அத்தியாயம்: 1, பாடம்: 41, ஹதீஸ் எண்: 142

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ خِرَاشٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ عَاصِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعْتَمِرٌ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏يُحَدِّثُ أَنَّ ‏ ‏خَالِدًا الْأَثْبَجَ ‏ ‏ابْنَ أَخِي ‏ ‏صَفْوَانَ بْنِ مُحْرِزٍ ‏ ‏حَدَّثَ عَنْ ‏ ‏صَفْوَانَ بْنِ مُحْرِزٍ ‏ ‏أَنَّهُ حَدَّثَ ‏:‏

أَنَّ ‏ ‏جُنْدَبَ بْنَ عَبْدِ اللَّهِ الْبَجَلِيَّ ‏ ‏بَعَثَ إِلَى ‏ ‏عَسْعَسِ بْنِ سَلَامَةَ ‏ ‏زَمَنَ فِتْنَةِ ‏ ‏ابْنِ الزُّبَيْرِ ‏ ‏فَقَالَ اجْمَعْ لِي نَفَرًا مِنْ إِخْوَانِكَ حَتَّى أُحَدِّثَهُمْ فَبَعَثَ رَسُولًا إِلَيْهِمْ فَلَمَّا اجْتَمَعُوا جَاءَ ‏ ‏جُنْدَبٌ ‏ ‏وَعَلَيْهِ بُرْنُسٌ أَصْفَرُ فَقَالَ تَحَدَّثُوا بِمَا كُنْتُمْ تَحَدَّثُونَ بِهِ حَتَّى دَارَ الْحَدِيثُ فَلَمَّا دَارَ الْحَدِيثُ إِلَيْهِ حَسَرَ الْبُرْنُسَ عَنْ رَأْسِهِ فَقَالَ إِنِّي أَتَيْتُكُمْ وَلَا أُرِيدُ أَنْ أُخْبِرَكُمْ عَنْ نَبِيِّكُمْ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَ بَعْثًا مِنْ الْمُسْلِمِينَ إِلَى قَوْمٍ مِنْ الْمُشْرِكِينَ وَإِنَّهُمْ الْتَقَوْا فَكَانَ رَجُلٌ مِنْ الْمُشْرِكِينَ إِذَا شَاءَ أَنْ يَقْصِدَ إِلَى رَجُلٍ مِنْ الْمُسْلِمِينَ قَصَدَ لَهُ فَقَتَلَهُ وَإِنَّ رَجُلًا مِنْ الْمُسْلِمِينَ قَصَدَ غَفْلَتَهُ قَالَ وَكُنَّا نُحَدَّثُ أَنَّهُ ‏ ‏أُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏فَلَمَّا رَفَعَ عَلَيْهِ السَّيْفَ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَقَتَلَهُ فَجَاءَ ‏ ‏الْبَشِيرُ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَهُ فَأَخْبَرَهُ حَتَّى أَخْبَرَهُ خَبَرَ الرَّجُلِ كَيْفَ صَنَعَ فَدَعَاهُ فَسَأَلَهُ فَقَالَ ‏ ‏لِمَ قَتَلْتَهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَوْجَعَ فِي الْمُسْلِمِينَ وَقَتَلَ فُلَانًا وَفُلَانًا وَسَمَّى لَهُ نَفَرًا وَإِنِّي حَمَلْتُ عَلَيْهِ فَلَمَّا رَأَى السَّيْفَ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَقَتَلْتَهُ قَالَ نَعَمْ قَالَ فَكَيْفَ تَصْنَعُ ‏ ‏بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ إِذَا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ قَالَ يَا رَسُولَ اللَّهِ اسْتَغْفِرْ لِي قَالَ وَكَيْفَ تَصْنَعُ ‏ ‏بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ إِذَا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ قَالَ فَجَعَلَ لَا يَزِيدُهُ عَلَى أَنْ يَقُولَ كَيْفَ تَصْنَعُ ‏ ‏بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ إِذَا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ

ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி), அஸ்அஸ் பின் ஸலமா (ரஹ்) அவர்களிடம், “உங்களுடைய சகோதரர்களைச் சார்ந்தோரை எனக்காக ஒன்று திரட்டுங்கள்; அவர்களிடம் நான் பேசவேண்டும்” என்று சொல்லி அனுப்பினார்கள். இது, அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது காலத்தில் நடந்த ஒரு சண்டையின் போது நடந்தது. அஸ்அஸ் ஒரு தூதுவரை (தம் சகோதரர்களை அழைத்து வருமாறு) அவர்களிடம் அனுப்பி வைத்தார். அவ்வாறே அவர்கள் ஒன்று கூடியதும் ஒரு மஞ்சள் நிறத் தலைத்துணியை (முக்காடிட்டு) அணிந்தவர்களாக ஜுன்தப் (ரலி) (அவர்களிடம்) வந்து, “நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை(த் தொடர்ந்து)ப் பேசுங்கள்” என்று சொன்னார்கள். அதையடுத்து கூடியிருந்தோரின் பேச்சு ஒரு சுற்று வந்தது. ஜுன்தப் (ரலி) பேச வேண்டிய முறை வந்தபோது, அவர்கள் தமது தலையிலிருந்த முக்காட்டை விலக்கிவிட்டு, “நான் உங்களிடம் வரும்போது உங்களுக்கு உங்களுடைய நபிச்செய்தி ஒன்றை அறிவிக்க வேண்டும் என்ற நினைப்புடன் வரவில்லை. (ஆனால், இப்போது கேளுங்கள்:)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இணைவைப்பாளர்களில் ஒரு கூட்டத்தாரை நோக்கி முஸ்லிம்களின் படைப்பிரிவொன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் (அக்கூட்டத்தாரிடம் சென்று) அவர்களை(ப் போர்க்களத்தில்) சந்தித்தனர். அப்போது இணைவைப்பாளர்களில் ஒருவர், முஸ்லிம்களில் பலரை நினைத்த மாத்திரத்தில் தாக்கிக் கொன்று போட்டுக் கொண்டிருந்தார். அந்த இக்கட்டான சூழலில், முஸ்லிம் வீரர்களில் ஒருவர் – அவர் உஸாமா பின் ஸைத் என்று நாங்கள் சொல்வோம் – அந்த எதிரி அயரும் வேளை காத்திருந்து, அவர் மீது வாளை உயர்த்தியபோது அவர், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று (ஏகத்துவ உறுதிமொழியைக்) கூறினார். ஆனால் (அதைப் பொருட்படுத்தாமல்) உஸாமா (ரலி) அவரைக் கொன்று விட்டார். (அந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்) அந்த வெற்றியை அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தவரிடம் நபி (ஸல்) அந்தப் போரின் நிலவரம் குறித்து விசாரித்தார்கள். அப்போது நடந்த நிகழ்ச்சிகளையும் (கொல்லப்பட்ட) அந்த மனிதர் நடந்து கொண்ட விதம் பற்றியும் தெரிவித்தார். ஆகவே, நபி(ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களை வரவழைத்து “நீ ஏன் அவரைக் கொன்றாய்?” என்று கேட்டார்கள். உஸாமா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! அம்மனிதர் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்தினார். (சில முஸ்லிம் வீரர்களது பெயரைக் குறிப்பிட்டு) இன்னார் இன்னாரை அவர் கொன்று விட்டார். ஆகவே அவரை நான் தாக்கினேன். அவர் வாளைக் கண்டதும் (பயந்து போய்) ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறினார்” என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அவரை நீ கொன்றுவிட்டாயா?” என்று கேட்டார்கள். உஸாமா(ரலி) அவர்கள் “ஆம்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “(அவர் ஏற்றுக் கொண்ட ஏகத்துவ உறுதிமொழியான) லா இலாஹ இல்லல்லாஹ் மறுமை நாளில் (உனக்கெதிரான சாட்சியாக) வரும்போது நீ என்ன செய்வாய்?” என்று திரும்பத் திரும்பக் என்னைக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 41, ஹதீஸ் எண்: 141

حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حُصَيْنٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو ظِبْيَانَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أُسَامَةَ بْنَ زَيْدِ بْنِ حَارِثَةَ ‏ ‏يُحَدِّثُ قَالَ :‏ ‏

بَعَثَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏الْحُرَقَةِ ‏ ‏مِنْ ‏ ‏جُهَيْنَةَ ‏ ‏فَصَبَّحْنَا الْقَوْمَ فَهَزَمْنَاهُمْ وَلَحِقْتُ أَنَا وَرَجُلٌ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏رَجُلًا ‏ ‏مِنْهُمْ فَلَمَّا غَشِينَاهُ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَكَفَّ عَنْهُ الْأَنْصَارِيَّ وَطَعَنْتُهُ بِرُمْحِي حَتَّى قَتَلْتُهُ قَالَ فَلَمَّا قَدِمْنَا بَلَغَ ذَلِكَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لِي يَا ‏ ‏أُسَامَةُ ‏ ‏أَقَتَلْتَهُ بَعْدَ مَا قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا كَانَ مُتَعَوِّذًا قَالَ فَقَالَ أَقَتَلْتَهُ بَعْدَ مَا قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ فَمَا زَالَ يُكَرِّرُهَا عَلَيَّ حَتَّى تَمَنَّيْتُ أَنِّي لَمْ أَكُنْ أَسْلَمْتُ قَبْلَ ذَلِكَ الْيَوْمِ

எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஹுரக்காக் கூட்டத்தாரிடம் (போருக்காக) அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தரை அடைந்து, ஒரு காலைப் பொழுதில் அவர்களை எதிர் கொண்டோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்ஸாரிகளில் ஒருவரும் எதிரிகளைச் சேர்ந்த ஒருவரைச் சுற்றி வளைத்துக் கொண்டபோது, “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று அவர் சொல்ல, அன்ஸாரித் தோழர் (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி எட்டவே அவர்கள் என்னிடம் “உஸாமா! அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று (ஏகத்துவக் கலிமாவை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?” என்று கேட்டார்கள். நான், “அவர் தம் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கு (அவ்வாறு) கூறினார்” என்று சொன்னேன். நபி (ஸல்), “அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று (ஏகத்துவக் கலிமாவை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?” என்று (மீண்டும்) கேட்டார்கள்; நான் (அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்று எண்ணுமளவுக்கு நபி (ஸல்) அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர்: உஸாமா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 41, ஹதீஸ் எண்: 140

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ظِبْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدٍ ‏ ‏وَهَذَا حَدِيثُ ‏ ‏ابْنِ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ ‏:‏

بَعَثَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَرِيَّةٍ فَصَبَّحْنَا ‏ ‏الْحُرَقَاتِ ‏ ‏مِنْ ‏ ‏جُهَيْنَةَ ‏ ‏فَأَدْرَكْتُ ‏ ‏رَجُلًا ‏ ‏فَقَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَطَعَنْتُهُ فَوَقَعَ فِي نَفْسِي مِنْ ذَلِكَ فَذَكَرْتُهُ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَقَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَقَتَلْتَهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا قَالَهَا خَوْفًا مِنْ السِّلَاحِ قَالَ أَفَلَا شَقَقْتَ عَنْ قَلْبِهِ حَتَّى تَعْلَمَ أَقَالَهَا أَمْ لَا فَمَا زَالَ يُكَرِّرُهَا عَلَيَّ حَتَّى تَمَنَّيْتُ أَنِّي أَسْلَمْتُ يَوْمَئِذٍ قَالَ فَقَالَ ‏ ‏سَعْدٌ ‏ ‏وَأَنَا وَاللَّهِ لَا أَقْتُلُ مُسْلِمًا حَتَّى يَقْتُلَهُ ذُو الْبُطَيْنِ ‏ ‏يَعْنِي ‏ ‏أُسَامَةَ ‏ ‏قَالَ قَالَ رَجُلٌ أَلَمْ يَقُلْ اللَّهُ [وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّه] ‏فَقَالَ ‏ ‏سَعْدٌ ‏ ‏قَدْ قَاتَلْنَا حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَأَنْتَ وَأَصْحَابُكَ تُرِيدُونَ أَنْ تُقَاتِلُوا حَتَّى تَكُونُ فِتْنَةٌ ‏

ஒரு போருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களைப் படைப்பிரிவொன்றில் அனுப்பி வைத்தார்கள். ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஹுரக்காத் கூட்டத்தரை அடைந்து, ஒரு காலைப் பொழுதில் அவர்களை எதிர் கொண்டோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) நான் ஒருவரை எதிர் கொண்டேன். (அவர் சுற்றி வளைக்கப் பட்டபோது) “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்னார். (இருப்பினும்) நான் (எனது ஈட்டியால்) அவரைத் தாக்கி(க் கொன்று) விட்டேன். ஆனால் அது என் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. (போரிலிருந்து திரும்பி வந்த போது) நான் இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “லா இலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்ன பிறகுமா அவரை நீ கொன்றாய்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஆயுதத்துக்கு அஞ்சித்தான் அவர் அவ்வாறு சொன்னார்” என்று கூறினேன். “அவர் அதை (உளப்பூர்வமாக) சொன்னாரா இல்லையா என்று அறிய அவரது இதயத்தை நீ பிளந்து பார்த்தாயா?” என்று (கடிந்து) கேட்டார்கள்; நான் (அதற்கு முன் இஸ்லாத்தை ஏற்றிராமல்) அன்றைய தினத்தில் இஸ்லாத்தை ஏற்றிருந்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணுமளவுக்கு அந்தக் கேள்வியையே என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

எனவேதான், ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எந்த முஸ்லிமுடன் போரிடுவதாக இருந்தாலும் அவருடன் இந்த ‘வயிறு சிறுத்த’ உஸாமா போரிடாதவரை நான் போரிட மாட்டேன்” என்று கூறினார்கள். அப்போது ஒருவர் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், “(முஃமின்களே! இறைமறுப்பாளர்கள் உருவாக்கும்) குழப்பம் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே என்றாகும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள் …(8:39) என்று அல்லாஹ் கூறவில்லையா?” என்று கேட்டார். அதற்கு ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி), “குழப்பம் முற்றிலும் நீங்கிவிடவேண்டும் என்பதற்காக நாங்கள் போரிட்டோம். ஆனால், நீரும் உம் தோழர்களும் குழப்பம் உருவாக வேண்டும் என்பதற்காகப் போரை விரும்புகிறீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 41, ஹதீஸ் எண்: 139

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏وَاللَّفْظُ مُتَقَارِبٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ الْخِيَارِ ‏ ‏عَنْ ‏ ‏الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ ‏ ‏أَنَّهُ أَخْبَرَهُ ‏:‏

أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ لَقِيتُ رَجُلًا مِنْ الْكُفَّارِ فَقَاتَلَنِي فَضَرَبَ إِحْدَى يَدَيَّ بِالسَّيْفِ فَقَطَعَهَا ثُمَّ ‏ ‏لَاذَ ‏ ‏مِنِّي بِشَجَرَةٍ فَقَالَ أَسْلَمْتُ لِلَّهِ أَفَأَقْتُلُهُ يَا رَسُولَ اللَّهِ بَعْدَ أَنْ قَالَهَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَقْتُلْهُ قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ قَدْ قَطَعَ يَدِي ثُمَّ قَالَ ذَلِكَ بَعْدَ أَنْ قَطَعَهَا أَفَأَقْتُلُهُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَقْتُلْهُ فَإِنْ قَتَلْتَهُ فَإِنَّهُ بِمَنْزِلَتِكَ قَبْلَ أَنْ تَقْتُلَهُ وَإِنَّكَ بِمَنْزِلَتِهِ قَبْلَ أَنْ يَقُولَ كَلِمَتَهُ الَّتِي قَالَ ‏


حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَمَّا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏وَابْنُ جُرَيْجٍ ‏ ‏فَفِي حَدِيثِهِمَا قَالَ أَسْلَمْتُ لِلَّهِ كَمَا قَالَ ‏ ‏اللَّيْثُ ‏ ‏فِي حَدِيثِهِ ‏ ‏وَأَمَّا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏فَفِي حَدِيثِهِ فَلَمَّا أَهْوَيْتُ لِأَقْتُلَهُ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ ثُمَّ الْجُنْدَعِيُّ ‏ ‏أَنَّ ‏ ‏عُبَيْدَ اللَّهِ بْنَ عَدِيِّ بْنِ الْخِيَارِ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏الْمِقْدَادَ بْنَ عَمْرِو بْنِ الْأَسْوَدِ الْكِنْدِيَّ ‏ ‏وَكَانَ حَلِيفًا ‏ ‏لِبَنِي زُهْرَةَ ‏ ‏وَكَانَ مِمَّنْ شَهِدَ ‏ ‏بَدْرًا ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ لَقِيتُ رَجُلًا مِنْ الْكُفَّارِ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏اللَّيْثِ

அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் ஒருவனை நான் எதிர் கொண்டேன். அவன் என்னோடு சண்டையிட்டு, எனது ஒரு கையை வாளால் வெட்டிவிட்டான். பின்னர், என்னை விட்டு ஓடிப்போய் ஒரு மரத்துக்குப்பின் ஒளிந்து கொண்டு, “அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டேன்” என்று கூறினான். அல்லாஹ்வின் தூதரே! (என் கேள்வி என்னவெனில்) அவன் அவ்வாறு சொன்ன பிறகு அவனை நான் கொல்லலாமா? என்று கேட்டேன். “நீ அவனைக் கொல்லக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். நான் மீண்டும், அவன் என் கையை வெட்டிய பிறகு (என்னிடமிருந்து தப்பிக்கும் நோக்கில்) அவ்வாறு கூறினான் என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவனை நீ கொல்லக் கூடாது. நீ அவனைக் கொன்றால் அவனைக் கொல்வதற்கு முன்னர் நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்து விடுவான். அவனது (அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டேன் என்ற கலிமாச்) சொல்லைச் சொல்வதற்கு முன்னர் அவனிருந்த நிலைக்கு நீ சென்று விடுவாய்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மிக்தாத் அல்-அஸ்வத் (ரலி)


குறிப்பு :

“நான் அவனைக் கொல்ல முயன்றபோதுதான் லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறினான்” என்று மிக்தாத் (ரலி) அல்லாஹ்வின் தூதரிடன் வினவியதாக மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில் காணப்படுகிறது.