அத்தியாயம்: 35, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3643

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ :‏

كُنَّا لاَ نُمْسِكُ لُحُومَ الأَضَاحِيِّ فَوْقَ ثَلاَثٍ فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نَتَزَوَّدَ مِنْهَا وَنَأْكُلَ مِنْهَا ‏.‏ يَعْنِي فَوْقَ ثَلاَثٍ

நாங்கள் பலிப் பிராணிகளின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்துவைக்காமல் இருந்துவந்தோம். பின்னர் அதை (மூன்று நாட்களுக்கு மேல்) பயண உணவாக எடுத்துச் சென்று உண்ணுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 35, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3642

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، كِلاَهُمَا عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ   – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنَا عَطَاءٌ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ :‏

كُنَّا لاَ نَأْكُلُ مِنْ لُحُومِ بُدْنِنَا فَوْقَ ثَلاَثِ مِنًى فَأَرْخَصَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏ كُلُوا وَتَزَوَّدُوا ‏”‏


قُلْتُ لِعَطَاءٍ قَالَ جَابِرٌ حَتَّى جِئْنَا الْمَدِينَةَ قَالَ نَعَمْ ‏‏

நாங்கள் மினாவில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாட்களுக்கு மேல் பலிப் பிராணிகளின் இறைச்சியை உண்ணாமல் இருந்துவந்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இப்போது நீங்கள் (மூன்று நாட்களுக்குப் பிறகும்) உண்ணலாம்; சேமித்தும்வைக்கலாம்” என்று கூறி, எங்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம் “நாங்கள் மதீனா வரும்வரை (சேமித்துவைத்தோம்)” என்று ஜாபிர் (ரலி) கூறினார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்று விடையளித்தார்கள் என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 35, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3641

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ أَكْلِ لُحُومِ الضَّحَايَا بَعْدَ ثَلاَثٍ ثُمَّ قَالَ بَعْدُ ‏ “‏ كُلُوا وَتَزَوَّدُوا وَادَّخِرُوا ‏”‏

நபி (ஸல்) பலி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் என (முதலில்) தடை விதித்திருந்தார்கள். பின்னர் (அந்தத் தடையை நீக்கி) “நீங்கள் (மூன்று நாட்களுக்குப் பிறகும்) உண்ணுங்கள், பயணத்திலும் கொண்டு செல்லுங்கள், சேமித்தும் வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 35, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3640

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا رَوْحٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَاقِدٍ قَالَ :‏ ‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ لُحُومِ الضَّحَايَا بَعْدَ ثَلاَثٍ ‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ فَذَكَرْتُ ذَلِكَ لِعَمْرَةَ فَقَالَتْ صَدَقَ، سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ دَفَّ أَهْلُ أَبْيَاتٍ مِنْ أَهْلِ الْبَادِيَةِ حِضْرَةَ الأَضْحَى زَمَنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ ادَّخِرُوا ثَلاَثًا ثُمَّ تَصَدَّقُوا بِمَا بَقِيَ ‏”‏ ‏.‏ فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ النَّاسَ يَتَّخِذُونَ الأَسْقِيَةَ مِنْ ضَحَايَاهُمْ وَيَحْمِلُونَ مِنْهَا الْوَدَكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ وَمَا ذَاكَ ‏”‏ ‏.‏ قَالُوا نَهَيْتَ أَنْ تُؤْكَلَ لُحُومُ الضَّحَايَا بَعْدَ ثَلاَثٍ ‏.‏ فَقَالَ ‏”‏ إِنَّمَا نَهَيْتُكُمْ مِنْ أَجْلِ الدَّافَّةِ الَّتِي دَفَّتْ فَكُلُوا وَادَّخِرُوا وَتَصَدَّقُوا ‏”‏

அப்துல்லாஹ் பின் வாகித் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பலி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள்” என்று கூறினார்கள். இதை நான் அம்ரா பின்த்தி அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது, “அப்துல்லாஹ் பின் வாகித் சொன்னது உண்மையே” என்று கூறிவிட்டு,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஈதுல் அள்ஹா பெருநாள் சமயத்தில் கிராமப்புற ஏழை மக்களில் சிலர் (மதீனாவுக்கு) வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), “மூன்று நாட்களுக்கு மட்டுமே (குர்பானி இறைச்சிகளை) சேமித்துவையுங்கள். எஞ்சியதை தர்மம் செய்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அதன் பின் (அடுத்த ஆண்டு) ஆனபோது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களது பலிப் பிராணியி(ன் தோலி)லிருந்து தோல் பை தயாரித்துக் கொள்கின்றனர். அவற்றின் இறைச்சியிலிருந்து கொழுப்பை உருக்கி எடுத்துக்கொள்கின்றனர்” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதனால் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “பலிப் பிராணியின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் என நீங்கள் தடை செய்திருந்தீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(நம்மை நாடி) வந்திருந்த (ஏழை) மக்களுக்காகவே (மூன்று நாட்களுக்கு மேலாக பலி இறைச்சியை உண்ண வேண்டாமென) உங்களைத் தடுத்திருந்தேன். இனி, நீங்கள் பலி இறைச்சியை உண்ணுங்கள். சேமித்துவையுங்கள். தர்மமும் செய்யுங்கள்” என்று கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறக் கேட்டிருக்கின்றேன் என அம்ரா (ரஹ்) குறிப்பிட்டார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அபீபக்ரு பின் முஹம்மது பின் அம்ரு (ரஹ்)

அத்தியாயம்: 35, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3639

وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا وَقَالَ عَبْدٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ تُؤْكَلَ لُحُومُ الأَضَاحِي بَعْدَ ثَلاَثٍ 


قَالَ سَالِمٌ فَكَانَ ابْنُ عُمَرَ لاَ يَأْكُلُ لُحُومَ الأَضَاحِيِّ فَوْقَ ثَلاَثٍ ‏ وَقَالَ ابْنُ أَبِي عُمَرَ بَعْدَ ثَلاَثٍ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மூன்று நாட்களுக்கு மேலாக பலி இறைச்சி உண்ணப்படுவதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

“இப்னு உமர் (ரலி), பலி இறைச்சியை (நாள்கள்) மூன்றைத் தாண்டி உண்ணமாட்டார்கள்” என்று இதன் அறிவிப்பாளரான ஸாலிம் (ரஹ்) கூறுகின்றார். இப்னு அபீ உமர் (ரஹ்) அறிவிப்பில், “மூன்று (நாள்கள்) கடந்துவிட்டால் உண்ண மாட்டார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 35, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3638

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ :‏ ‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ “‏ لاَ يَأْكُلْ أَحَدٌ مِنْ لَحْمِ أُضْحِيَّتِهِ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ ‏”‏


وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا الضَّحَّاكُ، – يَعْنِي ابْنَ عُثْمَانَ – كِلاَهُمَا عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ اللَّيْثِ ‏.‏

“யாரும் தமது பலி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் உண்ண வேண்டாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 35, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3637

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي أَبُو عُبَيْدٍ، مَوْلَى ابْنِ أَزْهَرَ أَنَّهُ شَهِدَ الْعِيدَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ ثُمَّ صَلَّيْتُ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ – قَالَ – فَصَلَّى لَنَا قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ خَطَبَ النَّاسَ فَقَالَ :‏ ‏

إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ نَهَاكُمْ أَنْ تَأْكُلُوا لُحُومَ نُسُكِكُمْ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ فَلاَ تَأْكُلُوا ‏


وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، ح وَحَدَّثَنَا حَسَنٌ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كُلُّهُمْ عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏

நான், (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டுள்ளேன். பிறகு (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடனும் தொழுதிருக்கின்றேன். அலீ (ரலி) உரையாற்றுவதற்கு முன் எங்களுக்குப் பெருநாள் தொழுகை தொழுவித்தார்கள்.

பிறகு மக்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மூன்று நாட்களுக்கு மேலாக உங்கள் பலி இறைச்சிகளை நீங்கள் உண்பதற்குத் தடை விதித்தார்கள். எனவே, (மூன்று நாட்களுக்கு மேலாக பலி இறைச்சிகளை) உண்ணாதீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக அபூஉபைத் ஸஅத் பின் உபைத் (ரஹ்)

அத்தியாயம்: 35, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3636

حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ أَبِي عُبَيْدٍ قَالَ شَهِدْتُ الْعِيدَ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ فَبَدَأَ بِالصَّلاَةِ قَبْلَ الْخُطْبَةِ وَقَالَ :‏ ‏

إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَانَا أَنْ نَأْكُلَ مِنْ لُحُومِ نُسُكِنَا بَعْدَ ثَلاَثٍ ‏

நான், (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டேன். உரை நிகழ்த்துவதற்கு முன்பே பெருநாள் தொழுகையை அவர்கள் தொழுவித்தார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), நாம் நமது பலி இறைச்சிகளை மூன்று நாட்களுக்கு மேல் (சேமித்துவைத்து) உண்பதற்குத் தடை விதித்தார்கள்” என்று (தமது உரையில்) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்)

அத்தியாயம்: 35, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3635

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي أَبِي، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قُلْتُ :‏

‏يَا رَسُولَ اللَّهِ إِنَّا لاَقُو الْعَدُوِّ غَدًا وَلَيْسَتْ مَعَنَا مُدًى قَالَ صلى الله عليه وسلم ‏”‏ أَعْجِلْ أَوْ أَرْنِي مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ وَسَأُحَدِّثُكَ أَمَّا السِّنُّ فَعَظْمٌ وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ ‏”‏ ‏.‏ قَالَ وَأَصَبْنَا نَهْبَ إِبِلٍ وَغَنَمٍ فَنَدَّ مِنْهَا بَعِيرٌ فَرَمَاهُ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّ لِهَذِهِ الإِبِلِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَإِذَا غَلَبَكُمْ مِنْهَا شَىْءٌ فَاصْنَعُوا بِهِ هَكَذَا ‏”‏


وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِذِي الْحُلَيْفَةِ مِنْ تِهَامَةَ فَأَصَبْنَا غَنَمًا وَإِبِلاً فَعَجِلَ الْقَوْمُ فَأَغْلَوْا بِهَا الْقُدُورَ فَأَمَرَ بِهَا فَكُفِئَتْ ثُمَّ عَدَلَ عَشْرًا مِنَ الْغَنَمِ بِجَزُورٍ ‏.‏ وَذَكَرَ بَاقِيَ الْحَدِيثِ كَنَحْوِ حَدِيثِ يَحْيَى بْنِ سَعِيدٍ ‏.‏

وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ، عَنْ جَدِّهِ رَافِعٍ ثُمَّ حَدَّثَنِيهِ عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ عَنْ جَدِّهِ قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّا لاَقُو الْعَدُوِّ غَدًا وَلَيْسَ مَعَنَا مُدًى فَنُذَكِّي بِاللِّيطِ وَذَكَرَ الْحَدِيثَ بِقِصَّتِهِ وَقَالَ فَنَدَّ عَلَيْنَا بَعِيرٌ مِنْهَا فَرَمَيْنَاهُ بِالنَّبْلِ حَتَّى وَهَصْنَاهُ ‏.‏

وَحَدَّثَنِيهِ الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، بِهَذَا الإِسْنَادِ الْحَدِيثَ إِلَى آخِرِهِ بِتَمَامِهِ وَقَالَ فِيهِ وَلَيْسَتْ مَعَنَا مُدًى أَفَنَذْبَحُ بِالْقَصَبِ

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ بْنِ عَبْدِ الْحَمِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لاَقُو الْعَدُوِّ غَدًا وَلَيْسَ مَعَنَا مُدًى وَسَاقَ الْحَدِيثَ وَلَمْ يَذْكُرْ فَعَجِلَ الْقَوْمُ فَأَغْلَوْا بِهَا الْقُدُورَ فَأَمَرَ بِهَا فَكُفِئَتْ وَذَكَرَ سَائِرَ الْقِصَّةِ ‏.‏

நான் (நபியவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (ஒட்டகங்களை அறுக்கக்  கத்திகளைப் பயன்படுத்திவிட்டால்) நாளை எதிரிகளைச் சந்திக்கும்போது (கூரான) கத்திகள் எங்களுக்கு இல்லாமல் போய்விடுமே” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்), “விரைவாக அறுத்துவிடுங்கள். (கூர்மையான ஏதேனும் ஒன்றால்) உயிரிழக்கச் செய்துவிடுங்கள். இரத்தத்தை வழிந்தோடச் செய்யும் எதைக் கொண்டும் அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருந்தால், அதை நீங்கள் உண்ணலாம். நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்: பல்லாலும் நகத்தாலும் (அறுத்தல்) கூடாது. பற்கள் எலும்பு இனமாகும். நகங்களோ அபிசீனிய(இறைமறுப்பாள)ர்களின் கத்திகளாகும்” என்று கூறினார்கள்.

எங்களுக்கு (அந்தப் போரில்) சில ஒட்டகங்களும் ஆடுகளும் போர்ச் செல்வமாகக் கிடைத்தன. அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. உடனே (நபித்தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து அம்பெய்து, அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே, இந்த(வளர்ப்பு)ப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. அவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)


குறிப்புகள் :

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் திஹாமா பகுதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது நாங்கள் (போர்ச் செல்வத்திலிருந்து) சில ஆடுகளையும் ஒட்டகங்களையும் பெற்றோம். மக்கள் அவசரப்பட்டு(அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே அறுத்து)ப் பாத்திரங்களை (அடுப்புகளில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி)விட்டார்கள். (இதையறிந்த) நபி (ஸல்) பாத்திரங்களைக் கவிழ்த்துவிடும்படி உத்தரவிட, அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்(டு அவற்றிலிருந்த இறைச்சிகள் வெளியே கொட்டப்பட்)டன. பிறகு பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக்கி(ப் பங்கிடலா)னார்கள் …” என்று ஆரம்பமாகிறது.

இஸ்மாயீல் பின் முஸ்லிம் (ரஹ்) அறிவிப்பில், “நாங்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (ஒட்டகங்களை அறுக்க வாட்களை இன்று பயன்படுத்திவிட்டால்) நாளை எங்களிடம் (கூரான) வாட்களே இல்லாத நிலையில் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே! ஆகவே, (கூர்மையான) மூங்கில் கழியால் (ஒட்டகங்களை) அறுக்கலாமா? என்று கேட்டோம்” என்று இடம்பெற்றுள்ளது.

“அப்போது (போர்ச் செல்வமாக நாங்கள் பெற்ற) ஒட்டகங்களிலிருந்து ஒன்று மிரண்டு ஓடியது. நாங்கள் அம்பெய்து அதை (ஓடவிடாமல்) தடுத்து நிறுத்தினோம்” என்றும் இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

ஹுஸைன் பின் அலீ (ரஹ்) வழி அறிவிப்பில், “எங்களிடம் (கூரான) வாட்கள் இல்லாத நிலையில் (நாங்கள் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே!) நாங்கள் (கூரான) மூங்கில் கழியால் (ஒட்டகங்களை) அறுக்கலாமா?” என்று கேட்டதாக இடம்பெற்றுள்ளது.

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பு, “நான், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (இன்று ஒட்டகங்களை அறுக்க வாட்களைப் பயன் படுத்திவிட்டால்) நாளை எங்களிடம் (கூரான) வாட்கள் இல்லாத நிலையில் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே! …” என்று  கேட்டேன் என ஆரம்பமாகிறது. மேலும், “மக்கள் அவசரப்பட்டு(அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே அறுத்து)ப் பாத்திரங்களை (அடுப்புகளில்) ஏற்றி(சமைக்கத் தொடங்கி)விட்டனர். அப்போது நபி (ஸல்) பாத்திரங்களைக் கவிழ்க்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டன” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 35, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3634

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ قَالَ حَيْوَةُ أَخْبَرَنِي أَبُو صَخْرٍ، عَنْ يَزِيدَ بْنِ قُسَيْطٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِكَبْشٍ أَقْرَنَ يَطَأُ فِي سَوَادٍ وَيَبْرُكُ فِي سَوَادٍ وَيَنْظُرُ فِي سَوَادٍ فَأُتِيَ بِهِ لِيُضَحِّيَ بِهِ فَقَالَ لَهَا ‏”‏ يَا عَائِشَةُ هَلُمِّي الْمُدْيَةَ ‏”‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏”‏ اشْحَذِيهَا بِحَجَرٍ ‏”‏ ‏.‏ فَفَعَلَتْ ثُمَّ أَخَذَهَا وَأَخَذَ الْكَبْشَ فَأَضْجَعَهُ ثُمَّ ذَبَحَهُ ثُمَّ قَالَ ‏”‏ بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ وَمِنْ أُمَّةِ مُحَمَّدٍ ‏”‏ ‏.‏ ثُمَّ ضَحَّى بِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கருப்பு(நிறக் கால்களா)ல் நடக்கின்ற, கருப்பு(வயிற்றி)ல் படுக்கின்ற, கருப்பு(க் கண்களா)ல் பார்க்கின்ற கொம்புள்ள செம்மறியாட்டுக் கிடாய் ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே பலிக்காக அது கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என்னிடம்), “ஆயிஷா! அந்தக் கத்தியை எடு” என்றார்கள். பிறகு “அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு” என்றார்கள். அவ்வாறே நான் தீட்டினேன்.

பிறகு அந்தக் கத்தியை வாங்கி, அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து, சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) “பிஸ்மில்லாஹ். அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வ ஆலி முஹம்மதின் வமின் உம்மத்தி முஹம்மதின்’ (அல்லாஹ்வின் பெயரால்! இறைவா! முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக் கொள்வாயாக!)” என்று கூறி, அதை அறுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)