و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ الضَّرِيرُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ وَهِشَامٌ صَاحِبُ الدَّسْتَوَائِيِّ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ عَنْ قَتَادَةَ حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ :
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَخْرُجُ مِنْ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنْ الْخَيْرِ مَا يَزِنُ شَعِيرَةً ثُمَّ يَخْرُجُ مِنْ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنْ الْخَيْرِ مَا يَزِنُ بُرَّةً ثُمَّ يَخْرُجُ مِنْ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنْ الْخَيْرِ مَا يَزِنُ ذَرَّةً
زَادَ ابْنُ مِنْهَالٍ فِي رِوَايَتِهِ قَالَ يَزِيدُ فَلَقِيتُ شُعْبَةَ فَحَدَّثْتُهُ بِالْحَدِيثِ فَقَالَ شُعْبَةُ حَدَّثَنَا بِهِ قَتَادَةُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَدِيثِ إِلَّا أَنَّ شُعْبَةَ جَعَلَ مَكَانَ الذَّرَّةِ ذُرَةً قَالَ يَزِيدُ صَحَّفَ فِيهَا أَبُو بِسْطَامَ
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறிய எவரது உள்ளத்தில் வாற்கோதுமை அளவு நன்மை இருந்தாலும் அவர் (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார். பிறகு வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறிய எவரது உள்ளத்தில் மணிக்கோதுமை அளவு நன்மை இருந்தாலும் அவரும் (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார். பிறகு ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறிய எவரது உள்ளத்தில் அணுவளவு நன்மை இருந்தாலும் அவரும் (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
குறிப்பு :
முஹம்மது பின் மின்ஹால் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் ஷுஅபா அபூபிஸ்தாம் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது இந்த ஹதீஸை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது ஷுஅபா (ரஹ்), ‘இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவித்ததாக கத்தாதா (ரஹ்) எமக்கு அறிவித்தார்கள்’ என்று உறுதி செய்ததோடு, தர்ரா என்ற சொல்லை, துரா என்று மாற்றிக் கூறினார்கள்” என்று யஸீத் பின் ஸுரைஉ (ரஹ்) கூறியதாகக் கூடுதலாகக் குறிப்பிடப்படுகிறது.