அத்தியாயம்: 15, பாடம்: 35, ஹதீஸ் எண்: 2198

‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ مُوسَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏قَالَ
سَأَلْتُ ‏ ‏زَيْدَ بْنَ أَرْقَمَ ‏
‏كَمْ غَزَوْتَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ سَبْعَ عَشْرَةَ قَالَ وَحَدَّثَنِي ‏ ‏زَيْدُ بْنُ أَرْقَمَ ‏ ‏أَنَّ
رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غَزَا تِسْعَ عَشْرَةَ وَأَنَّهُ حَجَّ بَعْدَ مَا هَاجَرَ حَجَّةً وَاحِدَةً حَجَّةَ الْوَدَاعِ ‏
‏قَالَ ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏وَبِمَكَّةَ ‏ ‏أُخْرَى

நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுடன் எத்தனை அறப் போர்களில் நீங்கள் கலந்து கொண்டீர்கள்?” என்று
கேட்டேன். அதற்கு அவர்கள், “பதினேழு அறப் போர்களில்” என்று
விடையளித்தார்கள்.

தொடர்ந்து அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பத்தொன்பது போர்களில்
கலந்து கொண்டார்கள். அவர்கள் (மதீனாவிற்கு) நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்ற
பிறகு ஒரேயொரு ஹஜ் -விடைபெறும் ஹஜ்- மட்டுமே செய்தார்கள்” என்றும்
கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் அர்கம் (ரலி) வழியாக அபூஇஸ்ஹாக் அம்ரு
அஸ்ஸபீஈ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 35, ஹதீஸ் எண்: 2197

‏حَدَّثَنَا ‏ ‏هَدَّابُ بْنُ خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏أَنَّ ‏ ‏أَنَسًا ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَخْبَرَهُ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اعْتَمَرَ أَرْبَعَ عُمَرٍ كُلُّهُنَّ فِي ذِي الْقَعْدَةِ إِلَّا الَّتِي مَعَ حَجَّتِهِ عُمْرَةً مِنْ
‏ ‏الْحُدَيْبِيَةِ ‏ ‏أَوْ زَمَنَ ‏ ‏الْحُدَيْبِيَةِ ‏ ‏فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةً مِنْ الْعَامِ الْمُقْبِلِ فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةً مِنْ ‏
‏جِعْرَانَةَ ‏ ‏حَيْثُ قَسَمَ غَنَائِمَ ‏ ‏حُنَيْنٍ ‏ ‏فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ ‏
‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏أَنَسًا ‏
‏كَمْ حَجَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ حَجَّةً وَاحِدَةً وَاعْتَمَرَ أَرْبَعَ عُمَرٍ ثُمَّ ذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏
‏هَدَّابٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நான்கு உம்ராக்கள் செய்தார்கள். தமது ஹஜ்ஜுடன் செய்த உம்ராவைத் தவிர மற்ற அனைத்தையும் துல்கஅதா மாதத்திலேயே செய்தார்கள்:

1) ஹுதைபியாவிலிருந்து அல்லது ஹுதைபியா உடன்படிக்கை நடந்த துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா.

2) அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா.

3) ஹுனைன் போரில் கிடைத்த போர்ச் செல்வங்களைப் பங்குவைத்த இடமான ஜிஃரானாவிலிருந்து துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா.

4) அவர்கள் (துல்ஹஜ் மாதத்தில்) தமது ஹஜ்ஜுடன் செய்த உம்ரா.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :
அனஸ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எத்தனை ஹஜ் செய்தார்கள்?” என்று கத்தாதா (ரஹ்) கேட்டதற்கு, “அவர்கள் ஒரேயொரு ஹஜ் மட்டுமே செய்தார்கள்; நான்கு உம்ராக்கள் செய்தார்கள்” என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள் என்று முஹம்மது பின் முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 34, ஹதீஸ் எண்: 2196

‏و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏
‏سَعِيدٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏حَنْظَلَةَ الْأَسْلَمِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا
هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يُحَدِّثُ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ‏ ‏لَيُهِلَّنَّ ‏ ‏ابْنُ مَرْيَمَ ‏ ‏بِفَجِّ الرَّوْحَاءِ ‏ ‏حَاجًّا أَوْ
مُعْتَمِرًا أَوْ ‏ ‏لَيَثْنِيَنَّهُمَا ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ قَالَ وَالَّذِي نَفْسُ ‏
‏مُحَمَّدٍ ‏ ‏بِيَدِهِ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ
شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏حَنْظَلَةَ بْنِ عَلِيٍّ الْأَسْلَمِيِّ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَقُولُا ‏ ‏قَالَ رَسُولُ
اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالَّذِي نَفْسِي بِيَدِهِ بِمِثْلِ حَدِيثِهِمَا

“என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக! (இறுதி நாட்களில்)
மர்யமின் புதல்வர் (ஈசா) (மக்கா – மதீனா இடையே உள்ள) ‘ஃபஜ்ஜுர் ரவ்ஹா’
எனுமிடத்தில் ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவிற்காக அல்லது
அவை இரண்டுக்கும் தல்பியாச் சொல்வார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :
குதைபா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பு,, “முஹம்மதின் உயிர் எவன்
கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக!” என ஆரம்பமாகிறது.
யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘என் உயிர் எவன்
கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக!’ என்று கூறினார்கள் என்றே
இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 34, ஹதீஸ் எண்: 2195

‏و حَدَّثَنِيهِ ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي إِسْحَقَ ‏ ‏وَحُمَيْدٍ الطَّوِيلِ
‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏يَقُولُا ‏
‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا ‏
‏و قَالَ ‏ ‏حُمَيْدٌ ‏ ‏قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَبَّيْكَ بِعُمْرَةٍ وَحَجٍّ

நபி (ஸல்) “லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன்” என்று கூறியதை நான்
செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு : ஹுமைத் அத்தவீல் (ரஹ்) வழி அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
‘லப்பைக்க பி உம்ரத்தின் வ ஹஜ்ஜின்’ (உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச்
சொல்கிறேன்) என்று கூறியதை நான் கேட்டேன் என அனஸ் (ரலி) கூறினார்கள்”
என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 34, ஹதீஸ் எண்: 2194

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي إِسْحَقَ ‏ ‏وَعَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ‏
‏وَحُمَيْدٍ ‏ ‏أَنَّهُمْ سَمِعُوا ‏ ‏أَنَسًا ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏
‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَهَلَّ ‏ ‏بِهِمَا جَمِيعًا ‏ ‏لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் சேர்த்து, “லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன்; லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன் (நான் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்; நான் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்)” என்று தல்பியாச் சொன்னதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 34, ஹதீஸ் எண்: 2193

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَلِيمُ بْنُ حَيَّانَ ‏ ‏عَنْ ‏ ‏مَرْوَانَ الْأَصْفَرِ ‏ ‏عَنْ
‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏
‏أَنَّ ‏ ‏عَلِيًّا ‏ ‏قَدِمَ مِنْ ‏ ‏الْيَمَنِ ‏ ‏فَقَالَ لَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَ ‏ ‏أَهْلَلْتَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَهْلَلْتُ ‏
‏بِإِهْلَالِ ‏ ‏النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَوْلَا أَنَّ مَعِي ‏ ‏الْهَدْيَ ‏ ‏لَأَحْلَلْتُ ‏
‏و حَدَّثَنِيهِ ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ
‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سَلِيمُ بْنُ حَيَّانَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي رِوَايَةِ ‏ ‏بَهْزٍ ‏ ‏لَحَلَلْتُ

அலீ (ரலி) யமன் நாட்டிலிருந்து (ஹஜ்ஜுக்கு) வந்தபோது அவர்களிடம் நபி (ஸல்), “நீங்கள் தல்பியாச் சொன்னது எதற்கு?” என்று கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி), “நபி (ஸல்) எதற்காக தல்பியாச் சொன்னார்களோ அதற்காகவே நானும் தல்பியாச் சொன்னேன்” என்றார்கள். அதற்கு நபி (ஸல்), “என்னுடன் பலிப் பிராணி இருந்திராவிட்டால் நிச்சயமாக நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 33, ஹதீஸ் எண்: 2191

‏و حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَلَّى بْنُ أَسَدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏وَعَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَا ‏
‏قَدِمْنَا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَنَحْنُ نَصْرُخُ بِالْحَجِّ صُرَاخًا

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காக உரத்த குரலில் தல்பியா முழங்கியவர்களாகப் புறப்பட்டோம்.

அறிவிப்பாளர்கள் : ஜாபிர் (ரலி) & அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 33, ஹதீஸ் எண்: 2190

‏حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ ‏
‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَصْرُخُ بِالْحَجِّ صُرَاخًا فَلَمَّا قَدِمْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏أَمَرَنَا أَنْ نَجْعَلَهَا عُمْرَةً إِلَّا مَنْ سَاقَ ‏ ‏الْهَدْيَ ‏ ‏فَلَمَّا كَانَ ‏ ‏يَوْمُ التَّرْوِيَةِ ‏ ‏وَرُحْنَا إِلَى ‏ ‏مِنًى ‏ ‏أَهْلَلْنَا ‏ ‏بِالْحَجِّ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உரத்த குரலில் ஹஜ்ஜுக்காகத் தல்பியா முழங்கியவர்களாகப் புறப்பட்டோம்.

நாங்கள் மக்காவிற்கு வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எங்களில் தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டு வந்திருப்பவரைத் தவிர மற்றவர்கள் தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

துல்ஹஜ் எட்டாவது நாளன்று நாங்கள் மினாவுக்குச் சென்றபோது (செல்ல நாடிய போது), ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டு தல்பியாச் சொன்னோம்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 32, ஹதீஸ் எண்: 2187

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏قَالَ كَانَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏يَقُولُا ‏ ‏لَا يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏حَاجٌّ وَلَا غَيْرُ حَاجٍّ إِلَّا حَلَّ قُلْتُ ‏ ‏لِعَطَاءٍ ‏ ‏مِنْ أَيْنَ يَقُولُ ذَلِكَ قَالَ مِنْ قَوْلِ اللَّهِ تَعَالَى ” ثُمَّ مَحِلُّهَا إِلَى ‏ ‏الْبَيْتِ الْعَتِيقِ “‏‏

‏‏قَالَ قُلْتُ فَإِنَّ ذَلِكَ بَعْدَ ‏ ‏الْمُعَرَّفِ ‏ ‏فَقَالَ كَانَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ هُوَ بَعْدَ ‏ ‏الْمُعَرَّفِ ‏ ‏وَقَبْلَهُ ‏
‏وَكَانَ يَأْخُذُ ذَلِكَ مِنْ أَمْرِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ ‏ ‏أَمَرَهُمْ أَنْ يَحِلُّوا فِي حَجَّةِ الْوَدَاعِ

அதாஉ (ரஹ்), “ஹஜ் செய்பவரோ மற்ற(உம்ராச் செய்ப)வரோ இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறுபவர்களாக இருந்தார்கள்” என்று அறிவித்தார்கள்.

நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ் (ரலி) அப்படிக் கூறுகின்றார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பின்னர் அவை (பலிப் பிராணிகள் அறுப்பதற்காகச்) சென்றடையும் இடம், பழமையான அந்த ஆலயமாகும்” எனும் (22:33ஆவது) இறை வசனத்திலிருந்தும், நபி (ஸல்) விடைபெறும் ஹஜ்ஜின்போது அவர்(களுடன் வந்தவர்)களுக்கு இஹ்ராமிலிருந்து விடுபடும்படி இட்ட கட்டளையை ஆதாரமாகக் கொண்டும்தான் அப்படிக் கூறினார்கள்” என்றார்கள்.

நான், “இஹ்ராமிலிருந்து விடுபடுவது அரஃபாவில் (போய்த்) தங்கிய பின்புதானே?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்), “அது, அரஃபாவில் தங்கியதற்குப் பின்பும் அதற்கு முன்பும் (அனுமதிக்கப்பட்டதே)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறிவந்தார்கள் என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக இபுனு ஜுரைஜ் (ரஹ்)


குறிப்பு :

தமத்துஉ ஹஜ் செய்பவர்கள், தவாஃபை நிறைவேற்றிய பின்னர், அரஃபாவுக்குச் சென்று தங்குவதற்கு முன்பு (முதல்) இஹ்ராமிலிருந்து நீங்கிவிடுவர். அதன் பின்னர் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் பூண்டு, அரஃபாவுக்குச் சென்று தங்கிய பின்பு எஞ்சியிருக்கும் சில கடமைச் செயல்பாடுகளை நிறைவு செய்து (இரண்டாவது) இஹ்ராமிலிருந்து நீங்குவர்.

கிரான் ஹஜ்ஜுச் செய்பவர்கள், அரஃபாவுக்குச் சென்று தங்கியதற்குப் பின்னர் எஞ்சியிருக்கும் சில கடமைச் செயல்பாடுகளை நிறைவு செய்து இஹ்ராமிலிருந்து நீங்குவர்.

அத்தியாயம்: 15, பாடம்: 32, ஹதீஸ் எண்: 2184

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي عَدِيٍّ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَسَّانَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏
‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الظُّهْرَ ‏ ‏بِذِي الْحُلَيْفَةِ ‏ ‏ثُمَّ دَعَا بِنَاقَتِهِ ‏ ‏فَأَشْعَرَهَا ‏ ‏فِي ‏ ‏صَفْحَةِ ‏ ‏سَنَامِهَا الْأَيْمَنِ ‏ ‏وَسَلَتَ ‏ ‏الدَّمَ ‏ ‏وَقَلَّدَهَا نَعْلَيْنِ ‏ ‏ثُمَّ رَكِبَ ‏ ‏رَاحِلَتَهُ ‏ ‏فَلَمَّا اسْتَوَتْ بِهِ عَلَى ‏ ‏الْبَيْدَاءِ ‏ ‏أَهَلَّ ‏ ‏بِالْحَجِّ ‏
‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ إِنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا أَتَى ‏ ‏ذَا الْحُلَيْفَةِ ‏ ‏وَلَمْ يَقُلْ صَلَّى بِهَا الظُّهْرَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஹஜ்ஜுக்குச் சென்றபோது) ‘துல்ஹுலைஃபா’வில் லுஹ்ருத் தொழுகை தொழுதுவிட்டுத் தமது பலி ஒட்டகத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதன் வலப் பக்கத் திமில் பகுதியில் கீறி அடையாளமிட்டார்கள்; இரத்தத்தை துடைத்தார்கள்; இரு காலணிகளை (அதன் கழுத்தில் அடையாளத்திற்காக) தொங்கவிட்டார்கள். பின்னர் தமது வாகன ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, ‘பைதாஉ’ எனும் குன்றில் அது நேராக நின்றதும் ஹஜ்ஜுக்காகத் தல்பியாச் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :
ஹிஷாம் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘துல்ஹுலைஃபா’விற்கு வந்தபோது …” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. “அங்கு லுஹ்ருத் தொழுதார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.