அத்தியாயம்: 5, பாடம்: 51, ஹதீஸ் எண்: 1069

حَدَّثَنَا ‏ ‏عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعْتَمِرٌ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏كَهْمَسًا ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

أَرَادَ ‏ ‏بَنُو سَلِمَةَ ‏ ‏أَنْ يَتَحَوَّلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ قَالَ ‏ ‏وَالْبِقَاعُ ‏ ‏خَالِيَةٌ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏يَا ‏ ‏بَنِي سَلِمَةَ ‏ ‏دِيَارَكُمْ تُكْتَبْ ‏ ‏آثَارُكُمْ ‏ ‏فَقَالُوا مَا كَانَ يَسُرُّنَا أَنَّا كُنَّا تَحَوَّلْنَا

பனூஸலிமா குலத்தார் (நபிப்) பள்ளிவாசலுக்கு அருகில் குடியேற விரும்பினர். அங்கு (மனைகளுக்கான) வெற்று நிலமும் இருந்தது. இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “பனூஸலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும். உங்கள் காலடிகள் (நன்மைகளாகப்) பதிவு செய்யப்படும்” என்று கூறினார்கள். பனூஸலிமா குலத்தார், “நாங்கள் அவ்வாறு குடியேறியிருந்தால் எங்களுக்கு அது மகிழ்ச்சியளித்திருக்காது” என்று கூறினர்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 51, ஹதீஸ் எண்: 1068

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏يُحَدِّثُ قَالَ حَدَّثَنِي ‏ ‏الْجُرَيْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

خَلَتْ ‏ ‏الْبِقَاعُ ‏ ‏حَوْلَ الْمَسْجِدِ فَأَرَادَ ‏ ‏بَنُو سَلِمَةَ ‏ ‏أَنْ يَنْتَقِلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَهُمْ ‏ ‏إِنَّهُ بَلَغَنِي أَنَّكُمْ تُرِيدُونَ أَنْ تَنْتَقِلُوا قُرْبَ الْمَسْجِدِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَرَدْنَا ذَلِكَ فَقَالَ يَا ‏ ‏بَنِي سَلِمَةَ ‏ ‏دِيَارَكُمْ تُكْتَبْ ‏ ‏آثَارُكُمْ ‏ ‏دِيَارَكُمْ تُكْتَبْ ‏ ‏آثَارُكُمْ

(நபிப்) பள்ளிவாசலைச் சுற்றிலும் வெற்றிடம் இருந்தது. பனூஸலிமா குலத்தார் பள்ளிவாசலுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “நீங்கள் பள்ளிவாசலுக்கு அருகில் குடிபெயரப்போவதாக நான் அறிந்தேனே (அது உண்மையா)?”என்று கேட்டார்கள். அதற்கு பனூஸலிமா குலத்தார் “ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவ்வாறு விரும்பினோம்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல், “பனூஸலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (நன்மைகளாகப்) பதிவு செய்யப்படும்; உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (நன்மைகளாகப்) பதிவு செய்யப்படும்” என்று (இருமுறை) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 51, ஹதீஸ் எண்: 1067

‏و حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

كَانَتْ دِيَارُنَا نَائِيَةً عَنْ الْمَسْجِدِ فَأَرَدْنَا أَنْ نَبِيعَ بُيُوتَنَا فَنَقْتَرِبَ مِنْ الْمَسْجِدِ فَنَهَانَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنَّ لَكُمْ بِكُلِّ خَطْوَةٍ دَرَجَةً

எங்கள் குடியிருப்புகள் (நபிப்) பள்ளிவாசலுக்குத் தொலைவில் அமைந்திருந்தன. ஆகவே, நாங்கள் எங்கள் வீடுகளை விற்றுவிட்டுப் பள்ளிவாசலுக்கு அருகில் குடியேற விரும்பினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறு செய்ய வேண்டாம்” என எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், “உங்களது ஒவ்வொரு காலடிக்கும் உங்களுக்கு ஓர் உயர்தகுதி உண்டு” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 51, ஹதீஸ் எண்: 1066

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبَّادُ بْنُ عَبَّادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَاصِمٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أُبَيِّ بْنِ كَعْبٍ ‏ ‏قَالَ ‏

كَانَ رَجُلٌ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏بَيْتُهُ أَقْصَى بَيْتٍ فِي ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏فَكَانَ لَا ‏ ‏تُخْطِئُهُ ‏ ‏الصَّلَاةُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَتَوَجَّعْنَا لَهُ فَقُلْتُ لَهُ يَا فُلَانُ لَوْ أَنَّكَ اشْتَرَيْتَ حِمَارًا يَقِيكَ مِنْ ‏ ‏الرَّمْضَاءِ ‏ ‏وَيَقِيكَ مِنْ ‏ ‏هَوَامِّ ‏ ‏الْأَرْضِ قَالَ ‏ ‏أَمَ وَاللَّهِ مَا أُحِبُّ أَنَّ بَيْتِي ‏ ‏مُطَنَّبٌ ‏ ‏بِبَيْتِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏فَحَمَلْتُ بِهِ حِمْلًا ‏ ‏حَتَّى أَتَيْتُ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَخْبَرْتُهُ قَالَ فَدَعَاهُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ وَذَكَرَ لَهُ أَنَّهُ يَرْجُو فِي ‏ ‏أَثَرِهِ ‏ ‏الْأَجْرَ فَقَالَ لَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ لَكَ مَا ‏ ‏احْتَسَبْتَ ‏

و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ عَمْرٍو الْأَشْعَثِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ أَزْهَرَ الْوَاسِطِيُّ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

அன்சாரிகளில் ஒருவருடைய வீடு மதீனாவிலேயே (பள்ளிவாசலுக்கு) வெகு தொலைவில் அமைந்திருந்தது. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எல்லாத் தொழுகைகளிலும் தவறாமல் கலந்துகொள்வார். நாங்கள் அவருக்காக அனுதாபப்பட்டோம். இதையடுத்து அவரிடம் நான், “இன்னாரே! நீங்கள் கழுதையொன்றை வாங்கிக் கொண்டால் நன்றாயிருக்குமே! கடும் வெப்பத்திலிருந்தும் விஷஜந்துக்களிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளலாமே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அறிவீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! எனது இல்லம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இல்லத்துடன் (இணைத்துக்) கட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் விரும்பவில்லை” என்று கூறினார். அவர் அவ்வாறு கூறியது எனக்கு மிகுந்த மன வேதனையளிக்கவே நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தேன். நபி (ஸல்), அவரை அழைத்(து விசாரித்)தார்கள். அவர் முன்பு (என்னிடம்) கூறியதைப் போன்றே கூறினார். மேலும், தம் கால் சுவடுகளுக்கு நன்மை பதிவு செய்யப்பட வேண்டுமெனத் தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் எதிர்பார்த்த நன்மை உங்களுக்கு உண்டு” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 51, ஹதீஸ் எண்: 1065

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْثَرٌ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أُبَيِّ بْنِ كَعْبٍ ‏ ‏قَالَ ‏

كَانَ رَجُلٌ لَا أَعْلَمُ رَجُلًا أَبْعَدَ مِنْ الْمَسْجِدِ مِنْهُ وَكَانَ لَا ‏ ‏تُخْطِئُهُ ‏ ‏صَلَاةٌ قَالَ فَقِيلَ لَهُ أَوْ قُلْتُ لَهُ لَوْ اشْتَرَيْتَ حِمَارًا تَرْكَبُهُ فِي الظَّلْمَاءِ وَفِي ‏ ‏الرَّمْضَاءِ ‏ ‏قَالَ مَا يَسُرُّنِي أَنَّ مَنْزِلِي ‏ ‏إِلَى جَنْبِ الْمَسْجِدِ إِنِّي أُرِيدُ أَنْ يُكْتَبَ لِي ‏ ‏مَمْشَايَ إِلَى الْمَسْجِدِ وَرُجُوعِي إِذَا رَجَعْتُ إِلَى أَهْلِي فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ جَمَعَ اللَّهُ لَكَ ذَلِكَ كُلَّهُ ‏

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏التَّيْمِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏بِنَحْوِهِ

(நபிப்) பள்ளிவாசலுக்கு வெகுதொலைவிலிருந்து நடந்துவரும் ஒருவர் இருந்தார். அவரைவிட அதிகத் தொலைவிலிருந்து (தொழுகைக்கு) வரும் வேறு எவரையும் நான் அறிந்திருக்கவில்லை. அவர் எந்தவொரு தொழுகையையும் தவறவிடமாட்டார். அவரிடம், “நீங்கள் ஒரு கழுதை வாங்கிக்கொண்டால் நன்றாயிருக்குமே! அதன்மீது பயணம் செய்து இருளிலும் வெயிலிலும் (விரைந்து தொழுகைக்கு) வரலாமே?” என்று கேட்டேன்/கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எனது இல்லம் பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது. (ஏனெனில்,) நான் பள்ளிவாசலுக்கு நடந்துவரும்போதும் திரும்பி இல்லத்தாரிடம் செல்லும்போதும் (நன்மைகள்) எனக்குப் பதிவு செய்யப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவை அனைத்தையும் சேர்த்து அல்லாஹ் உங்களுக்கு வழங்கிவிட்டான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 51, ஹதீஸ் எண்: 1064

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الْأَشْعَرِيُّ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏بُرَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ أَعْظَمَ النَّاسِ أَجْرًا فِي الصَّلَاةِ أَبْعَدُهُمْ إِلَيْهَا مَمْشًى فَأَبْعَدُهُمْ وَالَّذِي يَنْتَظِرُ الصَّلَاةَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الْإِمَامِ أَعْظَمُ أَجْرًا مِنْ الَّذِي يُصَلِّيهَا ثُمَّ يَنَامُ ‏

وَفِي رِوَايَةِ ‏ ‏أَبِي كُرَيْبٍ ‏ ‏حَتَّى يُصَلِّيَهَا مَعَ الْإِمَامِ فِي جَمَاعَةٍ

“மக்களில் தொழுகைக்கான அதிக நன்மைகளை அடைந்து கொள்பவர், வெகு தொலைவிலிருந்து நடந்துவருபவர் ஆவார். அடுத்து, அதற்குக் குறைவான தொலைவிலிருந்து வருபவர் ஆவார். இமாமுடன் தொழக் காத்திருப்பவர், (தனியாகத்) தொழுதுவிட்டு உறங்கிவிடுபவரைவிட அதிக நன்மை அடைபவராவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

குறிப்பு :

அபூகுரைப் (ரஹ்) வழி அறிவிப்பில் அதிக நன்மையடைவரைப் பற்றி, “இமாமுடன் ஜமாஅத்தாகத் தொழக் காத்திருப்பவர்” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.