அத்தியாயம்: 15, பாடம்: 74, ஹதீஸ் எண்: 2384

‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مُغِيرَةَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏سَهْمِ بْنِ مِنْجَابٍ ‏ ‏عَنْ ‏ ‏قَزَعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تُسَافِرْ الْمَرْأَةُ ثَلَاثًا إِلَّا مَعَ ذِي ‏ ‏مَحْرَمٍ

“எந்தப் பெண்ணும் மணமுடிக்கத் தகாத ஆண் துணையின்றி மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 74, ஹதீஸ் எண்: 2383

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ وَهُوَ ابْنُ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏قَزَعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ: ‏

سَمِعْتُ مِنْهُ حَدِيثًا فَأَعْجَبَنِي فَقُلْتُ لَهُ أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَأَقُولُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا لَمْ أَسْمَعْ قَالَ سَمِعْتُهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَشُدُّوا الرِّحَالَ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ مَسْجِدِي هَذَا ‏ ‏وَالْمَسْجِدِ الْحَرَامِ ‏ ‏وَالْمَسْجِدِ الْأَقْصَى ‏ ‏وَسَمِعْتُهُ يَقُولُ لَا تُسَافِرْ الْمَرْأَةُ يَوْمَيْنِ مِنْ الدَّهْرِ إِلَّا وَمَعَهَا ذُو ‏ ‏مَحْرَمٍ ‏ ‏مِنْهَا أَوْ زَوْجُهَا ‏

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَزَعَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏قَالَ ‏ ‏سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرْبَعًا فَأَعْجَبْنَنِي ‏ ‏وَآنَقْنَنِي ‏ ‏نَهَى أَنْ تُسَافِرَ الْمَرْأَةُ مَسِيرَةَ يَوْمَيْنِ إِلَّا وَمَعَهَا زَوْجُهَا أَوْ ذُو ‏ ‏مَحْرَمٍ ‏ ‏وَاقْتَصَّ بَاقِيَ الْحَدِيثِ

நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸைச் செவியுற்றேன். அது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. எனவே, “இதைத் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்காததையா அவர்கள் கூறியதாகச் சொல்வேன்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர மற்ற இடங்களுக்கு (நன்மையை நாடிப் புனிதப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்’ என்று கூறியதையும், ‘எந்தப் பெண்ணும் தன் கணவரின் துணையோ அல்லது மணமுடிக்கத் தகாத ஆணின் துணையோ இல்லாமல் இரண்டு நாள் (தொலைவிற்குப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்’ என்று கூறியதையும் நான் செவியுற்றுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக கஸஆ பின் யஹ்யா (ரஹ்)


குறிப்பு :

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற் றேன். அவை என்னை வியப்படையச் செய்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘எந்தப் பெண்ணும் கணவன், அல்லது மண முடிக்கத் தகாத ஆண் உறவினர் துணையின்றி இரண்டு நாள் பயணத் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம்’ எனத் தடை விதித்தார்கள்” என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) கூறிவிட்டு, எஞ்சிய ஹதீஸையும் அறிவித்தார்கள் எனக் காணப்படுகின்றது.

அத்தியாயம்: 15, பாடம்: 74, ஹதீஸ் எண்: 2382

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الضَّحَّاكُ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ تُسَافِرُ مَسِيرَةَ ثَلَاثِ لَيَالٍ إِلَّا وَمَعَهَا ‏ ‏ذُو مَحْرَمٍ

“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட ஒரு பெண், மணமுடிக்கத் தகாத ஆண் துணையின்றி மூன்று இரவுகள் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 74, ஹதீஸ் எண்: 2381

‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا تُسَافِرْ الْمَرْأَةُ ثَلَاثًا إِلَّا وَمَعَهَا ‏ ‏ذُو مَحْرَمٍ ‏

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏فِي رِوَايَةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏فَوْقَ ثَلَاثٍ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏فِي رِوَايَتِهِ عَنْ أَبِيهِ ثَلَاثَةً إِلَّا وَمَعَهَا ‏ ‏ذُو مَحْرَمٍ

“மணமுடிக்கத் தகாத ஆண் துணையின்றி எந்தப் பெண்ணும் மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “மூன்று நாட்களுக்கு மேல் (பயணம் மேற்கொள்ளக் கூடாது)” என்று இடம்பெற்றுள்ளது. அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 73, ஹதீஸ் எண்: 2380

‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الرَّبِيعُ بْنُ مُسْلِمٍ الْقُرَشِيُّ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ زِيَادٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

خَطَبَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَيُّهَا النَّاسُ قَدْ ‏ ‏فَرَضَ اللَّهُ عَلَيْكُمْ الْحَجَّ فَحُجُّوا فَقَالَ رَجُلٌ أَكُلَّ عَامٍ يَا رَسُولَ اللَّهِ فَسَكَتَ حَتَّى قَالَهَا ثَلَاثًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ قُلْتُ نَعَمْ لَوَجَبَتْ وَلَمَا اسْتَطَعْتُمْ ثُمَّ قَالَ ‏ ‏ذَرُونِي ‏ ‏مَا تَرَكْتُكُمْ فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَدَعُوهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றும்போது, “மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே, ஹஜ் செய்யுங்கள்” என்றார்கள். அப்போது ஒருவர், “ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அதையே அவர் மூன்று முறை கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் ஆம் என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடமையாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்” என்று கூறிவிட்டு, “நான் உங்களுக்கு(ச் சொல்லி) விட்டதை(த் துருவி)க் கேட்காதீர்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம், அவர்களின் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். எனவே, ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(ச் செய்யாமல்) விட்டுவிடுங்கள்!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 43, ஹதீஸ் எண்: 2243

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ: ‏

كَانَتْ ‏ ‏الْأَنْصَارُ ‏ ‏يَكْرَهُونَ أَنْ يَطُوفُوا بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏حَتَّى نَزَلَتْ ‏ (إِنَّ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةَ ‏ ‏مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ ‏ ‏الْبَيْتَ ‏ ‏أَوْ اعْتَمَرَ فَلَا ‏ ‏جُنَاحَ ‏ ‏عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا…)‏

“ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று” (2:158) எனும் வசனம் அருளப்படும்வரை அன்ஸாரிகள் ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவருவதை வெறுப்பவர்களாய் இருந்தனர்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 43, ஹதீஸ் எண்: 2242

و حَدَّثَنَا ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَخْبَرَتْهُ:

أَنَّ ‏ ‏الْأَنْصَارَ ‏ ‏كَانُوا قَبْلَ أَنْ يُسْلِمُوا هُمْ ‏ ‏وَغَسَّانُ ‏ ‏يُهِلُّونَ ‏ ‏لِمَنَاةَ ‏ ‏فَتَحَرَّجُوا ‏ ‏أَنْ يَطُوفُوا بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَكَانَ ذَلِكَ سُنَّةً فِي آبَائِهِمْ مَنْ أَحْرَمَ ‏ ‏لِمَنَاةَ ‏ ‏لَمْ يَطُفْ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَإِنَّهُمْ سَأَلُوا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ حِينَ أَسْلَمُوا فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي ذَلِكَ (إِنَّ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةَ ‏ ‏مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ ‏ ‏الْبَيْتَ ‏ ‏أَوْ اعْتَمَرَ فَلَا ‏ ‏جُنَاحَ ‏ ‏عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ)‏

அன்ஸாரிகளும் ஃகஸ்ஸான் குலத்தாரும் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ‘மனாத்’ எனும் சிலைக்காக இஹ்ராம் பூண்டு தல்பியா கூறுபவர்களாய் இருந்தனர். ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவருவது அவர்களின் மூதாதையரிடையே நிலவிவந்த மரபாக இருந்தும், அதை அவர்கள் பாவமாகக் கருதினர். அன்ஸாரிகள் இஸ்லாத்தைத் தழுவியபோது, அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினர். இதுதொடர்பாகவே அல்லாஹ், “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமன்று. யார் கூடுதலாக நன்மை செய்கிறாரோ (அவருக்கு) அல்லாஹ் நன்றி பாராட்டக்கூடியவனும் நன்கறிந்தவனும் ஆவான்” (2:158) எனும் வசனத்தை அருளினான்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 43, ஹதீஸ் எண்: 2241

حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الزُّهْرِيَّ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏قَالَ: ‏

قُلْتُ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا أَرَى عَلَى أَحَدٍ لَمْ يَطُفْ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏شَيْئًا وَمَا أُبَالِي أَنْ لَا أَطُوفَ بَيْنَهُمَا قَالَتْ بِئْسَ مَا قُلْتَ يَا ابْنَ أُخْتِي ‏ ‏طَافَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَطَافَ الْمُسْلِمُونَ فَكَانَتْ سُنَّةً وَإِنَّمَا كَانَ مَنْ ‏ ‏أَهَلَّ ‏ ‏لِمَنَاةَ الطَّاغِيَةِ الَّتِي ‏ ‏بِالْمُشَلَّلِ ‏ ‏لَا يَطُوفُونَ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏فَلَمَّا كَانَ الْإِسْلَامُ سَأَلْنَا النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ (إِنَّ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةَ ‏ ‏مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ ‏ ‏الْبَيْتَ ‏ ‏أَوْ اعْتَمَرَ فَلَا ‏ ‏جُنَاحَ ‏ ‏عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا… ) ‏ ‏وَلَوْ كَانَتْ كَمَا تَقُولُ لَكَانَتْ ‘فَلَا ‏ ‏جُنَاحَ ‏ ‏عَلَيْهِ أَنْ لَا يَطَّوَّفَ بِهِمَا’ ‏

قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏فَذَكَرْتُ ذَلِكَ ‏ ‏لِأَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ ‏ ‏فَأَعْجَبَهُ ذَلِكَ وَقَالَ ‏ ‏إِنَّ هَذَا الْعِلْمُ وَلَقَدْ سَمِعْتُ رِجَالًا مِنْ أَهْلِ الْعِلْمِ يَقُولُونَ إِنَّمَا كَانَ مَنْ لَا يَطُوفُ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏مِنْ ‏ ‏الْعَرَبِ ‏ ‏يَقُولُونَ إِنَّ طَوَافَنَا بَيْنَ هَذَيْنِ الْحَجَرَيْنِ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ ‏ ‏و قَالَ ‏ ‏آخَرُونَ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏إِنَّمَا أُمِرْنَا بِالطَّوَافِ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَلَمْ نُؤْمَرْ بِهِ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ( ‏إِنَّ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةَ ‏ ‏مِنْ شَعَائِرِ اللَّهِ ‏…)

‏قَالَ ‏ ‏أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏فَأُرَاهَا قَدْ نَزَلَتْ فِي هَؤُلَاءِ وَهَؤُلَاءِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُجَيْنُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ ‏ ‏بِنَحْوِهِ وَقَالَ فِي الْحَدِيثِ فَلَمَّا سَأَلُوا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا نَتَحَرَّجُ أَنْ نَطُوفَ ‏ ‏بِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ( إِنَّ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةَ ‏ ‏مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ ‏ ‏الْبَيْتَ ‏ ‏أَوْ اعْتَمَرَ فَلَا ‏ ‏جُنَاحَ ‏ ‏عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا )‏ ‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏قَدْ سَنَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الطَّوَافَ بَيْنَهُمَا فَلَيْسَ لِأَحَدٍ أَنْ يَتْرُكَ الطَّوَافَ بِهِمَا

நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவராத எவர்மீதும் (குற்றம்) ஏதுமிருப்பதாக நான் கருதவில்லை. (எனவே) அவ்விரண்டுக்குமிடையே நான் சுற்றி வராவிட்டால் அது பெரும் பிழை என எண்ணவில்லை” என்றேன். அதற்கு ஆயிஷா (ரலி), “என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நீ சொல்வது தவறு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் (ஸஃபா-மர்வாவுக்கிடையே) சுற்றிவந்தனர். எனவே, அது ஒரு நபிவழியாக ஆகிவிட்டது. ‘முஷல்லல்’ எனும் இடத்திலிருந்த ‘மனாத்’ மற்றும் அதுபோன்ற சிலைகளுக்காக (அறியாமைக் காலத்தில்) இஹ்ராம் பூண்டவர்கள்தாம் ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றி வராமலிருந்தனர். இஸ்லாம் (நம்மிடையே) வந்துவிட்டபோது, அதைப் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வினவினோம். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமில்லை” எனும் (2:158ஆவது) வசனத்தை அருளினான். நீ (தவறான புரிதலில்) கூறியபடி (வசனம்) இருந்தால் “அவ்விரண்டையும் சுற்றாமலிருப்பது குற்றமில்லை” என்று இருந்திருக்கும் ” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)


குறிப்புகள் :

இந்த ஹதீஸை நான் அபூபக்ரு பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களிடம் சொன்னபோது, அதைக் கேட்டு அவர்கள் வியப்படைந்தார்கள். “இதுதான் (இந்த வசனத்திற்குச் சரியான) விளக்கமாகும். ‘இவ்விரு கற்(குன்று)களுக்கிடையே சுற்றிவருவது அறியாமைக் காலச் செயலாகும்’ என்று ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவராத அரபுகள் கூறுவார்கள் என்று அறிஞர்களுள் ஒருவர் சொல்ல நான் கேட்டுள்ளேன். (ஆனால்) அன்ஸாரிகளில் வேறுசிலரோ ‘இறையில்லம் கஅபாவைச் சுற்றிவருமாறுதான் நாம் கட்டளை இடப்பட்டுள்ளோம். ஸஃபா-மர்வாவுக்கிடையே அவ்வாறு (சுற்றிவருமாறு) நாம் கட்டளை இடப்படவில்லை’ என்று கூறினர். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்… என்று தொடங்கும் (2:158ஆவது) வசனத்தை அருளினான். இந்த வசனம் இவ்விரு சாரார் தொடர்பாகவும் அருளப்பெற்றிருக்கலாம் என நான் கருதுகிறேன்” என்று அபூபக்ரு பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) கூறியதாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்.

உகைல் (ரஹ்) வழி அறிவிப்பு, “…நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன் …” என்று தொடங்குகின்றது. மேலும், அன்ஸாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவருவதைப் பாவமாகக் கருதிவந்தோம்” என்று கூறினர். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று (2:158) எனும் வசனத்தை அருளினான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்விரண்டுக்கும் இடையே சுற்றிவருவதை (தமது) வழிமுறையாக்கினார்கள். எனவே, அவ்விரண்டுக்குமிடையே சுற்றுவதைக் கைவிட எவருக்கும் (உரிமை) இல்லை” என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 43, ஹதீஸ் எண்: 2240

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبِي ‏ ‏قَالَ: ‏

قُلْتُ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏مَا أَرَى عَلَيَّ ‏ ‏جُنَاحًا ‏ ‏أَنْ لَا أَتَطَوَّفَ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏قَالَتْ لِمَ قُلْتُ لِأَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ (إِنَّ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةَ ‏ ‏مِنْ شَعَائِرِ اللَّهِ…) ‏الْآيَةَ ‏ ‏فَقَالَتْ لَوْ كَانَ كَمَا تَقُولُ لَكَانَ فَلَا ‏ ‏جُنَاحَ ‏ ‏عَلَيْهِ أَنْ لَا يَطَّوَّفَ بِهِمَا إِنَّمَا أُنْزِلَ هَذَا فِي أُنَاسٍ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏كَانُوا إِذَا ‏ ‏أَهَلُّوا ‏ ‏أَهَلُّوا ‏ ‏لِمَنَاةَ فِي الْجَاهِلِيَّةِ فَلَا يَحِلُّ لَهُمْ أَنْ يَطَّوَّفُوا بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏فَلَمَّا قَدِمُوا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِلْحَجِّ ذَكَرُوا ذَلِكَ لَهُ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى هَذِهِ الْآيَةَ فَلَعَمْرِي ‏ ‏مَا أَتَمَّ اللَّهُ حَجَّ مَنْ لَمْ يَطُفْ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ

நான் (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நான் (ஹஜ்ஜின்போது) ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவராமல் இருப்பதில் என்மீது குற்றமேதுமில்லை என்று கருதுகின்றேன்” என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “எதனால் (அப்படிக் கருதுகின்றாய்)?” என்று கேட்டார்கள். நான், “ஏனெனில் அல்லாஹ், ‘ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று’ (2:158) என்று கூறுகின்றான்” என்றேன். அதற்கு ஆயிஷா (ரலி), “அவ்விரண்டையும் சுற்றாமலிருப்பது குற்றமில்லை என்றிருந்தால்தான் நீ கருதுவது சரியாகும். அன்ஸாரிகள் சிலர் தொடர்பாகவே இந்த வசனம் அருளப்பெற்றது. அவர்கள் அறியாமைக் காலத்தில் இஹ்ராம் புனைந்தால் ‘மனாத்’ எனும் சிலைக்காக இஹ்ராம் புனைபவர்களாய் இருந்தனர். அவர்கள் (இஸ்லாத்தை ஏற்ற பின்னர்) ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவருவது அனுமதிக்கப்பட்டதல்ல எனக் கருதினர்.

நபி (ஸல்) அவர்களுடன் (பிற்காலத்தில்) அவர்கள் ஹஜ்ஜுக்காக வந்தபோது அதைப் பற்றி நபியவர்களிடம் தெரிவித்தனர். அப்போதுதான் அல்லாஹ் இந்த (2:158ஆவது) வசனத்தை அருளினான். என் ஆயுள் மீது அறுதியாக! ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவராதவரின் ஹஜ்ஜை அல்லாஹ் முழுமையாக்குவதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 43, ஹதீஸ் எண்: 2239

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَ: ‏

قُلْتُ لَهَا إِنِّي لَأَظُنُّ رَجُلًا لَوْ لَمْ يَطُفْ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏مَا ضَرَّهُ قَالَتْ لِمَ قُلْتُ لِأَنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ ‏(إِنَّ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةَ ‏ ‏مِنْ شَعَائِرِ اللَّهِ …) ‏ ‏إِلَى آخِرِ الْآيَةِ فَقَالَتْ ‏ ‏مَا أَتَمَّ اللَّهُ حَجَّ امْرِئٍ وَلَا عُمْرَتَهُ لَمْ يَطُفْ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَلَوْ كَانَ كَمَا تَقُولُ لَكَانَ فَلَا ‏ ‏جُنَاحَ ‏ ‏عَلَيْهِ أَنْ لَا يَطَّوَّفَ بِهِمَا وَهَلْ تَدْرِي فِيمَا كَانَ ذَاكَ إِنَّمَا كَانَ ذَاكَ أَنَّ ‏ ‏الْأَنْصَارَ ‏ ‏كَانُوا ‏ ‏يُهِلُّونَ ‏ ‏فِي الْجَاهِلِيَّةِ لِصَنَمَيْنِ عَلَى شَطِّ الْبَحْرِ يُقَالُ لَهُمَا ‏ ‏إِسَافٌ ‏ ‏وَنَائِلَةُ ‏ ‏ثُمَّ يَجِيئُونَ فَيَطُوفُونَ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ يَحْلِقُونَ فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ كَرِهُوا أَنْ يَطُوفُوا بَيْنَهُمَا لِلَّذِي كَانُوا يَصْنَعُونَ فِي الْجَاهِلِيَّةِ قَالَتْ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ (إِنَّ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةَ ‏ ‏مِنْ شَعَائِرِ اللَّهِ …) إِلَى آخِرِهَا قَالَتْ فَطَافُوا

நான் (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ஒருவர் ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவராவிட்டாலும் அவர்மீது குற்றமில்லை என்று நான் கருதுகிறேன்” என்றேன். ஆயிஷா (ரலி), “எதனால் (அப்படிக் கருதுகின்றாய்)?” என்று கேட்டார்கள். நான், “ஏனெனில், அல்லாஹ், ‘ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவை ஆகும். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று’ (2:158) என்று கூறுகின்றான் …” என்று அந்த வசனத்தின் இறுதிவரை கூறினேன்.

அதற்கு ஆயிஷா (ரலி), “ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவராதவரின் ஹஜ்ஜையோ உம்ராவையோ அல்லாஹ் முழுமையாக்கமாட்டான். ‘அவ்விரண்டையும் சுற்றாமல் இருப்பது குற்றமில்லை’ என்றிருந்தால்தான் நீ கூறும் கருத்து சரியாகும். (“சுற்றுவது குற்றமன்று“ என்றல்லவா குர்ஆனில் வந்துள்ளது.) இந்த வசனம் ஏன் அருளப்பெற்றதென உனக்குத் தெரியுமா? அறியாமைக் காலத்தில் அன்ஸாரிகள் கடலோரத்தில் அமைந்திருந்த ‘இசாஃப்’, ‘நாயிலா’ ஆகிய இரு சிலைகளுக்காக இஹ்ராம் புனைந்துவந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றுவர்; பின்னர் தலையை மழித்துக் கொள்வர். இஸ்லாம் வந்தபோது, அவ்விரண்டுக்குமிடையே சுற்றிவருவதை அறியாமைக் கால வழிபாடு எனக் கருதி அதை அன்ஸாரிகள் வெறுத்தனர். அப்போது வல்லமையும் மாண்புமுள்ள அல்லாஹ் ‘ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்’ என்று தொடங்கும் (2:158ஆவது) வசனத்தை இறுதிவரை அருளினான். எனவே, அன்ஸாரிகள் (ஸஃபா-மர்வாவுக்கிடையே) சுற்றிவந்தனர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)