அத்தியாயம்: 1, பாடம்: 1.06, ஹதீஸ் எண்: 23

حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي جَمْرَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبَّادُ بْنُ عَبَّادٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي جَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏
‏قَدِمَ ‏ ‏وَفْدُ عَبْدِ الْقَيْسِ ‏ ‏عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا هَذَا الْحَيَّ مِنْ ‏ ‏رَبِيعَةَ ‏ ‏وَقَدْ ‏ ‏حَالَتْ ‏ ‏بَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارُ ‏ ‏مُضَرَ ‏ ‏فَلَا ‏ ‏نَخْلُصُ ‏ ‏إِلَيْكَ إِلَّا فِي ‏ ‏شَهْرِ الْحَرَامِ ‏ ‏فَمُرْنَا بِأَمْرٍ نَعْمَلُ بِهِ وَنَدْعُو إِلَيْهِ مَنْ وَرَاءَنَا قَالَ ‏ ‏آمُرُكُمْ بِأَرْبَعٍ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ الْإِيمَانِ بِاللَّهِ ‏ ‏ثُمَّ فَسَّرَهَا لَهُمْ فَقَالَ ‏ ‏شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَأَنْ تُؤَدُّوا خُمُسَ مَا غَنِمْتُمْ وَأَنْهَاكُمْ عَنْ ‏ ‏الدُّبَّاءِ ‏ ‏وَالْحَنْتَمِ ‏ ‏وَالنَّقِيرِ ‏ ‏وَالْمُقَيَّرِ ‏
‏زَادَ ‏ ‏خَلَفٌ ‏ ‏فِي رِوَايَتِهِ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَعَقَدَ وَاحِدَةً

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ‘ரபீஆ’ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவோம். ‘முளர்’ குலத்து இறைமறுப்பாளர்கள் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் (தடையாக) உள்ளனர். அதனால் (போர் புரியத் தடை விதிக்கப்பட்ட) புனித மாதத்தில்தான் நாங்கள் உங்களிடம் வரமுடியும். ஆகவே, நாங்கள் கடைப்பிடிப்பதற்கும் எங்களைச் சுற்றி வாழ்பவர்களைக் கடைப்பிடித்து நடக்க அழைப்பு விடுவதற்குமான கட்டளைகளை இடுங்கள்” என்று வேண்டினர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் கட்டளையிடுபவை நான்கு; தடுப்பவை நான்கு. (கட்டளைகளாவன:) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது. அதாவது, வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதி கூறுவது; தொழுகையை(முறையாக)க் கடைப்பிடிப்பது; ஜகாத் செலுத்துவது; நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை (அரசுப் பொதுநிதிக்குச்) செலுத்துவது.

(தடைகளாவன:) (மது ஊற்றி வைக்கப் பயன்படுத்திய) சுரைக் குடுவை; (மது ஊற்றி வைக்கப் பயன்படுத்திய) மண் குடுவை; பேரீச்ச (மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரத் தொட்டி; தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி).

குறிப்பு:

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது. அவற்றில் கலஃப் பின் ஹிஷாம்(ரஹ்) அவர்கள் அறிவிப்பில், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை – ஒன்று” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது விரல் மடக்கிக் கூறியதாக அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment