அத்தியாயம்: 4, பாடம்: 51, ஹதீஸ் எண்: 793

و حَدَّثَنِي ‏ ‏عَمْرُو بْنُ عَلِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏قَالَ قَالَتْ ‏ ‏عَائِشَةُ :‏

مَا يَقْطَعُ الصَّلَاةَ قَالَ فَقُلْنَا الْمَرْأَةُ وَالْحِمَارُ فَقَالَتْ إِنَّ الْمَرْأَةَ لَدَابَّةُ سَوْءٍ لَقَدْ رَأَيْتُنِي بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُعْتَرِضَةً كَاعْتِرَاضِ الْجَنَازَةِ وَهُوَ ‏ ‏يُصَلِّي

ஆயிஷா (ரலி) (எங்களிடம்), “தொழுகையை முறிக்கக் கூடியவை எவை?” என்று கேட்டார்கள். நாங்கள், “பெண்களும் கழுதைகளும் (குறுக்கே செல்வது)” என்று பதிலளித்தோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “பெண்கள் என்ன தீய பிராணிகளா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுதுகொண்டிருக்கும்போது அவர்களுக்கு முன்னால் நான் ஜனாஸாவைப் போன்று குறுக்குவாக்கில் படுத்துக் கொண்டிருப்பேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அன்னாரின் சகோதரி மகன் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 51, ஹதீஸ் எண்: 792

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي صَلَاتَهُ مِنْ اللَّيْلِ كُلَّهَا وَأَنَا مُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ أَيْقَظَنِي فَأَوْتَرْتُ

நபி (ஸல்) அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையே நான் குறுக்குவாக்கில் படுத்து(உறங்கி)க் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் இரவுத் தொழுகையை முழுமையாகத் தொழுது முடிப்பார்கள். இறுதியில் வித்ருத் தொழ எண்ணும்போது என்னை எழுப்பி விடுவார்கள். நான் (எழுந்து) வித்ருத் தொழுவேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 51, ஹதீஸ் எண்: 791

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ : ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي مِنْ اللَّيْلِ وَأَنَا مُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ كَاعْتِرَاضِ الْجَنَازَةِ ‏

நபி (ஸல்) (என் இல்லத்தில்) இரவுத் தொழுகை தொழுது கொண்டிருக்கும்போது, நான் ஜனாஸாவைப் போன்று அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையே குறுக்குவாக்கில் படுத்திருப்பேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 50, ஹதீஸ் எண்: 790

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْمَخْزُومِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ وَهُوَ ابْنُ زِيَادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَصَمِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ الْأَصَمِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْطَعُ الصَّلَاةَ الْمَرْأَةُ وَالْحِمَارُ وَالْكَلْبُ ‏ ‏وَيَقِي ذَلِكَ مِثْلُ ‏ ‏مُؤْخِرَةِ ‏ ‏الرَّحْلِ ‏

“தொழுகையை(த் தடுப்பு இல்லாமல் தொழுதால், குறுக்கே செல்லும்) பெண் (முறித்துவிடுவாள். மேலும்) கழுதை, நாய் ஆகியவை(யும்) முறித்து விடும். இவற்றிலிருந்து பாதுகாத்திட வாகன(ஒட்டக)த்தின் சேணப்பலகை (தடுப்பு) போதும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 50, ஹதீஸ் எண்: 789

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ أَحَدُكُمْ ‏ ‏يُصَلِّي فَإِنَّهُ يَسْتُرُهُ إِذَا كَانَ بَيْنَ يَدَيْهِ مِثْلُ ‏ ‏آخِرَةِ ‏ ‏الرَّحْلِ ‏ ‏فَإِذَا لَمْ يَكُنْ بَيْنَ يَدَيْهِ مِثْلُ ‏ ‏آخِرَةِ ‏ ‏الرَّحْلِ ‏ ‏فَإِنَّهُ يَقْطَعُ صَلَاتَهُ الْحِمَارُ وَالْمَرْأَةُ وَالْكَلْبُ الْأَسْوَدُ قُلْتُ يَا ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏مَا بَالُ الْكَلْبِ الْأَسْوَدِ مِنْ الْكَلْبِ الْأَحْمَرِ مِنْ الْكَلْبِ الْأَصْفَرِ قَالَ يَا ابْنَ أَخِي سَأَلْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَمَا سَأَلْتَنِي فَقَالَ الْكَلْبُ الْأَسْوَدُ شَيْطَانٌ ‏


حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَهْبُ بْنُ جَرِيرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَيْضًا ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَلْمَ بْنَ أَبِي الذَّيَّالِ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏يُوسُفُ بْنُ حَمَّادٍ الْمَعْنِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زِيَادٌ الْبَكَّائِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ الْأَحْوَلِ ‏ ‏كُلُّ هَؤُلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ هِلَالٍ ‏ ‏بِإِسْنَادِ ‏ ‏يُونُسَ ‏ ‏كَنَحْوِ حَدِيثِهِ

அபூதர் அல்கிஃபாரீ (ரலி), “உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும்போது தமக்கு வாகன(ஒட்டக)த்தின் சேணப்பலகை போன்ற ஒன்று இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சேணப்பலகை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண், மற்றும் கறுப்பு நாய் ஆகியன (குறுக்கே கடந்து கவனத்தை ஈர்த்து) அவரது தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.

“அபூதர் (ரலி) அவர்களே! சிவப்புநிற நாய் மஞ்சள்நிற நாய் ஆகியவற்றை விடுத்து, கறுப்புநிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சகோதரரின் மகனே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் அல் கிஃபாரீ (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 49, ஹதீஸ் எண்: 788

حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَكِّيٌّ ‏ ‏قَالَ ‏ ‏يَزِيدُ ‏ ‏أَخْبَرَنَا قَالَ :‏

كَانَ ‏ ‏سَلَمَةُ ‏ ‏يَتَحَرَّى ‏ ‏الصَّلَاةَ عِنْدَ الْأُسْطُوَانَةِ الَّتِي عِنْدَ الْمُصْحَفِ فَقُلْتُ لَهُ يَا ‏ ‏أَبَا مُسْلِمٍ ‏ ‏أَرَاكَ ‏ ‏تَتَحَرَّى ‏ ‏الصَّلَاةَ عِنْدَ هَذِهِ الْأُسْطُوَانَةِ قَالَ رَأَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَتَحَرَّى ‏ ‏الصَّلَاةَ عِنْدَهَا ‏

ஸலமா பின் அக்வஃ (ரலி) (மஸ்ஜிதுந்நபவீயில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்குப் பக்கத்திலிருந்த தூணருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் நான், “அபூ முஸ்லிம்! நீங்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதையே தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் காண்கின்றேனே (என்ன காரணம்)?” என்று கேட்டேன். அதற்கு ஸலமா (ரலி), “நபி (ஸல்) இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் பார்த்திருக்கின்றேன் (ஆகவேதான் நானும் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸலமா இப்னுல் அக்வஃ (ரலி) வழியாக யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 49, ஹதீஸ் எண்: 787

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ مَسْعَدَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ يَعْنِي ابْنَ أَبِي عُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ وَهُوَ ابْنُ الْأَكْوَعِ :‏

أَنَّهُ كَانَ ‏ ‏يَتَحَرَّى ‏ ‏مَوْضِعَ مَكَانِ الْمُصْحَفِ يُسَبِّحُ فِيهِ وَذَكَرَ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَتَحَرَّى ‏ ‏ذَلِكَ الْمَكَانَ ‏ ‏وَكَانَ بَيْنَ الْمِنْبَرِ وَالْقِبْلَةِ قَدْرُ مَمَرِّ الشَّاةِ

ஸலமா இப்னுல் அக்வஃ (ரலி), (மஸ்ஜிதுந் நபவீயில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்தை அடுத்துள்ள (தூண் எதிரே) உள்ள இடத்தில் கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழும் வழக்கமுள்ளவராக இருந்தார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து (நஃபில்) தொழுவார்கள். சொற்பொழிவு மேடைக்கும் (மிம்பர்) கிப்லாவுக்கும் இடையே ஓர் ஆடு கடந்து செல்லும் அளவுக்கே இடைவெளி இருந்தது” என்று நினைவு கூர்ந்தார்.

அறிவிப்பாளர் : ஸலமா இப்னுக் அக்வஃ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 49, ஹதீஸ் எண்: 786

حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي حَازِمٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ‏ ‏قَالَ :‏

‏كَانَ بَيْنَ مُصَلَّى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَبَيْنَ الْجِدَارِ مَمَرُّ الشَّاةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழ நிற்கும் இடத்திற்கும் (கிப்லாத் திசையில் அமைந்த) சுவருக்கும் இடையே ஓர் ஆடு கடந்து செல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது.

அறிவிப்பாளர் : ஸஹ்லிப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 48, ஹதீஸ் எண்: 785

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏أَنَّ ‏ ‏زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ ‏ ‏أَرْسَلَهُ إِلَى ‏ ‏أَبِي جُهَيْمٍ ‏ ‏يَسْأَلُهُ مَاذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْمَارِّ بَيْنَ يَدَيْ الْمُصَلِّي ‏ ‏قَالَ ‏ ‏أَبُو جُهَيْمٍ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيْ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ قَالَ ‏ ‏أَبُو النَّضْرِ ‏ ‏لَا أَدْرِي قَالَ أَرْبَعِينَ يَوْمًا أَوْ شَهْرًا أَوْ سَنَةً ‏


حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمِ بْنِ حَيَّانَ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏أَنَّ ‏ ‏زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ ‏ ‏أَرْسَلَ إِلَى ‏ ‏أَبِي جُهَيْمٍ الْأَنْصَارِيِّ ‏ ‏مَا سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ فَذَكَرَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏

“தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் எத்தகைய பாவம் தம்மீது ஏற்படும் என்பதை அறிந்திருப்பாரானால் அவருக்குக் குறுக்கே கடந்து செல்வதைவிட நாற்பது (நாள்கள்/ மாதங்கள்/ஆண்டுகள் அப்படியே காத்து) நிற்பது அவருக்கு நன்மை பயப்பதாக இருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஜுஹைம் பின் அல்ஹாரிஸ் (ரலி)


குறிப்புகள் :

“ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி), (தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்வது பற்றி) அபூஜுஹைம் (ரலி) என்ன செவியுற்றிருக்கிறார்கள் என்று கேட்டு வருமாறு என்னை அனுப்பினார்கள். (நான் சென்று கேட்டபோது) அபூஜுஹைம் (ரலி) அவர்கள் மேற்காணும் ஹதீஸை அறிவித்தார்கள்” என்று புஸ்ரிப்னு ஸயீத் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

“புஸ்ரிப்னு ஸயீத் (ரஹ்) குறிப்பிட்ட நாற்பது என்பது நாட்களா?, மாதங்களா?, ஆண்டுகளா? என்பது எனக்குத் தெரியவில்லை” என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுந்நள்ரு ஸாலிம் பின் அபீஉமய்யா (ரஹ்) கூறுகின்றார்.

வகீஃ (ரஹ்) வழி அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களிடம் அபூஜுஹைம் அல்அன்ஸாரீ (ரலி), (தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்வது பற்றி) என்ன செவியுற்றிருக்கின்றார் என்று அறிந்து வருமாறு என்னை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அனுப்பினார்கள் என புஸ்ரிப்னு ஸயீத் (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 48, ஹதீஸ் எண்: 784

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ ابْنِ أَبِي فُدَيْكٍ ‏ ‏عَنْ ‏ ‏الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏صَدَقَةَ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا كَانَ أَحَدُكُمْ ‏ ‏يُصَلِّي فَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّ مَعَهُ الْقَرِينَ ‏


و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏صَدَقَةُ بْنُ يَسَارٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يَقُولُا ‏ ‏إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏بِمِثْلِهِ

“உங்களில் ஒருவர் தொழும்போது எவரையும் தமக்குக் குறுக்கே கடந்துசெல்ல அனுமதிக்க வேண்டாம். (அவரைத் தடுக்கட்டும்) அவர் (விலகிக்கொள்ள) மறுக்கும்போது சண்டையிட(முடிந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும்! ஏனெனில், அவருடன் கூட்டாளி(யாக ஷைத்தான்) இருக்கிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

“இந்த ஹதீஸை நான் இப்னு உமர் (ரலி) இடமிருந்து செவியுற்றேன்” என்று ஸதக்கதிப்னு யஸார் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.