அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 2001

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ وَهُوَ الْفَزَارِيُّ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ وَهُوَ ابْنُ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏تَذَاكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَيُّكُمْ يَذْكُرُ حِينَ طَلَعَ الْقَمَرُ وَهُوَ مِثْلُ ‏ ‏شِقِّ ‏ ‏جَفْنَةٍ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் லைலத்துல் கத்ரு இரவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், “உணவுத் தட்டின் பாதித் துண்டைப் போன்று நிலா தோன்றும் இரவே (லைலத்துல் கத்ரு) ஆகும் என்பதை உங்களில் நினைவில் கொள்பவர் யார்?” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 2000

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَةَ بْنَ أَبِي لُبَابَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏زِرِّ بْنِ حُبَيْشٍ ‏ ‏عَنْ ‏ ‏أُبَيِّ بْنِ كَعْبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏قَالَ ‏ ‏أُبَيٌّ ‏ ‏فِي لَيْلَةِ الْقَدْرِ وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُهَا قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏وَأَكْبَرُ عِلْمِي هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِقِيَامِهَا ‏ ‏هِيَ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ ‏

‏وَإِنَّمَا شَكَّ ‏ ‏شُعْبَةُ ‏ ‏فِي هَذَا الْحَرْفِ هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ وَحَدَّثَنِي بِهَا صَاحِبٌ لِي عَنْهُ

உபை பின் கஅப் (ரலி), லைலத்துல் கத்ரு இரவு குறித்துக் கூறுகையில், “அல்லாஹ்வின் மீதாணையாக! அது (எந்த இரவு என்பது) பற்றி நான் நன்கறிவேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி) வழியாக, ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்)

குறிப்புகள் : “எனது அறிவுக்கு எட்டியவரையில், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நின்று வழிபடுமாறு எங்களைப் பணித்த அந்த ஓர் இரவுதான் இருபத்தேழாவது இரவாகும்’ (என்று உபை (ரலி) தெரிவித்தார்கள்) என்று நான் கருதுகின்றேன்” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்.

‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நின்று வழிபடுமாறு எங்களைப் பணித்த அந்த ஓர் இரவு…‘ எனும் வாசகத்தில் ஷுஅபா (ரஹ்) ஐயம் தெரிவித்தார்.

‘அப்தா பின் அபீலுபாபா (ரஹ்) அவர்களிடமிருந்து என் நண்பர் ஒருவர் இதை எனக்கு அறிவித்தார்’ என ஷுஅபா (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1999

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدَةَ ‏ ‏وَعَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ ‏ ‏سَمِعَا ‏ ‏زِرَّ بْنَ حُبَيْشٍ ‏ ‏يَقُولُا ‏

سَأَلْتُ ‏ ‏أُبَيَّ بْنَ كَعْبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏فَقُلْتُ إِنَّ أَخَاكَ ‏ ‏ابْنَ مَسْعُودٍ ‏ ‏يَقُولُ مَنْ يَقُمْ ‏ ‏الْحَوْلَ ‏ ‏يُصِبْ لَيْلَةَ الْقَدْرِ فَقَالَ رَحِمَهُ اللَّهُ أَرَادَ أَنْ لَا يَتَّكِلَ النَّاسُ أَمَا إِنَّهُ قَدْ عَلِمَ أَنَّهَا فِي رَمَضَانَ وَأَنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ وَأَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ ثُمَّ حَلَفَ لَا ‏ ‏يَسْتَثْنِي أَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ فَقُلْتُ بِأَيِّ شَيْءٍ تَقُولُ ذَلِكَ يَا ‏ ‏أَبَا الْمُنْذِرِ ‏ ‏قَالَ بِالْعَلَامَةِ أَوْ بِالْآيَةِ الَّتِي أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ لَا شُعَاعَ لَهَا

நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், “தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) ‘வருடம் முழுவதும் (இரவில்) நின்று வழிபடுபவர் லைலத்துல் கத்ரு இரவை அடைந்துகொள்வார்’ என்று கூறுகின்றாரே?” என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி),“இப்னு மஸ்ஊதுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! மக்கள் ஒரு நாள் மட்டும் (வழிபாடுகளில்) சார்ந்து இருந்துவிடக்கூடாது என அவர்கள் கருதினார்கள் (போலும்)! லைலத்துல் கத்ரு இரவு ரமளான் மாதத்தில்தான் உள்ளது என்பதையும் அதன் கடைசிப் பத்தில்தான் உள்ளது என்பதையும் அது (ரமளானின்) இருபத்தேழாவது இரவுதான் என்பதையும் இப்னு மஸ்ஊத் அறிந்தே உள்ளார்கள்” என்று பதிலளித்தார்கள். பிறகு அல்லாஹ் நாடினால் என்று கூறாமல், “அது (ரமளானின்) இருபத்தேழாவது இரவே ஆகும்” என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள். நான், “அபுல் முன்திரே! எதை வைத்து அவ்வாறு கூறுகின்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் ‘அன்றைய நாளில் (காலையில்) சூரியன் சுடரின்றி உதிக்கும்’ என்று கூறினார்கள். அந்த அடையாளத்தின் மூலமே (அறிந்துகொண்டேன்)” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி) வழியாக, ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1998

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏الْتَمِسُوا وَقَالَ ‏ ‏وَكِيعٌ ‏ ‏تَحَرَّوْا ‏ ‏لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ

“ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து இரவுகளில் லைலத்துல் கத்ரு இரவைத் தேடிக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1997

و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ عَمْرِو بْنِ سَهْلِ بْنِ إِسْحَقَ بْنِ مُحَمَّدِ بْنِ الْأَشْعَثِ بْنِ قَيْسٍ الْكِنْدِيُّ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو ضَمْرَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ ‏ ‏وَقَالَ ‏ ‏ابْنُ خَشْرَمٍ ‏ ‏عَنْ ‏ ‏الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏مَوْلَى ‏ ‏عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ ثُمَّ أُنْسِيتُهَا وَأَرَانِي صُبْحَهَا أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ قَالَ فَمُطِرْنَا لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ فَصَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَانْصَرَفَ وَإِنَّ أَثَرَ الْمَاءِ وَالطِّينِ عَلَى جَبْهَتِهِ وَأَنْفِهِ ‏
‏قَالَ ‏ ‏وَكَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ أُنَيْسٍ ‏ ‏يَقُولُ ثَلَاثٍ وَعِشْرِينَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “லைலத்துல் கத்ரு (எந்த இரவு என்பது) பற்றி எனக்குக் கனவில் காட்டப் பட்டது. பின்னர் அது மறக்கடிக்கப் பட்டது. அன்று காலை நான், ஈரச் சேற்றில் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்வதைப் போன்று (கனவில்) கண்டேன்” என்று கூறினார்கள். இருபத்து மூன்றாவது நாள் இரவில் மழை பெய்தது. (அன்று காலையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு (ஸுப்ஹுத் தொழுகை) தொழ வைத்தார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபோது ஈரச் சேற்றின் அடையாளம் அவர்களது நெற்றியிலும் மூக்கிலும் படிந்திருந்தது.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1996

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏اعْتَكَفَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعَشْرَ الْأَوْسَطَ مِنْ رَمَضَانَ يَلْتَمِسُ لَيْلَةَ الْقَدْرِ قَبْلَ أَنْ ‏ ‏تُبَانَ ‏ ‏لَهُ فَلَمَّا انْقَضَيْنَ أَمَرَ بِالْبِنَاءِ ‏ ‏فَقُوِّضَ ‏ ‏ثُمَّ أُبِينَتْ لَهُ أَنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فَأَمَرَ بِالْبِنَاءِ فَأُعِيدَ ثُمَّ خَرَجَ عَلَى النَّاسِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّهَا كَانَتْ ‏ ‏أُبِينَتْ لِي لَيْلَةُ الْقَدْرِ وَإِنِّي خَرَجْتُ لِأُخْبِرَكُمْ بِهَا فَجَاءَ رَجُلَانِ يَحْتَقَّانِ مَعَهُمَا الشَّيْطَانُ فَنُسِّيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ الْتَمِسُوهَا فِي التَّاسِعَةِ وَالسَّابِعَةِ وَالْخَامِسَةِ قَالَ قُلْتُ يَا ‏ ‏أَبَا سَعِيدٍ ‏ ‏إِنَّكُمْ أَعْلَمُ بِالْعَدَدِ مِنَّا قَالَ أَجَلْ نَحْنُ أَحَقُّ بِذَلِكَ مِنْكُمْ قَالَ قُلْتُ مَا التَّاسِعَةُ وَالسَّابِعَةُ وَالْخَامِسَةُ قَالَ إِذَا مَضَتْ وَاحِدَةٌ وَعِشْرُونَ فَالَّتِي تَلِيهَا ثِنْتَيْنِ وَعِشْرِينَ وَهِيَ التَّاسِعَةُ فَإِذَا مَضَتْ ثَلَاثٌ وَعِشْرُونَ فَالَّتِي تَلِيهَا السَّابِعَةُ فَإِذَا مَضَى خَمْسٌ وَعِشْرُونَ فَالَّتِي تَلِيهَا الْخَامِسَةُ ‏

‏و قَالَ ‏ ‏ابْنُ خَلَّادٍ ‏ ‏مَكَانَ يَحْتَقَّانِ يَخْتَصِمَانِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமக்கு லைலத்துல் கத்ரு இரவு பற்றிய குறிப்பு வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னர் ரமளான் மாதத்தின் நடுப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை அடைவதற்கு இஃதிகாஃப் இருந்தார்கள். நடுப் பத்து நாட்கள் முடிந்ததும் (தம்) கூடாரத்தை அகற்றுமாறு உத்தரவிட, அவ்வாறே அது அகற்றப்பட்டது. பின்னர் லைலத்துல் கத்ரு இரவு இறுதிப் பத்து இரவுகளில் இருப்பதாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே, மீண்டும் கூடாரம் அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். மீண்டும் கூடாரம் அமைக்கப்பட்ட பிறகு மக்களிடம் புறப்பட்டு வந்து, “மக்களே! லைலத்துல் கத்ரு பற்றிய குறிப்பு எனக்கு அறிவிக்கப்பட்டது. அதைப் பற்றிச் சொல்வதற்காக உங்களிடம் நான் புறப்பட்டு வந்தேன். அப்போது இருவர் தமது உரிமை குறித்து விவாதித்துக்கொண்டிருந்தனர். அவ்விருவருடன் ஷைத்தானும் இருந்தான். அதனால் அதை(ப் பற்றிய குறிப்பை) நான் மறக்கடிக்கப்பட்டேன். ஆகவே, ரமளானின் இறுதிப் பத்தில் அந்த இரவை நீங்கள் தேடிக்கொள்ளுங்கள். (மிச்சமிருக்கும்) ஒன்பது, ஏழு, ஐந்து ஆகிய இரவுகளில் அதை நீங்கள் தேடிக்கொள்ளுங்கள்!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

குறிப்பு : நான் அபூஸயீத் (ரலி) அவர்களிடம் “இரவுகளின் எண்ணிக்கை பற்றி எங்களைவிட நீங்களே நன்கறிந்தவர்கள்” என்றேன். அதற்கு அவர்கள், “ஆம். உங்களைவிட நாங்களே அதற்குத் தகுதியானவர்கள்” என்றார்கள். நான், “ஒன்பது, ஏழு, ஐந்து என்பவை எவை?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இருபத்தொன்றாவது இரவை அடுத்து வரும் இருபத்து இரண்டாவது இரவே (30-21=9) ‘ஒன்பது’ என்பதாகும். இருபத்து மூன்றாவது இரவை அடுத்து வரும் இரவே (30-23=7) ‘ஏழு’ என்பதாகும். இருபத்து ஐந்தாவது இரவை அடுத்து வரும் இரவே (30-25=5) ‘ஐந்து’ என்பதாகும்” என்று விடையளித்தார்கள் என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூநள்ரா (ரஹ்) கூறுகின்றார்.

அபூபக்ரு பின் கல்லாத் (ரஹ்) வழி அறிவிப்பில், (‘இருவர் தமது உரிமை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்’ என்பதற்குப் பகரமாக) ‘சச்சரவு செய்துகொண்டிருந்தனர்’ என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1995

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏قَالَ ‏ ‏تَذَاكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ فَأَتَيْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏وَكَانَ لِي صَدِيقًا فَقُلْتُ أَلَا تَخْرُجُ بِنَا إِلَى النَّخْلِ فَخَرَجَ وَعَلَيْهِ ‏ ‏خَمِيصَةٌ ‏ ‏فَقُلْتُ لَهُ ‏
‏سَمِعْتَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُ لَيْلَةَ الْقَدْرِ فَقَالَ نَعَمْ ‏ ‏اعْتَكَفْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعَشْرَ الْوُسْطَى مِنْ رَمَضَانَ فَخَرَجْنَا صَبِيحَةَ عِشْرِينَ فَخَطَبَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ وَإِنِّي نَسِيتُهَا أَوْ أُنْسِيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ كُلِّ ‏ ‏وِتْرٍ ‏ ‏وَإِنِّي أُرِيتُ أَنِّي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ فَمَنْ كَانَ ‏ ‏اعْتَكَفَ ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلْيَرْجِعْ قَالَ فَرَجَعْنَا وَمَا نَرَى فِي السَّمَاءِ ‏ ‏قَزَعَةً ‏ ‏قَالَ وَجَاءَتْ سَحَابَةٌ فَمُطِرْنَا حَتَّى سَالَ سَقْفُ الْمَسْجِدِ وَكَانَ مِنْ جَرِيدِ النَّخْلِ وَأُقِيمَتْ الصَّلَاةُ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَسْجُدُ فِي الْمَاءِ وَالطِّينِ قَالَ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو الْمُغِيرَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ وَفِي حَدِيثِهِمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ انْصَرَفَ وَعَلَى جَبْهَتِهِ ‏ ‏وَأَرْنَبَتِهِ ‏ ‏أَثَرُ الطِّينِ

நாங்கள் லைலத்துல் கத்ரு இரவு பற்றி (ஒரு நாள்) பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என் தோழராக இருந்தார்கள். அவர்களிடம், “நீங்கள் எங்களுடன் பேரீச்சந் தோப்பு வரை வருகிறீர்களா?” என்று கேட்டேன். உடனே புறப்பட்டார்கள்.

அப்போது அவர்கள் கறுப்புக் கம்பளி ஆடை அணிந்திருந்தார்கள். அவர்களிடம் “லைலத்துல் கத்ரு இரவு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கின்றீர்களா?” என்று கேட்டேன்.

அவர்கள், “ஆம், நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தின் நடுப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாவது நாள் காலையில் நாங்கள் (பள்ளிவாசலில் இருந்து) வெளியேறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடையே உரையாற்றினார்கள்.

‘எனக்கு லைலத்துல் கத்ரு இரவு (கனவில்) காட்டப் பட்டது. ஆனால், அதை நான் மறந்து விட்டேன். (அல்லது மறக்கடிக்கப்பட்டேன்.) எனவே, ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப் படையான ஒவ்வோர் இரவிலும் அதை நீங்கள் தேடிக் கொள்ளுங்கள். நான் (அந்த இரவில்) ஈரச் சேற்றில் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்வதைப் போன்று எனக்குக் காட்டப் பட்டது. அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாஃப் இருந்தவர் மறுபடியும் (பள்ளிவாசலுக்கு) வரட்டும்!” என்றார்கள்.

நாங்கள் மீண்டும் சென்றோம். அப்போது வானில் மழை மேகத்தின் ஒரு துண்டைக்கூட நாங்கள் காணவில்லை. (திடீரென) ஒரு மேகம் (திரண்டு) வந்து மழை பெய்தது. பள்ளிவாசலின் கூரையிலிருந்து மழை நீர் சொட்டியது. அப்போதைய கூரை பேரீச்ச மட்டையால் வேயப்பட்டு இருந்தது. தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஈரச் சேற்றில் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்ததை நான் கண்டேன். அவர்களது நெற்றியில் சேறு படிந்திருந்ததைக் கண்டேன்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)


குறிப்பு : அல் அவ்ஸாயீ (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்துத் திரும்பியபோது அவர்களை நான் கண்டேன். அவர்களது நெற்றியிலும் மூக்கு நுனியிலும் சேற்றின் அடையாளம் இருந்தது” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1994

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَارَةُ بْنُ غَزِيَّةَ الْأَنْصَارِيُّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ

‏إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اعْتَكَفَ ‏ ‏الْعَشْرَ الْأَوَّلَ مِنْ رَمَضَانَ ثُمَّ ‏ ‏اعْتَكَفَ ‏ ‏الْعَشْرَ الْأَوْسَطَ فِي ‏ ‏قُبَّةٍ ‏ ‏تُرْكِيَّةٍ عَلَى سُدَّتِهَا حَصِيرٌ قَالَ فَأَخَذَ الْحَصِيرَ بِيَدِهِ فَنَحَّاهَا فِي نَاحِيَةِ ‏ ‏الْقُبَّةِ ‏ ‏ثُمَّ أَطْلَعَ رَأْسَهُ فَكَلَّمَ النَّاسَ فَدَنَوْا مِنْهُ فَقَالَ ‏ ‏إِنِّي ‏ ‏اعْتَكَفْتُ ‏ ‏الْعَشْرَ الْأَوَّلَ أَلْتَمِسُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ ‏ ‏اعْتَكَفْتُ ‏ ‏الْعَشْرَ الْأَوْسَطَ ثُمَّ أُتِيتُ فَقِيلَ لِي إِنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ ‏ ‏يَعْتَكِفَ ‏ ‏فَلْيَعْتَكِفْ ‏ ‏فَاعْتَكَفَ ‏ ‏النَّاسُ مَعَهُ قَالَ وَإِنِّي أُرْبِئْتُهَا لَيْلَةَ ‏ ‏وِتْرٍ ‏ ‏وَإِنِّي أَسْجُدُ صَبِيحَتَهَا فِي طِينٍ وَمَاءٍ فَأَصْبَحَ مِنْ لَيْلَةِ إِحْدَى وَعِشْرِينَ وَقَدْ قَامَ إِلَى الصُّبْحِ فَمَطَرَتْ السَّمَاءُ ‏ ‏فَوَكَفَ ‏ ‏الْمَسْجِدُ فَأَبْصَرْتُ الطِّينَ وَالْمَاءَ فَخَرَجَ حِينَ فَرَغَ مِنْ صَلَاةِ الصُّبْحِ وَجَبِينُهُ وَرَوْثَةُ أَنْفِهِ فِيهِمَا الطِّينُ وَالْمَاءُ وَإِذَا هِيَ لَيْلَةُ إِحْدَى وَعِشْرِينَ مِنْ الْعَشْرِ الْأَوَاخِرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளான் மாதத்தின் முதல் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். பின்னர் நடுப் பத்து நாட்களில் துருக்கித் தோல் கூடாரமொன்றில் இஃதிகாஃப் இருந்தார்கள். அதன் நுழைவிடத்தில் (மறைப்பாக) பாயொன்று (நிறுத்தி வைக்கப்பட்டு) இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது கரத்தால் அந்தப் பாயை எடுத்துக் கூடாரத்தின் ஓரத்திற்கு நகர்த்தினார்கள். பிறகு தமது தலையை (கூடாரத்திற்கு) வெளியே நீட்டி மக்களிடம் பேசினார்கள். உடனே மக்கள் அவர்களுக்கு அருகில் நெருங்கிவந்தனர். “இந்த (ரமளானில் லைலத்துல் கத்ரு) இரவைத் தேடியவாறு நான் முதல் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தேன். பின்னர் நடுப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருந்தேன். பிறகு, ‘அந்த இரவு இறுதிப் பத்து நாட்களில் உள்ளது’ என (வானவர் மூலம்) என்னிடம் சொல்லப்பட்டது. ஆகவே, உங்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகின்றவர் (இறுதிப் பத்து நாட்களில்) இருக்கட்டும்” என்றார்கள்.

எனவே மக்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தனர். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “லைலத்துல் கத்ரு இரவு ரமளான் மாதத்தின் ஓர் ஒற்றைப்படையான இரவில் இருப்பதாக எனக்குக் காட்டப்பட்டது. நான் அன்று காலை ஈரமான சேற்றில் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்வதைப் போன்று காட்டப்பட்டது” என்றும் கூறினார்கள். இருபத்தொன்றாவது நாள் காலையில் அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்காக நின்றபோது மழை பெய்தது. பள்ளிவாசல் கூரை ஒழுகியது. அப்போது நான் மழை நீரையும் சேற்றையும் (பள்ளிவாசலுக்குள்) கண்டேன். ஸுப்ஹுத் தொழுகையை முடித்துப் புறப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நெற்றியிலும் மூக்கு நுனியிலும் சேறும் ஈரமும் படிந்திருந்ததை நான் கண்டேன். அந்த லைலத்துல் கத்ரு இரவு (ரமளானின்) இறுதிப் பத்தில் இருபத்தோராவது இரவாகும்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1993

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَكْرٌ وَهُوَ ابْنُ مُضَرَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُجَاوِرُ ‏ ‏فِي الْعَشْرِ الَّتِي فِي وَسَطِ الشَّهْرِ فَإِذَا كَانَ مِنْ حِينِ تَمْضِي عِشْرُونَ لَيْلَةً وَيَسْتَقْبِلُ إِحْدَى وَعِشْرِينَ يَرْجِعُ إِلَى مَسْكَنِهِ وَرَجَعَ مَنْ كَانَ ‏ ‏يُجَاوِرُ ‏ ‏مَعَهُ ثُمَّ إِنَّهُ أَقَامَ فِي شَهْرٍ ‏ ‏جَاوَرَ ‏ ‏فِيهِ تِلْكَ اللَّيْلَةَ الَّتِي كَانَ يَرْجِعُ فِيهَا فَخَطَبَ النَّاسَ فَأَمَرَهُمْ بِمَا شَاءَ اللَّهُ ثُمَّ قَالَ ‏ ‏إِنِّي كُنْتُ ‏ ‏أُجَاوِرُ ‏ ‏هَذِهِ الْعَشْرَ ثُمَّ بَدَا لِي أَنْ أُجَاوِرَ هَذِهِ الْعَشْرَ الْأَوَاخِرَ فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعِي فَلْيَبِتْ فِي مُعْتَكَفِهِ وَقَدْ رَأَيْتُ هَذِهِ اللَّيْلَةَ فَأُنْسِيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي كُلِّ ‏ ‏وِتْرٍ ‏ ‏وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ ‏ ‏مُطِرْنَا لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ ‏ ‏فَوَكَفَ ‏ ‏الْمَسْجِدُ فِي مُصَلَّى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَنَظَرْتُ إِلَيْهِ وَقَدْ انْصَرَفَ مِنْ صَلَاةِ الصُّبْحِ وَوَجْهُهُ مُبْتَلٌّ طِينًا وَمَاءً ‏

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُجَاوِرُ ‏ ‏فِي رَمَضَانَ الْعَشْرَ الَّتِي فِي وَسَطِ الشَّهْرِ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ فَلْيَثْبُتْ فِي مُعْتَكَفِهِ وَقَالَ وَجَبِينُهُ مُمْتَلِئًا طِينًا وَمَاءً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த (ரமளான்) மாதத்தின் நடுப் பத்து நாட்களில் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃப் வழிபாட்டில்) இருப்பார்கள். இருபதாவது இரவு முடிந்து இருபத்தொன்றாவது இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருப்பவர்களும் திரும்புவார்கள்.

இவ்வழக்கப்படி, ஒரு ரமளானில் இஃதிகாஃப் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தாம் வழக்கமாக இல்லம் திரும்பும் இரவில் (பள்ளிவாசலிலேயே) தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடியவற்றை அவர்களுக்குக் கட்டளை இட்டார்கள்.

பின்னர் “நான் இந்த(நடு)ப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தேன். பிறகு இறுதிப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என எனக்குத் தோன்றியது. ஆகவே, என்னுடன் இந்த(நடு)ப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தவர் அதே இடத்திலேயே தங்கி (இஃதிகாஃப்) இருக்கட்டும். இந்த (லைலத்துல் கத்ரு) இரவை நான் (கனவில்) கண்டேன். பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டது. எனவே, (ரமளானின்) இறுதிப் பத்தில் ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடிக்கொள்ளுங்கள். நான் (லைலத்துல் கத்ரு இரவில்) ஈரச் சேற்றில் ஸஜ்தாச் செய்வதைப் போன்று (கனவில்) கண்டேன்” என்று கூறினார்கள்.

இருபத்தொன்றாவது நாள் இரவில் எங்களுக்கு மழை பெய்தது. பள்ளிவாசல் கூரையிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழும் இடத்தில் மழை நீர் சொட்டியது. அன்று காலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸுப்ஹுத் தொழுதுவிட்டுத் திரும்பும்போது அவர்களை நான் கண்டேன். அவர்களது முகத்தில் ஈரமான சேறு படிந்திருந்தது.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)


குறிப்பு : அப்துல் அஜீஸ் அத்தராவர்தீ (ரஹ்) வழி அறிவிப்பும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளான் மாதத்தின் நடுப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள் …” என்றே தொடங்குகிறது. (ஆனால்,) “அவர்களது நெற்றியில் ஈரமான சேறு” என்று காணப்படுகிறது.

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1992

حَدَّثَنَا ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ ثُمَّ أَيْقَظَنِي بَعْضُ أَهْلِي فَنُسِّيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ ‏ ‏الْغَوَابِرِ ‏
‏و قَالَ ‏ ‏حَرْمَلَةُ ‏ ‏فَنَسِيتُهَا

“லைலத்துல் கத்ரு இரவு எனக்குக் (கனவில்) காட்டப்பெற்றது. பின்னர் என் வீட்டாரில் ஒருவர் என்னை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தபோது, அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, (ரமளானின்) இறுதிப் பத்து இரவுகளில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு : ஹர்மலா பின் யஹ்யா (ரஹ்) அறிவிப்பில், “அதை நான் மறந்துவிட்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.