அத்தியாயம்: 1, பாடம்: 41, ஹதீஸ் எண்: 139

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏وَاللَّفْظُ مُتَقَارِبٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ الْخِيَارِ ‏ ‏عَنْ ‏ ‏الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ ‏ ‏أَنَّهُ أَخْبَرَهُ ‏
‏أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ لَقِيتُ رَجُلًا مِنْ الْكُفَّارِ فَقَاتَلَنِي فَضَرَبَ إِحْدَى يَدَيَّ بِالسَّيْفِ فَقَطَعَهَا ثُمَّ ‏ ‏لَاذَ ‏ ‏مِنِّي بِشَجَرَةٍ فَقَالَ أَسْلَمْتُ لِلَّهِ أَفَأَقْتُلُهُ يَا رَسُولَ اللَّهِ بَعْدَ أَنْ قَالَهَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَقْتُلْهُ قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ قَدْ قَطَعَ يَدِي ثُمَّ قَالَ ذَلِكَ بَعْدَ أَنْ قَطَعَهَا أَفَأَقْتُلُهُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَقْتُلْهُ فَإِنْ قَتَلْتَهُ فَإِنَّهُ بِمَنْزِلَتِكَ قَبْلَ أَنْ تَقْتُلَهُ وَإِنَّكَ بِمَنْزِلَتِهِ قَبْلَ أَنْ يَقُولَ كَلِمَتَهُ الَّتِي قَالَ ‏
‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَمَّا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏وَابْنُ جُرَيْجٍ ‏ ‏فَفِي حَدِيثِهِمَا قَالَ أَسْلَمْتُ لِلَّهِ كَمَا قَالَ ‏ ‏اللَّيْثُ ‏ ‏فِي حَدِيثِهِ ‏ ‏وَأَمَّا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏فَفِي حَدِيثِهِ فَلَمَّا أَهْوَيْتُ لِأَقْتُلَهُ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ ثُمَّ الْجُنْدَعِيُّ ‏ ‏أَنَّ ‏ ‏عُبَيْدَ اللَّهِ بْنَ عَدِيِّ بْنِ الْخِيَارِ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏الْمِقْدَادَ بْنَ عَمْرِو بْنِ الْأَسْوَدِ الْكِنْدِيَّ ‏ ‏وَكَانَ حَلِيفًا ‏ ‏لِبَنِي زُهْرَةَ ‏ ‏وَكَانَ مِمَّنْ شَهِدَ ‏ ‏بَدْرًا ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ لَقِيتُ رَجُلًا مِنْ الْكُفَّارِ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏اللَّيْثِ

அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் ஒருவனை நான் எதிர் கொண்டேன். அவன் என்னோடு சண்டையிட்டு, எனது ஒரு கையை வாளால் வெட்டி விட்டான். பின்னர், என்னை விட்டு ஓடிப்போய் ஒரு மரத்துக்குப்பின் ஒளிந்து கொண்டு, “அல்லாஹ்வுக்குக் கட்டுப் பட்டேன்” என்று கூறினான். அல்லாஹ்வின் தூதரே! (என் கேள்வி என்னவெனில்) அவன் அவ்வாறு சொன்ன பிறகு அவனை நான் கொல்லலாமா? என்று கேட்டேன். “நீ அவனைக் கொல்லக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் மீண்டும், அவன் என் கையை வெட்டிய பிறகு (என்னிடமிருந்து தப்பிக்கும் நோக்கில்) அவ்வாறு கூறினான் என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவனை நீ கொல்லக் கூடாது. நீ அவனைக் கொன்றால் அவனைக் கொல்வதற்கு முன்னர் நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்து விடுவான். அவனது (அல்லாஹ்வுக்குக் கட்டுப் பட்டேன் என்ற கலிமாச்) சொல்லைச் சொல்வதற்கு முன்னர் அவனிருந்த நிலைக்கு நீ சென்று விடுவாய்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மிக்தாத் அல்-அஸ்வத் (ரலி).

குறிப்பு : “நான் அவனைக் கொல்ல முயன்றபோதுதான் லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறினான்” என்று மிக்தாத் (ரலி) அல்லாஹ்வின் தூதரிடன் வினவியதாக மஅமர் (ரஹ்) அவர்கள் வழி அறிவிப்பில் காணப் படுகிறது.

Share this Hadith:

Leave a Comment