அத்தியாயம்: 15, பாடம்: 39, ஹதீஸ் எண்: 2221

‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ عَبْدَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ : ‏

‏إِنَّمَا سَعَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَرَمَلَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏لِيُرِيَ الْمُشْرِكِينَ قُوَّتَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஸஃபா-மர்வாவுக்கிடையே) தொங்கோட்டம் ஓடியதும், இறையில்லத்தைச் சுற்றி வரும்போது விரைந்து நடந்ததும் தமது பலத்தை இணைவைப்பாளர்களுக்குத் காட்டுவதற்காகத்தான்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 39, ஹதீஸ் எண்: 2220

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ
‏‏قَدِمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابُهُ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَقَدْ ‏ ‏وَهَنَتْهُمْ ‏ ‏حُمَّى ‏ ‏يَثْرِبَ ‏ ‏قَالَ الْمُشْرِكُونَ إِنَّهُ يَقْدَمُ عَلَيْكُمْ غَدًا قَوْمٌ قَدْ ‏ ‏وَهَنَتْهُمْ ‏ ‏الْحُمَّى وَلَقُوا مِنْهَا شِدَّةً فَجَلَسُوا مِمَّا ‏ ‏يَلِي ‏ ‏الْحِجْرَ ‏‏وَأَمَرَهُمْ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ ‏ ‏يَرْمُلُوا ‏ ‏ثَلَاثَةَ أَشْوَاطٍ وَيَمْشُوا مَا بَيْنَ الرُّكْنَيْنِ لِيَرَى الْمُشْرِكُونَ ‏ ‏جَلَدَهُمْ ‏ ‏فَقَالَ الْمُشْرِكُونَ هَؤُلَاءِ الَّذِينَ زَعَمْتُمْ أَنَّ الْحُمَّى قَدْ ‏ ‏وَهَنَتْهُمْ ‏ ‏هَؤُلَاءِ ‏ ‏أَجْلَدُ ‏ ‏مِنْ كَذَا وَكَذَا ‏‏قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏وَلَمْ يَمْنَعْهُ أَنْ يَأْمُرَهُمْ أَنْ ‏ ‏يَرْمُلُوا ‏ ‏الْأَشْوَاطَ كُلَّهَا إِلَّا ‏ ‏الْإِبْقَاءُ عَلَيْهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (மக்காவிற்கு) வந்தபோது, யஸ்ரிபின் (மதீனாவின்) காய்ச்சலால் உடல் நலிவுற்றிருந்தனர். அப்போது (மக்கா நகர) இணைவைப்பாளர்கள், “காய்ச்சலால் நலிவடைந்து, அதனால் சிரமத்தைச் சந்தித்த ஒரு கூட்டத்தார் நாளைய தினம் உங்களிடம் வரப் போகிறார்கள்” என்று (ஏளனமாகப்) பேசிக்கொண்டனர்.

அதன்படி இணைவைப்பாளர்கள் (கஅபாவிற்கு அருகிலுள்ள அரை வட்டப் பகுதியான) ஹிஜ்ரை ஒட்டிய இடத்தில் உட்கார்ந்துகொண்(டு நபித்தோழர்களைப் பார்வையிட்)டனர். அப்போது இணைவைப்பாளர்களுக்குத் தமது பலத்தைக் காட்டுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (கஅபாவைச் சுற்றிவரும்போது முதல்) மூன்று சுற்றுகள் விரைந்து நடக்குமாறும், ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே (மெதுவாக) நடந்து செல்லுமாறும் கட்டளையிட்டார்கள்.

அப்போது இணைவைப்பாளர்கள், “காய்ச்சலால் இவர்கள் பலவீனமடைந்துள்ளனர் என நீங்கள் கருதினீர்களே!. இவர்களோ இன்னின்னதைவிட பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்” என்று (தம்மிடையே) பேசிக்கொண்டனர்.

தவாஃபின் அனைத்துச் சுற்றுகளிலும் விரைந்து நடக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டளையிடாததற்குக் காரணம், மக்கள்மீது கொண்ட இரக்கமேயாகும்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 39, ஹதீஸ் எண்: 2219

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ الْأَبْجَرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الطُّفَيْلِ ‏ ‏قَالَ: ‏

قُلْتُ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏أُرَانِي قَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَصِفْهُ لِي قَالَ قُلْتُ ‏ ‏رَأَيْتُهُ عِنْدَ ‏ ‏الْمَرْوَةِ ‏ ‏عَلَى نَاقَةٍ وَقَدْ كَثُرَ النَّاسُ عَلَيْهِ قَالَ فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏ذَاكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّهُمْ كَانُوا لَا ‏ ‏يُدَعُّونَ ‏ ‏عَنْهُ وَلَا يُكْرَهُونَ

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கின்றேன்” என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “அதைப் பற்றி எனக்கு விவரமாகச் சொல்லுங்கள்” என்றார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘மர்வா’ அருகில் (அதைச் சுற்றி வரும்போது) ஓர் ஒட்டகத்தின் மீதிருந்ததை நான் கண்டேன். அப்போது அவர்களைச் சுற்றி ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்” என்றேன். இப்னு அப்பாஸ் (ரலி), “அவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)! அவர்களைவிட்டு மக்கள் விரட்டப்படவோ வலுக் கட்டாயப் படுத்தப்படவோ மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 39, ஹதீஸ் எண்: 2218

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي حُسَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الطُّفَيْلِ ‏ ‏قَالَ:

قُلْتُ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏إِنَّ قَوْمَكَ يَزْعُمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَمَلَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبَيْنَ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَهِيَ سُنَّةٌ قَالَ صَدَقُوا وَكَذَبُوا

நான், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தவாஃபின்போதும், ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றி வரும்போதும் விரைந்து நடந்தார்கள். (எனவே) அது நபிவழியாகும் என உங்களுடைய சமூகத்தார் கூறுகின்றனரே?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் ஆமிர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 39, ஹதீஸ் எண்: 2217

حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْجُرَيْرِيُّ ‏ ‏
عَنْ‏ ‏أَبِي الطُّفَيْلِ ‏ ‏قَالَ: ‏

قُلْتُ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏أَرَأَيْتَ هَذَا ‏ ‏الرَّمَلَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏ثَلَاثَةَ أَطْوَافٍ وَمَشْيَ أَرْبَعَةِ أَطْوَافٍ أَسُنَّةٌ هُوَ فَإِنَّ قَوْمَكَ يَزْعُمُونَ أَنَّهُ سُنَّةٌ قَالَ فَقَالَ صَدَقُوا وَكَذَبُوا قَالَ قُلْتُ مَا قَوْلُكَ صَدَقُوا وَكَذَبُوا قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدِمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏فَقَالَ الْمُشْرِكُونَ إِنَّ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏وَأَصْحَابَهُ لَا يَسْتَطِيعُونَ أَنْ يَطُوفُوا ‏بِالْبَيْتِ ‏ ‏مِنْ الْهُزَالِ وَكَانُوا يَحْسُدُونَهُ قَالَ فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ ‏ ‏يَرْمُلُوا ‏ثَلَاثًا وَيَمْشُوا أَرْبَعًا قَالَ قُلْتُ لَهُ أَخْبِرْنِي عَنْ الطَّوَافِ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏رَاكِبًا أَسُنَّةٌ هُوَ فَإِنَّ قَوْمَكَ يَزْعُمُونَ أَنَّهُ سُنَّةٌ قَالَ صَدَقُوا وَكَذَبُوا قَالَ قُلْتُ وَمَا قَوْلُكَ صَدَقُوا وَكَذَبُوا قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَثُرَ عَلَيْهِ النَّاسُ يَقُولُونَ هَذَا ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏هَذَا ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏حَتَّى خَرَجَ ‏ ‏الْعَوَاتِقُ ‏ ‏مِنْ الْبُيُوتِ قَالَ وَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يُضْرَبُ النَّاسُ بَيْنَ يَدَيْهِ فَلَمَّا كَثُرَ عَلَيْهِ رَكِبَ وَالْمَشْيُ وَالسَّعْيُ أَفْضَلُ

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْجُرَيْرِيُّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ وَكَانَ أَهْلُ ‏ ‏مَكَّةَ ‏ ‏قَوْمَ حَسَدٍ وَلَمْ يَقُلْ يَحْسُدُونَهُ

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “தவாஃபின்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பதும் பிந்திய நான்கு சுற்றுகளில் (இயல்பாக) நடப்பதுமான ‘ரமல்’ பற்றி என்ன கருதுகிறீர்கள்? அது நபிவழியா? ஏனெனில், உங்களுடைய சமூகத்தார் அதை நபிவழியெனக் கூறுகின்றனரே?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும்” என்றார்கள்.

நான் “அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும் எனும் உங்களுடைய சொல்(லின் பொருள்) என்ன?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவிற்கு வந்தபோது இணைவைப்பாளர்கள், ‘முஹம்மதும் அவருடைய தோழர்களும் (மதீனாவிற்குப் போய்) மெலிந்துவிட்டதால் அவர்களால் இறையில்லம் கஅபாவைச் சுற்றி வர முடியாது’ என்று கூறினர். நபியவர்கள் மீது இணைவைப்பாளர்கள் பொறாமை கொண்டவர்களாய் இருந்தனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தோழர்களிடம் தவாஃபின்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடக்குமாறும் (பிந்திய) நான்கு சுற்றுகளில் (இயல்பாக) நடக்குமாறும் கட்டளையிட்டார்கள்” என்றார்கள்.

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “வாகனத்தில் அமர்ந்தவாறு ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவருவது (ஸயீ) பற்றி எனக்குக் கூறுங்கள். அது நபிவழியா? ஏனெனில், உங்கள் சமூகத்தார் அதையும் நபிவழியெனக் கூறுகின்றனரே?” என்று கேட்டேன். அதற்கும் இப்னு அப்பாஸ் (ரலி), “அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும்” என்றார்கள். நான், “அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும் எனும் உங்களுடைய சொல்(லின் பொருள்) என்ன?” என்று கேட்டேன்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்தபோது) அவர்களைச் சுற்றிலும் ஏராளமான மக்கள் ‘இதோ முஹம்மத்!; இதோ முஹம்மத்!’ எனக் கூறியவாறு திரண்டுவிட்டனர். இல்லங்களிலிருந்து இளம்பெண்கள்கூட வெளியே வந்து விட்டனர். (பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்பாக மக்கள் விரட்டப்படுவதில்லை. எனவே, ஏராளமான மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டதால் வாகனத்தில் (அமர்ந்தவாறு ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றி) வந்தார்கள். ஆயினும், (ஸயீயின்போது) நடப்பதும் ஓடுவதுமே சிறந்ததாகும்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலி)


குறிப்பு :

யஸீத் (ரஹ்) வழி அறிவிப்பில், “மக்காவாசிகள் பொறாமை கொண்ட சமுதாயத்தவராக இருந்தனர்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 39, ஹதீஸ் எண்: 2216

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَالِكٌ ‏ ‏وَابْنُ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ‏عَنْ أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَمَلَ ‏ ‏الثَّلَاثَةَ أَطْوَافٍ مِنْ الْحَجَرِ إِلَى الْحَجَرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தவாஃபின்போது) ஹஜருல் அஸ்வதிலிருந்து ஹஜருல் அஸ்வத் வரை தவாஃபின் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 39, ஹதீஸ் எண்: 2215

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏أَنَّهُ قَالَ :‏
رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَمَلَ ‏ ‏مِنْ الْحَجَرِ الْأَسْوَدِ حَتَّى انْتَهَى إِلَيْهِ ثَلَاثَةَ أَطْوَافٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜருல் அஸ்வதிலிருந்து ஹஜருல் அஸ்வத் வரை தவாஃபின் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைவாக நடந்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 39, ஹதீஸ் எண்: 2214

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمُ بْنُ أَخْضَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ: أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏رَمَلَ ‏ ‏مِنْ الْحَجَرِ إِلَى الْحَجَرِ وَذَكَرَ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَعَلَهُ

இப்னு உமர் (ரலி) (கஅபாவைச் சுற்றி வரும்போது) ஹஜருல் அஸ்வத் முதல் ஹஜருல் அஸ்வத் வரை விரைவாக நடந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறே செய்தார்கள் என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 39, ஹதீஸ் எண்: 2213

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانٍ الْجُعْفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ:‏
رَمَلَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الْحَجَرِ إِلَى الْحَجَرِ ثَلَاثًا وَمَشَى أَرْبَعًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (கஅபாவைச் சுற்றிவரும்போது முதல்) மூன்று சுற்றுகளில் ஹஜருல் அஸ்வத் முதல் (மறு படியும்) ஹஜருல் அஸ்வத் வரை விரைவாக நடந்தார்கள். (பிந்திய) நான்கு சுற்றுகளில் (இயல்பாக) நடந்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 39, ஹதீஸ் எண்: 2212

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَ ‏ ‏حَرْمَلَةُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏قَالَ :‏
رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ ‏ ‏يَقْدَمُ ‏ ‏مَكَّةَ ‏ ‏إِذَا ‏ ‏اسْتَلَمَ ‏ ‏الرُّكْنَ الْأَسْوَدَ أَوَّلَ مَا يَطُوفُ حِينَ يَقْدَمُ ‏ ‏يَخُبُّ ‏ ‏ثَلَاثَةَ أَطْوَافٍ مِنْ السَّبْعِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவிற்கு வந்தபோது அவர்களை நான் பார்த்தேன்; அவர்கள் முதலாவது தவாஃபில் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டார்கள். ஏழு சுற்றுகளில் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடந்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)