) அவர்களிடம் “நீங்கள் இதை அனஸ் (ரலி) அவர்களிடம் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு கத்தாதா (ரஹ்) அவர்கள் “ஆம்“ என்று விடையளித்தார்கள் என்று ஷுஅபா (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்’ (அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ் பெரியவன்) என்று கூறியதையும் நான் பார்த்தேன்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 35, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3632

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ :‏ ‏

ضَحَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ ذَبَحَهُمَا بِيَدِهِ وَسَمَّى وَكَبَّرَ وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا ‏

நபி (ஸல்), கொம்புள்ள கறுப்பு வெள்ளை கலந்த இரண்டு செம்மறியாட்டுக் கிடாய்களை பலி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லாஹு அக்பர்’) சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 35, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3631

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ بَعْجَةَ الْجُهَنِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ قَالَ :‏ ‏

قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِينَا ضَحَايَا فَأَصَابَنِي جَذَعٌ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ أَصَابَنِي جَذَعٌ ‏ فَقَالَ ‏ “‏ ضَحِّ بِهِ ‏”‏


وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، حَدَّثَنَا يَحْيَى، – يَعْنِي ابْنَ حَسَّانَ – أَخْبَرَنَا مُعَاوِيَةُ، – وَهُوَ ابْنُ سَلاَّمٍ – حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، أَخْبَرَنِي بَعْجَةُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَسَمَ ضَحَايَا بَيْنَ أَصْحَابِهِ ‏.‏ بِمِثْلِ مَعْنَاهُ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடையே பலிப் பிராணிகளைப் பங்கிட்டார்கள். அப்போது எனக்கு (எனது பங்காக) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி ஒன்று கிடைத்தது. நான், “அல்லாஹ்வின் தூதரே! ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடுதான் எனக்குக் கிடைத்தது” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதை (அறுத்து) நீர் பலி கொடுப்பீராக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி)


குறிப்பு :

முஆவியா இப்னு ஸல்லாம் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தோழர்களிடையே பலிப் பிராணிகளைப் பங்கிட்டார்கள் …” என்று ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 35, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3630

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَاهُ غَنَمًا يَقْسِمُهَا عَلَى أَصْحَابِهِ ضَحَايَا فَبَقِيَ عَتُودٌ فَذَكَرَهُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏ ضَحِّ بِهِ أَنْتَ ‏”‏ ‏.‏ قَالَ قُتَيْبَةُ عَلَى صَحَابَتِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு சில பலிப் பிராணிகளை என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி ஒன்று எஞ்சியது. அது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறியபோது, “அதை நீரே (அறுத்து) பலி கொடுப்பீராக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி)


குறிப்பு :

குதைபா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், தம் தோழர்களுக்கு என்பதைக் குறிக்க ‘அலா அஸ்ஹாபிஹி’ என்பதற்குப் பதிலாக, (அதே பொருள் தரும்) ‘அலா ஸஹாபத்திஹி’ எனும் சொற்றொடர் (மூலத்தில்) இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 35, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3629

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ :‏ ‏

صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ بِالْمَدِينَةِ فَتَقَدَّمَ رِجَالٌ فَنَحَرُوا وَظَنُّوا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ نَحَرَ فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ كَانَ نَحَرَ قَبْلَهُ أَنْ يُعِيدَ بِنَحْرٍ آخَرَ وَلاَ يَنْحَرُوا حَتَّى يَنْحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏

நபி (ஸல்) மதீனாவில் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று எங்களுக்கு (பெருநாள்) தொழுகை நடத்தினார்கள். அப்போது சிலர், நபி (ஸல்) பலிப் பிராணியை அறுத்துவிட்டார்கள் என (பிழையாக) எண்ணிக்கொண்டு, (தொழுகைக்கு) முன்பே சென்று (தங்களுடைய பலிப் பிராணிகளை) அறுத்தனர். அப்போது நபி (ஸல்) தாம் அறுப்பதற்கு முன் எவரும் அறுக்க வேண்டாம் என்றும் தாம் அறுப்பதற்கு முன்பே அறுத்துவிட்டவர் அதற்குப் பதிலாக மீண்டும் ஒரு பிராணியை அறுக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 35, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3628

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ تَذْبَحُوا إِلاَّ مُسِنَّةً إِلاَّ أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ ‏”‏

“ஓராண்டு நிறைவடைந்த ஆட்டை அறுத்து பலி கொடுங்கள். அது கிடைக்காவிட்டால் செம்மறியாட்டில் (ஆறு மாதத்திற்கு மேல்) ஒரு வயதுக்குட்பட்டதை அறுத்து பலி கொடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 35, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3627

وَحَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، جَمِيعًا عَنِ ابْنِ عُلَيَّةَ،  – وَاللَّفْظُ لِعَمْرٍو – قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ ‏ “‏ مَنْ كَانَ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيُعِدْ ‏”‏ ‏.‏ فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذَا يَوْمٌ يُشْتَهَى فِيهِ اللَّحْمُ ‏.‏ وَذَكَرَ هَنَةً مِنْ جِيرَانِهِ كَأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَدَّقَهُ قَالَ وَعِنْدِي جَذَعَةٌ هِيَ أَحَبُّ إِلَىَّ مِنْ شَاتَىْ لَحْمٍ أَفَأَذْبَحُهَا قَالَ فَرَخَّصَ لَهُ فَقَالَ لاَ أَدْرِي أَبَلَغَتْ رُخْصَتُهُ مَنْ سِوَاهُ أَمْ لاَ قَالَ وَانْكَفَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى كَبْشَيْنِ فَذَبَحَهُمَا فَقَامَ النَّاسُ إِلَى غُنَيْمَةٍ فَتَوَزَّعُوهَا ‏.‏ أَوْ قَالَ فَتَجَزَّعُوهَا ‏.‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، وَهِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى ثُمَّ خَطَبَ فَأَمَرَ مَنْ كَانَ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ أَنْ يُعِيدَ ذِبْحًا ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ ‏.‏

وَحَدَّثَنِي زِيَادُ بْنُ يَحْيَى الْحَسَّانِيُّ، حَدَّثَنَا حَاتِمٌ، – يَعْنِي ابْنَ وَرْدَانَ – حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ أَضْحًى – قَالَ – فَوَجَدَ رِيحَ لَحْمٍ فَنَهَاهُمْ أَنْ يَذْبَحُوا قَالَ ‏ “‏ مَنْ كَانَ ضَحَّى فَلْيُعِدْ ‏”‏ ‏.‏ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِهِمَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று, “(பெருநாள்) தொழுகைக்கு முன்பே பலி கொடுத்துவிட்டவர் மறுபடியும் பலி கொடுக்கட்டும்!” என்று கூறினார்கள். உடனே ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இது இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்” என்று கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டை அயலாரின் தேவை பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பே அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். மேலும், தம்மிடம் ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு ஒன்று இருப்பதாகவும், அது இறைச்சி ஆடுகள் இரண்டைவிடச் சிறந்தது என்றும் அதை இப்போது பலி கொடுக்கலாமா? என்றும் கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்கு அனுமதியளித்தார்கள். இந்த அனுமதி அவரல்லாத மற்றவருக்கும் பொருந்துமா, அல்லது பொருந்தாதா என்பது எனக்கு(உறுதியாக)த் தெரியாது.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இரு செம்மறியாட்டுக் கிடாய்களின் பக்கம் சென்று அவ்விரண்டையும் அறுத்தார்கள். மக்கள் ஒரு சிறிய ஆட்டு மந்தைக்குச் சென்று (அதிலிருந்த) ஆடுகளைத் தமக்குள் பிரித்துக்கொண்ட(பின் பலி கொடுத்த)னர்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்புகள் :

ஹம்மாது பின் ஸைத் (ரஹ்) வழி அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஈதுல் அள்ஹா பெருநாள் அன்று) தொழுதுவிட்டுப் பிறகு உரையாற்றினார்கள். அப்போது தொழுகைக்கு முன்பே பலிப் பிராணியை அறுத்து விட்டவர்களிடம் மீண்டும் பலி கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்) வழி அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஈதுல் அள்ஹா பெருநாளன்று எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது இறைச்சி மணம் வருவதை உணர்ந்து, பலிப் பிராணிகளை (தொழுகைக்கு முன்பே) அறுக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள். “யார் (தொழுகைக்கு முன்பே) பலிப் பிராணியை அறுத்தாரோ அவர் மறுபடியும் பலி கொடுக்கட்டும்!” என்று கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 35, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3626

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ، – يَعْنِي ابْنَ جَعْفَرٍ – حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ :‏ ‏

ذَبَحَ أَبُو بُرْدَةَ قَبْلَ الصَّلاَةِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ أَبْدِلْهَا ‏”‏ ‏‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَيْسَ عِنْدِي إِلاَّ جَذَعَةٌ – قَالَ شُعْبَةُ وَأَظُنُّهُ قَالَ – وَهِيَ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ اجْعَلْهَا مَكَانَهَا وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ ‏”‏ ‏


وَحَدَّثَنَاهُ ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي وَهْبُ بْنُ جَرِيرٍ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَلَمْ يَذْكُرِ الشَّكَّ فِي قَوْلِهِ هِيَ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ ‏.‏

அபூபுர்தா (ரலி) (எனும் என் தாய்மாமா பெருநாள்) தொழுகைக்கு முன்பே (பலிப் பிராணியை) அறுத்துவிட்டார்கள். நபி (ஸல்), “அதற்குப் பதிலாக வேறொன்றை அறு(த்து பலி கொடு)ப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அபூபுர்தா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்றைத் தவிர வேறெதுவுமில்லை” என்றார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதற்குப் பதிலாக இதை அறுத்துக் கொள்வீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் இது செல்லாது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


குறிப்பு :

“அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்ததாகும்” என்று அபூபுர்தா (ரலி) சொன்னதாக நான் எண்ணுகின்றேன் என்று அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்.

அபூஆமிர் அல் அகதீ (ரஹ்) வழி அறிவிப்பில், “அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்ததாகும் என்று அபூபுர்தா (ரலி) சொன்னதாக நான் எண்ணுகின்றேன்” என ஷுஅபா (ரஹ்) ஐயப்பாட்டுடன் கூறியுள்ள குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 35, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3625

وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ الدَّارِمِيُّ، حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، عَارِمُ بْنُ الْفَضْلِ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، – يَعْنِي ابْنَ زِيَادٍ – حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنِ الشَّعْبِيِّ، حَدَّثَنِي الْبَرَاءُ بْنُ عَازِبٍ قَالَ :‏ ‏

خَطَبَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي يَوْمِ نَحْرٍ فَقَالَ ‏”‏ لاَ يُضَحِّيَنَّ أَحَدٌ حَتَّى يُصَلِّيَ ‏”‏ ‏.‏ قَالَ رَجُلٌ عِنْدِي عَنَاقُ لَبَنٍ هِيَ خَيْرٌ مِنْ شَاتَىْ لَحْمٍ قَالَ ‏”‏ فَضَحِّ بِهَا وَلاَ تَجْزِي جَذَعَةٌ عَنْ أَحَدٍ بَعْدَكَ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று எங்களிடையே உரையாற்றும்போது, “தொழுவதற்கு முன்பே யாரும் பலி கொடுக்க வேண்டாம்” என்று கூறினார்கள். ஒருவர், “என்னிடம் ஒரு வயதுக்குட்பட்ட பால்குடி மறவாத வெள்ளாட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அது இரு இறைச்சி ஆடுகளைவிடச் சிறந்ததாகும்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதையே நீர் பலி கொடுப்பீராக! ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி பலி, உமக்குப் பிறகு வேறெவருக்கும் செல்லாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

அத்தியாயம்: 35, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3624

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ الإِيَامِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا نُصَلِّي ثُمَّ نَرْجِعُ فَنَنْحَرُ فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا وَمَنْ ذَبَحَ فَإِنَّمَا هُوَ لَحْمٌ قَدَّمَهُ لأَهْلِهِ لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَىْءٍ ‏”‏ ‏.‏ وَكَانَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ قَدْ ذَبَحَ فَقَالَ عِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ فَقَالَ ‏”‏ اذْبَحْهَا وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ ‏”‏


حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ، سَمِعَ الشَّعْبِيَّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ ‏.‏

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَهَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنْ جَرِيرٍ، كِلاَهُمَا عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي يَوْمِ النَّحْرِ بَعْدَ الصَّلاَةِ ‏.‏ ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِهِمْ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (ஹஜ்ஜுப் பெருநாளன்று) “இன்றைய தினம் நாம் முதலில் (பெருநாள் தொழுகை) தொழுவோம். பிறகு தொழுகையை முடித்துத் திரும்பி, பலிப் பிராணிகளை அறுப்போம். இவ்வாறு செய்கின்றவர் நமது வழிமுறையைப் பற்றிக் கொண்டவர் ஆவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்னதாக அறுப்பவரின் பிராணி, தம் குடும்பத்தாரின் (உணவுத்) தேவைக்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்த இறைச்சியாகவே அமையும். அது (பலி) வழிபாட்டில் எதிலும் சேராது” என்று சொன்னார்கள்.

(என் தாய்மாமா) அபூபுர்தா பின் நியார் (ரலி), தொழுகைக்கு முன்பே பலிப் பிராணியை அறுத்துவிட்டிருந்தார். அவர் (எழுந்து), “என்னிடம் ஒரு வயதுக்குட்பட்ட (வெள்ளாட்டு) குட்டி ஒன்றும் இருக்கிறது. அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்ததாகும் (அதைக் பலி கொடுக்கலாமா?)” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதை அறுத்து (பலி கொடுத்து)விடுவீராக! உமக்குப் பின்னர் வேறெவருக்கும் (ஒரு வயது நிறையாத பிராணியின்) இந்த பலி செல்லாது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


குறிப்பு :

ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று தொழுகைக்குப் பிறகு எங்களிடையே உரையாற்றினார்கள் …” என்று ஆரம்பமாகிறது.