அத்தியாயம்: 15, பாடம்: 15.01, ஹதீஸ் எண்: 2013

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ :‏

‏سُئِلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا يَلْبَسُ الْمُحْرِمُ قَالَ ‏ ‏لَا يَلْبَسُ الْمُحْرِمُ الْقَمِيصَ وَلَا الْعِمَامَةَ وَلَا ‏ ‏الْبُرْنُسَ ‏ ‏وَلَا السَّرَاوِيلَ وَلَا ثَوْبًا مَسَّهُ ‏ ‏وَرْسٌ ‏ ‏وَلَا زَعْفَرَانٌ وَلَا الْخُفَّيْنِ إِلَّا أَنْ لَا يَجِدَ نَعْلَيْنِ فَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا أَسْفَلَ مِنْ ‏ ‏الْكَعْبَيْنِ

நபி (ஸல்) அவர்களிடம், “இஹ்ராம் பூண்டவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், “சட்டை, தலைப்பாகை, மேலங்கி, கால்சட்டை, வர்ஸ் மற்றும் குங்குமப்பூ ஆகிய வாசனைச் செடிகளின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடை, காலுறைகள் ஆகியவற்றை இஹ்ராம் பூண்டவர் அணிய வேண்டாம். காலணிகள் கிடைக்காவிட்டால், காலுறைகள் அணியலாம். ஆனால், கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி காலுறைகளைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.01, ஹதீஸ் எண்: 2012

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا :‏

‏أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنْ الثِّيَابِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَلْبَسُوا الْقُمُصَ وَلَا الْعَمَائِمَ وَلَا السَّرَاوِيلَاتِ وَلَا ‏ ‏الْبَرَانِسَ ‏ ‏وَلَا ‏ ‏الْخِفَافَ ‏ ‏إِلَّا أَحَدٌ لَا يَجِدُ النَّعْلَيْنِ فَلْيَلْبَسْ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنْ ‏ ‏الْكَعْبَيْنِ ‏ ‏وَلَا تَلْبَسُوا مِنْ الثِّيَابِ شَيْئًا مَسَّهُ الزَّعْفَرَانُ وَلَا ‏ ‏الْوَرْسُ

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “முஹ்ரிம் ஆன ஒருவர், எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “சட்டைகள், தலைப்பாகைகள், கால்சட்டைகள், மேலங்கிகள், காலுறைகள் ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்து கொள்ளட்டும். ஆனால், காலுறை இரண்டும் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும். குங்குமப்பூ மற்றும் வர்ஸ் ஆகிய வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட எந்த ஆடையையும் அணியாதீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

‘முஹ்ரிம்‘ எனப்படுபவர், ஹஜ் அல்லது உம்ராவுக்கான நிய்யத்துடன் இஹ்ராம் பூண்டவராவார்.

அத்தியாயம்: 14, பாடம்: 14.04, ஹதீஸ் எண்: 2011

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ :‏

‏مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَائِمًا فِي الْعَشْرِ قَطُّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (துல்ஹஜ் மாதத்தின்) பத்து நாட்களில் நோன்பிருந்து நான் பார்த்ததில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 14, பாடம்: 14.04, ஹதீஸ் எண்: 2010

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ :‏

‏مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَائِمًا فِي الْعَشْرِ قَطُّ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (துல்ஹஜ் மாதம்) பத்து நாள்கள் நோன்பு நோற்று ஒருபோதும் நான் கண்டதில்லை!”

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 14, பாடம்: 03, ஹதீஸ் எண்: 2009

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْوَاحِدِ بْنِ زِيَادٍ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏الْأَسْوَدَ بْنَ يَزِيدَ ‏ ‏يَقُولُ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا : ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَجْتَهِدُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مَا لَا يَجْتَهِدُ فِي غَيْرِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மற்ற நாட்களில் காட்டாத (அதிக) ஈடுபாட்டை, (ரமளானின்) இறுதிப் பத்தில் (வழிபாடுகளில்) காட்டுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 14, பாடம்: 03, ஹதீஸ் எண்: 2008

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي يَعْفُورٍ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمِ بْنِ صُبَيْحٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ :‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا دَخَلَ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ وَأَيْقَظَ أَهْلَهُ ‏ ‏وَجَدَّ ‏ ‏وَشَدَّ الْمِئْزَرَ

ரமளானின் இறுதிப் பத்துத் துவங்கிவிட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவுகளுக்கு (வழிபாடுகளின் மூலம்) உயிரூட்டுவார்கள்; தம் துணைவியரையும் விழிக்கச் செய்வார்கள்; தமது கீழாடையை வரிந்து கட்டிக்கொண்டு வழிபாடுகளில் அதிகக் கவனம் செலுத்துவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

‘கீழாடையை வரிந்து கட்டிக்கொள்வது என்றால் உடலுறவைத் தடுத்துக்கொள்வது’ என்று அறிஞர்கள் சிலர் கூறுவதாக ஸஹீஹ் முஸ்லிம் விரிவுரையான ‘அல் மின்ஹாஜ்’இல் இமாம் நவவீ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 14, பாடம்: 02, ஹதீஸ் எண்: 2007

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ : ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَرَادَ أَنْ ‏ ‏يَعْتَكِفَ ‏ ‏صَلَّى الْفَجْرَ ثُمَّ دَخَلَ ‏ ‏مُعْتَكَفَهُ ‏ ‏وَإِنَّهُ أَمَرَ بِخِبَائِهِ ‏ ‏فَضُرِبَ ‏ ‏أَرَادَ ‏ ‏الِاعْتِكَافَ ‏ ‏فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فَأَمَرَتْ ‏ ‏زَيْنَبُ ‏ ‏بِخِبَائِهَا فَضُرِبَ وَأَمَرَ غَيْرُهَا مِنْ أَزْوَاجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِخِبَائِهِ فَضُرِبَ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْفَجْرَ نَظَرَ فَإِذَا ‏ ‏الْأَخْبِيَةُ ‏ ‏فَقَالَ ‏ ‏آلْبِرَّ ‏ ‏تُرِدْنَ فَأَمَرَ بِخِبَائِهِ ‏ ‏فَقُوِّضَ ‏ ‏وَتَرَكَ ‏ ‏الِاعْتِكَافَ ‏ ‏فِي شَهْرِ رَمَضَانَ حَتَّى ‏ ‏اعْتَكَفَ ‏ ‏فِي الْعَشْرِ الْأَوَّلِ مِنْ شَوَّالٍ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرُو بْنُ سَوَّادٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أَحْمَدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْمُغِيرَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ إِسْحَقَ ‏ ‏كُلُّ هَؤُلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏وَعَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏وَابْنِ إِسْحَقَ ‏ ‏ذِكْرُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏وَحَفْصَةَ ‏ ‏وَزَيْنَبَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُنَّ ‏ ‏أَنَّهُنَّ ضَرَبْنَ ‏ ‏الْأَخْبِيَةَ ‏ ‏لِلِاعْتِكَافِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஃதிகாஃப் இருக்க நாடினால், ஃபஜ்ருத் தொழுகை தொழுதுவிட்டுப் பின்னர் இஃதிகாஃப் இருக்குமிடத்திற்குள் நுழைந்துவிடுவார்கள். (ஒரு முறை இஃதிகாஃப் இருப்பதற்காகத்) தமது கூடாரத்தை அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே கூடாரம் அமைக்கப்பட்டது. அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கவே விரும்பினார்கள். ஸைனப் (ரலி) (தமக்காக) ஒரு கூடாரம் அமைக்குமாறு உத்தரவிட்டார்கள்; கூடாரம் அமைக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்களின் மற்றத் துணைவியரும் கூடாரம் அமைக்குமாறு உத்தரவிட்டனர்; அவர்களுக்காகவும் கூடாரம் அமைக்கப் பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஃபஜ்ருத் தொழுகையை முடித்தபோது (பள்ளிவாசலுக்குள்) பல கூடாரங்களைக் கண்டார்கள். “நீங்கள் (இதன் மூலம்) நன்மையை நாடினீர்களா?” என்று கேட்டுவிட்டு, தமது கூடாரத்தை அகற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அகற்றப்பட்டது. (அந்த ஆண்டில்) ரமளான் மாதத்தில் இஃதிகாஃப் இருப்பதைக் கைவிட்டு, ஷவ்வால் மாதத்தின் முதல் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

“ஆயிஷா (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஸைனப் (ரலி) ஆகிய நபி (ஸல்) அவர்களின் துணைவியர் இஃதிகாஃப் இருப்பதற்காகக் கூடாரம் அமைத்தனர்” எனும் குறிப்பு, இப்னு உயைனா (ரஹ்), அம்ரு பின் அல்ஹாரிஸ் (ரஹ்), இப்னு இஸ்ஹாக் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 14, பாடம்: 01, ஹதீஸ் எண்: 2006

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا : ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَعْتَكِفُ ‏ ‏الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ ثُمَّ ‏ ‏اعْتَكَفَ ‏ ‏أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ

நபி (ஸல்) இறக்கும்வரை ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்துவந்தார்கள். அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய துணைவியர் இஃதிகாஃப் இருந்தனர்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 14, பாடம்: 01, ஹதீஸ் எண்: 2005

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏سَهْلُ بْنُ عُثْمَانَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُمَا ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ : ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَعْتَكِفُ ‏ ‏الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 14, பாடம்: 01, ஹதீஸ் எண்: 2004

و حَدَّثَنَا ‏ ‏سَهْلُ بْنُ عُثْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُقْبَةُ بْنُ خَالِدٍ السَّكُونِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ : ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَعْتَكِفُ ‏ ‏الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பது வழக்கம்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)