அத்தியாயம்: 15, பாடம்: 15.10, ஹதீஸ் எண்: 2083

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي نَجِيحٍ ‏ ‏وَأَيُّوبَ ‏ ‏وَحُمَيْدٍ ‏ ‏وَعَبْدِ الْكَرِيمِ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ عُجْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّ بِهِ وَهُوَ ‏ ‏بِالْحُدَيْبِيَةِ ‏ ‏قَبْلَ أَنْ يَدْخُلَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَهُوَ مُحْرِمٌ وَهُوَ يُوقِدُ تَحْتَ قِدْرٍ وَالْقَمْلُ يَتَهَافَتُ عَلَى وَجْهِهِ فَقَالَ ‏ ‏أَيُؤْذِيكَ ‏ ‏هَوَامُّكَ ‏ ‏هَذِهِ قَالَ نَعَمْ قَالَ فَاحْلِقْ رَأْسَكَ وَأَطْعِمْ فَرَقًا بَيْنَ سِتَّةِ مَسَاكِينَ وَالْفَرَقُ ثَلَاثَةُ ‏ ‏آصُعٍ أَوْ صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ أَوْ ‏ ‏انْسُكْ ‏ ‏نَسِيكَةً ‏
‏قَالَ ‏ ‏ابْنُ أَبِي نَجِيحٍ ‏ ‏أَوْ اذْبَحْ شَاةً

நான் (உம்ராவிற்குச் சென்றபோது) மக்காவிற்குள் நுழைவதற்கு முன் இஹ்ராம் பூண்டவனாக ஹுதைபியாவில் ஒரு பாத்திரத்தின் கீழ் தீ மூட்டி(சமைத்து)க் கொண்டிருந்தேன். (எனது தலையிலிருந்த) பேன்கள் என் முகத்தில் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது என்னைக் கடந்து சென்ற நபி (ஸல்), “உன் தலையிலுள்ள இப் பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன்.

“அப்படியானால், நீ உனது தலையை மழித்துக் கொள். (அதற்குப் பரிகாரமாக) ஒரு ‘ஃபரக்’ உணவை ஆறு ஏழைகளுக்குப் பகிர்ந்தளி. அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடு” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2082

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَيْفٌ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُجَاهِدًا ‏ ‏يَقُولُ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏كَعْبُ بْنُ عُجْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَفَ عَلَيْهِ وَرَأْسُهُ يَتَهَافَتُ قَمْلًا فَقَالَ ‏ ‏أَيُؤْذِيكَ ‏ ‏هَوَامُّكَ ‏ ‏قُلْتُ نَعَمْ قَالَ فَاحْلِقْ رَأْسَكَ قَالَ فَفِيَّ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ”‏ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ ‏ ‏نُسُكٍ ‏“‏ ‏

‏فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ أَوْ تَصَدَّقْ ‏ ‏بِفَرَقٍ ‏ ‏بَيْنَ سِتَّةِ مَسَاكِينَ أَوْ ‏ ‏انْسُكْ ‏ ‏مَا تَيَسَّرَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஹுதைபியா பயணத்தில்) என் அருகில் (வந்து) நின்றார்கள். அப்போது எனது தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் என்றேன்”. “அப்படி எனில் நீ உனது தலை முடியை மழித்துக் கொள்” என்றார்கள்.

இதையடுத்து “உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தால், அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தால் (அவர் தலையை மழிக்கலாம். ஆனால்,) அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும். அல்லது பலியிட வேண்டும்” எனும் இந்த (2:196ஆவது) வசனம் என் தொடர்பாக அருளப்பெற்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு ஒரு ‘ஃபரக்’ அளவு தர்மம் செய். அல்லது உன்னால் இயன்ற ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடு!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)


குறிப்பு :

‘ஃபரக்’ என்பது தற்கால அளவுக்குத் தோராயமாக 6.5 கிலோவாகும். ஒரு “ஃபரக்’ என்பது மூன்று ‘ஸாஉ’கள் கொண்டது; ஒரு ‘ஸாஉ’ என்றால் நடுத்தரமான ஒருவரின் இரு கை நிறைய நான்கு முறை அள்ளிப் போடும் அளவைக் குறிக்கும். ஒரு ‘ஸாஉ’ = 2 கிலோ 176 கிராம் அளவுக்கு நெருக்கமாக இருக்கும்.

அத்தியாயம்: 15, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2081

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ عُجْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ :‏

‏فِيَّ أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ ”‏ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ ‏ ‏نُسُكٍ ‏“‏

‏قَالَ فَأَتَيْتُهُ فَقَالَ ‏ ‏ادْنُهْ فَدَنَوْتُ فَقَالَ ‏ ‏ادْنُهْ فَدَنَوْتُ فَقَالَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُؤْذِيكَ ‏ ‏هَوَامُّكَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ عَوْنٍ ‏ ‏وَأَظُنُّهُ ‏ ‏قَالَ نَعَمْ قَالَ فَأَمَرَنِي بِفِدْيَةٍ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ مَا تَيَسَّرَ

“உங்களில் (முஹ்ரிமான) ஒருவர் நோயாளியாக இருந்தாலோ, அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தாலோ (அவர் தலை முடியை மழிக்கலாம். ஆனால்,) அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது பலியிட வேண்டும்” எனும் இந்த (2:196ஆவது) வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது.

நான் (ஹுதைபியாவின்போது முஹ்ரிமாக) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “அருகில் வா!” என்றார்கள். நான் அருகில் சென்றேன். “இன்னும் நெருங்கி வா!” என்றார்கள். நான் இன்னும் நெருங்கினேன். பிறகு நபி (ஸல்), “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். நபி (ஸல்), (தலைமுடியை மழித்துவிட்டு) அதற்குப் பரிகாரமாக (மூன்று) நோன்புகள் நோற்க வேண்டும். அல்லது தர்மம் செய்ய வேண்டும். அல்லது இயன்ற ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிட வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2080

و حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُجَاهِدًا ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ عُجْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ :‏

‏أَتَى عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏زَمَنَ ‏ ‏الْحُدَيْبِيَةِ ‏ ‏وَأَنَا أُوقِدُ تَحْتَ ‏ ‏قَالَ ‏ ‏الْقَوَارِيرِيُّ ‏ ‏قِدْرٍ لِي ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏بُرْمَةٍ ‏ ‏لِي ‏ ‏وَالْقَمْلُ يَتَنَاثَرُ عَلَى وَجْهِي فَقَالَ ‏ ‏أَيُؤْذِيكَ ‏ ‏هَوَامُّ ‏ ‏رَأْسِكَ قَالَ قُلْتُ نَعَمْ قَالَ فَاحْلِقْ وَصُمْ ثَلَاثَةَ أَيَّامٍ أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ أَوْ ‏ ‏انْسُكْ ‏ ‏نَسِيكَةً ‏


‏قَالَ ‏ ‏أَيُّوبُ ‏ ‏فَلَا أَدْرِي بِأَيِّ ذَلِكَ بَدَأَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِهِ

ஹுதைபியா உடன்படிக்கை நடந்த காலகட்டத்தில் (உம்ராவிற்காக நான் இஹ்ராம் பூண்டிருந்தபோது), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் வந்தார்கள். அப்போது நான் எனது (கற்)பாத்திரத்தின் கீழே நெருப்பை மூட்டி(சமைத்து)க் கொண்டிருந்தேன். (அப்போது எனது தலையிலிருந்து) பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்துகொண்டிருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்’ என்று கூறினேன். அதற்கு, “உனது தலையை மழித்துக்கொள். பின்பு மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளி. அல்லது ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடு!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)


குறிப்பு :

மூன்று நோன்பு நோற்றல், ஆறு ஏழைகளுக்கு உணவளித்தல், குர்பானி கொடுத்தல் ஆகிய இம்மூன்றில் எதை முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிட்டார்கள் என்று எனக்கு நினைவில்லை” என்று இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அய்யூப் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2079

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَيَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَمْسٌ مَنْ قَتَلَهُنَّ وَهُوَ حَرَامٌ فَلَا ‏ ‏جُنَاحَ ‏ ‏عَلَيْهِ فِيهِنَّ الْعَقْرَبُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ وَالْغُرَابُ وَالْحُدَيَّا ‏


‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى بْنِ يَحْيَى

“தேள், எலி, வெறி நாய், நீர்க்காகம், பருந்து ஆகிய ஐந்து உயிரினங்களை ஒருவர் முஹ்ரிமான நிலையில் கொன்றுவிட்டாலும் அவர் மீது எந்தக் குற்றமுமில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2078

و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِنَافِعٍ ‏ ‏مَاذَا سَمِعْتَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يُحِلُّ لِلْحَرَامِ قَتْلَهُ مِنْ الدَّوَابِّ ‏ ‏فَقَالَ لِي ‏ ‏نَافِعٌ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ : ‏

‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏خَمْسٌ مِنْ الدَّوَابِّ لَا ‏ ‏جُنَاحَ ‏ ‏عَلَى مَنْ قَتَلَهُنَّ فِي قَتْلِهِنَّ الْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْعَقْرَبُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏وَابْنُ رُمْحٍ ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ يَعْنِي ابْنَ حَازِمٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏كُلُّ هَؤُلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏وَابْنِ جُرَيْجٍ ‏ ‏وَلَمْ يَقُلْ أَحَدٌ مِنْهُمْ عَنْ ‏ ‏نَافعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏وَحْدَهُ ‏ ‏وَقَدْ تَابَعَ ‏ ‏ابْنَ جُرَيْجٍ ‏ ‏عَلَى ذَلِكَ ‏ ‏ابْنُ إِسْحَقَ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏فَضْلُ بْنُ سَهْلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏وَعُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ خَمْسٌ لَا جُنَاحَ فِي قَتْلِ مَا قُتِلَ مِنْهُنَّ فِي الْحَرَمِ ‏ ‏فَذَكَرَ بِمِثْلِهِ

நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், “இஹ்ராம் பூண்டிருப்பவருக்கு எந்தெந்த உயிரினங்களைக் கொல்ல அனுமதி உண்டு என்பது குறித்து இப்னு உமர் (ரலி) என்ன கூறினார்கள்?” என்று கேட்டேன். அதற்கு,“நபி (ஸல்) ஐந்து உயிரினங்களை ஒருவர் கொன்றுவிட்டாலும் அதைக் கொன்றதற்காக அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை; நீர்க்காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியவைதாம் அவை என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்” என்று நாஃபிஉ (ரஹ்) பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக அப்துல் மலிக் பின் அப்தில் அஸீஸ் பின் ஜுரைஜ் (ரஹ்)


குறிப்புகள் :

மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், “நபி (ஸல்) கூறியதை நான் செவியுற்றேன்” என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள் என இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஒருவரது அறிவிப்பில் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

இபுனு இஸ்ஹாக் (ரஹ்) வழி அறிவிப்பு “ஐந்து உயிரினங்களில் ஒன்றைப் புனித (ஹரம்) எல்லைக்குள் கொன்றாலும் எந்தக் குற்றமுமில்லை என நபி (ஸல்) கூறியதை நான் செவியுற்றேன் … ” எனத் தொடங்குகிறது.

அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2077

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏خَمْسٌ مِنْ الدَّوَابِّ لَيْسَ عَلَى الْمُحْرِمِ فِي قَتْلِهِنَّ ‏ ‏جُنَاحٌ ‏ ‏الْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْعَقْرَبُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ

“முஹ்ரிமான ஒருவர், நீர்க்காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகிய ஐந்து உயிரினங்களைக் கொன்றால் அவர் மீது குற்றமாகாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2076

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏سَأَلَ رَجُلٌ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏مَا يَقْتُلُ الرَّجُلُ مِنْ الدَّوَابِّ وَهُوَ مُحْرِمٌ : ‏

‏قَالَ حَدَّثَتْنِي ‏ ‏إِحْدَى نِسْوَةِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ كَانَ ‏ ‏يَأْمُرُ بِقَتْلِ الْكَلْبِ الْعَقُورِ وَالْفَأْرَةِ وَالْعَقْرَبِ وَالْحُدَيَّا وَالْغُرَابِ وَالْحَيَّةِ قَالَ وَفِي الصَّلَاةِ أَيْضًا

இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இஹ்ராம் பூண்டிருப்பவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு, “வெறிநாய், எலி, தேள், பருந்து, நீர்க்காகம், பாம்பு ஆகியவற்றைக் கொல்லுமாறு நபி (ஸல்) உத்தரவிட்டிருந்தார்கள் என்று நபி (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர் என்னிடம் கூறினார்” என்று கூறிவிட்டு, “இவற்றை ஒருவர் தொழுகையில் இருக்கும்போதும் கொல்லலாம்” என்றும் இப்னு உமர் (ரலி) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸைத் பின் ஜுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2075

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ جُبَيْرٍ ‏ ‏أَنَّ رَجُلًا ‏ ‏سَأَلَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏مَا يَقْتُلُ الْمُحْرِمُ مِنْ الدَّوَابِّ : ‏

‏فَقَالَ أَخْبَرَتْنِي ‏ ‏إِحْدَى نِسْوَةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ‏ ‏أَمَرَ أَوْ ‏ ‏أُمِرَ أَنْ يَقْتُلَ الْفَأْرَةَ وَالْعَقْرَبَ وَالْحِدَأَةَ وَالْكَلْبَ الْعَقُورَ وَالْغُرَابَ

இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இஹ்ராம் பூண்டிருப்பவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர்கள், “எலி, தேள், பருந்து, வெறிநாய், நீர்க்காகம் ஆகியவற்றைக் கொல்ல உத்தரவிடப்பட்டது அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸைத் பின் ஜுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2074

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ قَالَتْ ‏ ‏حَفْصَةُ زَوْجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَمْسٌ مِنْ الدَّوَابِّ كُلُّهَا فَاسِقٌ ‏ ‏لَا حَرَجَ ‏ ‏عَلَى مَنْ قَتَلَهُنَي الْعَقْرَبُ وَالْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ

“உயிரினங்களில் தேள், நீர்க்காகம், பருந்து, எலி, வெறிநாய் ஆகிய ஐந்து உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் தீங்கிழைக்கக்கூடியவை ஆகும். அவற்றைக் கொல்பவர்மீது எந்தக் குற்றமும் இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஹஃப்ஸா (ரலி)