அத்தியாயம்: 11, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1583

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَاتَ الْيَوْمَ عَبْدٌ لِلَّهِ صَالِحٌ ‏ ‏أَصْحَمَةُ ‏ ‏فَقَامَ فَأَمَّنَا وَصَلَّى عَلَيْهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு நாள்), “இன்று அல்லாஹ்வின் நல்லடியார் (நஜாஷீ மன்னர்) அஸ்ஹமா இறந்து விட்டார்” என்று கூறினார்கள். பின்னர் எழுந்து எங்களுக்கு முன்னால் நின்று அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1582

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏عَنْ ‏ ‏سَلِيمِ بْنِ حَيَّانَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مِينَاءَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ :‏‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى عَلَى ‏ ‏أَصْحَمَةَ النَّجَاشِيِّ ‏ ‏فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அஸ்ஹமா’ எனும் நஜாஷீ(மன்னரு)க்கு நான்கு தக்பீர் கூறி(ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1581

و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ قَالَ :‏‏

‏نَعَى ‏ ‏لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏النَّجَاشِيَ ‏ ‏صَاحِبَ ‏ ‏الْحَبَشَةِ ‏ ‏فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ فَقَالَ ‏ ‏اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ ‏


‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏حَدَّثَهُ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَفَّ بِهِمْ بِالْمُصَلَّى فَصَلَّى فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعَ تَكْبِيرَاتٍ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَحَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏كَرِوَايَةِ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏بِالْإِسْنَادَيْنِ جَمِيعًا

அபிஸீனிய மன்னர் நஜாஷீ இறந்த அன்றே அவரது மரணச் செய்தியை எங்களிடம் அறிவித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஸயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில், “பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களைத் தொழுகைத் திடலில் அணிவகுக்கச் செய்து நான்கு தக்பீர்கள் கூறி ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்” என அபூஹுரைரா (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 11, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1580

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَى ‏ ‏لِلنَّاسِ ‏ ‏النَّجَاشِيَ ‏ ‏فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ فَخَرَجَ بِهِمْ إِلَى الْمُصَلَّى وَكَبَّرَ أَرْبَعَ تَكْبِيرَاتٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (அபிஸீனிய மன்னர்) நஜாஷீ இறந்த அன்றே அவரது மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு மக்களுடன் ‘முஸல்லா’ எனும் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று (‘அல்லாஹு அக்பர்’ என்று) நான்கு தக்பீர்’கள் கூறி(ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 21, ஹதீஸ் எண்: 1579

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَعْبَدِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ بْنِ رِبْعِيٍّ ‏ ‏أَنَّهُ كَانَ يُحَدِّثُ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُرَّ عَلَيْهِ بِجَنَازَةٍ فَقَالَ ‏ ‏مُسْتَرِيحٌ وَمُسْتَرَاحٌ مِنْهُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا الْمُسْتَرِيحُ وَالْمُسْتَرَاحُ مِنْهُ فَقَالَ الْعَبْدُ الْمُؤْمِنُ يَسْتَرِيحُ مِنْ نَصَبِ الدُّنْيَا وَالْعَبْدُ الْفَاجِرُ يَسْتَرِيحُ مِنْهُ الْعِبَادُ وَالْبِلَادُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏ابْنٍ لِكَعْبِ بْنِ مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏يَسْتَرِيحُ مِنْ أَذَى الدُّنْيَا ‏ ‏وَنَصَبِهَا ‏ ‏إِلَى رَحْمَةِ اللَّهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள், “(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்” என்று சொன்னார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே, ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைநம்பிக்கைகொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்து ஓய்வு பெறுகின்றார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் எல்லா விதமான தொல்லையி)லிருந்தும் மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்று நிம்மதி) பெறுகின்றன” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா ஹாரிஸ் ரிப்யீ (ரலி)


குறிப்பு :

யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், “(ஓய்வு பெற்ற நல்லவர்) இவ்வுலகத்தின் தொல்லையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் ஓய்வு பெற்று இறையருளை நோக்கிச் செல்கின்றார்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 11, பாடம்: 20, ஹதீஸ் எண்: 1578

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيَُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ :‏‏

‏مُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرًا فَقَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ وَمُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا شَرًّا فَقَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ قَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏فِدًى لَكَ أَبِي وَأُمِّي مُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرٌ فَقُلْتَ وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ وَمُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا شَرٌّ فَقُلْتَ وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ وَمَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا وَجَبَتْ لَهُ النَّارُ أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الْأَرْضِ أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الْأَرْضِ أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الْأَرْضِ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏مُرَّ عَلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِجَنَازَةٍ ‏ ‏فَذَكَرَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏غَيْرَ أَنَّ حَدِيثَ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ ‏ ‏أَتَمُّ

ஜனாஸா ஒன்று (நபி (ஸல்) அவர்களைக் கடந்து) கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து நல்ல விதமாகப் (புகழ்ந்து) பேசப்பட்டது. இதைக் கேட்ட நபி (ஸல்), “உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள். பின்னர் மற்றொரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அப்போதும் நபி (ஸல்), “உறுதியாகிவிட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள். உமர் (ரலி), “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் (அல்லாஹ்வின் தூதரே!)! ஒரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டபோது அது குறித்து நல்லவிதமாகப் பேசப்பட்டது. அதற்கு நீங்கள் ‘உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது’ என்று கூறினீர்கள். பிறகு மற்றொரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அதற்கும் நீங்கள் ‘உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது’ என்று கூறினீர்கள். (அவ்வாறு நீங்கள் கூறக் காரணமென்ன?)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் நல்ல விதமாகப் பேசியவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது; நீங்கள் இகழ்வாகப் பேசியவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்; நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்; நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்” என்று (மும்முறை) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

தாபித் (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) இருந்த இடத்தின் வழியாக பிரேதம் ஒன்று கொண்டு செல்லப்பட்டது …” என்று தொடங்குகிறது. இதர விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், மேற்காணும் ஹதீஸே முழுமையானதாகும்.

அத்தியாயம்: 11, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1577

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَالْوَلِيدُ بْنُ شُجَاعٍ السَّكُونِيُّ ‏ ‏قَالَ ‏ ‏الْوَلِيدُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو صَخْرٍ ‏ ‏عَنْ ‏ ‏شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ :‏‏

‏أَنَّهُ مَاتَ ابْنٌ لَهُ ‏ ‏بِقُدَيْدٍ ‏ ‏أَوْ ‏ ‏بِعُسْفَانَ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏كُرَيْبُ ‏ ‏انْظُرْ مَا اجْتَمَعَ لَهُ مِنْ النَّاسِ قَالَ فَخَرَجْتُ فَإِذَا نَاسٌ قَدْ اجْتَمَعُوا لَهُ فَأَخْبَرْتُهُ فَقَالَ تَقُولُ هُمْ أَرْبَعُونَ قَالَ نَعَمْ قَالَ أَخْرِجُوهُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلًا لَا يُشْرِكُونَ بِاللَّهِ شَيْئًا إِلَّا شَفَّعَهُمْ اللَّهُ فِيهِ ‏


‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ مَعْرُوفٍ ‏ ‏عَنْ ‏ ‏شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய மகன் ஒருவர் ‘குதைத்’ அல்லது ‘உஸ்ஃபான்’ எனுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம், “குறைப்! மக்கள் ஒன்றுகூடிவிட்டனரா எனப் பார்” என்று கூறினார்கள். நான் சென்று பார்த்தபோது அங்கு மக்களில் சிலர் குழுமியிருந்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னபோது “அவர்கள் நாற்பது பேர் இருப்பார்களா, சொல்” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அதை (மய்யித்தை) எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்” என்று கூறிவிட்டு, “ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அவர்களின் வேலைக்காரர் குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1576

حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سَلَّامُ بْنُ أَبِي مُطِيعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ ‏ ‏رَضِيعِ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏:‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَا مِنْ مَيِّتٍ تُصَلِّي عَلَيْهِ أُمَّةٌ مِنْ الْمُسْلِمِينَ يَبْلُغُونَ مِائَةً كُلُّهُمْ يَشْفَعُونَ لَهُ إِلَّا شُفِّعُوا فِيهِ ‏


‏قَالَ ‏ ‏فَحَدَّثْتُ بِهِ ‏ ‏شُعَيْبَ بْنَ الْحَبْحَابِ ‏ ‏فَقَالَ حَدَّثَنِي بِهِ ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

“இறந்த ஒருவருக்கு நூறுபேர் கொண்ட முஸ்லிம் குழுவினர் (ஜனாஸாத்) தொழுகை தொழுது, அவர்களில் ஒவ்வொருவரும் அவருக்காகப் பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரை ஏற்கப்படாமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

“இந்த ஹதீஸை நான் ஷுஐப் பின் அல் ஹப்ஹாப் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் ‘இவ்வாறே நபி (ஸல்) கூறியதாக எனக்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவித்தார்கள்’ என்றார்கள்” என்பதாக (இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான) ஸல்லாம் பின் அபீமுதீஉ (ரஹ்) கூறியுள்ளார்.

அத்தியாயம்: 11, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1575

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏قَتَادَةُ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ ‏ ‏عَنْ ‏ ‏مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :‏‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ فَلَهُ ‏ ‏قِيرَاطٌ ‏ ‏فَإِنْ شَهِدَ دَفْنَهَا فَلَهُ ‏ ‏قِيرَاطَانِ ‏ ‏الْقِيرَاطُ ‏ ‏مِثْلُ ‏ ‏أُحُدٍ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏ابْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏قَالَ وَحَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبَانُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏سَعِيدٍ ‏ ‏وَهِشَامٍ ‏ ‏سُئِلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْقِيرَاطِ ‏ ‏فَقَالَ مِثْلُ ‏ ‏أُحُدٍ

“ஜனாஸாத் தொழுகை (மட்டும்) தொழுதவருக்கு ஒரு ‘கீராத்’ (நன்மை) உண்டு; (தொழுகையில் கலந்ததோடு) அதன் அடக்கத்திலும் கலந்துகொண்டால், அவருக்கு இரண்டு ‘கீராத்’ (நன்மை) உண்டு; ’கீராத்’ என்பது உஹுத் மலை அளவாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரலி)


குறிப்பு :

ஸயீத் (ரஹ்) மற்றும் ஹிஷாம் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களிடம் ‘கீராத்’ பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘உஹுத் மலையளவு’ என்று பதிலளித்தார்கள்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 11, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1574

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏حَيْوَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو صَخْرٍ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ ‏ ‏أَنَّهُ حَدَّثَهُ أَنَّ ‏ ‏دَاوُدَ بْنَ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِيهِ :‏‏ ‏

أَنَّهُ ‏‏كَانَ قَاعِدًا عِنْدَ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏إِذْ طَلَعَ ‏ ‏خَبَّابٌ ‏ ‏صَاحِبُ الْمَقْصُورَةِ فَقَالَ يَا ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏أَلَا تَسْمَعُ مَا يَقُولُ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ خَرَجَ مَعَ جَنَازَةٍ مِنْ بَيْتِهَا وَصَلَّى عَلَيْهَا ثُمَّ تَبِعَهَا حَتَّى تُدْفَنَ كَانَ لَهُ ‏ ‏قِيرَاطَانِ ‏ ‏مِنْ أَجْرٍ كُلُّ ‏ ‏قِيرَاطٍ ‏ ‏مِثْلُ ‏ ‏أُحُدٍ ‏ ‏وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ كَانَ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلُ ‏ ‏أُحُدٍ ‏‏فَأَرْسَلَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏خَبَّابًا ‏ ‏إِلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏يَسْأَلُهَا عَنْ قَوْلِ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ فَيُخْبِرُهُ مَا قَالَتْ وَأَخَذَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏قَبْضَةً ‏ ‏مِنْ ‏ ‏حَصْبَاءِ ‏ ‏الْمَسْجِدِ يُقَلِّبُهَا فِي يَدِهِ حَتَّى رَجَعَ إِلَيْهِ الرَّسُولُ فَقَالَ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏صَدَقَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏فَضَرَبَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏بِالْحَصَى الَّذِي كَانَ فِي يَدِهِ الْأَرْضَ ثُمَّ قَالَ ‏ ‏لَقَدْ فَرَّطْنَا فِي ‏ ‏قَرَارِيطَ ‏ ‏كَثِيرَةٍ

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது பண்ணை வீட்டுக் கப்பாப் அல்மதனீ (ரலி) அங்கு வந்து, “அப்துல்லாஹ் பின் உமர் அவர்களே! ஒரு ஜனாஸாவின் வீட்டிலிருந்து அதனுடன் புறப்பட்டுச் சென்று, (ஜனாஸாத் தொழுகை) தொழுதுவிட்டு, அடக்கம் செய்யப்படும்வரை அதைப் பின்தொடர்கின்றவருக்கு இரண்டு ‘கீராத்’ நன்மை உண்டு; ஒவ்வொரு ‘கீராத்’தும் உஹுத் மலை அளவுடையதாகும்; (ஜனாஸாத்) தொழுது விட்டுத் திரும்பிவிடுகின்றவருக்கு உஹுத் மலையளவு (ஒரு ‘கீராத்’) நன்மை உண்டு’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னதாக அபூஹுரைரா (ரலி) கூறுகின்றாரே?” என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), கப்பாபை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அது பற்றிக் கேட்டுவிட்டு அவர்கள் அளிக்கும் பதிலைத் தம்மிடம் வந்து தெரிவிக்குமாறு அனுப்பிவைத்துவிட்டு, போனவர் திரும்பி வரும்வரை பள்ளிவாசல் தரையில் கிடந்த சிறு கற்களில் ஒரு கைப்பிடியளவு அள்ளித் தமது கையில் வைத்து கிளறிக்கொண்டிருந்தார்கள்.

(கப்பாப் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று கேட்டதற்கு) ஆயிஷா (ரலி), “அபூஹுரைரா சொன்னது உண்மையே” என்றார்கள். (இதைக் கேள்விப்பட்ட) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தமது கையிலிருந்த சிறு கற்களை கீழே எறிந்துவிட்டு, “நாம் ஏராளமான ‘கீராத்'(நன்மை)களைத் தவற விட்டுவிட்டோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஆமிர் பின் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்)