حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرٌو أَنَّ ابْنَ شِهَابٍ حَدَّثَهُ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ :
أَنَّ أَبَا بَكْرٍ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنًى تُغَنِّيَانِ وَتَضْرِبَانِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسَجًّى بِثَوْبِهِ فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ فَكَشَفَ رَسُولُ اللَّهِ عَنْهُ وَقَالَ دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ وَقَالَتْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي بِرِدَائِهِ وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ وَهُمْ يَلْعَبُونَ وَأَنَا جَارِيَةٌ فَاقْدِرُوا قَدْرَ الْجَارِيَةِ الْعَرِبَةِ الْحَدِيثَةِ السِّنِّ
‘மினா’வின் நாள்கள் ஒன்றில் என்னருகில் இரு (அன்ஸாரிச்) சிறுமியர் துஃப் (எனும் கஞ்சிராக்களை) அடித்துப் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தபோது (என் தந்தை) அபூபக்ரு (ரலி) என்னிடம் வந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஆடையால் போர்த்திக் கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ட) அபூபக்ரு (ரலி) அச்சிறுமியர் இருவரையும் அதட்டினார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் மீதிருந்த) துணியை விலக்கி, “அவர்களை விட்டு விடுங்கள், அபூபக்ரே! இவை பண்டிகை நாள்கள்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது மேலாடையால் என்னை மறைத்துக் கொண்டிருக்க, (பள்ளிவாசல் வளாகத்தில் ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிஸீனியர்களை நான் (என் வீட்டிலிருந்தபடி வேடிக்கை) பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் இளம்வயதுப் பெண்ணாக இருந்தேன். விளையாட்டுமீது பேராவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்பு :
அந்தக் காலத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லமும் மஸ்ஜிதுந் நபவீயும் அடுத்தடுத்து இருந்துள்ளன.