அத்தியாயம்: 15, பாடம்: 15.22, ஹதீஸ் எண்: 2144

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏طَارِقِ بْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏مُنِيخٌ ‏ ‏بِالْبَطْحَاءِ ‏ ‏فَقَالَ ‏ ‏بِمَ ‏ ‏أَهْلَلْتَ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏أَهْلَلْتُ ‏ ‏بِإِهْلَالِ ‏ ‏النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ هَلْ سُقْتَ مِنْ ‏ ‏هَدْيٍ ‏ ‏قُلْتُ لَا قَالَ فَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ حِلَّ فَطُفْتُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ قَوْمِي فَمَشَطَتْنِي وَغَسَلَتْ رَأْسِي فَكُنْتُ أُفْتِي النَّاسَ بِذَلِكَ فِي إِمَارَةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏وَإِمَارَةِ ‏ ‏عُمَرَ ‏ ‏فَإِنِّي لَقَائِمٌ بِالْمَوْسِمِ إِذْ جَاءَنِي رَجُلٌ فَقَالَ إِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثَ أَمِيرُ الْمُؤْمِنِينَ فِي شَأْنِ ‏ ‏النُّسُكِ ‏ ‏فَقُلْتُ أَيُّهَا النَّاسُ مَنْ كُنَّا أَفْتَيْنَاهُ بِشَيْءٍ ‏ ‏فَلْيَتَّئِدْ ‏ ‏فَهَذَا أَمِيرُ الْمُؤْمِنِينَ قَادِمٌ عَلَيْكُمْ فَبِهِ فَأْتَمُّوا فَلَمَّا قَدِمَ قُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَا هَذَا الَّذِي أَحْدَثْتَ فِي شَأْنِ ‏ ‏النُّسُكِ ‏ ‏قَالَ إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَالَ ‏”‏وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ “‏

وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ نَبِيِّنَا عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَام فَإِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمْ يَحِلَّ حَتَّى نَحَرَ ‏ ‏الْهَدْيَ ‏
‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ عَوْنٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عُمَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَارِقِ بْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَنِي إِلَى ‏ ‏الْيَمَنِ ‏ ‏قَالَ فَوَافَقْتُهُ فِي الْعَامِ الَّذِي حَجَّ فِيهِ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏أَبَا مُوسَى ‏ ‏كَيْفَ قُلْتَ حِينَ أَحْرَمْتَ قَالَ قُلْتُ لَبَّيْكَ ‏ ‏إِهْلَالًا ‏ ‏كَإِهْلَالِ ‏ ‏النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ هَلْ سُقْتَ ‏ ‏هَدْيًا ‏ ‏فَقُلْتُ لَا قَالَ فَانْطَلِقْ فَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ أَحِلَّ ثُمَّ ‏ ‏سَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏وَسُفْيَانَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அல்பத்ஹா’ பள்ளத்தாக்கில் தங்கியிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் என்னிடம், “நீர் எதற்காக இஹ்ராம் பூண்டுள்ளீர்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) எதற்காக இஹ்ராம் பூண்டுள்ளார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் பூண்டுள்ளேன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் உம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்துள்ளீரா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். அதற்கவர்கள், “அவ்வாறாயின் நீர் இறையில்லத்தையும் ஸஃபா-மர்வாவையும் சுற்றிவந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்வீராக” என்று கூறினார்கள். அவ்வாறே நான் இறையில்லத்தையும் ஸஃபா-மர்வாவையும் சுற்றி விட்டுப் பின்னர் என் கூட்டத்தைச் சேர்ந்த (நெருங்கிய உறவுக்காரப்) பெண் ஒருவரிடம் சென்றேன். அவர் எனக்குத் தலை கழுவி, தலை வாரிவிட்டார்.

நான் இவ்வாறு (ஹஜ்ஜுக்காகச் செய்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக் கொள்ளலாம் என்றே) அபூபக்ரு (ரலி) ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) ஆட்சியி(ன் ஆரம்பக் காலத்தி)லும் மக்களுக்குத் தீர்ப்பளித்துவந்தேன். நான் ஹஜ் காலத்தில் ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தபோது, என்னிடம் ஒருவர் வந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர்) ஹஜ்ஜின் செயல்முறைகளில் ஏற்படுத்திய புதிய நடைமுறையை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று சொன்னார். உடனே நான் “மக்களே! நாம் யாருக்கேனும் ஏதேனும் மார்க்கத் தீர்ப்பு அளித்திருந்தால் அவர்கள் (அதைச் செயல்படுத்தி விடாமல்) நிறுத்தி வைக்கட்டும்! இதோ! இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் உங்களிடம் வரப்போகிறார். அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்” என்று கூறினேன். உமர் (ரலி) வந்தபோது அவர்களிடம் நான், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ஹஜ்ஜின் செயல்முறைகளில் நீங்கள் ஏற்படுத்திய மாற்றம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி), “நாம் அல்லாஹ்வின் வேதப்படி செயல்படுவதெனில், வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ், ‘அல்லாஹ்விற்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக்குங்கள்’ (2:196) என்று கூறுகின்றான். நாம் நம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செயல்படுவதெனில், நபி (ஸல்) குர்பானிப் பிராணிகளைப் பலியிடாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


குறிப்பு : அபூஉமைஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு பணி நிமித்தம்) என்னை யமன் நாட்டுக்கு அனுப்பியிருந்தார்கள். நான் சரியாக அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் அவர்களிடம் வந்துசேர்ந்தேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூமூஸா! நீர் இஹ்ராமின்போது எவ்வாறு (தல்பியா) சொன்னீர்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) எதற்காக இஹ்ராம் பூண்டுள்ளார்களோ அதற்காகவே நான் இஹ்ராம் பூணுகின்றேன் என்று (தல்பியா) சொன்னேன்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “நீர் (உம்முடன்) ஏதேனும் பலிப் பிராணி கொண்டு வந்துள்ளீரா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். “அவ்வாறாயின், நீர் சென்று இறையில்லத்தையும் ஸஃபா-மர்வாவையும் சுற்றி வந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்க” என்றார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.22, ஹதீஸ் எண்: 2143

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَارِقِ بْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏

‏قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏مُنِيخٌ ‏ ‏بِالْبَطْحَاءِ ‏ ‏فَقَالَ لِي ‏ ‏أَحَجَجْتَ فَقُلْتُ نَعَمْ فَقَالَ بِمَ ‏ ‏أَهْلَلْتَ ‏ ‏قَالَ قُلْتُ لَبَّيْكَ ‏ ‏بِإِهْلَالٍ ‏ ‏كَإِهْلَالِ ‏ ‏النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَقَدْ أَحْسَنْتَ طُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَأَحِلَّ قَالَ فَطُفْتُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ ‏ ‏بَنِي قَيْسٍ ‏ ‏فَفَلَتْ رَأْسِي ثُمَّ ‏ ‏أَهْلَلْتُ ‏ ‏بِالْحَجِّ قَالَ فَكُنْتُ أُفْتِي بِهِ النَّاسَ حَتَّى كَانَ فِي خِلَافَةِ ‏ ‏عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏فَقَالَ لَهُ رَجُلٌ يَا ‏ ‏أَبَا مُوسَى ‏ ‏أَوْ يَا ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ ‏ ‏رُوَيْدَكَ بَعْضَ فُتْيَاكَ فَإِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثَ أَمِيرُ الْمُؤْمِنِينَ فِي ‏ ‏النُّسُكِ ‏ ‏بَعْدَكَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ مَنْ كُنَّا أَفْتَيْنَاهُ فُتْيَا ‏ ‏فَلْيَتَّئِدْ ‏ ‏فَإِنَّ أَمِيرَ الْمُؤْمِنِينَ قَادِمٌ عَلَيْكُمْ فَبِهِ فَأْتَمُّوا قَالَ فَقَدِمَ ‏ ‏عُمَرُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّ كِتَابَ اللَّهِ يَأْمُرُ بِالتَّمَامِ وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمْ يَحِلَّ حَتَّى بَلَغَ ‏ ‏الْهَدْيُ ‏ ‏مَحِلَّهُ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

நான் (யமன் நாட்டிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் (துல்ஹுலைஃபாவில்) ‘அல்பத்ஹா’ பள்ளத்தாக்கில் தங்கியிருந்தார்கள். அவர்கள் என்னிடம், “ஹஜ் செய்வதற்காகவா வந்துள்ளீர்?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “நீர் எதற்காக இஹ்ராம் பூண்டீர்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) எதற்காக இஹ்ராம் பூண்டார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் பூண்டேன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நன்றே செய்தீர். நீர் (சென்று) இறையில்லம் கஅபாவை (தவாஃப்) சுற்றி, ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றி(தொங்கோட்டம் ஓடி)விட்டு, இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்க” என்றார்கள்.

அவ்வாறே நான் (சென்று) இறையில்லத்தையும் ஸஃபா-மர்வாவுக்கிடையேயும் சுற்றிவிட்டுப் பின்னர் பனூ கைஸ் குலத்தைச் சேர்ந்த (என் நெருங்கிய உறவினரான) ஒரு பெண்ணிடம் சென்றேன். அவர் எனது தலையில் பேன் பார்த்து விட்டார். பின்னர் (துல்ஹஜ் எட்டாவது நாளில்) நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டு தல்பியாச் சொன்னேன். இவ்வாறு (ஹஜ்ஜுக்காகச் செய்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளலாம் என்றே) நான் மக்களுக்குத் தீர்ப்பும் வழங்கி வந்தேன்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது என்னிடம் ஒருவர் வந்து, “அபூமூஸா! (அல்லது) அப்துல்லாஹ் பின் கைஸ்! உங்களது தீர்ப்பை நிறுத்தி வையுங்கள். ஏனெனில், உங்களுக்குப் பின்னர் இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா) ஹஜ்ஜின் செயல்முறைகளில் செய்துள்ள மாற்றத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்று கூறினார்.

அதன் பின்னர் நான், “மக்களே! நாம் யாருக்கேனும் மார்க்கத் தீர்ப்பு ஏதேனும் வழங்கியிருந்தால் (அதை உடனடியாக செயல்படுத்துவதை) அவர் நிறுத்தி வைக்கட்டும். ஏனெனில், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் உங்களிடம் வருவார். அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்” என்று கூறினேன்.

உமர் (ரலி) வந்ததும் அவர்களிடம் நான் நடந்ததைச் சொன்னேன். அதற்கு உமர் (ரலி) “நாம் அல்லாஹ்வின் வேதப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் வேதம் ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக்கும்படி கட்டளையிடுகிறது. நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பலிப் பிராணி தனது இடத்தை அடையாத வரை (அதாவது குர்பானி கொடுக்காத வரை) இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.21, ஹதீஸ் எண்: 79

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتَاكُمْ أَهْلُ ‏ ‏الْيَمَنِ ‏ ‏هُمْ أَلْيَنُ قُلُوبًا وَأَرَقُّ أَفْئِدَةً الْإِيمَانُ يَمَانٍ وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ رَأْسُ الْكُفْرِ قِبَلَ الْمَشْرِقِ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ رَأْسُ الْكُفْرِ قِبَلَ الْمَشْرِقِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏بِشْرُ بْنُ خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ يَعْنِي ابْنَ جَعْفَرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ مِثْلَ حَدِيثِ ‏ ‏جَرِيرٍ ‏ ‏وَزَادَ وَالْفَخْرُ وَالْخُيَلَاءُ فِي أَصْحَابِ الْإِبِلِ وَالسَّكِينَةُ وَالْوَقَارُ فِي أَصْحَابِ الشَّاءِ

“யமன் நாட்டவர் உங்களிடம் வந்திருக்கிறார்கள். அவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள்; மென்மையான தன்மை உடையவர்கள். இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். இறை மறுப்பின் தலைமைப் பீடம் கிழக்குத் திசையில் (தீவணங்கிகளின் பாரசீகத்தில்) உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அஃமஷ் (ரஹ்) இடம்பெறும் மேற்காணும் ஹதீஸ், ஜரீர் (ரஹ்) வழியாக அறிவிக்கப் படும்போது “இறைமறுப்பின் தலைமைப் பீடம் கிழக்குத் திசையில் இருக்கிறது” என்ற சொற்கள் இடம் பெறவில்லை. ஷுஃபா (ரஹ்) வழியாக வழியாக அறிவிக்கப் படும்போது, “தற்பெருமையும் ஆணவமும் ஒட்டக உரிமையாளர்களிடையே காணப்படும். அமைதியும் கம்பீரமும் ஆடுகளின் உரிமையாளர்களிடம் காணப்படும்” என்ற சொற்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளன.