حَدَّثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا حُصَيْنٌ حَدَّثَنَا أَبُو ظِبْيَانَ قَالَ سَمِعْتُ أُسَامَةَ بْنَ زَيْدِ بْنِ حَارِثَةَ يُحَدِّثُ قَالَ :
بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْحُرَقَةِ مِنْ جُهَيْنَةَ فَصَبَّحْنَا الْقَوْمَ فَهَزَمْنَاهُمْ وَلَحِقْتُ أَنَا وَرَجُلٌ مِنْ الْأَنْصَارِ رَجُلًا مِنْهُمْ فَلَمَّا غَشِينَاهُ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَكَفَّ عَنْهُ الْأَنْصَارِيَّ وَطَعَنْتُهُ بِرُمْحِي حَتَّى قَتَلْتُهُ قَالَ فَلَمَّا قَدِمْنَا بَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي يَا أُسَامَةُ أَقَتَلْتَهُ بَعْدَ مَا قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا كَانَ مُتَعَوِّذًا قَالَ فَقَالَ أَقَتَلْتَهُ بَعْدَ مَا قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ فَمَا زَالَ يُكَرِّرُهَا عَلَيَّ حَتَّى تَمَنَّيْتُ أَنِّي لَمْ أَكُنْ أَسْلَمْتُ قَبْلَ ذَلِكَ الْيَوْمِ
எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஹுரக்காக் கூட்டத்தாரிடம் (போருக்காக) அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தரை அடைந்து, ஒரு காலைப் பொழுதில் அவர்களை எதிர் கொண்டோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்ஸாரிகளில் ஒருவரும் எதிரிகளைச் சேர்ந்த ஒருவரைச் சுற்றி வளைத்துக் கொண்டபோது, “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று அவர் சொல்ல, அன்ஸாரித் தோழர் (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி எட்டவே அவர்கள் என்னிடம் “உஸாமா! அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று (ஏகத்துவக் கலிமாவை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?” என்று கேட்டார்கள். நான், “அவர் தம் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கு (அவ்வாறு) கூறினார்” என்று சொன்னேன். நபி (ஸல்), “அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று (ஏகத்துவக் கலிமாவை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?” என்று (மீண்டும்) கேட்டார்கள்; நான் (அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்று எண்ணுமளவுக்கு நபி (ஸல்) அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பாளர்: உஸாமா (ரலி).