حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا يَحْيَى وَهُوَ الْقَطَّانُ عَنْ ابْنِ جُرَيْجٍ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ مَوْلَى أَسْمَاءَ قَالَ:
قَالَتْ لِي أَسْمَاءُ وَهِيَ عِنْدَ دَارِ الْمُزْدَلِفَةِ هَلْ غَابَ الْقَمَرُ قُلْتُ لَا فَصَلَّتْ سَاعَةً ثُمَّ قَالَتْ يَا بُنَيَّ هَلْ غَابَ الْقَمَرُ قُلْتُ نَعَمْ قَالَتْ ارْحَلْ بِي فَارْتَحَلْنَا حَتَّى رَمَتْ الْجَمْرَةَ ثُمَّ صَلَّتْ فِي مَنْزِلِهَا فَقُلْتُ لَهَا أَيْ هَنْتَاهْ لَقَدْ غَلَّسْنَا قَالَتْ كَلَّا أَيْ بُنَيَّ إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِنَ لِلظُّعُنِ
و حَدَّثَنِيهِ عَلِيُّ بْنُ خَشْرَمٍ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنْ ابْنِ جُرَيْجٍ بِهَذَا الْإِسْنَادِ وَفِي رِوَايَتِهِ قَالَتْ لَا أَيْ بُنَيَّ إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِنَ لِظُعُنِهِ
அஸ்மா (ரலி) முஸ்தலிஃபாவில் தங்கியிருந்த இடத்தில் இருந்தபோது, என்னிடம் “சந்திரன் மறைந்துவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். அவர்கள் சிறிது நேரம் தொழுதுவிட்டுப் பிறகு “மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?” என்று (மீண்டும்) கேட்டார்கள். நான் “ஆம் (மறைந்துவிட்டது)” என்றேன். “என்னுடன் (மினாவுக்குப்) புறப்படு” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். (மினா வந்ததும்) அவர்கள் ‘ஜம்ரா’வில் கல்லெறிந்துவிட்டுப் பின்னர் (திரும்பிவந்து) தமது கூடாரத்தில் தொழுதார்கள். அப்போது அவர்களிடம் நான், “அம்மா! நாம் விடிவதற்கு முன்பே (மினாவுக்கு) வந்து விட்டோம்” என்றேன். அவர்கள், “(இதில் தவறேதும்) இல்லை, மகனே! நபி (ஸல்) பெண்களுக்கு (விடியலுக்கு முன்பே மினாவிற்கு வர) அனுமதியளித்து உள்ளார்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அஸ்மா (ரலி) வழியாக அவர்களின் முன்னாள் அடிமையான அப்துல்லாஹ் பின் கைஸான் (ரஹ்)
குறிப்பு :
ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “இல்லை, மகனே! அல்லாஹ்வின் நபி (ஸல்), (ஹஜ்) பயணத்திலிருந்த தம் பெண்களுக்கு (விடியலுக்கு முன்பே மினாவிற்கு வர) அனுமதியளித்துள்ளார்கள்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.