அத்தியாயம்: 1, பாடம்: 54, ஹதீஸ் எண்: 174

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ‏ ‏وَإِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِإِبْرَاهِيمَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَجَّاجٌ وَهُوَ ابْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يَعْلَى بْنُ مُسْلِمٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏سَعِيدَ بْنَ جُبَيْرٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏
‏أَنَّ نَاسًا مِنْ أَهْلِ الشِّرْكِ قَتَلُوا فَأَكْثَرُوا وَزَنَوْا فَأَكْثَرُوا ثُمَّ أَتَوْا ‏ ‏مُحَمَّدًا ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا إِنَّ الَّذِي تَقُولُ وَتَدْعُو لَحَسَنٌ وَلَوْ تُخْبِرُنَا أَنَّ لِمَا عَمِلْنَا كَفَّارَةً فَنَزَلَ ‏
‏وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ ‏ ‏أَثَامًا ‏

‏وَنَزَلَ ‏ ‏يَا ‏ ‏عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا ‏ ‏تَقْنَطُوا ‏ ‏مِنْ رَحْمَةِ اللَّهِ ‏

அதிகமான (அநியாயக்) கொலைகளைச் செய்திருந்த, அதிகமான விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இணைவைப்பவர்களில் சிலர், முஹம்மது (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் கூறும் கூற்றும் அழைக்கும் வழியும் அழகானவையே (என்று புரிந்து கொண்டோம்). நாங்கள் (இதுவரை) செய்துவிட்ட (தீய) செயல்களுக்குப் பரிகாரம் கூறுங்கள்” என்று வேண்டிக் கொண்டபோது, “அன்றியும் (ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறெந்தக் கடவுளையும் (பிரார்தனைக்கு) அழைக்க மாட்டார்கள்; எந்த மனிதரையும் அநியாயமாகக் கொலை செய்ய மாட்டார்கள்; விபச்சாரம் புரிய மாட்டார்கள். (இறைவன் விதித்த இந்த வரம்புகளை) மீறிச் செயல்படுபவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்” எனும் (25:68) வசனம் அருளப் பட்டது. மேலும், ” … வரம்பு மீறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளின்மீது நம்பிக்கை இழந்து விடாதீர்கள் … ” எனும் (39:53) வசனமும் அருளப் பட்டது.

அறிவிப்பாளர்: இபுனு அப்பாஸ்(ரலி)

Share this Hadith:

Leave a Comment