அத்தியாயம்: 15, பாடம்: 15.14, ஹதீஸ் எண்: 2093

و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏وَأَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ : ‏

‏بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِعَرَفَةَ ‏ ‏إِذْ وَقَعَ مِنْ رَاحِلَتِهِ قَالَ ‏ ‏أَيُّوبُ ‏ ‏فَأَوْقَصَتْهُ ‏ ‏أَوْ قَالَ ‏ ‏فَأَقْعَصَتْهُ ‏ ‏و قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏فَوَقَصَتْهُ ‏ ‏فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏اغْسِلُوهُ بِمَاءٍ ‏ ‏وَسِدْرٍ ‏ ‏وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ ‏ ‏وَلَا تُحَنِّطُوهُ ‏ ‏وَلَا ‏ ‏تُخَمِّرُوا ‏ ‏رَأْسَهُ قَالَ ‏ ‏أَيُّوبُ ‏ ‏فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا وَقَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ يُلَبِّي ‏


‏و حَدَّثَنِيهِ ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏قَالَ ‏ ‏نُبِّئْتُ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏أَنَّ رَجُلًا كَانَ وَاقِفًا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ مُحْرِمٌ فَذَكَرَ ‏ ‏نَحْوَ مَا ذَكَرَ ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘அரஃபா’ பெருவெளியில் தங்கியிருந்த ஒருவர், தமது வாகனத்திலிருந்து (தவறி) விழுந்துவிட்டார். அவரது கழுத்து முறிந்துவிட்டது. இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டபோது, “அவரை நீராலும் இலந்தை இலையாலும் குளிப்பாட்டுங்கள். இரு ஆடைகளில் அவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். அவருக்கு வாசனைத் தூள் போடாதீர்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், தல்பியா சொல்லிக்கொண்டிருப்பவராக மறுமை நாளில் அவரை அல்லாஹ் எழுப்புவான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

அம்ருந் நாகித் (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர் இஹ்ராம் பூண்டவராக நபி (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தார் …” என்று தொடங்குகிறது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.14, ஹதீஸ் எண்: 2092

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا :‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَرَّ ‏ ‏رَجُلٌ مِنْ بَعِيرِهِ ‏ ‏فَوُقِصَ ‏ ‏فَمَاتَ فَقَالَ ‏ ‏اغْسِلُوهُ بِمَاءٍ ‏ ‏وَسِدْرٍ ‏ ‏وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْهِ وَلَا ‏ ‏تُخَمِّرُوا ‏ ‏رَأْسَهُ فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا

ஒருவர் (இஹ்ராம் பூண்டிருந்த நிலையில்) தமது ஒட்டகத்திலிருந்து விழுந்து, கழுத்து முறிபட்டு இறந்து போனார். அப்போது நபி (ஸல்), “அவரை நீராலும் இலந்தை இலையாலும் குளிப்பாட்டுங்கள். அவருடைய இரு ஆடைகளால் அவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், தல்பியா கூறியவராக அவரை மறுமை நாளில் அல்லாஹ் எழுப்புவான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.13, ஹதீஸ் எண்: 2091

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَهَذَا حَدِيثُهُ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏فِيمَا قُرِئَ عَلَيْهِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏وَالْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ ‏ ‏أَنَّهُمَا اخْتَلَفَا ‏ ‏بِالْأَبْوَاءِ ‏ ‏فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ :‏

‏يَغْسِلُ الْمُحْرِمُ رَأْسَهُ وَقَالَ ‏ ‏الْمِسْوَرُ ‏ ‏لَا يَغْسِلُ الْمُحْرِمُ رَأْسَهُ فَأَرْسَلَنِي ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏إِلَى ‏ ‏أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ ‏ ‏أَسْأَلُهُ عَنْ ذَلِكَ ‏

‏فَوَجَدْتُهُ يَغْتَسِلُ بَيْنَ ‏ ‏الْقَرْنَيْنِ ‏ ‏وَهُوَ يَسْتَتِرُ بِثَوْبٍ قَالَ فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ مَنْ هَذَا فَقُلْتُ أَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ حُنَيْنٍ ‏ ‏أَرْسَلَنِي إِلَيْكَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ‏ ‏أَسْأَلُكَ كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَغْسِلُ رَأْسَهُ وَهُوَ مُحْرِمٌ فَوَضَعَ ‏ ‏أَبُو أَيُّوبَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَدَهُ عَلَى الثَّوْبِ ‏ ‏فَطَأْطَأَهُ ‏ ‏حَتَّى بَدَا لِي رَأْسُهُ ثُمَّ قَالَ لِإِنْسَانٍ يَصُبُّ اصْبُبْ فَصَبَّ عَلَى رَأْسِهِ ثُمَّ حَرَّكَ رَأْسَهُ بِيَدَيْهِ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُهُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَفْعَلُ


‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏زَيْدُ بْنُ أَسْلَمَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏فَأَمَرَّ ‏ ‏أَبُو أَيُّوبَ ‏ ‏بِيَدَيْهِ عَلَى رَأْسِهِ جَمِيعًا عَلَى جَمِيعِ رَأْسِهِ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ فَقَالَ ‏ ‏الْمِسْوَرُ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏لَا ‏ ‏أُمَارِيكَ ‏ ‏أَبَدًا

அல்அப்வா’ எனுமிடத்தில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகிய இருவரும் (ஒரு விஷயத்தில்) கருத்து வேறுபாடு கொண்டனர். அதாவது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) “இஹ்ராம் பூண்டவர் தமது தலையைக் கழுவிக்கொள்ளலாம்” என்று கூறினார்கள். மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), “இஹ்ராம் பூண்டவர் தலையைக் கழுவக் கூடாது” என்றார்கள்.

இதையடுத்து அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அதைப் பற்றிக் கேட்பதற்காக அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பிவைத்தார்கள். நான் சென்றபோது அவர்கள் கிணற்றின் மேல் ஊன்றப்பட்டிருக்கும் இரு மரக்குச்சிகளுக்கிடையே ஒரு துணியால் திரையிட்டுக் குளித்துக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு முகமன் கூறினேன். அவர்கள், “யார்?” என்று கேட்டார்கள். “நான் அப்துல்லாஹ் பின் ஹுனைன் (வந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூண்டிருந்தபோது எவ்வாறு தமது தலையைக் கழுவிக்கொள்வார்கள்? என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார்கள்” என்று சொன்னேன்.

அபூஅய்யூப் (ரலி) தமது கையைத் திரையின் மீது வைத்து, தமது தலை (எனக்குத்) தென்படும் அளவிற்குத் திரையைக் கீழே இறக்கினார்கள். பிறகு தலைக்குத் நீர் ஊற்றிக் கொண்டிருந்த மனிதரிடம், “நீர் ஊற்று” என்றார்கள். அவர் நீர் ஊற்ற, அபூஅய்யூப் (ரலி), பின்னிருந்து முன்னாகவும் முன்னிருந்து பின்னாகவும் தம் கைகளைக் கொண்டுசென்று தமது தலையைத் தேய்த்துக் கழுவினார்கள். பிறகு, “இவ்வாறே நபி (ஸல்) செய்வதை நான் பார்த்திருக்கின்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஹுனைன் (ரஹ்)


குறிப்பு :

ஈஸப்னு யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “…அப்போது அபூஅய்யூப் (ரலி) தம் கைகளைப் பின்னிருந்து முன்னாகவும் முன்னிருந்து பின்னாகவும் தலை முழுவதற்கும் கொண்டுசென்றார்கள். (அபூஅய்யூப் (ரலி) கூறிய செய்தி மிஸ்வர் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது) மிஸ்வர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “(இனி) ஒருபோதும் நான் உங்களிடம் வழக்காடமாட்டேன்” என்று கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.12, ஹதீஸ் எண்: 2090

و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏نُبَيْهُ بْنُ وَهْبٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ عُبَيْدِ اللَّهِ بْنِ مَعْمَرٍ ‏ ‏رَمِدَتْ عَيْنُهُ فَأَرَادَ أَنْ يَكْحُلَهَا ‏ ‏فَنَهَاهُ ‏ ‏أَبَانُ بْنُ عُثْمَانَ :‏

‏وَأَمَرَهُ أَنْ يُضَمِّدَهَا ‏ ‏بِالصَّبِرِ ‏ ‏وَحَدَّثَ عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ عَفَّانَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ فَعَلَ ذَلِكَ

உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டது. அப்போது அவர்கள் கண்ணில் அஞ்சனம் (சுருமா) இட்டுக்கொள்ள விரும்பினார்கள். இதை அறிந்த அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவ்வாறு செய்ய வேண்டாம் எனத் தடை விதித்துவிட்டு, கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள். மேலும், நபி (ஸல்) (கண்வலி எற்பட்டோருக்கு) அவ்வாறு செய்தார்கள் என உஸ்மான் (ரலி) கூறினார்கள் என்றும் அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக நுபைஹ் பின் வஹ்பு (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.12, ஹதீஸ் எண்: 2089

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏نُبَيْهِ بْنِ وَهْبٍ ‏ ‏قَالَ خَرَجْنَا مَعَ ‏ ‏أَبَانَ بْنِ عُثْمَانَ :‏

‏حَتَّى إِذَا كُنَّا بِمَلَلٍ اشْتَكَى ‏ ‏عُمَرُ بْنُ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَيْنَيْهِ فَلَمَّا كُنَّا ‏ ‏بِالرَّوْحَاءِ ‏ ‏اشْتَدَّ وَجَعُهُ فَأَرْسَلَ إِلَى ‏ ‏أَبَانَ بْنِ عُثْمَانَ ‏ ‏يَسْأَلُهُ فَأَرْسَلَ إِلَيْهِ أَنْ اضْمِدْهُمَا ‏ ‏بِالصَّبِرِ ‏ ‏فَإِنَّ ‏ ‏عُثْمَانَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏حَدَّثَ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الرَّجُلِ ‏ ‏إِذَا اشْتَكَى عَيْنَيْهِ وَهُوَ مُحْرِمٌ ضَمَّدَهُمَا ‏ ‏بِالصَّبِرِ

நாங்கள் (ஒரு பயணத்தில்) அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் ‘அல்மலல்’ எனுமிடத்தை அடைந்தபோது, (எங்களுடன் வந்த) உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டது. பின்னர் நாங்கள் ‘அர்ரவ்ஹா’ எனுமிடத்தில் இருந்தபோது, அவருக்குக் கண்வலி கடுமையாகிவிட்டது. எனவே, உமர் பின் உபைதில்லாஹ், அபான் பின் உஸ்மான் அவர்களிடம் ஆளனுப்பி(தாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி)க் கேட்டார். அதற்கு அபான், கற்றாழைச் சாற்றைப் பிழிந்து அவருடைய கண்களில் கட்டுமாறு கூறியனுப்பினார்கள். மேலும், “(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) இஹ்ராம் பூண்டிருந்த ஒருவருக்குக் கண்வலி ஏற்பட்டபோது, இவ்வாறுதான் அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அறிவித்தார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக நுபைஹ் பின் வஹ்பு (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.11, ஹதீஸ் எண்: 2088

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعَلَّى بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ بُحَيْنَةَ :‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏احْتَجَمَ ‏ ‏بِطَرِيقِ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَهُوَ مُحْرِمٌ وَسَطَ رَأْسِهِ

நபி (ஸல்) மக்கா செல்லும் சாலையில் தமது தலையின் நடுவே குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். அப்போது அவர்கள் இஹ்ராம் பூண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.11, ஹதீஸ் எண்: 2087

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏وَعَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا : ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏احْتَجَمَ ‏ ‏وَهُوَ مُحْرِمٌ

நபி (ஸல்) இஹ்ராம் பூண்டிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.10, ஹதீஸ் எண்: 2086

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَصْبَهَانِيِّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَعْقِلٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏كَعْبُ بْنُ عُجْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ :‏

‏أَنَّهُ خَرَجَ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُحْرِمًا فَقَمِلَ رَأْسُهُ وَلِحْيَتُهُ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَرْسَلَ إِلَيْهِ فَدَعَا الْحَلَّاقَ فَحَلَقَ رَأْسَهُ ثُمَّ قَالَ لَهُ ‏ ‏هَلْ عِنْدَكَ نُسُكٌ قَالَ مَا أَقْدِرُ عَلَيْهِ فَأَمَرَهُ أَنْ يَصُومَ ثَلَاثَةَ أَيَّامٍ أَوْ يُطْعِمَ سِتَّةَ مَسَاكِينَ لِكُلِّ مِسْكِينَيْنِ صَاعٌ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِيهِ خَاصَّةً ”: ‏ ‏فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ “‏ ‏ثُمَّ كَانَتْ لِلْمُسْلِمِينَ عَامَّةً

நான் (ஹுதைபியாவின்போது) இஹ்ராம் பூண்டவனாக நபி (ஸல்) அவர்களுடன் (உம்ராவிற்காகச்) சென்றேன். அப்போது எனது தலையிலும் தாடியிலும் பேன்கள் நிறைந்திருந்தன.

இத்தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள் (என்னை அழைத்து வருமாறு) என்னிடம் ஆளனுப்பினார்கள்; நாவிதரையும் அழைத்தார்கள். அவர் (வந்து) எனது தலையை மழித்தார். பிறகு, “உன்னிடம் ஏதேனும் குர்பானிப் பிராணி உண்டா?” என்று நபியவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், “எனக்கு அதற்கான வசதி இல்லை” என்றேன்.

அவ்வாறாயின், மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது தலா ஓர் ஏழைக்கு ஒரு ‘ஸாஉ’ வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளி” என்று கூறினார்கள். வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் “உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தாலோ, அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தாலோ (அவர் தலையை மழிக்கலாம். ஆனால்,) அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும். அல்லது தர்மம் செய்ய வேண்டும். அல்லது பலியிட வேண்டும்” எனும் (2:196ஆவது) வசனத்தைக் குறிப்பாக என் தொடர்பாக அருளினான். பின்னர் முஸ்லிம்கள் அனைவருக்கும் (அதன் சட்டம்) பொதுவானதாக அமைந்தது.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.10, ஹதீஸ் எண்: 2085

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَصْبَهَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَعْقِلٍ ‏ ‏قَالَ : ‏

‏قَعَدْتُ إِلَى ‏ ‏كَعْبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏وَهُوَ فِي الْمَسْجِدِ فَسَأَلْتُهُ عَنْ هَذِهِ الْآيَةِ” : ‏فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ ‏ ‏نُسُكٍ ‏ “ ‏فَقَالَ ‏ ‏كَعْبٌ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏نَزَلَتْ فِيَّ كَانَ بِي أَذًى مِنْ رَأْسِي فَحُمِلْتُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالْقَمْلُ يَتَنَاثَرُ عَلَى وَجْهِي فَقَالَ ‏ ‏مَا كُنْتُ أُرَى أَنَّ الْجَهْدَ بَلَغَ مِنْكَ مَا أَرَى أَتَجِدُ شَاةً فَقُلْتُ لَا فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ ” ‏فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ ‏ ‏نُسُكٍ “‏ ‏‏قَالَ صَوْمُ ثَلَاثَةِ أَيَّامٍ أَوْ إِطْعَامُ سِتَّةِ مَسَاكِينَ نِصْفَ صَاعٍ طَعَامًا لِكُلِّ مِسْكِينٍ قَالَ فَنَزَلَتْ فِيَّ خَاصَّةً وَهِيَ لَكُمْ عَامَّةً

நான் கஅப் பின் உஜ்ரா (ரலி) அருகில் (கூஃபா) பள்ளியில் அமர்ந்திருந்தேன் அப்போது அவர்களிடம், “..அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும். அல்லது பலியிட வேண்டும்” எனும் இந்த (2:196ஆவது) வசனத்தைப் பற்றிக் கேட்டேன்.

அதற்கு அவர்கள், “இந்த வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது. எனது தலையில் நோய் தாக்கியிருந்தது. எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். எனது தலையிலிருந்த பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொண்டிருந்தன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்கு இவ்வளவு சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்க வில்லை” என்று கூறிவிட்டு, “உனக்கு ஓர் ஆடு கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். அப்போதுதான் இந்த (2:196ஆவது) வசனம் அருளப் பெற்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை ‘ஸாஉ’ உணவு வீதம், ஆறு ஏழைகளுக்கு உணவளி” என்று சொன்னார்கள். ஆகவே, இந்த வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பெற்றது. என்றாலும், அதன் சட்டம் உங்கள் அனைவருக்கும் பொதுவானதாகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.10, ஹதீஸ் எண்: 2084

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ عُجْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّ بِهِ زَمَنَ ‏ ‏الْحُدَيْبِيَةِ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏آذَاكَ ‏ ‏هَوَامُّ ‏ ‏رَأْسِكَ قَالَ نَعَمْ فَقَالَ لَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏احْلِقْ رَأْسَكَ ثُمَّ اذْبَحْ شَاةً نُسُكًا أَوْ صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ أَوْ أَطْعِمْ ثَلَاثَةَ ‏ ‏آصُعٍ مِنْ تَمْرٍ عَلَى سِتَّةِ مَسَاكِينَ

ஹுதைபியாவின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னிடம், “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன்.

அதற்கு நபி (ஸல்), “நீ உனது தலைமுடியை மழித்துக் கொள். பிறகு ஓர் ஆட்டை அறுத்துப் பலியிடு. அல்லது மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது மூன்று ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்தை ஆறு ஏழைகளுக்குப் பகிர்ந்தளி!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)