அத்தியாயம்: 44, பாடம்: 52, ஹதீஸ் எண்: 4583

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ عُثْمَانُ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ :‏

سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَىُّ النَّاسِ خَيْرٌ قَالَ ‏ “‏ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ يَجِيءُ قَوْمٌ تَبْدُرُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ وَتَبْدُرُ يَمِينُهُ شَهَادَتَهُ ‏”‏


قَالَ إِبْرَاهِيمُ كَانُوا يَنْهَوْنَنَا وَنَحْنُ غِلْمَانٌ عَنِ الْعَهْدِ وَالشَّهَادَاتِ ‏.‏

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، كِلاَهُمَا عَنْ مَنْصُورٍ، بِإِسْنَادِ أَبِي الأَحْوَصِ وَجَرِيرٍ بِمَعْنَى حَدِيثِهِمَا وَلَيْسَ فِي حَدِيثِهِمَا سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “மக்களில் சிறந்தோர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(மக்களில் சிறந்தோர்) என் தலைமுறையினர், பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களது சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களது சத்தியம் அவர்களது சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகயீ (ரஹ்) கூறுகின்றார்கள்: நாங்கள் சிறுவர்களாயிருந்தபோது எங்களை “அஷ்ஹது பில்லாஹ்’ (அல்லாஹ்வின்  பெயரால் நான் சாட்சியம் அளிக்கிறேன்) என்றோ, “அலய்ய அஹ்துல்லாஹ்’ (அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி) என்றோ கூறுவதை அவர்கள் (நபித்தோழர்கள்) தடுத்து வந்தார்கள்.

அபுல் அஹ்வஸ் (ரஹ்) மற்றும் ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்புகளில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 44, பாடம்: 52, ஹதீஸ் எண்: 4582

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَهَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ يَزِيدَ، عَنْ عَبِيدَةَ السَّلْمَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ خَيْرُ أُمَّتِي الْقَرْنُ الَّذِينَ يَلُونِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ يَجِيءُ قَوْمٌ تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ وَيَمِينُهُ شَهَادَتَهُ ‏”‏


لَمْ يَذْكُرْ هَنَّادٌ الْقَرْنَ فِي حَدِيثِهِ وَقَالَ قُتَيْبَةُ ‏”‏ ثُمَّ يَجِيءُ أَقْوَامٌ ‏”‏

“என் சமுதாயத்தாரில் சிறந்தவர்கள் என்னை ஒட்டியுள்ள தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களது சாட்சியம் அவர்களது சத்தியத்தையும் அவர்களது சத்தியம் அவர்களது சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

ஹன்னாத் பின் அஸ்ஸரீ (ரஹ்) வழி அறிவிப்பில் ‘தலைமுறையினர்’ எனும்  சொற்றொடர் இடம்பெறவில்லை. குதைபா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பின் இறுதியில் “சமுதாயங்கள் பல வரும்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 44, பாடம்: 52, ஹதீஸ் எண்: 4581

حَدَّثَنِي سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الأُمَوِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ زَعَمَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يُبْعَثُ مِنْهُمُ الْبَعْثُ فَيَقُولُونَ انْظُرُوا هَلْ تَجِدُونَ فِيكُمْ أَحَدًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيُوجَدُ الرَّجُلُ فَيُفْتَحُ لَهُمْ بِهِ ثُمَّ يُبْعَثُ الْبَعْثُ الثَّانِي فَيَقُولُونَ هَلْ فِيهِمْ مَنْ رَأَى أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيُفْتَحُ لَهُمْ بِهِ ثُمَّ يُبْعَثُ الْبَعْثُ الثَّالِثُ فَيُقَالُ انْظُرُوا هَلْ تَرَوْنَ فِيهِمْ مَنْ رَأَى مَنْ رَأَى أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ يَكُونُ الْبَعْثُ الرَّابِعُ فَيُقَالُ انْظُرُوا هَلْ تَرَوْنَ فِيهِمْ أَحَدًا رَأَى مَنْ رَأَى أَحَدًا رَأَى أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيُوجَدُ الرَّجُلُ فَيُفْتَحُ لَهُمْ بِهِ ‏”‏

மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது அவர்களிலிருந்து ஒரு படைப்பிரிவு அனுப்பப்படும். அப்போது “நபித்தோழர்களில் எவரையேனும் உங்களில் காண்கின்றீர்களா என்று பாருங்கள்” என்று கூறுவர். அப்போது ஒருவர் காணப்படுவார். ஆகவே, அவர் ஒருவருக்காக அப்படைக்கு வெற்றியளிக்கப்படும்.

பிறகு (அடுத்த தலைமுறையில்) இரண்டாவது படைப்பிரிவு ஒன்று அனுப்பப்படும். அப்போது “நபித்தோழர்களைப் பார்த்தவர்கள் (தாபிஉ) எவரேனும் அவர்களிடையே இருக்கின்றாரா?” என்று கேட்பார்கள். (அப்போது ஒருவர் காணப்படுவார்.) ஆகவே, அவர் ஒருவருக்காக அப்படைக்கு வெற்றியளிக்கப்படும்.

பிறகு (அதற்கடுத்த தலைமுறையில்) மூன்றாவது படைப்பிரிவு அனுப்பப்படும். அப்போது “நபித்தோழர்களைப் பார்த்தவர்களைப் பார்த்தவர்கள் (தபஉத் தாபிஉ) எவரையேனும் அவர்களிடையே நீங்கள் காண்கின்றீர்களா?” என்று கேட்கப்படும். (ஆகவே, அவர் ஒருவருக்காக அப்படைக்கு வெற்றியளிக்கப்படும்).

பிறகு (அதற்கடுத்த தலைமுறையில்) நான்காவது படைப்பிரிவு அனுப்பப்படும். அப்போது நபித்தோழர்களைப் பார்த்த ஒருவரை (தாபிஉ) பார்த்தவரை (தபஉத் தாபிஉ) பார்த்த எவரேனும் அவர்களிடையே நீங்கள் காண்கின்றீர்களா, பாருங்கள்” என்று சொல்லப்படும். அத்தகைய ஒருவர் காணப்படுவார். ஆகவே, அவர் ஒருவருக்காக அப்படைக்கு வெற்றியளிக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 52, ஹதீஸ் எண்: 4580

حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، زُهَيْرُ بْنُ حَرْبٍ وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ – وَاللَّفْظُ لِزُهَيْرٍ – قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ سَمِعَ عَمْرٌو، جَابِرًا يُخْبِرُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ:‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ فَيُقَالُ لَهُمْ فِيكُمْ مَنْ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُولُونَ ‏.‏ نَعَمْ فَيُفْتَحُ لَهُمْ ثُمَّ يَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ فَيُقَالُ لَهُمْ فِيكُمْ مَنْ رَأَى مَنْ صَحِبَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُولُونَ نَعَمْ ‏.‏ فَيُفْتَحُ لَهُمْ ثُمَّ يَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ فَيُقَالُ لَهُمْ هَلْ فِيكُمْ مَنْ رَأَى مَنْ صَحِبَ مَنْ صَحِبَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَيَقُولُونَ نَعَمْ ‏.‏ فَيُفْتَحُ لَهُمْ ‏”‏ ‏.‏

மக்களில் ஒரு குழுவினர் அறப்போருக்குச் செல்கின்ற ஒரு காலம் வரும். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்த நபித்தோழர்கள் எவரேனும் உங்களிடையே இருக்கின்றாரா?” என்று கேட்கப்படும். அதற்கு அக்குழுவினர், “ஆம் (இருக்கின்றார்)” என்று பதிலளிப்பார்கள். ஆகவே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.

பிறகு (அடுத்த தலைமுறை) மக்களில் மற்றொரு குழுவினர் அறப்போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களைப் பார்த்தவர்கள் (தாபிஉகள்) எவரேனும் உங்களிடையே இருக்கின்றாரா?” என்று கேட்கப்படும். அப்போது அக்குழுவினர் “ஆம் (இருக்கின்றார்)” என்று பதிலளிப்பார்கள். அவர்களுக்கும் வெற்றியளிக்கப்படும்.

பிறகு (அதற்கடுத்த தலைமுறை) மக்களில் வேறொரு குழுவினர் அறப்போருக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டிருந்தவர்களோடு தோழமை கொண்டிருந்தவர்கள் (தபஉத் தாபிஈன்) எவரேனும் உங்களிடையே இருக்கின்றாரா?” என்று கேட்கப்படும். அதற்கு அக்குழுவினர் “ஆம் (இருக்கின்றார்)” என்று பதிலளிப்பார்கள். ஆகவே, அவர்களுக்கும் வெற்றியளிக்கப்படும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 51, ஹதீஸ் எண்: 4579

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، كُلُّهُمْ عَنْ حُسَيْنٍ، – قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ، – عَنْ مُجَمِّعِ بْنِ يَحْيَى، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ :‏

صَلَّيْنَا الْمَغْرِبَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قُلْنَا لَوْ جَلَسْنَا حَتَّى نُصَلِّيَ مَعَهُ الْعِشَاءَ – قَالَ – فَجَلَسْنَا فَخَرَجَ عَلَيْنَا فَقَالَ ‏”‏ مَا زِلْتُمْ هَا هُنَا ‏”‏ ‏.‏ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ صَلَّيْنَا مَعَكَ الْمَغْرِبَ ثُمَّ قُلْنَا نَجْلِسُ حَتَّى نُصَلِّيَ مَعَكَ الْعِشَاءَ قَالَ ‏”‏ أَحْسَنْتُمْ أَوْ أَصَبْتُمْ ‏”‏ ‏.‏ قَالَ فَرَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ وَكَانَ كَثِيرًا مِمَّا يَرْفَعُ رَأْسَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ ‏”‏ النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ وَأَنَا أَمَنَةٌ لأَصْحَابِي فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِي مَا يُوعَدُونَ وَأَصْحَابِي أَمَنَةٌ لأُمَّتِي فَإِذَا ذَهَبَ أَصْحَابِي أَتَى أُمَّتِي مَا يُوعَدُونَ ‏”‏

நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிபுத் தொழுகையைத் தொழுதோம். பிறகு நாங்கள், “நாம் அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுகை தொழும்வரை (இங்கேயே) அமர்ந்திருந்தால் நன்றாயிருக்கும்” என்று பேசிக்கொண்டு (அங்கேயே) அமர்ந்திருந்தோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் வந்து, “ஏன் இங்கேயே அமர்ந்துகொண்டு இருக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுடன் மஃக்ரிபுத் தொழுகையைத் தொழுதுவிட்டுப் பிறகு உங்களுடன் இஷாத் தொழுகையையும் தொழும்வரை அமர்ந்திருப்போம் என்று பேசிக்கொண்டோம்” என்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் செய்தது நன்று / சரி“ என்று சொல்லி விட்டு, வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தினார்கள். – (பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதிகமாக வானத்தை நோக்கித் தமது தலையை  உயர்த்துவார்கள். –

பிறகு, “நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். என் தோழர்கள் என் சமுதாயத்தாருக்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தாருக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 50, ஹதீஸ் எண்: 4578

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ زَكَرِيَّاءَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ وَأَيُّمَا حِلْفٍ كَانَ فِي الْجَاهِلِيَّةِ لَمْ يَزِدْهُ الإِسْلاَمُ إِلاَّ شِدَّةً ‏”‏ ‏

இஸ்லாத்தில் (மனிதர்களாக ஏற்படுத்திக்கொள்கிற) ஒப்பந்த உறவு முறை இல்லை. அறியாமைக் காலத்தில் நடைபெற்ற ஒப்பந்த உறவுகள் இஸ்லாத்திற்குப் பிறகு இன்னும் பலத்தை அதிகரிக்கவே செய்யும். (காலாவதியாகிவிடாது) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 50, ஹதீஸ் எண்: 4577

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ عَاصِمٍ، عَنْ أَنَسٍ قَالَ :‏

حَالَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِي دَارِهِ الَّتِي بِالْمَدِينَةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவிலிருந்த எனது வீட்டில் வைத்து குறைஷி(முஹாஜிர்)களுக்கும் (மதீனா) அன்ஸாரிகளுக்கும் இடையே சகோதர உறவு முறையை ஏற்படுத்தினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 50, ஹதீஸ் எண்: 4576

حَدَّثَنِي أَبُو جَعْفَرٍمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، قَالَ :‏

قِيلَ لأَنَسِ بْنِ مَالِكٍ بَلَغَكَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ ‏”‏ ‏.‏ فَقَالَ أَنَسٌ قَدْ حَالَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِي دَارِهِ

“இஸ்லாத்தில் (மனிதர்களாக ஏற்படுத்திக் கொள்கிற ஒருவருக்கொருவர் வாரிசாகிக் கொள்ளும்) சகோதர உறவு முறை இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள் என்பதாக உங்களுக்குச் செய்தி கிடைத்ததா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அனஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனது வீட்டில் வைத்து குறைஷி (முஹாஜிர்)களுக்கும் (மதீனா) அன்ஸாரிகளுக்கும் இடையே சகோதர உறவு முறையை ஏற்படுத்தியிருந்தார்களே!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஆஸிம் பின் ஸுலைமான் அல்அஹ்வல் (ரஹ்)

அத்தியாயம்: 44, பாடம்: 50, ஹதீஸ் எண்: 4575

حَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَمَّادٌ، – يَعْنِي ابْنَ سَلَمَةَ – عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم آخَى بَيْنَ أَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ وَبَيْنَ أَبِي طَلْحَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (முஹாஜிரான) அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களையும் (அன்ஸாரியான) அபூதல்ஹா (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 49, ஹதீஸ் எண்: 4574

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا وَقَالَ عَبْدٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ح

وَحَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ خَيْرُ نِسَاءٍ رَكِبْنَ الإِبِلَ صَالِحُ نِسَاءِ قُرَيْشٍ أَحْنَاهُ عَلَى وَلَدٍ فِي صِغَرِهِ وَأَرْعَاهُ عَلَى زَوْجٍ فِي ذَاتِ يَدِهِ ‏”‏


حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ الأَوْدِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، – يَعْنِي ابْنَ مَخْلَدٍ – حَدَّثَنِي سُلَيْمَانُ، – وَهُوَ ابْنُ بِلاَلٍ – حَدَّثَنِي سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِ حَدِيثِ مَعْمَرٍ هَذَا سَوَاءً ‏

“ஒட்டகத்தில் பயணித்த பெண்களிலேயே சிறந்தவர்கள் நல்ல குறைஷிப் பெண்களேயாவர். அவர்கள் (தம்) குழந்தைகள்மீது அதிகப் பாசமுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை நன்கு பேணிக்காப்பவர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)