அத்தியாயம்: 11, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1573

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ يَعْنِي ابْنَ حَازِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏نَافِعٌ ‏ ‏قَالَ قِيلَ ‏ ‏لِابْنِ عُمَرَ ‏ ‏إِنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ :‏ ‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ تَبِعَ جَنَازَةً فَلَهُ ‏ ‏قِيرَاطٌ ‏ ‏مِنْ الْأَجْرِ ‏‏فَقَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏أَكْثَرَ عَلَيْنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏فَبَعَثَ إِلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَسَأَلَهَا ‏ ‏فَصَدَّقَتْ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏فَقَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏لَقَدْ فَرَّطْنَا فِي ‏ ‏قَرَارِيطَ ‏ ‏كَثِيرَةٍ

“ஜனாஸாவைப் பின்தொடர்பவருக்கு ஒரு ‘கீராத்’ நன்மை உண்டு என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறிவருகின்றாரே!” என இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு, “அபூஹுரைரா நம்மிடம் கூடுதலாகச் சொல்கின்றார்” என்று இப்னு உமர் (ரலி) கூறிவிட்டு, ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி இதைப் பற்றிக் கேட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றை ஆயிஷா (ரலி) உறுதிப்படுத்தினார்கள். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி), “(அப்படியாயின்) நாம் ஏராளமான ‘கீராத்’களைத் தவறவிட்டுவிட்டோம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1572

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ كَيْسَانَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ فَلَهُ ‏ ‏قِيرَاطٌ ‏ ‏وَمَنْ اتَّبَعَهَا حَتَّى تُوضَعَ فِي الْقَبْرِ ‏ ‏فَقِيرَاطَانِ ‏
‏قَالَ قُلْتُ يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏وَمَا ‏ ‏الْقِيرَاطُ ‏ ‏قَالَ مِثْلُ ‏ ‏أُحُدٍ

“ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்றவருக்கு ஒரு ‘கீராத்’ (நன்மை) உண்டு. மண்ணறையில் வைக்கப்படும்வரை அதைப் பின்தொடர்ந்தவருக்கு இரண்டு ‘கீராத்’ (நன்மை) உண்டு” என்று நபி (ஸல்) சொன்னதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். நான், “அபூஹுரைரா (ரலி) அவர்களே! ‘கீராத்’ என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “உஹுத் மலை அளவு” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஹாஸிம் ஸல்மான் (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1571

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سُهَيْلٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏ ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ وَلَمْ يَتْبَعْهَا فَلَهُ ‏ ‏قِيرَاطٌ ‏ ‏فَإِنْ تَبِعَهَا فَلَهُ ‏ ‏قِيرَاطَانِ ‏ ‏قِيلَ وَمَا ‏ ‏الْقِيرَاطَانِ ‏ ‏قَالَ أَصْغَرُهُمَا مِثْلُ ‏ ‏أُحُدٍ

“ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்ற ஒருவர் (அதை அடக்கம் செய்யும்வரை) பின் தொடர்ந்து செல்லவில்லையானால், அவருக்கு ஒரு ‘கீராத்’ (நன்மையே) உண்டு; அதை (அடக்கம் செய்யும்வரை) பின்தொடர்ந்தால் அவருக்கு இரண்டு ‘கீராத்’ (நன்மை) உண்டு” என நபி (ஸல்) கூறினார்கள். அப்போது “இரண்டு ‘கீராத்’ என்றால் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு, “இரண்டு ‘கீராத்’களில் மிகச் சிறிய அளவு, உஹுத் மலை அளவாகும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1570

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِهَارُونَ ‏ ‏وَحَرْمَلَةَ ‏ ‏قَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزَ الْأَعْرَجُ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ شَهِدَ الْجَنَازَةَ حَتَّى يُصَلَّى عَلَيْهَا فَلَهُ ‏ ‏قِيرَاطٌ ‏ ‏وَمَنْ شَهِدَهَا حَتَّى تُدْفَنَ فَلَهُ ‏ ‏قِيرَاطَانِ ‏ ‏قِيلَ وَمَا ‏ ‏الْقِيرَاطَانِ ‏ ‏قَالَ مِثْلُ الْجَبَلَيْنِ الْعَظِيمَيْنِ ‏


‏انْتَهَى حَدِيثُ ‏ ‏أَبِي الطَّاهِرِ ‏ ‏وَزَادَ الْآخَرَانِ قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏قَالَ ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏وَكَانَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏يُصَلِّي عَلَيْهَا ثُمَّ يَنْصَرِفُ فَلَمَّا بَلَغَهُ حَدِيثُ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ لَقَدْ ضَيَّعْنَا ‏ ‏قَرَارِيطَ ‏ ‏كَثِيرَةً ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى قَوْلِهِ الْجَبَلَيْنِ الْعَظِيمَيْنِ وَلَمْ يَذْكُرَا مَا بَعْدَهُ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الْأَعْلَى ‏ ‏حَتَّى يُفْرَغَ مِنْهَا ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏حَتَّى تُوضَعَ فِي ‏ ‏اللَّحْدِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّهُ قَالَ حَدَّثَنِي ‏ ‏رِجَالٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏وَقَالَ وَمَنْ اتَّبَعَهَا حَتَّى تُدْفَنَ

“ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்பவருக்கு ஒரு ‘கீராத்’ நன்மையுண்டு; அடக்கம் செய்யப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு ‘கீராத்’ நன்மை உண்டு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அப்போது “இரண்டு ‘கீராத்’ என்றால் என்ன?” என வினவப்பட்டது. அதற்கு, “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்று நபி (ஸல்) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

“(என் தந்தை) இப்னு உமர் (ரலி), ஜனாஸாத் தொழுகை தொழுவித்(து முடித்)ததும் திரும்பிச் சென்றுவிடுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் அவர்களுக்கு எட்டியபோது, “நாம் ஏராளமான ‘கீராத்’ (நன்மை)களை வீணாக்கி (இழந்து)விட்டோம்’ என்று கூறினார்கள்” என்று வருந்தியதாக ஸாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) கூறினார்கள் என்பதாக இப்னு ஷிஹாப் (ரஹ்) அறிவித்தார்கள் என்று ஹர்மலா பின் யஹ்யா மற்றும் ஹாரூன் பின் ஸயீத் (ரஹ்) ஆகியோரது வழி அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

அப்துல் அஃலா (ரஹ்) வழி அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸின் முழு வடிவமும் இடம்பெற்றுள்ளது. மற்ற இரு அறிவிப்பாளர் தொடர்களில் “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்பதற்குப் பின்னுள்ள தகவல் இடம்பெறவில்லை.

அப்துல் அஃலா (ரஹ்) வழி அறிவிப்பில் “அடக்கம் முடியும்வரை கலந்துகொள்பவருக்கு …” என்ற வாசகமும், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) வழி அறிவிப்பில் “குழியில் வைக்கப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத் (நன்மை) உண்டு” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன.

அப்துல் மலிக் பின் ஷுஐப் (ரஹ்) வழி அறிவிப்பில், “அடக்கப்படும்வரை அ(ந்த பிரேதத்)தைப் பின்தொடர்பவருக்கு இரண்டு கீராத் (நன்மை) உண்டு” என இடம்பெற்றுள்ளது. பிற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 11, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1569

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏قَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبُو أُمَامَةَ بْنُ سَهْلِ بْنِ حُنَيْفٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏أَسْرِعُوا بِالْجَنَازَةِ فَإِنْ كَانَتْ صَالِحَةً قَرَّبْتُمُوهَا إِلَى الْخَيْرِ وَإِنْ كَانَتْ غَيْرَ ذَلِكَ كَانَ شَرًّا تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ

“பிரேதத்தைத் துரிதமாக எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில், அது நல்லதாயிருந்தால், நன்மையின் பக்கம் அதை விரைந்து கொண்டு சேர்க்கின்றீர்கள். அதற்கு மாற்றமாக அது இருந்தால், ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கிவைத்தவர்கள் ஆவீர்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1568

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَسْرِعُوا بِالْجَنَازَةِ فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ ‏ ‏لَعَلَّهُ قَالَ تُقَدِّمُونَهَا عَلَيْهِ ‏ ‏وَإِنْ تَكُنْ غَيْرَ ذَلِكَ فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏قَالَ لَا أَعْلَمُهُ إِلَّا رَفَعَ الْحَدِيثَ

“இறந்தவர் உடலைத் துரிதமாக எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில், அது நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் (அதற்கான) நன்மையின் பக்கம் அதை விரைவுபடுத்துகின்றீர்கள். அதற்கு மாற்றமாக அது இருந்தால், ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கிவைப்பீர்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

மஅமர் பின் ராஷித் (ரஹ்) வழி அறிவிப்பில் “இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் என்றே நான் கருதுகின்றேன்” என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 11, பாடம்: 15, ஹதீஸ் எண்: 1567

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يُحَدِّثُ ‏:‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَطَبَ يَوْمًا فَذَكَرَ رَجُلًا مِنْ أَصْحَابِهِ قُبِضَ فَكُفِّنَ فِي كَفَنٍ غَيْرِ ‏ ‏طَائِلٍ ‏ ‏وَقُبِرَ لَيْلًا فَزَجَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يُقْبَرَ الرَّجُلُ بِاللَّيْلِ حَتَّى يُصَلَّى عَلَيْهِ إِلَّا أَنْ يُضْطَرَّ إِنْسَانٌ إِلَى ذَلِكَ وَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا كَفَّنَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُحَسِّنْ كَفَنَهُ

ஒரு நாள் நபி (ஸல்) (எங்களிடையே) உரையாற்றும்போது, இறந்துபோன தம் தோழர் ஒருவர் நிறைவான கஃபன் அணிவிக்கப்படாமல் (அரைகுறை கஃபனில்) இரவிலேயே அடக்கம் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்தார்கள். நபி (ஸல்) (தாம் கலந்துகொண்டு) தொழவைக்கப்படாமல் இரவில் ஒருவர் அடக்கம் செய்யப்படுவதைக் கண்டித்தார்கள். ஒருவருக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டால் தவிர (அவ்வாறு செய்ய வேண்டாம் எனத் தடை விதித்தார்கள்). மேலும், “உங்களில் ஒருவர் தம் சகோதரருக்குக் கஃபனிடும்போது அழகிய முறையில் கஃபனிடட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1566

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَحَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ ‏ ‏قَالَتْ :‏‏

‏سُجِّيَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ مَاتَ بِثَوْبِ ‏ ‏حِبَرَةٍ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو الْيَمَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعَيْبٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏سَوَاءً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தபோது அவர்களின் உடல் (யமன் நாட்டுப் பருத்தித் துணிப்) போர்வையால் போர்த்தி மூடப்பட்டது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக, அபூஸலமா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1565

و حَدَّثَنِي ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏‏أَنَّهُ قَالَ :‏

سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ لَهَا ‏ ‏فِي كَمْ كُفِّنَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ فِي ثَلَاثَةِ أَثْوَابٍ ‏ ‏سَحُولِيَّةٍ

நான் நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எத்தனை ஆடையில் கஃபனிடப்பட்டது?” என்று கேட்டேன். அதற்கு “மூன்று பருத்தி ஆடைகளில்” என ஆயிஷா (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக, அபூஸலமா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1564

و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :‏‏

‏أُدْرِجَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حُلَّةٍ ‏ ‏يَمَنِيَّةٍ كَانَتْ ‏ ‏لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏ثُمَّ نُزِعَتْ عَنْهُ وَكُفِّنَ فِي ثَلَاثَةِ أَثْوَابٍ ‏ ‏سُحُولٍ ‏ ‏يَمَانِيَةٍ لَيْسَ فِيهَا عِمَامَةٌ وَلَا قَمِيصٌ فَرَفَعَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏الْحُلَّةَ فَقَالَ أُكَفَّنُ فِيهَا ثُمَّ قَالَ لَمْ يُكَفَّنْ فِيهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأُكَفَّنُ فِيهَا فَتَصَدَّقَ بِهَا ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏وَابْنُ عُيَيْنَةَ ‏ ‏وَابْنُ إِدْرِيسَ ‏ ‏وَعَبْدَةُ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِهِمْ قِصَّةُ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இறந்த பின்னர் என் சகோதரர்), அப்துல்லாஹ் பின் அபீபக்ரு அவர்களுக்குச் சொந்தமான யமன் நாட்டுப் போர்வையில் சுற்றப்பட்டார்கள். பின்னர் அது அகற்றப்பட்டு, யமன் நாட்டின் மூன்று பருத்தி ஆடைகளால் கஃபனிடப்பட்டது. அவற்றில் தலைப்பாகையோ நீளங்கியோ இருக்கவில்லை. பிறகு அப்துல்லாஹ் பின் அபீபக்ரு, அந்தப் போர்வையை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, “இதில்தான் நான் கஃபனிடப்பட வேண்டும்” என்றார். பின்னர் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (உடலில்) கஃபனாக அணிவிக்கப்படாத இந்த ஆடையால் நான் கஃபனிடப்படுவதா?” என்று கூறிவிட்டு, அதைத் தர்மம் செய்துவிட்டார்.

அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி).


குறிப்பு :

இப்னு அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், அப்துல்லாஹ் பின் அபீபக்ரு பற்றிய குறிப்புகளில்லை.