அத்தியாயம்: 1, பாடம்: 38, ஹதீஸ் எண்: 130

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مِنْ الْكَبَائِرِ شَتْمُ الرَّجُلِ وَالِدَيْهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَهَلْ يَشْتِمُ الرَّجُلُ وَالِدَيْهِ قَالَ نَعَمْ يَسُبُّ أَبَا الرَّجُلِ فَيَسُبُّ أَبَاهُ وَيَسُبُّ أُمَّهُ فَيَسُبُّ أُمَّهُ ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏

“ஒருவர் தம் பெற்றோரை ஏசுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! பெற்ற தாய்-தந்தையை எவரும் ஏசுவரோ?” என்று (நபித்தோழர்கள்) கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம். ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர், இவருடைய தந்தையை ஏசுவார். ஒருவர் இன்னொருவரின் தாயை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர், இவருடைய தாயை ஏசுவார்” என்று கூறினார்கள். (பிறரின் தாய்-தந்தையரை இழித்துப் பேசக் கூடாது என்பது இந்த ஹதீஸ் தரும் கருத்தாகும்).

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரிப்னுல் ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 38, ஹதீஸ் எண்: 129

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَوْرِ بْنِ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْغَيْثِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏اجْتَنِبُوا السَّبْعَ ‏ ‏الْمُوبِقَاتِ ‏ ‏قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَأَكْلُ الرِّبَا ‏ ‏وَالتَّوَلِّي ‏ ‏يَوْمَ ‏ ‏الزَّحْفِ ‏ ‏وَقَذْفُ ‏ ‏الْمُحْصِنَاتِ ‏ ‏الْغَافِلَاتِ الْمُؤْمِنَات

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பாவங்களைத் தவிர்த்திடுவீர்!” என்று கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?” என்று கேட்கப்பட்டது.
“அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது,
சூனியம் செய்வது,
(சட்டபூர்வமான) உரிமையின்றி கொல்லக்கூடாது என்று அல்லாஹ் தடை விதித்துள்ள உயிரைக் கொல்வது,
அநாதைகளின் செல்வத்தை உண்பது,
வட்டி உண்பது,
போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது,
இறை நம்பிக்கை கொண்ட, குற்றமற்றப் பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவைதாம் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 38, ஹதீஸ் எண்: 128

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ بْنِ عَبْدِ الْحَمِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏قَالَ: ‏

ذَكَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْكَبَائِرَ أَوْ سُئِلَ عَنْ الْكَبَائِرِ فَقَالَ ‏ ‏الشِّرْكُ بِاللَّهِ وَقَتْلُ النَّفْسِ ‏ ‏وَعُقُوقُ ‏ ‏الْوَالِدَيْنِ وَقَالَ أَلَا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ قَالَ قَوْلُ ‏ ‏الزُّورِ ‏ ‏أَوْ قَالَ شَهَادَةُ ‏ ‏الزُّورِ ‏


قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏وَأَكْبَرُ ظَنِّي أَنَّهُ شَهَادَةُ ‏ ‏الزُّورِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெரும் பாவங்கள் பற்றிக் கூறினார்கள் அல்லது பெரும் பாவங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டபோது, “அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெருபாவங்களாகும்)” என்று கூறினார்கள். பிறகு “பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவம் ஒன்றை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா?” என்று கேட்டு விட்டு, “பொய் பேசுவது அல்லது பொய் சாட்சி கூறுவதுதான் (அது)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

அறிவிப்பாளர்கள் வரிசையில் இடம் பெறுபவர்களுள் ஒருவரான ஷுஅபா (ரஹ்), “(அது) ‘பொய் சாட்சி’ என்ற சொல்தான் என்று நான் கருதுகிறேன்” என்று குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 1, பாடம்: 38, ஹதீஸ் எண்: 127

و حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ :‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْكَبَائِرِ قَالَ ‏ ‏الشِّرْكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَقَتْلُ النَّفْسِ وَقَوْلُ الزُّورِ ‏

“அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, கொலை செய்வது, பொய் பேசுவது ஆகியவை பெரும்பாவங்களில் அடங்கும்” என நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 38, ஹதீஸ் எண்: 126

حَدَّثَنِي ‏ ‏عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ بُكَيْرِ بْنِ مُحَمَّدٍ النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ الْجُرَيْرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏

كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَلَا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ثَلَاثًا الْإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَشَهَادَةُ الزُّورِ ‏ ‏أَوْ قَوْلُ الزُّورِ ‏ ‏وَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُتَّكِئًا فَجَلَسَ فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ ‏

நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், “பெரும் பாவங்களுள் மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா?” என்று (மூன்று முறை) கேட்டார்கள். பின்னர், சாய்ந்து கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எழுந்தமர்ந்து, “அவை, அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோர் மனத்தைப் புண்படுத்துவது, பொய் சாட்சியம் சொல்வது அல்லது பொய் பேசுவது” என்று திரும்பத் திரும்ப – அவர்கள் நிறுத்த மாட்டார்களா என்று நாங்கள் எண்ணுமளவுக்கு – கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி)