அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2112

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏
‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ مُوَافِينَ لِهِلَالِ ذِي الْحِجَّةِ قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَرَادَ مِنْكُمْ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ فَلَوْلَا أَنِّي أَهْدَيْتُ لَأَهْلَلْتُ بِعُمْرَةٍ قَالَتْ فَكَانَ مِنْ الْقَوْمِ مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَمِنْهُمْ مَنْ أَهَلَّ بِالْحَجِّ قَالَتْ فَكُنْتُ أَنَا مِمَّنْ أَهَلَّ بِعُمْرَةٍ فَخَرَجْنَا حَتَّى قَدِمْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏فَأَدْرَكَنِي يَوْمُ عَرَفَةَ وَأَنَا حَائِضٌ لَمْ أَحِلَّ مِنْ عُمْرَتِي فَشَكَوْتُ ذَلِكَ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ دَعِي عُمْرَتَكِ ‏ ‏وَانْقُضِي رَأْسَكِ ‏ ‏وَامْتَشِطِي وَأَهِلِّي بِالْحَجِّ قَالَتْ فَفَعَلْتُ فَلَمَّا كَانَتْ ‏ ‏لَيْلَةُ الْحَصْبَةِ ‏ ‏وَقَدْ ‏ ‏قَضَى ‏ ‏اللَّهُ حَجَّنَا أَرْسَلَ مَعِي ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ ‏ ‏فَأَرْدَفَنِي وَخَرَجَ بِي إِلَى ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ فَقَضَى اللَّهُ حَجَّنَا وَعُمْرَتَنَا وَلَمْ يَكُنْ فِي ذَلِكَ ‏ ‏هَدْيٌ ‏ ‏وَلَا صَدَقَةٌ وَلَا صَوْمٌ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏ ‏خَرَجْنَا مُوَافِينَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِهِلَالِ ذِي الْحِجَّةِ لَا نَرَى إِلَّا الْحَجَّ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ بِعُمْرَةٍ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏عَبْدَةَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏ ‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُوَافِينَ لِهِلَالِ ذِي الْحِجَّةِ مِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجَّةٍ وَعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجَّةٍ فَكُنْتُ فِيمَنْ أَهَلَّ بِعُمْرَةٍ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِهِمَا ‏ ‏و قَالَ ‏ ‏فِيهِ قَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏فِي ذَلِكَ إِنَّهُ قَضَى اللَّهُ حَجَّهَا وَعُمْرَتَهَا ‏ ‏قَالَ ‏ ‏هِشَامٌ ‏ ‏وَلَمْ يَكُنْ فِي ذَلِكَ ‏ ‏هَدْيٌ ‏ ‏وَلَا صِيَامٌ وَلَا صَدَقَةٌ

நாங்கள் துல்ஹஜ் மாதப் பிறையை எதிர்பார்த்தவர்களாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘விடைபெறும் ஹஜ்’ஜுக்காகப் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் உம்ராவிற்காக முஹ்ரிமாக விரும்புகின்றவர், உம்ராவிற்கு முஹ்ரிம் ஆகட்டும்; நான் என்னுடன் பலிப் பிராணியைக் கொண்டு வந்திருக்காவிட்டால் நானும் உம்ராவிற்காகவே முஹ்ரிம் ஆகியிருப்பேன்” என்று சொன்னார்கள். எனவே, மக்களில் சிலர் உம்ராவிற்காக முஹ்ரிமாகியிருந்தனர். வேறுசிலர் ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகியிருந்தனர். நான் உம்ராவிற்காக முஹ்ரிமானவர்களில் ஒருத்தியாக இருந்தேன்.

நாங்கள் புறப்பட்டு மக்காவை வந்தடைந்ததும் அரஃபா நாளில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நானோ எனது உம்ராவின் செயற்பாடுகளைச் செய்து இஹ்ராம் நிலையிலிருந்து விடுபட்டிருக்க வில்லை. எனவே, இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன்.

அப்போது நபி (ஸல்), “நீ உனது உம்ராவை விட்டுவிட்டு, உனது தலைமுடியை அவிழ்த்து, அதை வாரிக்கொண்டு ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகிக்கொள்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் செய்தேன். அல்லாஹ் எங்கள் ஹஜ்ஜை நிறைவேறச் செய்த பின்னர், ‘ஹஸ்பாவின் இரவில்‘ அல்லாஹ்வின் தூதர் (ஸல்), என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அவர் என்னைத் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டு ‘தன்யீம்’ நோக்கிச் சென்றார். அங்கிருந்து நான் உம்ராவிற்காகத் ‘தல்பியா’ கூறினேன். இவ்வாறாக, அல்லாஹ் எங்களுக்கு ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றித் தந்தான்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள்: “இந்த (முன் – பின்) செயலுக்காகப் பலியிடலோ தர்மமோ நோன்போ (ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து) நிகழவில்லை” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

இப்னு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் துல்ஹஜ் மாதப் பிறையை எதிர்பார்த்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது நாங்கள் (ஹஜ் மாதத்தில் உம்ராச் செய்யக் கூடாது என்று எண்ணியிருந்ததால்) ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் உம்ராவிற்காகத் தல்பியாக் கூற விரும்புகின்றவர், உம்ராவிற்கு முஹ்ரிமாகிக்கொள்ளட்டும் …” என்று கூறினார்கள் எனத் தொடங்குகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் துல்ஹஜ் மாதப் பிறையை எதிர்பார்த்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் சிலர் உம்ராவிற்காக (தமத்துஉ) முஹ்ரிமாகியிருந்தனர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) முஹ்ரிமாகியிருந்தனர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்கு மட்டும் (இஃப்ராத்) முஹ்ரிமாகியிருந்தனர். நான் உம்ராவிற்காக முஹ்ரிமானவர்களில் ஒருத்தியாக இருந்தேன் ..” என்று துவங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும், “ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் நிறைவேற்றித் தந்தான்” என அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது. மேலும், அதில் “இதற்கு(ப் பரிகாரமாக)ப் பலியிடலோ, தர்மமோ, நோன்போ (ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து) நிகழவில்லை” என ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.

மக்கா-மினா வழியிலுள்ள ஓரிடத்தின் பெயர் ‘அல்முஹ்ஸப்’ என்பதாகும். மினாவிலிருந்து மக்காவுக்குத் திரும்பும் ஹாஜிகள் இரவுப் பொழுதில் இங்குத் தங்குவர். அந்த இரவுக்குப் பெயர் ‘ஹஸ்பாவின் இரவு’ என்பதாகும்.

Share this Hadith:

Leave a Comment