அத்தியாயம்: 46, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4763

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ، أَنَّ عَامِرَ بْنَ وَاثِلَةَ حَدَّثَهُ أَنَّهُ :‏

سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ الشَّقِيُّ مَنْ شَقِيَ فِي بَطْنِ أُمِّهِ وَالسَّعِيدُ مَنْ وُعِظَ بِغَيْرِهِ ‏.‏ فَأَتَى رَجُلاً مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُقَالُ لَهُ حُذَيْفَةُ بْنُ أَسِيدٍ الْغِفَارِيُّ فَحَدَّثَهُ بِذَلِكَ مِنْ قَوْلِ ابْنِ مَسْعُودٍ فَقَالَ وَكَيْفَ يَشْقَى رَجُلٌ بِغَيْرِ عَمَلٍ فَقَالَ لَهُ الرَّجُلُ أَتَعْجَبُ مِنْ ذَلِكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِذَا مَرَّ بِالنُّطْفَةِ ثِنْتَانِ وَأَرْبَعُونَ لَيْلَةً بَعَثَ اللَّهُ إِلَيْهَا مَلَكًا فَصَوَّرَهَا وَخَلَقَ سَمْعَهَا وَبَصَرَهَا وَجِلْدَهَا وَلَحْمَهَا وَعِظَامَهَا ثُمَّ ‏.‏ قَالَ يَا رَبِّ أَذَكَرٌ أَمْ أُنْثَى فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَقُولُ يَا رَبِّ أَجَلُهُ ‏.‏ فَيَقُولُ رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَقُولُ يَا رَبِّ رِزْقُهُ ‏.‏ فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَخْرُجُ الْمَلَكُ بِالصَّحِيفَةِ فِي يَدِهِ فَلاَ يَزِيدُ عَلَى مَا أُمِرَ وَلاَ يَنْقُصُ ‏”‏


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ، أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّ أَبَا الطُّفَيْلِ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، يَقُولُ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ عَمْرِو بْنِ الْحَارِثِ ‏

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “நற்பேறற்றவன் என்பவன், தன் தாயின் வயிற்றிலேயே நற்பேறற்றவனா(கப் பதிவா)கிவிட்டவன் ஆவான்; நற்பேறு பெற்றவன் என்பவன், பிறர் மூலம் அறிவுரை வழங்கப்பட்டவன் ஆவான்” என்று கூறியதைக் கேட்டேன்.

உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஹுதைஃபா பின் அஸீத் அல்ஃகிஃபாரீ (ரலி) என்பவரிடம் சென்று, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதைத் தெரிவித்துவிட்டு, “செயல்படாமலேயே ஒருவன் எவ்வாறு நற்பேறற்றவனாக ஆகமுடியும்?” என்று கேட்டேன். அதற்கு ஹுதைஃபா பின் அஸீத் (ரலி) கூறினார்கள் “இதைக்கேட்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன்:”

“விந்து, கருப்பைக்குச் சென்று நாற்பத்து இரண்டு இரவுகள் கழிந்ததும் அதனிடம் அல்லாஹ் வானவர் ஒருவரை அனுப்புகின்றான். பிறகு (மூன்றாவது நாற்பது கழிந்தபின்) அதற்கு உருவமளித்து, அதற்குச்  செவிப்புலனையும் பார்வையையும் தோலையும் சதையையும் எலும்பையும் படைக்கின்றான்.

பிறகு (நாற்பத்து இரண்டு நாள்கள் கழிந்ததும் அனுப்பப்பட்ட) அந்த வானவர், “இறைவா! இது ஆணா, பெண்ணா?” என்று கேட்கின்றார். அப்போது உம்முடைய இறைவன், தான் நாடியதைத் தீர்ப்பளிக்கின்றான். (அவ்வாறே) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கின்றார். பிறகு அவர், “இறைவா! இதன் வாழ்நாள் (எவ்வளவு?)” என்று கேட்கின்றார். அப்போது உம்முடைய இறைவன், தான் நாடியதைச் சொல்கின்றான். (அதன்படி) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கின்றார்.

பிறகு அவர், “இறைவா! இதன் வாழ்வாதாரம் (எவ்வளவு)?” என்று கேட்கின்றார். அப்போது உம்முடைய இறைவன், தான் நாடியதைத் தீர்ப்பளிக்கின்றான். (அதன்படி) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்துவிட்டுப் பிறகு தமது கையில் அந்த ஏட்டை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகின்றார். (தமக்கு) ஆணையிடப்பட்டதைவிட அவர் கூட்டுவதுமில்லை; குறைப்பதுமில்லை.

அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலி)

அத்தியாயம்: 46, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4762

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، – وَاللَّفْظُ لاِبْنِ نُمَيْرٍ – قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ :‏

يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ يَدْخُلُ الْمَلَكُ عَلَى النُّطْفَةِ بَعْدَ مَا تَسْتَقِرُّ فِي الرَّحِمِ بِأَرْبَعِينَ أَوْ خَمْسَةٍ وَأَرْبَعِينَ لَيْلَةً فَيَقُولُ يَا رَبِّ أَشَقِيٌّ أَوْ سَعِيدٌ فَيُكْتَبَانِ فَيَقُولُ أَىْ رَبِّ أَذَكَرٌ أَوْ أُنْثَى فَيُكْتَبَانِ وَيُكْتَبُ عَمَلُهُ وَأَثَرُهُ وَأَجَلُهُ وَرِزْقُهُ ثُمَّ تُطْوَى الصُّحُفُ فَلاَ يُزَادُ فِيهَا وَلاَ يُنْقَصُ ‏”‏ ‏

“விந்துத் துளியானது, தாயின் கருப்பையில் நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாள்கள் தங்கியிருந்த பின்னர் அந்த விந்துத் துளிக்கு வானவர் ஒருவர் சென்று, “இறைவா! இவன் நற்பேறற்றவனா? அல்லது நற்பேறு பெற்றவனா?” என்று கேட்கின்றார். பிறகு (இறைக்கட்டளைக்கேற்ப) அதைக் குறித்து எழுதப்படுகிறது. பிறகு “இறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா?” என்று கேட்டு அதற்கேற்ப எழுதப்படுகிறது.

அவனுடைய செயல்பாடு, இயக்கம், வாழ்நாள், வாழ்வாதாரம் ஆகியவையும் எழுதப்படுகின்றன. பிறகு ஏடுகள் சுருட்டப்பட்டுவிடுகின்றன. பிறகு அதில் கூட்டப்படுவதுமில்லை; குறைக்கப்படுவது மில்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அஸீத் (ரலி)

அத்தியாயம்: 46, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4761

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَبِي وَأَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ قَالُوا حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ :‏

حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ ‏ “‏ إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا ثُمَّ يَكُونُ فِي ذَلِكَ عَلَقَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يَكُونُ فِي ذَلِكَ مُضْغَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يُرْسَلُ الْمَلَكُ فَيَنْفُخُ فِيهِ الرُّوحَ وَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ بِكَتْبِ رِزْقِهِ وَأَجَلِهِ وَعَمَلِهِ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ فَوَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ إِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ حَتَّى مَا يَكُونَ بَيْنَهُ وَبَيْنَهَا إِلاَّ ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلُهَا وَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونَ بَيْنَهُ وَبَيْنَهَا إِلاَّ ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ فَيَدْخُلُهَا ‏”‏


حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، كِلاَهُمَا عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ الْحَمِيدِ ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، ح وَحَدَّثَنِي أَبُو سَعِيدٍ الأَشَجُّ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَاهُ عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ بْنُ الْحَجَّاجِ، كُلُّهُمْ عَنِ الأَعْمَشِ بِهَذَا الإِسْنَادِ ‏.‏ قَالَ فِي حَدِيثِ وَكِيعٍ ‏”‏ إِنَّ خَلْقَ أَحَدِكُمْ يُجْمَعُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ لَيْلَةً ‏”‏ ‏.‏ وَقَالَ فِي حَدِيثِ مُعَاذٍ عَنْ شُعْبَةَ ‏”‏ أَرْبَعِينَ لَيْلَةً أَرْبَعِينَ يَوْمًا ‏”‏ ‏.‏ وَأَمَّا فِي حَدِيثِ جَرِيرٍ وَعِيسَى ‏”‏ أَرْبَعِينَ يَوْمًا ‏”‏

உண்மை பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

“உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகின்றார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்ற (நாற்பது நாள்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகின்றார். அவர் அதில் உயிரை ஊதுகின்றார். (அதற்கு முன்பே) அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் நற்பேறு பெற்றவனா அல்லது நற்பேறற்றவனா ஆகிய நான்கு விஷயங்களை எழுதுமாறு அவர் பணிக்கப்படுகின்றார்.

எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஓரிறை)வன் மீதாணையாக! உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்)செயல்களை(த் தொடர்ந்து) செய்துகொண்டே இருப்பார். அவருக்கும் சொர்க்கத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து, அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார்.

போலவே, உங்களில் ஒருவர் நரகவாசிகளின் (தீய)செயல்களை(த் தொடர்ந்து) செய்துகொண்டே இருப்பார். இறுதியில் அவருக்கும் நரகத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து, அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது இரவுகள் (கருவாக) சேமிக்கப்படுகின்றார் …” என்று காணப்படுகிறது. ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்து முஆத் (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில், “நாற்பது இரவுகளும் நாற்பது பகல்களும் …“ என்று இடம் பெற்றுள்ளது. ஜரீர் மற்றும் ஈஸா (ரஹ்) வழி அறிவிப்புகளில் “நாற்பது நாள்கள்” என்றே உள்ளது.

அத்தியாயம்: 45, பாடம்: 51, ஹதீஸ் எண்: 4760

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَأَبُو الرَّبِيعِ، وَأَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ – وَاللَّفْظُ لِيَحْيَى – قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ :‏

قِيلَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرَأَيْتَ الرَّجُلَ يَعْمَلُ الْعَمَلَ مِنَ الْخَيْرِ وَيَحْمَدُهُ النَّاسُ عَلَيْهِ قَالَ ‏ “‏ تِلْكَ عَاجِلُ بُشْرَى الْمُؤْمِنِ ‏”‏ ‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ وَكِيعٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي عَبْدُ الصَّمَدِ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا النَّضْرُ، كُلُّهُمْ عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، بِإِسْنَادِ حَمَّادِ بْنِ زَيْدٍ ‏.‏ بِمِثْلِ حَدِيثِهِ غَيْرَ أَنَّ فِي حَدِيثِهِمْ عَنْ شُعْبَةَ غَيْرَ عَبْدِ الصَّمَدِ وَيُحِبُّهُ النَّاسُ عَلَيْهِ ‏.‏ وَفِي حَدِيثِ عَبْدِ الصَّمَدِ وَيَحْمَدُهُ النَّاسُ ‏.‏ كَمَا قَالَ حَمَّادٌ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “ஒருவர் நற்செயல்கள் செய்கின்றார். அதற்காக அவரை மக்கள் பாராட்டிப் பேசுகின்றனர். இதைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது இறைநம்பிக்கையாளருக்கு முன் கூட்டியே கிடைக்கும் நற்செய்தியாகும்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)


குறிப்பு :

ஷுஅபா (ரஹ்) வழி வரும் அனைத்து அறிவிப்புகளிலும், “அதற்காக அவரை மக்கள் நேசிக்கின்றனர்” என்று காணப்படுகிறது.

அப்துஸ் ஸமத் (ரஹ்) வழி வரும் அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே, “அதற்காக அவரை மக்கள் பாராட்டுகின்றனர்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 45, பாடம்: 50, ஹதீஸ் எண்: 4759

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ حوَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ أَنَسًا، ح

وَحَدَّثَنَا أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا مُعَاذٌ، – يَعْنِي ابْنَ هِشَامٍ – حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْحَدِيثِ ‏.‏

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ، عُثْمَانُ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ :‏

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي رَجُلٍ أَحَبَّ قَوْمًا وَلَمَّا يَلْحَقْ بِهِمْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ ‏”‏ ‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، ح وَحَدَّثَنِيهِ بِشْرُ بْنُ خَالِدٍ أَخْبَرَنَا مُحَمَّدٌ، – يَعْنِي ابْنَ جَعْفَرٍ – كِلاَهُمَا عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو الْجَوَّابِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ قَرْمٍ، جَمِيعًا عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ ‏

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ أَبِي مُوسَى قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ ‏.‏ فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ جَرِيرٍ عَنِ الأَعْمَشِ

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் (நன்)மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் தகுதியிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. அவர் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஒரு மனிதன் யார்மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன் இருப்பான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 50, ஹதீஸ் எண்: 4758

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ عُثْمَانُ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ :‏

بَيْنَمَا أَنَا وَرَسُولُ اللَّهِ، صلى الله عليه وسلم خَارِجَيْنِ مِنَ الْمَسْجِدِ فَلَقِينَا رَجُلاً عِنْدَ سُدَّةِ الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَا أَعْدَدْتَ لَهَا ‏”‏ ‏.‏ قَالَ فَكَأَنَّ الرَّجُلَ اسْتَكَانَ ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَعْدَدْتُ لَهَا كَبِيرَ صَلاَةٍ وَلاَ صِيَامٍ وَلاَ صَدَقَةٍ وَلَكِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ ‏.‏ قَالَ ‏”‏ فَأَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ ‏”‏ ‏


حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ الْعَزِيزِ الْيَشْكُرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ جَبَلَةَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِنَحْوِهِ ‏

நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது பள்ளிவாசல் முற்றத்தின் அருகில் ஒருவரைச் சந்தித்தோம். அவர், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை எப்போது வரும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதற்காக நீ (முன்னேற்பாடாக) என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்துள்ளாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் (பதிலளிக்காமல்) அடங்கிப்போனவரைப் போன்றிருந்தார்.

பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! அதற்காக நான் பெரிதாகத் தொழுகையையோ நோன்பையோ தான-தர்மங்களையோ முன்னேற்பாடாகச் செய்துவைக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்றேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ நேசித்தவர்களுடன் (மறுமையில்) இருப்பாய்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 50, ஹதீஸ் எண்: 4757

حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، – يَعْنِي ابْنَ زَيْدٍ – حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قَالَ ‏”‏ وَمَا أَعْدَدْتَ لِلسَّاعَةِ ‏”‏ ‏.‏ قَالَ حُبَّ اللَّهِ وَرَسُولِهِ قَالَ ‏”‏ فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ ‏”‏ ‏.‏ قَالَ أَنَسٌ فَمَا فَرِحْنَا بَعْدَ الإِسْلاَمِ فَرَحًا أَشَدَّ مِنْ قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏”‏ فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ ‏”‏ ‏.‏ قَالَ أَنَسٌ فَأَنَا أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ فَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ وَإِنْ لَمْ أَعْمَلْ بِأَعْمَالِهِمْ


حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ يَذْكُرْ قَوْلَ أَنَسٍ فَأَنَا أُحِبُّ ‏.‏ وَمَا بَعْدَهُ ‏‏

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மறுமைக்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கின்றாய்?” என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் கொண்ட அன்பை” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்படியானால், நீ அன்புகொண்டோர்களுடன் (மறுமையில்) இருப்பாய்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்படியானால், நீ அன்புகொண்டோர்களுடன் (மறுமையில்) நீ இருப்பாய்” என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்! அதைப் போன்று நாங்கள் இஸ்லாத்தைத் தழுவியபின் வேறு எதற்காகவும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

ஆகவே, நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அபூபக்ரு (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கின்றேன். மேலும், அவர்களுடைய நற்செயல்கள் அளவுக்கு நான் நற்செயல்கள் செய்யாவிட்டாலும் அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன் நான் இருப்பேன் என்று நம்புகின்றேன்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

ஜஅஃபர் பின் ஸுலைமான் (ரஹ்) வழி அறிவிப்பில், “ … ஆகவே, நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்… நேசிக்கின்றேன்” என்பதும் அதற்குப் பின்னுள்ளதும் இடம் பெறவில்லை.

அத்தியாயம்: 45, பாடம்: 50, ஹதீஸ் எண்: 4756

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ وَابْنُ أَبِي عُمَرَ – وَاللَّفْظُ لِزُهَيْرٍ – قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ قَالَ :‏

قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قَالَ ‏”‏ وَمَا أَعْدَدْتَ لَهَا ‏”‏ ‏.‏ فَلَمْ يَذْكُرْ كَبِيرًا ‏.‏ قَالَ وَلَكِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ ‏.‏ قَالَ ‏”‏ فَأَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ ‏”‏


حَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ رَجُلاً، مِنَ الأَعْرَابِ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ مَا أَعْدَدْتُ لَهَا مِنْ كَثِيرٍ أَحْمَدُ عَلَيْهِ نَفْسِي ‏

ஒருவர் (நபியவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். நபி (ஸல்), “அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கின்றாய்?” என்று கேட்டார்கள். அவர் (தாம் செய்த நற்செயல்கள்) எதையும் பெரிய அளவில் கூறவில்லை. அவர், “நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்றேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் (மறுமையில்) இருப்பாய்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பு, “கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்…” என்று ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. ஆயினும் அவற்றில், “நான் என்னை மெச்சிக்கொள்ளும் அளவுக்கு அதிகமான நற்செயல்கள் எதையும் தயார் செய்து வைக்கவில்லை” என்று அம்மனிதர் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 45, பாடம்: 50, ஹதீஸ் எண்: 4755

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏

أَنَّ أَعْرَابِيًّا قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَتَى السَّاعَةُ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَا أَعْدَدْتَ لَهَا ‏”‏ ‏.‏ قَالَ حُبَّ اللَّهِ وَرَسُولِهِ ‏.‏ قَالَ ‏”‏ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ ‏”‏

கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கின்றாய்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நேசம் வைத்துள்ளேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ நேசித்தவர்களுடன் (மறுமையில்) இருப்பாய்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 49, ஹதீஸ் எண்: 4754

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ الأَصَمِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

بِحَدِيثٍ يَرْفَعُهُ قَالَ ‏ “‏ النَّاسُ مَعَادِنُ كَمَعَادِنِ الْفِضَّةِ وَالذَّهَبِ خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقُهُوا وَالأَرْوَاحُ جُنُودٌ مُجَنَّدَةٌ فَمَا تَعَارَفَ مِنْهَا ائْتَلَفَ وَمَا تَنَاكَرَ مِنْهَا اخْتَلَفَ ‏”‏ ‏

மனிதர்கள், உலோகங்களில் வெள்ளியையும் பொன்னையும் ஒத்தவர்கள். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறப்புக்குரியவர்களாக இருந்தவர்கள், இஸ்லாத்தை ஏற்று, மார்க்க அறிவைப் பெற்றுக்கொண்டால், அப்போதும் சிறப்புக்குரியவர்களே!

உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் நேசிக்கின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (எதிராகி)விடுகின்றன.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)