حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ و قَالَ الْآخَرَانِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي جَمْرَةَ قَالَ كُنْتُ أُتَرْجِمُ بَيْنَ يَدَيْ ابْنِ عَبَّاسٍ وَبَيْنَ النَّاسِ فَأَتَتْهُ امْرَأَةٌ تَسْأَلُهُ عَنْ نَبِيذِ الْجَرِّ فَقَالَ
إِنَّ وَفْدَ عَبْدِ الْقَيْسِ أَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ الْوَفْدُ أَوْ مَنْ الْقَوْمُ قَالُوا رَبِيعَةُ قَالَ مَرْحَبًا بِالْقَوْمِ أَوْ بِالْوَفْدِ غَيْرَ خَزَايَا وَلَا النَّدَامَى قَالَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَأْتِيكَ مِنْ شُقَّةٍ بَعِيدَةٍ وَإِنَّ بَيْنَنَا وَبَيْنَكَ هَذَا الْحَيَّ مِنْ كُفَّارِ مُضَرَ وَإِنَّا لَا نَسْتَطِيعُ أَنْ نَأْتِيَكَ إِلَّا فِي شَهْرِ الْحَرَامِ فَمُرْنَا بِأَمْرٍ فَصْلٍ نُخْبِرْ بِهِ مَنْ وَرَاءَنَا نَدْخُلُ بِهِ الْجَنَّةَ قَالَ فَأَمَرَهُمْ بِأَرْبَعٍ وَنَهَاهُمْ عَنْ أَرْبَعٍ قَالَ أَمَرَهُمْ بِالْإِيمَانِ بِاللَّهِ وَحْدَهُ وَقَالَ هَلْ تَدْرُونَ مَا الْإِيمَانُ بِاللَّهِ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامُ الصَّلَاةِ وَإِيتَاءُ الزَّكَاةِ وَصَوْمُ رَمَضَانَ وَأَنْ تُؤَدُّوا خُمُسًا مِنْ الْمَغْنَمِ وَنَهَاهُمْ عَنْ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ
قَالَ شُعْبَةُ وَرُبَّمَا قَالَ النَّقِيرِ قَالَ شُعْبَةُ وَرُبَّمَا قَالَ الْمُقَيَّرِ وَقَالَ احْفَظُوهُ وَأَخْبِرُوا بِهِ مِنْ وَرَائِكُمْ و قَالَ أَبُو بَكْرٍ فِي رِوَايَتِهِ مَنْ وَرَاءَكُمْ وَلَيْسَ فِي رِوَايَتِهِ الْمُقَيَّرِ و حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي ح و حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ قَالَ أَخْبَرَنِي أَبِي قَالَا جَمِيعًا حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ عَنْ أَبِي جَمْرَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا الْحَدِيثِ نَحْوَ حَدِيثِ شُعْبَةَ وَقَالَ أَنْهَاكُمْ عَمَّا يُنْبَذُ فِي الدُّبَّاءِ وَالنَّقِيرِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ وَزَادَ ابْنُ مُعَاذٍ فِي حَدِيثِهِ عَنْ أَبِيهِ قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْأَشَجِّ أَشَجِّ عَبْدِ الْقَيْسِ إِنَّ فِيكَ خَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ الْحِلْمُ وَالْأَنَاةُ
“அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இத்தூதுக் குழுவினர் யாவர்?’ எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘ரபீஆவின் சமுதாயத்தவர்’ எனப் பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இழிவும் துயரும் அற்ற சமூகத்தாருக்கு நல்வரவு’ என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். அத்தூதுக் குழுவினர், ‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வெகு தொலைவிலிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையே இறைமறுப்பாளர்களான முளர் குலத்துக் கிளையினர் தடையாக உள்ளனர். (இதனால், போர் நிறுத்தம் நிகழும்) புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள் உங்களிடம் வரமுடியாது. ஆகவே, எங்களைச் சுற்றி வாழ்பவர்களுக்கு எத்தி வைப்பதற்கும் நாங்கள் செயல் படுத்திச் சுவனம் செல்வதற்குமான கட்டளைகளை எங்களுக்கு இடுங்கள். என்று வேண்டினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுக்கு நான்கு செயல்களைக் கட்டளையிட்டார்கள். நான்கு பொருட்களை(ப் பயன்படுத்த வேண்டாமென)த் தடை செய்தார்கள். அல்லாஹ் ஒருவனையே நம்பிக்கை கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, ‘அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது (என விளக்கமளித்துவிட்டு) தொழுகையை(முறையாக)க் கடைப்பிடிப்பது; ஜகாத் செலுத்துவது; ரமளான் மாதம் நோன்பு நோற்பது; அத்துடன் போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை (அரசுப் பொது நிதிக்கு) நீங்கள் செலுத்திடவேண்டும்’ என்று கூறினார்கள்.
(மது ஊற்றி வைக்கப் பயன்படுத்திய) சுரைக் குடுவை; (மது ஊற்றி வைக்கப் பயன்படுத்திய) மண் குடுவை; தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாம் எனத் தடை விதித்து, இவற்றை நினைவில் வைத்து, உங்களைச் சுற்றி வாழ்பவர்களுக்கும் அறிவித்துவிடுங்கள்’ என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி).
குறிப்பு:
“நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் (அரபுமொழி தெரியாத) மக்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளனாக இருந்தேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து பழ ஊறல் ஊற்றிவைக்கப் பயன்படுத்தும் மண்பானை குறித்துக் கேட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்கள்” என்று அபூஜம்ரா (ரஹ்) கூறினார்.
“அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் பேரீச்ச (மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரத் தொட்டி (அந்நகீர்) என்றும் வேறு சில நேரங்களில் ‘தார் பூசப்பட்ட பாத்திரம்’ (அல்முகய்யர்) என்றும் குறிப்பிடுவதாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) கூறுகிறார்.
அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “உங்களைச் சுற்றி வாழ்பவர்களுக்கு (அறிவித்துவிடுங்கள்)” என்பது வரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. ‘தார் பூசப்பட்ட பாத்திரம்’ (அல்முகய்யர்) பற்றி அதில் இடம்பெறவில்லை.
மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்கள் தொடர்களிலும் வந்துள்ளது.
அவற்றில், “(மது ஊற்றி வைக்கப் பயன்படுத்திய) சுரைக் குடுவை; பேரீச்ச (மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரத் தொட்டி; (மது ஊற்றி வைக்கப் பயன்படுத்திய) மண் குடுவை; மற்றும் தார்பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் ஊறவைக்கப்படும் பானங்களுக்குத் தடை விதிக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
முஆத் அலம்பரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அப்துல்கைஸ் குலத்தின் (தலைவர்) அஷ்ஷஜ் (எனும் முந்திர் பின் ஆயித் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அஷ்ஷஜே!) அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரு குணங்களான அறிவாற்றலும் நிதானமும் உங்களிடம் உள்ளன” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.