حَدَّثَنَا أَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ وَاللَّفْظُ لِأَبِي كَامِلٍ قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ اللَّهُ النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ فَيَهْتَمُّونَ لِذَلِكَ و قَالَ ابْنُ عُبَيْدٍ فَيُلْهَمُونَ لِذَلِكَ فَيَقُولُونَ لَوْ اسْتَشْفَعْنَا عَلَى رَبِّنَا حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا قَالَ فَيَأْتُونَ آدَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُونَ أَنْتَ آدَمُ أَبُو الْخَلْقِ خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ وَأَمَرَ الْمَلَائِكَةَ فَسَجَدُوا لَكَ اشْفَعْ لَنَا عِنْدَ رَبِّكَ حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ فَيَذْكُرُ خَطِيئَتَهُ الَّتِي أَصَابَ فَيَسْتَحْيِي رَبَّهُ مِنْهَا وَلَكِنْ ائْتُوا نُوحًا أَوَّلَ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ قَالَ فَيَأْتُونَ نُوحًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ فَيَذْكُرُ خَطِيئَتَهُ الَّتِي أَصَابَ فَيَسْتَحْيِي رَبَّهُ مِنْهَا وَلَكِنْ ائْتُوا إِبْرَاهِيمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي اتَّخَذَهُ اللَّهُ خَلِيلًا فَيَأْتُونَ إِبْرَاهِيمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ وَيَذْكُرُ خَطِيئَتَهُ الَّتِي أَصَابَ فَيَسْتَحْيِي رَبَّهُ مِنْهَا وَلَكِنْ ائْتُوا مُوسَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي كَلَّمَهُ اللَّهُ وَأَعْطَاهُ التَّوْرَاةَ قَالَ فَيَأْتُونَ مُوسَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ وَيَذْكُرُ خَطِيئَتَهُ الَّتِي أَصَابَ فَيَسْتَحْيِي رَبَّهُ مِنْهَا وَلَكِنْ ائْتُوا عِيسَى رُوحَ اللَّهِ وَكَلِمَتَهُ فَيَأْتُونَ عِيسَى رُوحَ اللَّهِ وَكَلِمَتَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ وَلَكِنْ ائْتُوا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدًا قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَأْتُونِي فَأَسْتَأْذِنُ عَلَى رَبِّي فَيُؤْذَنُ لِي فَإِذَا أَنَا رَأَيْتُهُ وَقَعْتُ سَاجِدًا فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ فَيُقَالُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ قُلْ تُسْمَعْ سَلْ تُعْطَهْ اشْفَعْ تُشَفَّعْ فَأَرْفَعُ رَأْسِي فَأَحْمَدُ رَبِّي بِتَحْمِيدٍ يُعَلِّمُنِيهِ رَبِّي ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا فَأُخْرِجُهُمْ مِنْ النَّارِ وَأُدْخِلُهُمْ الْجَنَّةَ ثُمَّ أَعُودُ فَأَقَعُ سَاجِدًا فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ أَنْ يَدَعَنِي ثُمَّ يُقَالُ ارْفَعْ رَأْسَكَ يَا مُحَمَّدُ قُلْ تُسْمَعْ سَلْ تُعْطَهْ اشْفَعْ تُشَفَّعْ فَأَرْفَعُ رَأْسِي فَأَحْمَدُ رَبِّي بِتَحْمِيدٍ يُعَلِّمُنِيهِ ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا فَأُخْرِجَهُمْ مِنْ النَّارِ وَأُدْخِلُهُمْ الْجَنَّةَ قَالَ فَلَا أَدْرِي فِي الثَّالِثَةِ أَوْ فِي الرَّابِعَةِ قَالَ فَأَقُولُ يَا رَبِّ مَا بَقِيَ فِي النَّارِ إِلَّا مَنْ حَبَسَهُ الْقُرْآنُ أَيْ وَجَبَ عَلَيْهِ الْخُلُودُ
قَالَ ابْنُ عُبَيْدٍ فِي رِوَايَتِهِ قَالَ قَتَادَةُ أَيْ وَجَبَ عَلَيْهِ الْخُلُودُ و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْتَمِعُ الْمُؤْمِنُونَ يَوْمَ الْقِيَامَةِ فَيَهْتَمُّونَ بِذَلِكَ أَوْ يُلْهَمُونَ ذَلِكَ بِمِثْلِ حَدِيثِ أَبِي عَوَانَةَ وَقَالَ فِي الْحَدِيثِ ثُمَّ آتِيهِ الرَّابِعَةَ أَوْ أَعُودُ الرَّابِعَةَ فَأَقُولُ يَا رَبِّ مَا بَقِيَ إِلَّا مَنْ حَبَسَهُ الْقُرْآنُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَجْمَعُ اللَّهُ الْمُؤْمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ فَيُلْهَمُونَ لِذَلِكَ بِمِثْلِ حَدِيثِهِمَا وَذَكَرَ فِي الرَّابِعَةِ فَأَقُولُ يَا رَبِّ مَا بَقِيَ فِي النَّارِ إِلَّا مَنْ حَبَسَهُ الْقُرْآنُ أَيْ وَجَبَ عَلَيْهِ الْخُلُودُ
“மறுமை நாளில் அல்லாஹ் மக்களை ஒன்று கூட்டும்போது மக்கள், ‘இந்த(ச் சோதனையான) நிலையிலிருந்து நம்மை விடுவிக்க, நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் வேண்டிக் கொள்ளலாம்’ என்று கூறியவாறு (ஆதி மனிதரான) ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, ‘நீங்கள்தாம் மனித குலத்தின் தந்தை ஆவீர்கள்; அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான். தன்(ன்னிலிருந்து) உயிரை உங்களுக்குள் அவன் ஊதினான். மேலும், தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட, அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தனர். (அத்தகைய சிறப்புகளுக்கு உரிய) நீங்கள் இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்கள் இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்’ என்று கூறுவார்கள். அதற்கு ஆதம் (அலை), (உலகில்) தாம் புரிந்துவிட்ட தவறை நினைவு கூர்ந்து, அதனால் தம் இறைவனிடம் பேச வெட்கப்பட்டவர்களாக ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் (எனக்குப் பின் முக்கிய) முதல் தூதராக இறைவன் அனுப்பிவைத்த நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.
மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அன்னாரும் (உலகில்) தாம் புரிந்துவிட்ட தவறை நினைவு கூர்ந்து, அதனால் தம் இறைவனிடம் பேச வெட்கப்பட்டவர்களாக ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் அல்லாஹ் தன்னுடைய உற்ற நண்பராக்கிக் கொண்ட (நபி) இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.
மக்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்ல, அவர்களும் (உலகில்) தாம் புரிந்துவிட்ட தவறை நினைவு கூர்ந்து, அதனால் தம் இறைவனிடம் பேச வெட்கப்பட்டவர்களாக ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் அல்லாஹ் உரையாடி, தவ்ராத் (வேதத்)தையும் வழங்கிய (நபி) மூஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.
மக்கள் மூஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அன்னாரும் (உலகில்) தாம் புரிந்துவிட்ட தவறை நினைவு கூர்ந்து, அதனால் தம் இறைவனிடம் பேச வெட்கப்பட்டவர்களாக ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய சொல்லுமான (நபி) ஈஸாவிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.
மக்கள் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையுமான (நபி) ஈஸாவிடம் செல்ல, அவர்களும் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. எனவே, நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான (நபி) முஹம்மது (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.
உடனே மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனிடத்தில் அனுமதி கேட்பேன். எனக்கு அனுமதி அளிக்கப்படும். இறைவனைக் கண்டதும் சிரம் பணிந்தவனாக (ஸஜ்தாவில்) விழுந்து விடுவேன். அவன் நாடிய நேரம் வரை (அப்படியே) என்னை விட்டு விடுவான். பிறகு (இறைவனின் தரப்பிலிருந்து) ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று கூறப்படும். உடனே நான் எனது தலையை உயர்த்தி என் இறைவன் எனக்குக் கற்றுத்தந்த புகழ்மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு, நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் யார்-யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்று) எனக்கு வரம்பு விதிப்பான். பின்னர் அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி, சொர்க்கத்துக்கு அனுப்பி வைப்பேன். பின்னர் மீண்டும் நான் (இறைவனிடம்) சென்று சிரம்பணிந்து விழுவேன். இறைவன் தான் நாடும் நேரம்வரை (அப்படியே) என்னை விட்ட பிறகு, ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். நானும் அவ்வாறே என் தலையை உயர்த்தி, என் இறைவன் எனக்குக் கற்றுத்தந்த புகழ்மொழிகளைக் கூறி அவனை நான் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். (நான் யார்-யாருக்குப் பரிந்துரைக்கலாம் என்று) எனக்கு அவன் வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி, சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். (இதைப் போன்றே மூன்று/நான்கு முறை நடக்கும்). பிறகு, ‘என் இறைவா! குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் விதியாக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கவில்லை’ என்று கூறுவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
குறிப்பு :
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான முஹம்மது இப்னு உபைத் அல் குபைரீ (ரஹ்), ‘நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் வேண்டிக் கொள்ளலாம் என்ற எண்ணம் மக்களின் மனங்களில் ஊட்டப்படும்’ என்றும் நபி (ஸல்) பரிந்துரை, மூன்று அல்லது நான்கு தடவைகள் நிகழும் என்றும் குறிப்பிடுகின்றார். மேலும், ‘குர்ஆன் தடுத்து விட்டவர்களைத் தவிர’ என்பதற்கு “நிரந்தர நரகம் விதியாக்கப்பட்டவர்களைத் தவிர” என்று கத்தாதா பின் திஆமா (ரஹ்) கூறியதாகக் குறிப்பிடுகின்றார்.
முஹம்மதிப்னுல் முஸன்னா (ரஹ்), முஹம்மதிப்னு பஷ்ஷார் (ரஹ்) ஆகிய இருவர்வழி அறிவிப்பில், “மறுமை நாளில் அல்லாஹ் மக்களை ஒன்று கூட்டும்போது …” என்பதற்கு பதிலாக, “மறுமை நாளில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை ஒன்று கூட்டும்போது …” என்று தொடங்குகிறது. இறுதியில் நபி (ஸல்) நான்காவது தடவையும் பரிந்துரைக்கக் கோரியதாக இடம் பெற்றுள்ளது.