அத்தியாயம்: 15, பாடம்: 39, ஹதீஸ் எண்: 2220

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ
‏‏قَدِمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابُهُ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَقَدْ ‏ ‏وَهَنَتْهُمْ ‏ ‏حُمَّى ‏ ‏يَثْرِبَ ‏ ‏قَالَ الْمُشْرِكُونَ إِنَّهُ يَقْدَمُ عَلَيْكُمْ غَدًا قَوْمٌ قَدْ ‏ ‏وَهَنَتْهُمْ ‏ ‏الْحُمَّى وَلَقُوا مِنْهَا شِدَّةً فَجَلَسُوا مِمَّا ‏ ‏يَلِي ‏ ‏الْحِجْرَ ‏‏وَأَمَرَهُمْ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ ‏ ‏يَرْمُلُوا ‏ ‏ثَلَاثَةَ أَشْوَاطٍ وَيَمْشُوا مَا بَيْنَ الرُّكْنَيْنِ لِيَرَى الْمُشْرِكُونَ ‏ ‏جَلَدَهُمْ ‏ ‏فَقَالَ الْمُشْرِكُونَ هَؤُلَاءِ الَّذِينَ زَعَمْتُمْ أَنَّ الْحُمَّى قَدْ ‏ ‏وَهَنَتْهُمْ ‏ ‏هَؤُلَاءِ ‏ ‏أَجْلَدُ ‏ ‏مِنْ كَذَا وَكَذَا ‏‏قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏وَلَمْ يَمْنَعْهُ أَنْ يَأْمُرَهُمْ أَنْ ‏ ‏يَرْمُلُوا ‏ ‏الْأَشْوَاطَ كُلَّهَا إِلَّا ‏ ‏الْإِبْقَاءُ عَلَيْهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (மக்காவிற்கு) வந்தபோது, யஸ்ரிபின் (மதீனாவின்) காய்ச்சலால் உடல் நலிவுற்றிருந்தனர். அப்போது (மக்கா நகர) இணைவைப்பாளர்கள், “காய்ச்சலால் நலிவடைந்து, அதனால் சிரமத்தைச் சந்தித்த ஒரு கூட்டத்தார் நாளைய தினம் உங்களிடம் வரப் போகிறார்கள்” என்று (ஏளனமாகப்) பேசிக்கொண்டனர்.

அதன்படி இணைவைப்பாளர்கள் (கஅபாவிற்கு அருகிலுள்ள அரை வட்டப் பகுதியான) ஹிஜ்ரை ஒட்டிய இடத்தில் உட்கார்ந்துகொண்(டு நபித்தோழர்களைப் பார்வையிட்)டனர். அப்போது இணைவைப்பாளர்களுக்குத் தமது பலத்தைக் காட்டுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (கஅபாவைச் சுற்றிவரும்போது முதல்) மூன்று சுற்றுகள் விரைந்து நடக்குமாறும், ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே (மெதுவாக) நடந்து செல்லுமாறும் கட்டளையிட்டார்கள்.

அப்போது இணைவைப்பாளர்கள், “காய்ச்சலால் இவர்கள் பலவீனமடைந்துள்ளனர் என நீங்கள் கருதினீர்களே!. இவர்களோ இன்னின்னதைவிட பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்” என்று (தம்மிடையே) பேசிக்கொண்டனர்.

தவாஃபின் அனைத்துச் சுற்றுகளிலும் விரைந்து நடக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டளையிடாததற்குக் காரணம், மக்கள்மீது கொண்ட இரக்கமேயாகும்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

Share this Hadith: