அத்தியாயம்: 12, பாடம்: 37, ஹதீஸ் எண்: 1733

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ السَّاعِدِيِّ الْمَالِكِيِّ ‏ ‏أَنَّهُ قَالَ :‏

‏اسْتَعْمَلَنِي ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَلَى الصَّدَقَةِ فَلَمَّا فَرَغْتُ مِنْهَا وَأَدَّيْتُهَا إِلَيْهِ أَمَرَ لِي ‏ ‏بِعُمَالَةٍ ‏ ‏فَقُلْتُ إِنَّمَا عَمِلْتُ لِلَّهِ وَأَجْرِي عَلَى اللَّهِ فَقَالَ خُذْ مَا أُعْطِيتَ فَإِنِّي عَمِلْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَعَمَّلَنِي ‏ ‏فَقُلْتُ مِثْلَ قَوْلِكَ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أُعْطِيتَ شَيْئًا مِنْ غَيْرِ أَنْ تَسْأَلَ فَكُلْ وَتَصَدَّقْ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرِ بْنِ الْأَشَجِّ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ السَّعْدِيِّ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏اسْتَعْمَلَنِي ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَلَى الصَّدَقَةِ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏اللَّيْثِ

உமர் பின் அல்கத்தாப் (ரலி) என்னை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். நான் அந்தப் பணியை முடித்து விட்டு (வந்து), உமர் (ரலி) அவர்களிடம் ஸகாத் பொருட்களை ஒப்படைத்தபோது எனக்கு ஊதியம் கொடுக்க உத்தரவிட்டார்கள். அப்போது நான், “நான் இந்த வேலையை அல்லாஹ்விற்காகவே செய்தேன். எனக்குரிய ஊதியம் அல்லாஹ்விடமே உள்ளது” என்று சொன்னேன். அதற்கு உமர் (ரலி), “(நீங்களாகக் கேட்காமல்) உங்களுக்கு (ஏதேனும்) வழங்கப்பட்டால், அதை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஸகாத் வசூலிப்பவனாக இருந்தேன். அதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கு ஊதியம் வழங்கினார்கள். நீங்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘நீங்களாகக் கேட்காமல் ஏதேனும் உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை நீங்கள் (வாங்கி) உண்ணுங்கள்; தர்மமும் செய்யுங்கள்’ என்று பதில் சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிதீ அல்மாலிகீ (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 37, ஹதீஸ் எண்: 1732

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يُعْطِي ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏الْعَطَاءَ فَيَقُولُ لَهُ ‏ ‏عُمَرُ ‏ ‏أَعْطِهِ يَا رَسُولَ اللَّهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خُذْهُ فَتَمَوَّلْهُ أَوْ تَصَدَّقْ بِهِ وَمَا جَاءَكَ مِنْ هَذَا الْمَالِ وَأَنْتَ غَيْرُ ‏ ‏مُشْرِفٍ ‏ ‏وَلَا سَائِلٍ فَخُذْهُ وَمَا لَا فَلَا تُتْبِعْهُ نَفْسَكَ ‏


قَالَ ‏ ‏سَالِمٌ ‏ ‏فَمِنْ أَجْلِ ذَلِكَ كَانَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏لَا يَسْأَلُ أَحَدًا شَيْئًا وَلَا يَرُدُّ شَيْئًا أُعْطِيَهُ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏بِمِثْلِ ذَلِكَ ‏ ‏عَنْ ‏ ‏السَّائِبِ بْنِ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ السَّعْدِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்குக் கொடை வழங்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது உமர் (ரலி), “என்னைவிட அதிகத் தேவை உள்ளவருக்கு இதைக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறுவார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதை வாங்கி உடைமையாக்கிக்கொள்ளுங்கள்; அல்லது தர்மம் செய்துவிடுங்கள். நீங்கள் எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களிடம் வருகின்ற செல்வத்தை வாங்கிக்கொள்ளுங்கள். அப்படி வராவிட்டால் அதைத் தேடி நீங்களாகச் செல்லாதீர்கள்” என்று அறிவுறுத்தினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

“இந்த அறிவுரையின் காரணத்தால், (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) யாரிடமும் எதையும் கேட்கமாட்டார்கள். யாராவது தாமாக முன்வந்து வழங்கினால் அதை மறுக்கவுமாட்டார்கள்” என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான ஸாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 12, பாடம்: 37, ஹதீஸ் எண்: 1731

و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَقُولُ :‏

‏قَدْ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُعْطِينِي الْعَطَاءَ فَأَقُولُ أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي حَتَّى أَعْطَانِي مَرَّةً مَالًا فَقُلْتُ أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خُذْهُ وَمَا جَاءَكَ مِنْ هَذَا الْمَالِ وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلَا سَائِلٍ فَخُذْهُ وَمَا لَا فَلَا تُتْبِعْهُ نَفْسَكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்குக் கொடை வழங்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். (அப்போதெல்லாம்) நான், “என்னைவிட அதிகத் தேவையுடையவருக்கு இதைக் கொடுங்களேன்” என்று சொல்வேன். (ஒரு முறை இவ்வாறு) அவர்கள் எனக்குப் பொருள் ஒன்றைக் கொடுத்தபோது “என்னைவிட அதிகத் தேவையுடையவருக்கு இதைக் கொடுங்கள்” என்று நான் சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களிடம் வருகின்ற செல்வத்தை (மறுக்காமல்) பெற்றுக்கொள்ளுங்கள். இ(வ்வாறு ஏதும் கிடைக்கவி)ல்லையாயின், நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உமர் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 36, ஹதீஸ் எண்: 1730

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏هَارُونَ بْنِ رِيَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏كِنَانَةُ بْنُ نُعَيْمٍ الْعَدَوِيُّ ‏ ‏عَنْ ‏ ‏قَبِيصَةَ بْنِ مُخَارِقٍ الْهِلَالِيِّ ‏ ‏قَالَ :‏

‏تَحَمَّلْتُ ‏ ‏حَمَالَةً ‏ ‏فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْأَلُهُ فِيهَا فَقَالَ أَقِمْ حَتَّى تَأْتِيَنَا الصَّدَقَةُ فَنَأْمُرَ لَكَ بِهَا قَالَ ثُمَّ قَالَ يَا ‏ ‏قَبِيصَةُ ‏ ‏إِنَّ الْمَسْأَلَةَ لَا تَحِلُح إِلَّا لِأَحَدِ ثَلَاثَةٍ رَجُلٍ تَحَمَّلَ ‏ ‏حَمَالَةً ‏ ‏فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى ‏ ‏يُصِيبَهَا ‏ ‏ثُمَّ يُمْسِكُ وَرَجُلٌ أَصَابَتْهُ ‏ ‏جَائِحَةٌ ‏ ‏اجْتَاحَتْ مَالَهُ فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَ ‏ ‏قِوَامًا مِنْ عَيْشٍ ‏ ‏أَوْ قَالَ سِدَادًا مِنْ عَيْشٍ ‏ ‏وَرَجُلٌ أَصَابَتْهُ ‏ ‏فَاقَةٌ ‏ ‏حَتَّى يَقُومَ ثَلَاثَةٌ مِنْ ذَوِي الْحِجَا مِنْ قَوْمِهِ لَقَدْ أَصَابَتْ فُلَانًا ‏ ‏فَاقَةٌ ‏ ‏فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَ ‏ ‏قِوَامًا مِنْ عَيْشٍ ‏ ‏أَوْ قَالَ سِدَادًا مِنْ عَيْشٍ ‏ ‏فَمَا سِوَاهُنَّ مِنْ الْمَسْأَلَةِ يَا ‏ ‏قَبِيصَةُ ‏ ‏سُحْتًا يَأْكُلُهَا صَاحِبُهَا ‏ ‏سُحْتًا

நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தர்மப் பொருட்கள் நம்மிடம் வரும்வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்வோம்” என்று கூறினார்கள். பிறகு,
“கபீஸா! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்றவரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக்கொள்ள வேண்டும். மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு, செல்வங்களை இழந்தவர். அவர் அடிப்படை வாழ்வாதாரத்தை அல்லது வாழ்க்கையின் அவசியத் தேவையை அடைந்துகொள்ளும்வரை யாசிக்கலாம். இன்னொருவர் வறுமைக்கு உள்ளானவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, ‘இன்னார் வறுமைக்கு உள்ளாகியுள்ளார்’ என்று (சாட்சியம்) கூறினால், அவர் அடிப்படை வாழ்வாதாரத்தை அல்லது வாழ்க்கையின் அவசியத் தேவையை அடைகின்றவரை யாசிப்பது அவருக்குச் செல்லும். கபீஸா! இவையன்றி மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவை (ஹராம்) ஆகும். தடை செய்யப்பட்ட வழியில் யாசித்து உண்பவர் ஹராமை உண்கின்றார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1729

حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏وَسَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏قَالَ ‏ ‏سَلَمَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَقَالَ ‏ ‏الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَرْوَانُ وَهُوَ ابْنُ مُحَمَّدٍ الدِّمَشْقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ وَهُوَ ابْنُ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏رَبِيعَةَ بْنِ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُسْلِمٍ الْخَوْلَانِيِّ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏الْحَبِيبُ الْأَمِينُ أَمَّا هُوَ فَحَبِيبٌ إِلَيَّ وَأَمَّا هُوَ عِنْدِي فَأَمِينٌ ‏ ‏عَوْفُ بْنُ مَالِكٍ الْأَشْجَعِيُّ ‏ ‏قَالَ :‏

‏كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تِسْعَةً أَوْ ثَمَانِيَةً أَوْ سَبْعَةً فَقَالَ أَلَا ‏ ‏تُبَايِعُونَ ‏ ‏رَسُولَ اللَّهِ وَكُنَّا حَدِيثَ عَهْدٍ بِبَيْعَةٍ فَقُلْنَا قَدْ ‏ ‏بَايَعْنَاكَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ ثُمَّ قَالَ أَلَا ‏ ‏تُبَايِعُونَ ‏ ‏رَسُولَ اللَّهِ فَقُلْنَا قَدْ ‏ ‏بَايَعْنَاكَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ ثُمَّ قَالَ أَلَا ‏ ‏تُبَايِعُونَ ‏ ‏رَسُولَ اللَّهِ قَالَ فَبَسَطْنَا أَيْدِيَنَا وَقُلْنَا قَدْ بَايَعْنَاكَ يَا رَسُولَ اللَّهِ فَعَلَامَ ‏ ‏نُبَايِعُكَ ‏ ‏قَالَ عَلَى ‏ ‏أَنْ تَعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَالصَّلَوَاتِ الْخَمْسِ وَتُطِيعُوا وَأَسَرَّ كَلِمَةً خَفِيَّةً وَلَا تَسْأَلُوا النَّاسَ شَيْئًا فَلَقَدْ رَأَيْتُ بَعْضَ أُولَئِكَ النَّفَرِ يَسْقُطُ سَوْطُ أَحَدِهِمْ فَمَا يَسْأَلُ أَحَدًا يُنَاوِلُهُ إِيَّاهُ

நாங்கள் ஒன்பது பேர், அல்லது எட்டுப் பேர், அல்லது ஏழு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிப்பீர்களா?” என்று கேட்டார்கள். அது நாங்கள் உறுதி மொழி அளித்திருந்த புதிதாகும். எனவே, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் முன்பே உறுதிமொழி அளித்துவிட்டோம்” என்று கூறினோம். பின்னர் அவர்கள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிப்பீர்களா?” என்று (மீண்டும்) கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (ஏற்கெனவே) உறுதிமொழி அளித்துவிட்டோம்” என்று நாங்கள் (திரும்பவும்) கூறினோம். பின்னர் (மூன்றாவது முறையாக) “நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிப்பீர்களா?” என்று கேட்டபோது, நாங்கள் எங்கள் கைகளை நீட்டி “அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் நாங்கள் உறுதிமொழி அளிக்கின்றோம். எதற்காக நாங்கள் உங்களிடம் உறுதிமொழி அளிக்க வேண்டும்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; ஐவேளைத் தொழுகைகளைத் தொழ வேண்டும்; எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் (என்று உறுதிமொழி அளியுங்கள்)” என்று கூறிவிட்டு, (அடுத்த) ஒரு வார்த்தையை மெதுவாகச் சொன்னார்கள்: “மக்களிடம் எதையும் (கைநீட்டி) யாசிக்கக் கூடாது” என்றும் உறுதிமொழி கேட்டார்கள். (அவ்வாறே நாங்களும் உறுதிமொழி அளித்தோம்.) பிறகு அ(வ்வாறு உறுதியளித்த)வர்களில் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவரது சாட்டை (வாகனத்தின் மேலிருந்து) விழுந்தால்கூட அதைப் பிறர் எவரிடமும் எடுத்துத் தருமாறு கேட்டதில்லை.

அறிவிப்பாளர் : அவ்ஃபு பின் மாலிக் அல்அஷ்ஜயீ (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளரான அபூமுஸ்லிம் அல்கவ்லானீ (ரஹ்) கூறுகின்றார்: “இந்த ஹதீஸை நம்பிக்கைக்குரிய நேசர் ஒருவர் எனக்கு அறிவித்தார். அவர் எனது நேசத்திற்கு உரியவர்; அவர் என்னிடம் நம்பிக்கைக்குரிய அவ்ஃபு பின் மாலிக் அல்அஷ்ஜயீ (ரலி)”

அத்தியாயம்: 12, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1728

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَيُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُبَيْدٍ ‏ ‏مَوْلَى ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَأَنْ يَحْتَزِمَ أَحَدُكُمْ حُزْمَةً مِنْ حَطَبٍ فَيَحْمِلَهَا عَلَى ظَهْرِهِ فَيَبِيعَهَا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ رَجُلًا يُعْطِيهِ أَوْ يَمْنَعُهُ

“உங்களில் ஒருவர் விறகுக் கட்டு ஒன்றைத் தமது முதுகில் சுமந்து விற்(றுப் பிழைப்)பதானது, ஒருவனிடம் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவருக்கு அவன் கொடுக்கலாம்; அல்லது மறுக்கலாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1727

حَدَّثَنِي ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏بَيَانٍ أَبِي بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَأَنْ ‏ ‏يَغْدُوَ ‏ ‏أَحَدُكُمْ فَيَحْطِبَ عَلَى ظَهْرِهِ فَيَتَصَدَّقَ بِهِ وَيَسْتَغْنِيَ بِهِ مِنْ النَّاسِ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ رَجُلًا أَعْطَاهُ أَوْ مَنَعَهُ ذَلِكَ فَإِنَّ ‏ ‏الْيَدَ الْعُلْيَا ‏ ‏أَفْضَلُ مِنْ ‏ ‏الْيَدِ السُّفْلَى ‏ ‏وَابْدَأْ بِمَنْ ‏ ‏تَعُولُ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ ‏ ‏قَالَ أَتَيْنَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏فَقَالَ ‏ ‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاللَّهِ لَأَنْ ‏ ‏يَغْدُوَ ‏ ‏أَحَدُكُمْ فَيَحْطِبَ عَلَى ظَهْرِهِ فَيَبِيعَهُ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏بَيَانٍ

“உங்களில் ஒருவர் காலையில் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு (சென்று), விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து (விற்று), மக்களிடம் கையேந்தாமல் தன்னிறைவுடன் (சுயமரியாதையுடன்) வாழ்வதும் அதிலிருந்து தர்மம் செய்வதும், ஒருவனிடம் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவருக்கு அவன் கொடுத்தாலும்சரி; மறுத்தாலும்சரி. மேலிருக்கும் கை, கீழிருக்கும் கையைவிடச் சிறந்ததாகும். மேலும், உனது வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

யஹ்யா பின் ஸயீத் வழி அறிவிப்பு , “உங்களில் ஒருவர் காலையில் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு (சென்று), விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து விற்பது …” என்று ஹதீஸ் தொடங்குகின்றது.

அத்தியாயம்: 12, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1726

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَوَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ سَأَلَ النَّاسَ أَمْوَالَهُمْ تَكَثُّرًا فَإِنَّمَا يَسْأَلُ جَمْرًا فَلْيَسْتَقِلَّ أَوْ لِيَسْتَكْثِرْ

“செல்வத்தை அதிகம் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பவன், குறைவாக யாசித்தாலும் அதிகமாக யாசித்தாலும் அவன் (நரகின்) நெருப்புக் கங்கையே யாசிக்கின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1725

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَاهُ ‏ ‏يَقُولُ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا يَزَالُ الرَّجُلُ يَسْأَلُ النَّاسَ حَتَّى يَأْتِيَ يَوْمَ الْقِيَامَةِ وَلَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمٍ

“மக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்ட மனிதன், தனது முகத்தில் சதைத் துண்டு ஏதும் இல்லாதவனாகவே மறுமை நாளில் வருவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1724

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ ‏ ‏أَخِي ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ :‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا تَزَالُ الْمَسْأَلَةُ بِأَحَدِكُمْ حَتَّى يَلْقَى اللَّهَ وَلَيْسَ فِي وَجْهِهِ ‏ ‏مُزْعَةُ ‏ ‏لَحْمٍ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏أَخِي الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ وَلَمْ يَذْكُرْ مُزْعَةُ

“உங்களில் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்டவர், தமது முகத்தில் சதைத் துண்டு ஏதும் இல்லாதவராகவே (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பார்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

இஸ்மாயீல் பின் இபுறாஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘சதைத் துண்டு’ என்பதில் ‘துண்டு’ எனும் சொல் இடம்பெறவில்லை.