அத்தியாயம்: 15, பாடம்: 69, ஹதீஸ் எண்: 2373

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاتِمُ بْنُ أَبِي صَغِيرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَزَعَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ الْمَلِكِ بْنَ مَرْوَانَ ‏ ‏بَيْنَمَا هُوَ يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏إِذْ قَالَ قَاتَلَ اللَّهُ ‏ ‏ابْنَ الزُّبَيْرِ ‏ ‏حَيْثُ يَكْذِبُ عَلَى أُمِّ الْمُؤْمِنِينَ يَقُولُ سَمِعْتُهَا تَقُولُ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏لَوْلَا حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ لَنَقَضْتُ ‏ ‏الْبَيْتَ ‏ ‏حَتَّى أَزِيدَ فِيهِ مِنْ ‏ ‏الْحِجْرِ ‏ ‏فَإِنَّ قَوْمَكِ قَصَّرُوا فِي الْبِنَاءِ ‏
‏فَقَالَ ‏ ‏الْحَارِثُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي رَبِيعَةَ ‏ ‏لَا تَقُلْ هَذَا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ فَأَنَا ‏ ‏سَمِعْتُ ‏ ‏أُمَّ الْمُؤْمِنِينَ ‏ ‏تُحَدِّثُ هَذَا ‏ ‏قَالَ ‏ ‏لَوْ كُنْتُ سَمِعْتُهُ قَبْلَ أَنْ أَهْدِمَهُ لَتَرَكْتُهُ عَلَى مَا بَنَى ‏ ‏ابْنُ الزُّبَيْرِ

அப்துல் மலிக் பின் மர்வான் இறையில்லம் கஅபாவைச் சுற்றி(தவாஃப்)வந்து கொண்டிருந்தபோது, “அல்லாஹ் இப்னுஸ் ஸுபைரை அழிக்கட்டும்! அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா (ரலி)) மீது பொய்யுரைக்கின்றார்.

ஆயிஷா (ரலி) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என்னிடம்), ‘ஆயிஷா! உன் சமுதாயத்தார் இறைமறுப்பிலிருந்து விலகி (இஸ்லாத்துக்கு) வந்த புதியவர்கள் இல்லையென்றால், நான் இறையில்லம் கஅபாவை இடித்துவிட்டு ஹிஜ்ருப் பகுதியை அதனுடன் அதிகமாக்கியிருப்பேன். ஏனெனில், உன் சமுதாயத்தார் அதன் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர்’ என்று கூறினார்கள்” என ஆயிஷா (ரலி) தம்மிடம் கூறியதாக அவர் (பொய்யாகக்) கூறுகிறார்” என்றார்.

அப்போது ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்), “இவ்வாறு கூறாதீர்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ஏனெனில், இறைநம்பிக்கையாளர்களின் அன்னை அப்படிக் கூறியதை நானும் கேட்டுள்ளேன்” என்றார்கள். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், “கஅபாவை இடி(த்துப் புதுப்பி)ப்பதற்கு முன்பே இதை நான் கேட்டிருந்தால், நிச்சயமாக இப்னுஸ் ஸுபைர் கட்டிய அமைப்பிலேயே கஅபாவை நான் விட்டிருப்பேன்” என்றார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூகஸஆ ஸுவைத் பின் ஹுஜைர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 69, ஹதீஸ் எண்: 2372

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ ‏ ‏وَالْوَلِيدَ بْنَ عَطَاءٍ ‏ ‏يُحَدِّثَانِ عَنْ ‏ ‏الْحَارِثِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي رَبِيعَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدٍ: ‏ ‏

وَفَدَ ‏ ‏الْحَارِثُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَلَى ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ مَرْوَانَ ‏ ‏فِي خِلَافَتِهِ فَقَالَ ‏ ‏عَبْدُ الْمَلِكِ ‏ ‏مَا أَظُنُّ ‏ ‏أَبَا خُبَيْبٍ يَعْنِي ابْنَ الزُّبَيْرِ ‏ ‏سَمِعَ مِنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏مَا كَانَ يَزْعُمُ أَنَّهُ سَمِعَهُ مِنْهَا قَالَ ‏ ‏الْحَارِثُ ‏ ‏بَلَى أَنَا سَمِعْتُهُ مِنْهَا قَالَ سَمِعْتَهَا تَقُولُ مَاذَا قَالَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ قَوْمَكِ اسْتَقْصَرُوا مِنْ بُنْيَانِ ‏ ‏الْبَيْتِ ‏ ‏وَلَوْلَا حَدَاثَةُ عَهْدِهِمْ بِالشِّرْكِ أَعَدْتُ مَا تَرَكُوا مِنْهُ فَإِنْ بَدَا لِقَوْمِكِ مِنْ بَعْدِي أَنْ يَبْنُوهُ فَهَلُمِّي لِأُرِيَكِ مَا تَرَكُوا مِنْهُ فَأَرَاهَا قَرِيبًا مِنْ سَبْعَةِ أَذْرُعٍ ‏

هَذَا حَدِيثُ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدٍ ‏ ‏وَزَادَ عَلَيْهِ ‏ ‏الْوَلِيدُ بْنُ عَطَاءٍ ‏ ‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَجَعَلْتُ لَهَا بَابَيْنِ مَوْضُوعَيْنِ فِي الْأَرْضِ شَرْقِيًّا وَغَرْبِيًّا وَهَلْ تَدْرِينَ لِمَ كَانَ قَوْمُكِ رَفَعُوا بَابَهَا قَالَتْ قُلْتُ لَا قَالَ تَعَزُّزًا أَنْ لَا يَدْخُلَهَا إِلَّا مَنْ أَرَادُوا فَكَانَ الرَّجُلُ إِذَا هُوَ أَرَادَ أَنْ يَدْخُلَهَا يَدَعُونَهُ ‏ ‏يَرْتَقِي حَتَّى إِذَا كَادَ أَنْ يَدْخُلَ دَفَعُوهُ فَسَقَطَ قَالَ ‏ ‏عَبْدُ الْمَلِكِ ‏ ‏لِلْحَارِثِ ‏ ‏أَنْتَ سَمِعْتَهَا تَقُولُ هَذَا قَالَ نَعَمْ قَالَ فَنَكَتَ سَاعَةً بِعَصَاهُ ثُمَّ قَالَ وَدِدْتُ أَنِّي تَرَكْتُهُ وَمَا تَحَمَّلَ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَ حَدِيثِ ‏ ‏ابْنِ بَكْرٍ

அப்துல் மலிக் பின் மர்வான் ஆட்சிக் காலத்தில், அவரிடம் ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்) ஒரு தூதுக் குழுவில் சென்றார்கள். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான், “ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து தாம் கேட்டதாக அபூகுபைப் (இப்னுஸ் ஸுபைர்) கூறும் செய்தியை, ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அவர் கேட்டிருக்கமாட்டார் என்றே நான் எண்ணுகிறேன்” என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்), “இல்லை! (அபூகுபைப் உண்மையே சொன்னார்) அந்த ஹதீஸை நானும் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன்” என்றார்கள்.

அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், “ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதைக் கூறுங்கள்” என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்), ஆயிஷா (ரலி) சொன்னார்கள்: “என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘உன்னுடைய சமுதாயத்தார் இறையில்லம் கஅபாவின் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர். அவர்கள் இறைமறுப்பிலிருந்து விலகி (இஸ்லாத்துக்கு) வந்த புதியவர்கள் இல்லையென்றால், அவர்கள் விட்டுவிட்டதை நான் மறுபடியும் இணைத்துக் கட்டியிருப்பேன். எனக்குப் பின் உன் சமுதாயத்தாருக்கு அதை(விரிவாக்கி)க் கட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றினால் (செய்யட்டும்!) என் அருகில் வா! அவர்கள் விட்டுவிட்ட(இடத்)தை உனக்கு நான் காட்டித்தருகிறேன்’ என்று கூறிவிட்டு, (கஅபா அருகில்) ஏழு முழங்கள் அளவிற்கு இடத்தை எனக்குக் காட்டினார்கள்”.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் உபைத் பின் உமைர் (ரஹ்)


குறிப்பு :

நபி (ஸல்) “நான் பூமியோடு ஒட்டினாற்போல் ஒரு கிழக்கு வாசலையும் ஒரு மேற்கு வாசலையும் அதற்கு அமைத்திருப்பேன்” என்று கூறிவிட்டு, “ஏன் உன் சமுதாயத்தார் கஅபாவின் வாசலை (பூமியோடு ஒட்டினாற்போல் அமைக்காமல்) உயர்த்தினார்கள் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். ஆயிஷா (ரலி) “இல்லை (தெரியாது)’ என்றார்கள். நபி (ஸல்), “சுய கௌரவத்திற்காகத்தான்; தாம் விரும்பியவரைத் தவிர வேறெவரும் நுழையக் கூடாது என்பதற்காகவே (அவ்வாறு உயர்த்தினர்). எவரேனும் ஒருவர் அதனுள் நுழைய முற்பட்டால், அதில் ஏறும்வரை அவர்கள் அவரை விட்டுவிடுவார்கள். அவர் (மேலே ஏறி) உள்ளே நுழையப்போகும் போது அவரைப் பிடித்துக் கீழே தள்ளிவிடுவார்கள்” என்றார்கள்.

மேலும், ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் அப்துல் மலிக் பின் மர்வான், “ஆயிஷா (ரலி) இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) “ஆம்“ என்றார்கள். பிறகு அப்துல் மலிக் பின் மர்வான் தம்மிடமிருந்த குச்சியால் தரையைச் சிறிது நேரம் குத்திக் கீறி(யபடி ஆழ்ந்து யோசித்து)விட்டு, “இறையில்லத்தையும் இப்னுஸ் ஸுபைர் கட்டியதையும் (அதே நிலையில்) விட்டிருக்க வேண்டுமென (இப்போது) விரும்புகிறேன்” என்றார் எனும் கூடுதல் தகவல் வலீத் பின் அதாஉ (ரஹ்) அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 69, ஹதீஸ் எண்: 2371

‏حَدَّثَنَا ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏ابْنُ أَبِي سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا احْتَرَقَ ‏ ‏الْبَيْتُ ‏ ‏زَمَنَ ‏ ‏يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ ‏ ‏حِينَ غَزَاهَا أَهْلُ ‏ ‏الشَّامِ ‏ ‏فَكَانَ مِنْ أَمْرِهِ مَا كَانَ تَرَكَهُ ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏حَتَّى قَدِمَ النَّاسُ الْمَوْسِمَ يُرِيدُ أَنْ يُجَرِّئَهُمْ ‏ ‏أَوْ يُحَرِّبَهُمْ ‏ ‏عَلَى أَهْلِ ‏ ‏الشَّامِ ‏ ‏فَلَمَّا صَدَرَ النَّاسُ ‏ ‏قَالَ ‏ ‏يَا أَيُّهَا النَّاسُ أَشِيرُوا عَلَيَّ فِي ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏أَنْقُضُهَا ثُمَّ ‏ ‏أَبْنِي بِنَاءَهَا أَوْ أُصْلِحُ مَا ‏ ‏وَهَى ‏ ‏مِنْهَا قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏فَإِنِّي قَدْ ‏ ‏فُرِقَ ‏ ‏لِي رَأْيٌ فِيهَا أَرَى أَنْ تُصْلِحَ مَا ‏ ‏وَهَى ‏ ‏مِنْهَا وَتَدَعَ بَيْتًا أَسْلَمَ النَّاسُ عَلَيْهِ وَأَحْجَارًا أَسْلَمَ النَّاسُ عَلَيْهَا وَبُعِثَ عَلَيْهَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏لَوْ كَانَ أَحَدُكُمْ احْتَرَقَ بَيْتُهُ مَا رَضِيَ حَتَّى يُجِدَّهُ فَكَيْفَ بَيْتُ رَبِّكُمْ إِنِّي مُسْتَخِيرٌ رَبِّي ثَلَاثًا ثُمَّ عَازِمٌ عَلَى أَمْرِي فَلَمَّا مَضَى الثَّلَاثُ أَجْمَعَ رَأْيَهُ عَلَى أَنْ يَنْقُضَهَا فَتَحَامَاهُ النَّاسُ أَنْ يَنْزِلَ بِأَوَّلِ النَّاسِ يَصْعَدُ فِيهِ أَمْرٌ مِنْ السَّمَاءِ حَتَّى صَعِدَهُ رَجُلٌ فَأَلْقَى مِنْهُ حِجَارَةً فَلَمَّا لَمْ يَرَهُ النَّاسُ أَصَابَهُ شَيْءٌ تَتَابَعُوا فَنَقَضُوهُ حَتَّى بَلَغُوا بِهِ الْأَرْضَ فَجَعَلَ ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏أَعْمِدَةً فَسَتَّرَ عَلَيْهَا السُّتُورَ حَتَّى ارْتَفَعَ بِنَاؤُهُ ‏ ‏وَقَالَ ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏إِنِّي ‏ ‏سَمِعْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏تَقُولُ: ‏

إِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَوْلَا أَنَّ النَّاسَ حَدِيثٌ عَهْدُهُمْ بِكُفْرٍ وَلَيْسَ عِنْدِي مِنْ النَّفَقَةِ مَا ‏ ‏يُقَوِّي عَلَى بِنَائِهِ لَكُنْتُ أَدْخَلْتُ فِيهِ مِنْ ‏ ‏الْحِجْرِ ‏ ‏خَمْسَ أَذْرُعٍ وَلَجَعَلْتُ لَهَا بَابًا يَدْخُلُ النَّاسُ مِنْهُ وَبَابًا يَخْرُجُونَ مِنْهُ ‏
‏قَالَ فَأَنَا الْيَوْمَ أَجِدُ مَا أُنْفِقُ وَلَسْتُ أَخَافُ النَّاسَ قَالَ فَزَادَ فِيهِ خَمْسَ أَذْرُعٍ مِنْ الْحِجْرِ حَتَّى أَبْدَى أُسًّا نَظَرَ النَّاسُ إِلَيْهِ فَبَنَى عَلَيْهِ الْبِنَاءَ وَكَانَ طُولُ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏ثَمَانِيَ عَشْرَةَ ذِرَاعًا فَلَمَّا زَادَ فِيهِ اسْتَقْصَرَهُ فَزَادَ فِي طُولِهِ عَشْرَ أَذْرُعٍ وَجَعَلَ لَهُ بَابَيْنِ أَحَدُهُمَا يُدْخَلُ مِنْهُ وَالْآخَرُ يُخْرَجُ مِنْهُ فَلَمَّا قُتِلَ ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏كَتَبَ ‏ ‏الْحَجَّاجُ ‏ ‏إِلَى ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ مَرْوَانَ ‏ ‏يُخْبِرُهُ بِذَلِكَ وَيُخْبِرُهُ أَنَّ ‏ ‏ابْنَ الزُّبَيْرِ ‏ ‏قَدْ وَضَعَ الْبِنَاءَ عَلَى ‏ ‏أُسٍّ ‏ ‏نَظَرَ إِلَيْهِ الْعُدُولُ مِنْ أَهْلِ ‏ ‏مَكَّةَ ‏ ‏فَكَتَبَ إِلَيْهِ ‏ ‏عَبْدُ الْمَلِكِ ‏ ‏إِنَّا لَسْنَا مِنْ تَلْطِيخِ ‏ ‏ابْنِ الزُّبَيْرِ ‏ ‏فِي شَيْءٍ أَمَّا مَا زَادَ فِي طُولِهِ فَأَقِرَّهُ وَأَمَّا مَا زَادَ فِيهِ مِنْ الْحِجْرِ فَرُدَّهُ إِلَى بِنَائِهِ وَسُدَّ الْبَابَ الَّذِي فَتَحَهُ فَنَقَضَهُ وَأَعَادَهُ إِلَى بِنَائِهِ

யஸீத் பின் முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் (பனூ உமய்யாக்களான) ஷாம்வாசிகள் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக மக்காவை முற்றுகையிட்டு) போர் தொடுத்தபோது, இறையில்லம் கஅபா தீக்கிரையானது. அப்போது நடந்தவை நடந்து முடிந்தன. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), மக்கள் ஹஜ் பருவத்தில் ஒன்றுகூடும்வரை இறையில்லத்தை அதே நிலையிலேயே விட்டுவைத்தார்கள். ஷாம்வாசிகளுக்கு எதிராக மக்களுக்கு எழுச்சியூட்டுவதற்காக அல்லது அவர்களை ரோஷம்கொள்ளச் செய்வதற்காகவே அவ்வாறு விட்டுவைத்தார்கள். (ஹஜ்ஜை முடித்து) மக்கள் புறப்பட்டபோது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), “மக்களே! கஅபா விஷயத்தில் எனக்கு ஆலோசனை கூறுங்கள். அதை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டுவதா, அல்லது அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் செப்பனிடுவதா?” என்று கேட்டார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி), “எனக்கு இது தொடர்பாக ஒரு யோசனை தோன்றுகிறது. அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் நீங்கள் செப்பனிடுங்கள். மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதிருந்த அதே நிலையில் கஅபாவை விட்டுவிடுங்கள். நபி (ஸல்) இறைத்தூதராக நியமிக்கப்பட்டபோதும் மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதும் இருந்த நிலையில் அதன் கற்கள்  இருக்கட்டும்” என்றார்கள்.

அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), “உங்களில் ஒருவரது இல்லம் தீக்கிரையானால் அதைப் புதுப்பிக்காத வரை அவரது மனம் திருப்தியடைவதில்லை. இந்நிலையில் இறையில்லத்தின் விஷயத்தில் மட்டும் எப்படி (நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள்)? நான் என் இறைவனிடம் நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்திப்பேன். பிறகு இறுதி முடிவுக்கு வருவேன்” என்றார்கள். நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்தித்தபோது, இடித்துவிட்டுப் புதுப்பிக்கும் முடிவுக்கு வந்தார்கள். அப்போது மக்கள் முதலில் கஅபாவின் மீது ஏறும் மனிதர்மீது வானத்திலிருந்து ஏதேனும் வேதனை இறங்கி விடும் என அச்சம் தெரிவித்தனர். இறுதியாக ஒருவர் கஅபாவின் மீதேறி அதிலிருந்து ஒரு கல்லைக் கீழே தள்ளினார். அவருக்கு எதுவும் நேராததைக் கண்ட மக்கள், ஒவ்வொருவராக (இடிக்கும் பணியில்) ஈடுபட்டு அதைத் தரைமட்டமாக்கினர். பின்னர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) கட்டடப் பணி நிறைவடையும்வரை (இறையில்லத்திற்குத் தாற்காலிகத்) தூண்கள் அமைத்து அவற்றின்மீது திரையும் தொங்கவிட்டார்கள்.

மேலும், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) கூறினார்கள்: “என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘(உன்னுடைய சமுதாய) மக்கள் இறைமறுப்பிலிருந்து விலகி (இஸ்லாத்துக்கு) வந்த புதியவர்கள் இல்லையெனில், என்னிடம் கஅபாவின் கட்டடத்தை வலுப்படுத்தக்கூடிய அளவு பொருளாதாரம் இல்லை என்றாலும் நான் ‘ஹிஜ்ரு’ப் பகுதியில் ஐந்து முழங்களை கஅபாவுடன் சேர்த்துவிட்டிருப்பேன். பின்னர் மக்கள் நுழைவதற்கு ஒரு வாயிலும் வெளியேறுவதற்கு ஒரு வாயிலுமாக (இரு வாயில்களை) அதற்கு அமைத்திருப்பேன்’ என்று கூறினார்கள்” என ஆயிஷா (ரலி) கூற நான் கேட்டுள்ளேன். இன்று என்னிடம் பொருளாதாரமிருப்பதைக் காண்கிறேன். மக்களை அஞ்சும் நிலையிலும் நான் இல்லை” என்று கூறி(விட்டு, கஅபாவைப் புதுப்பிக்கலா)னார்கள்.

பின்னர் கஅபாவில் ‘ஹிஜ்ரு’ப் பகுதியில் ஐந்து முழங்களைக் கூடுதலாக்கினார்கள்; மக்கள் பார்த்துக்கொண்டிருக்க (ஹிஜ்ருப் பகுதியை அகழ்ந்து) ஓர் அடித்தளத்தை வெளியாக்கினார்கள். அதன் மீதே கஅபாவை எழுப்பினார்கள். (முடிவில்) கஅபாவின் உயரம் பதினெட்டு முழங்களாக இருந்தது. அதன் உயரத்தை அதிகரித்த பின்னரும் அது குறைவாகவே தெரிந்தது. எனவே, மேலும் பத்து முழங்களை அதிகமாக்கினார்கள்; அத்துடன் உள்ளே நுழைவதற்கு ஒரு வாயில்; வெளியேறுவதற்கு ஒரு வாயில் என இறையில்லத்திற்கு இரு வாயில்களை அமைத்தார்கள்.

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) கொல்லப்பட்டபோது, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் இந்த விவரங்களைத் தெரிவித்து (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) (ஹிஜ்ருப் பகுதியை அகழ்ந்து அங்கிருந்த) ஓர் அடித்தளத்தின் மீது கஅபாவை எழுப்பியுள்ளார்; அதை மக்காவின் நியாயவான்கள் பலரும் பார்த்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், “நாம் இப்னுஸ் ஸுபைரை எந்த விஷயத்திலும் களங்கப்படுத்த விரும்பவில்லை, எனவே, அவர் உயர்த்திக் கட்டியதை அப்படியே விட்டுவிடுவீராக! ஹிஜ்ருப் பகுதியிலிருந்து அவர் அதிகப்படுத்தியதை (மட்டும்) பழையபடியே மாற்றி அமைப்பீராக! அவர் புதிதாகத் திறந்துவிட்ட வாயிலை மூடிவிடுவீராக!” என்று பதில் எழுதினார். எனவே, ஹஜ்ஜாஜ் (ஹிஜ்ருப் பகுதிச் சுவரை) இடித்து, முன்பிருந்த பழைய அமைப்பிற்கு மாற்றி அமைத்தார்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 69, ஹதீஸ் எண்: 2370

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏ابْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَلِيمُ بْنُ حَيَّانَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ يَعْنِي ابْنَ مِينَاءَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ‏ ‏يَقُولُ حَدَّثَتْنِي ‏ ‏خَالَتِي ‏ ‏يَعْنِي ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏لَوْلَا أَنَّ قَوْمَكِ حَدِيثُو عَهْدٍ بِشِرْكٍ لَهَدَمْتُ ‏ ‏الْكَعْبَةَ ‏ ‏فَأَلْزَقْتُهَا بِالْأَرْضِ وَجَعَلْتُ لَهَا بَابَيْنِ بَابًا شَرْقِيًّا وَبَابًا غَرْبِيًّا وَزِدْتُ فِيهَا سِتَّةَ أَذْرُعٍ مِنْ ‏ ‏الْحِجْرِ ‏ ‏فَإِنَّ ‏ ‏قُرَيْشًا ‏ ‏اقْتَصَرَتْهَا حَيْثُ بَنَتْ ‏ ‏الْكَعْبَةَ

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆயிஷா! உன் சமுதாயத்தார் இறைமறுப்பிலிருந்து விலகி (இஸ்லாத்துக்கு) வந்த புதியவர்கள் இல்லையெனில், கஅபாவை நான் இடித்துவிட்டு, (உயர்ந்திருக்கும் அதன் தளத்தைத்) தரையோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன். மேலும், கிழக்கே ஒன்றும் மேற்கே ஒன்றுமாக அதற்கு இரு வாயில்களை அமைத்திருப்பேன். ‘ஹிஜ்ரு’ப் பகுதியின் (நில) அளவையில் ஆறு முழங்களைக் கூடுதலாக்கியிருப்பேன். ஏனெனில், குறைஷியர் கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டியபோது அதைக் குறைத்து (சற்று உள்ளடக்கிக் கட்டி)விட்டனர்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 69, ஹதீஸ் எண்: 2369

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مَخْرَمَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏نَافِعًا ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ أَبِي بَكْرِ بْنِ أَبِي قُحَافَةَ ‏ ‏يُحَدِّثُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ: ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَوْلَا أَنَّ قَوْمَكِ حَدِيثُو عَهْدٍ بِجَاهِلِيَّةٍ ‏ ‏أَوْ قَالَ بِكُفْرٍ ‏ ‏لَأَنْفَقْتُ كَنْزَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏فِي سَبِيلِ اللَّهِ وَلَجَعَلْتُ بَابَهَا بِالْأَرْضِ وَلَأَدْخَلْتُ فِيهَا مِنْ ‏ ‏الْحِجْرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என்னிடம்), “உன் சமுதாயத்தார் அறியாமைக் காலத்திலிருந்து அல்லது இறைமறுப்பிலிருந்து விலகி (இஸ்லாத்துக்கு) வந்த அண்மைக் காலத்தவராக இல்லையெனில், கஅபாவின் கருவூலங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டிருப்பேன். மேலும், ‘ஹிஜ்ரு’ எனும் அரைவட்டப் பகுதியை கஅபாவுடன் இணைத்து, கஅபாவின் தலைவாயிலை(க்கீழிறக்கி)ப் பூமியோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

‘ஹிஜ்ரு’ என்பது கஅபாவிலுள்ள ‘ஹஜருல் அஸ்வத்’ எனும் (1)கருப்புக் கல் மூலையின் வலப்பக்கத்தில், கஅபாவின் (2)இரண்டாவது, (3)மூன்றாவது மூலைகளுக்கு நடுவே சற்றுத் தள்ளி அமைந்திருக்கும் அரை வட்டப் பகுதியாகும். அது, ‘ஹிஜ்ரு இஸ்மாயீல்’ என்றும் வழங்கப்படும்.

இரண்டாவது மூலை ‘ருக்னுல் இராக்கி’ என்றும் மூன்றாவது மூலை ‘ருக்னுஷ் ஷாமி’ என்றும் வழங்கப்படும்.

அத்தியாயம்: 15, பாடம்: 69, ஹதீஸ் எண்: 2368

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ‏ ‏أَخْبَرَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَلَمْ تَرَيْ أَنَّ قَوْمَكِ حِينَ بَنَوْا ‏ ‏الْكَعْبَةَ ‏ ‏اقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَلَا تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْلَا حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ لَفَعَلْتُ ‏
فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏لَئِنْ كَانَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا أُرَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَرَكَ ‏ ‏اسْتِلَامَ ‏ ‏الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ ‏ ‏الْحِجْرَ ‏ ‏إِلَّا أَنَّ ‏ ‏الْبَيْتَ ‏ ‏لَمْ يُتَمَّمْ عَلَى قَوَاعِدِ ‏ ‏إِبْرَاهِيمَ

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன்னுடைய சமுதாயத்தார் கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டியபோது, இப்ராஹீம் (அலை) அமைத்த அடித்தளத்தை(விடச் சற்று)க் குறைத்துவிட்டார்கள் என்பதை நீ அறிவாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அமைத்த அடித்தளத்திற்கு அதை நீங்கள் மாற்றிவிடலாமல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன்னுடைய சமுதாயத்தார் இறைமறுப்பிலிருந்து விலகி (இஸ்லாத்துக்கு) வந்த புதியவர்களாக இல்லையாயின், அவ்வாறே நான் செய்திருப்பேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (அவர்களிடம் நான் இந்த ஹதீஸைத் தெரிவித்தபோது), “ஆயிஷா (ரலி) இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டிருந்தால் அது சரியே! (இறையில்லம் கஅபாவின்) ‘ஹிஜ்ரு’ப் பகுதியை அடுத்துள்ள இரு (ஷாமிய) மூலைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முத்தமிடாததற்குக் காரணம், இப்ராஹீம் (அலை) அமைத்த அடித்தளத்தின் மீது இறையில்லம் முழுமையாக்கப்படாமல் இருந்ததே ஆகும் என்று நான் கருதுகிறேன்” என்றார்கள் என்பதாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 69, ஹதீஸ் எண்: 2367

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْلَا حَدَاثَةُ عَهْدِ قَوْمِكِ بِالْكُفْرِ لَنَقَضْتُ ‏ ‏الْكَعْبَةَ ‏ ‏وَلَجَعَلْتُهَا عَلَى أَسَاسِ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏فَإِنَّ ‏ ‏قُرَيْشًا ‏ ‏حِينَ بَنَتْ ‏ ‏الْبَيْتَ ‏ ‏اسْتَقْصَرَتْ ‏ ‏وَلَجَعَلْتُ لَهَا ‏ ‏خَلْفًا ‏
و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன்னுடைய (குறைஷி) சமுதாயத்தார் இறைமறுப்பிலிருந்து விலகி (இஸ்லாத்துக்கு) வந்த அண்மைக் காலத்தவராக இல்லையாயின், கஅபாவை இடித்துவிட்டு, இப்ராஹீம் (அலை) அமைத்த அடித்தளத்தின் மீதே நான் அதைக் கட்டியிருப்பேன். ஏனெனில், குறைஷியர் இந்த ஆலயத்தை(ப்புதுப்பித்து)க் கட்டியபோது, அ(தன் அடித்தளத்)தைவிடச் சுருக்கி(சற்று உள்ளடக்கி)க் கட்டிவிட்டனர். மேலும், அதற்கு ஒரு பின்புற வாசலையும் நான் அமைத்திருப்பேன்” என்று என்னிடம் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)