அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 240

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يُونُسُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَمِّ نَبِيِّكُمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَرْتُ لَيْلَةَ ‏ ‏أُسْرِيَ ‏ ‏بِي عَلَى ‏ ‏مُوسَى بْنِ عِمْرَانَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏رَجُلٌ ‏ ‏آدَمُ ‏ ‏طُوَالٌ ‏ ‏جَعْدٌ ‏ ‏كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَرَأَيْتُ ‏ ‏عِيسَى ابْنَ مَرْيَمَ ‏ ‏مَرْبُوعَ ‏ ‏الْخَلْقِ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ ‏ ‏سَبِطَ ‏ ‏الرَّأْسِ وَأُرِيَ ‏ ‏مَالِكًا ‏ ‏خَازِنَ النَّارِ ‏ ‏وَالدَّجَّالَ ‏ ‏فِي آيَاتٍ أَرَاهُنَّ اللَّهُ إِيَّاهُ ‏
‏فَلَا تَكُنْ فِي ‏ ‏مِرْيَةٍ ‏ ‏مِنْ لِقَائِهِ ‏

‏قَالَ ‏ ‏كَانَ ‏ ‏قَتَادَةُ ‏ ‏يُفَسِّرُهَا أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ لَقِيَ ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏

“நான் (விண்ணேற்றப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் இம்ரானின் புதல்வர் மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள் ‘ஷனூஆ’ குலத்து ஆண்களைப் போன்று மாநிறமுடையவர்கள்; உயரமானவர்கள்; சுருள் முடியுடையவர்கள். (அப்பயணத்தில்) மர்யமின் மைந்தர் ஈஸா (அலை) அவர்களையும் கண்டேன். அவர்கள் நடுத்தர உயரமும் சிவப்பு-வெண்மை கலவையான சருமம் கொண்டவர்களாகவும் படிந்து தொங்கும் தலைமுடியுடையவர்களாகவும் இருந்தார்கள். மேலும், நரகத்தின் காவலரான மாலிக்கும் தஜ்ஜாலும் எனக்குக் காட்டப்பட்டனர். அவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் உள்ளவை” என்பதோடு, “நீங்கள் அவரைச் சந்தித்ததில் ஐயம் கொள்ள வேண்டாம்” (32:23) என்ற இறைவசனத்தை மேற்கோள் காட்டி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இபுனு அப்பாஸ் (ரலி).

குறிப்பு:

மேற்கண்ட (32:23 ஆவது) வசனத்திற்கு, “நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களை (விண்ணேற்றத்தின்போது) சந்தித்ததைப் பற்றி நீங்கள் ஐயம் கொள்ள வேண்டாம்” என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

Share this Hadith:

Leave a Comment