அத்தியாயம்: 12, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1723

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏شَرِيكٌ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏مَوْلَى ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَيْسَ الْمِسْكِينُ بِالَّذِي تَرُدُّهُ التَّمْرَةُ وَالتَّمْرَتَانِ وَلَا اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ إِنَّمَا الْمِسْكِينُ ‏ ‏الْمُتَعَفِّفُ ‏ ‏اقْرَءُوا إِنْ شِئْتُمْ ‏ ” ‏لَا يَسْأَلُونَ النَّاسَ ‏ ‏إِلْحَافًا ‏“ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي مَرْيَمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏شَرِيكٌ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءُ بْنُ يَسَارٍ ‏ ‏وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرَةَ ‏ ‏أَنَّهُمَا سَمِعَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏إِسْمَعِيلَ

“ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக அலைபவன் ஏழையல்லன். ஏழை என்பவன் (தன் தேவைகளைப் நிறைவேற்றிக்கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்பவனே ஆவான். நீங்கள் (உறுதி கொள்ள) விரும்பினால், “அவர்கள் மனிதர்களிடம் இரந்து நிற்கமாட்டார்கள்” (2:273) எனும் இறை வசனத்தை ஓதி(உணர்ந்து)க்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1722

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُغِيرَةُ يَعْنِي الْحِزَامِيَّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَيْسَ الْمِسْكِينُ بِهَذَا الطَّوَّافِ الَّذِي يَطُوفُ عَلَى النَّاسِ فَتَرُدُّهُ اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ وَالتَّمْرَةُ وَالتَّمْرَتَانِ قَالُوا فَمَا الْمِسْكِينُ يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِي لَا يَجِدُ غِنًى يُغْنِيهِ وَلَا يُفْطَنُ لَهُ فَيُتَصَدَّقَ عَلَيْهِ وَلَا يَسْأَلُ النَّاسَ شَيْئًا

“ஓரிரு கவளம் உணவை, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களைப் பெறுவதற்காக மக்களைச் சுற்றி வருபவன் ஏழையல்லன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். மக்கள், “அப்படியானால் ஏழை என்றால் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு, “(அடிப்படைத்) தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் பொருளாதாரம் அற்றவனாக இருப்பான்; அவனது நிலையறிந்து தர்மம் வழங்கப்படுவதில்லை. தானும் வலியச் சென்று மக்களிடம் கேட்கமாட்டான் (அவனே உண்மையான ஏழை)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 33, ஹதீஸ் எண்: 1721

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏قَالَ : ‏

‏سَمِعْتُ ‏ ‏مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ ‏ ‏وَهُوَ يَخْطُبُ يَقُولُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا ‏ ‏يُفَقِّهْهُ فِي الدِّينِ وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَيُعْطِي اللَّهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ”அல்லாஹ் எவருக்கு நன்மையை நாடுகின்றானோ அவரை மார்க்கத்தில் விளக்கமுள்ளவராக ஆக்குகிறான். நான் பங்கிடுபவன் மட்டுமே. அல்லாஹ்தான் கொடுக்கிறான்” என்று சொல்ல நான் கேட்டேன் என முஆவியா (ரலி) தமது உரையில் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : முஆவியா (ரலி) வழியாக ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)

அத்தியாயம்: 12, பாடம்: 33, ஹதீஸ் எண்: 1720

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏وَهْبِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏عَنْ ‏ ‏أَخِيهِ ‏ ‏هَمَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏قَالَ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا ‏ ‏تُلْحِفُوا ‏ ‏فِي الْمَسْأَلَةِ فَوَاللَّهِ لَا يَسْأَلُنِي أَحَدٌ مِنْكُمْ شَيْئًا فَتُخْرِجَ لَهُ مَسْأَلَتُهُ مِنِّي شَيْئًا وَأَنَا لَهُ كَارِهٌ فَيُبَارَكَ لَهُ فِيمَا أَعْطَيْتُهُ ‏


‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏وَهْبُ بْنُ مُنَبِّهٍ ‏ ‏وَدَخَلْتُ عَلَيْهِ فِي دَارِهِ ‏ ‏بِصَنْعَاءَ ‏ ‏فَأَطْعَمَنِي مِنْ جَوْزَةٍ فِي دَارِهِ ‏ ‏عَنْ ‏ ‏أَخِيهِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ ‏ ‏يَقُولُا ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ فَذَكَرَ ‏ ‏مِثْلَهُ

“தர்மம் கேட்டு (என்னை) நச்சரிக்காதீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் ஒருவர் என்னிடம் ஏதேனும் (தர்மம்) கேட்டு, அவர் என்னிடம் கேட்டது, நான் வெறுத்த நிலையில் அவருக்குக் கிடைத்தால், அதில் அவருக்கு வளம் வழங்கப்படுவதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முஆவியா (ரலி)


குறிப்பு :

“நான் வஹ்பு பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களை (யமனின்) ஸன்ஆவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது அவர்கள் தமது இல்லத்தில் இருந்த வாதுமைக் கொட்டையை எனக்கு வழங்கினார்கள். அவர்களின் சகோதரரிடமிருந்து இந்த ஹதீஸை எனக்கு அறிவித்தார்கள்” என்று அம்ரிப்னு தீனார் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 12, பாடம்: 33, ஹதீஸ் எண்: 1719

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ الْحُبَابِ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏رَبِيعَةُ بْنُ يَزِيدَ الدِّمَشْقِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ الْيَحْصَبِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏يَقُولُا ‏ ‏إِيَّاكُمْ وَأَحَادِيثَ إِلَّا حَدِيثًا كَانَ فِي عَهْدِ ‏ ‏عُمَرَ ‏ ‏فَإِنَّ ‏ ‏عُمَرَ ‏ ‏كَانَ يُخِيفُ النَّاسَ فِي اللَّهِ عَزَّ وَجَلَّ :‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ يَقُولُ ‏ ‏مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا ‏ ‏يُفَقِّهْهُ فِي الدِّينِ ‏

‏وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِنَّمَا أَنَا ‏ ‏خَازِنٌ ‏ ‏فَمَنْ أَعْطَيْتُهُ عَنْ طِيبِ نَفْسٍ فَيُبَارَكُ لَهُ فِيهِ وَمَنْ أَعْطَيْتُهُ عَنْ مَسْأَلَةٍ وَشَرَهٍ كَانَ كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ

முஆவியா (ரலி), “மக்களே! (வரைமுறையின்றி) நபிமொழிகளை அறிவிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஆனால், உமர் (ரலி) காலத்தில் இருந்துவந்த நபிமொழிகளைத் தவிர. ஏனெனில், உமர் (ரலி) வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ்வின் (மார்க்க) விஷயத்தில் (பொய்யுரைப்பதிலிருந்து) மக்களைப் பயமுறுத்திவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அல்லாஹ் எவருக்கு நன்மையை நாடுகின்றானோ அவரை மார்க்கத்தில் விளக்கமுள்ளவராக ஆக்குகின்றான். நான் கருவூலக் காவலன் மட்டுமே. ஒருவருக்கு நான் மனப்பூர்வமாகக் கொடுத்தால், அவருக்கு அதில் வளம் வழங்கப்படும். ஒருவர் யாசித்ததால் அல்லது அவரது பேராசையைக் கண்டு அவருக்கு நான் கொடுத்தால், அவர் எவ்வளவு உண்டாலும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : முஆவியா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஆமிர் அல்யஹ்ஸபீ (ரஹ்)

அத்தியாயம்: 12, பாடம்: 32, ஹதீஸ் எண்: 1718

حَدَّثَنَا ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَدَّادٌ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا أُمَامَةَ ‏ ‏قَالَ: ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏إِنَّكَ أَنْ تَبْذُلَ ‏ ‏الْفَضْلَ ‏ ‏خَيْرٌ لَكَ وَأَنْ تُمْسِكَهُ شَرٌّ لَكَ وَلَا تُلَامُ عَلَى كَفَافٍ وَابْدَأْ بِمَنْ ‏ ‏تَعُولُ ‏ ‏وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنْ الْيَدِ السُّفْلَى

“ஆதமின் மகனே! உன் தேவைபோக எஞ்சியதை நீ தர்மம் செய்வதே உனக்கு நல்லதாகும். அதை (யாருக்கும் கொடுக்காமல்) இறுக்கிவைப்பது உனக்குத் தீமையாகும். தேவையுள்ள அளவு சேமித்துவைத்தால் நீ பழிக்கப்படமாட்டாய். உன் வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு. மேல் கைதான் கீழ் கையைவிடச் சிறந்தது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 32, ஹதீஸ் எண்: 1717

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏وَسَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏حَكِيمِ بْنِ حِزَامٍ ‏ ‏قَالَ :‏

‏سَأَلْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ ‏ ‏إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ فَمَنْ أَخَذَهُ بِطِيبِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنْ الْيَدِ السُّفْلَى

நான் நபி (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகும் நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் நான் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். பிறகு, “இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். யார் இதை(ப் பேராசையின்றி) நல்ல எண்ணத்துடன் பெறுகின்றாரோ அவருக்கு அதில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். யார் மனத்தை அலையவிட்டு(ப் பேராசையுடன்) இதை எடுத்துக்கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். மேல் கைதான் கீழ் கையைவிடச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 32, ஹதீஸ் எண்: 1716

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى الْقَطَّانِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ عُثْمَانَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُوسَى بْنَ طَلْحَةَ ‏ ‏يُحَدِّثُ أَنَّ ‏ ‏حَكِيمَ بْنَ حِزَامٍ ‏ ‏حَدَّثَهُ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَفْضَلُ الصَّدَقَةِ أَوْ ‏ ‏خَيْرُ الصَّدَقَةِ عَنْ ظَهْرِ غِنًى وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنْ الْيَدِ السُّفْلَى وَابْدَأْ بِمَنْ تَعُولُ

“தேவைபோக எஞ்சியதை வழங்குவது தர்மத்தில் சிறந்தது (அல்லது) நல்ல தர்மம் ஆகும். மேல் கை, கீழ் கையைவிடச் சிறந்ததாகும். உங்கள் குடும்பத்தாரிலிருந்தே (உங்களது தர்மத்தைத்) தொடங்குங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 32, ஹதீஸ் எண்: 1715

حدثنا ‏ ‏قتيبة بن سعيد ‏ ‏عن ‏ ‏مالك بن أنس ‏ ‏فيما قرئ عليه عن ‏ ‏نافع ‏ ‏عن ‏ ‏عبد الله بن عمر :‏

‏أن رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال وهو على المنبر وهو يذكر الصدقة ‏ ‏والتعفف ‏ ‏عن المسألة ‏ ‏اليد العليا خير من اليد السفلى واليد العليا المنفقة والسفلى السائلة

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி தர்மம் செய்வது பற்றியும் பிறரிடம் யாசிக்காமல் தன்மானத்துடன் வாழ்வது பற்றியும் உபதேசித்தார்கள். அப்போது “மேலிருக்கும் கை கீழிருக்கும் கையைவிடச் சிறந்ததாகும். மேல் கை என்பது கொடுக்கக்கூடியதும், கீழ் கை என்பது யாசிக்கக்கூடியதும் ஆகும்” என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 31, ஹதீஸ் எண்: 1714

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏

‏جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أَعْظَمُ أَجْرًا فَقَالَ أَمَا وَأَبِيكَ لَتُنَبَّأَنَّهُ ‏ ‏أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ ‏ ‏شَحِيحٌ ‏ ‏تَخْشَى الْفَقْرَ وَتَأْمُلُ الْبَقَاءَ وَلَا تُمْهِلَ حَتَّى إِذَا بَلَغَتْ الْحُلْقُومَ قُلْتَ لِفُلَانٍ كَذَا وَلِفُلَانٍ كَذَا وَقَدْ كَانَ لِفُلَانٍ ‏


‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏جَرِيرٍ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! மகத்தான நன்மையுள்ள தர்மம் எது?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உம்முடைய தந்தைமீது அறுதியாக! அது குறித்து நிச்சயம் உமக்கு விளக்கமளிக்கப்படும். நீ உடல் நலமுள்ளவராகவும், பணத் தேவை உடையவராகவும், வறுமையால் வாடியவராகவும் நீண்ட நாள் வாழ வேண்டுமென எதிர்பார்த்தவராகவும் இருக்கும்போது, செய்யும் தர்மமே (மகத்தான நன்மை தரக் கூடியதாகும்). உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டிருக்க, ‘இன்னவருக்கு இவ்வளவு (கொடுங்கள்); இன்னவருக்கு இவ்வளவு (கொடுங்கள்)’ என்று சொல்லும்(நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்! ஏனெனில், அப்போது உங்கள் செல்வம் (வாரிசாகிய) இன்னவருக்கு உரியதாகிவிட்டிருக்கும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அபூகாமில் அல் ஜஹ்தரீ (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர், ‘தர்மத்தில் சிறந்தது எது?’ என்று கேட்டார்” எனத் தொடங்குகிறது.