அத்தியாயம்: 15, பாடம்: 04, ஹதீஸ் எண்: 2034

و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاتِمٌ يَعْنِي ابْنَ إِسْمَعِيلَ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏قَالَ ‏

‏كَانَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏إِذَا قِيلَ لَهُ الْإِحْرَامُ مِنْ ‏ ‏الْبَيْدَاءِ ‏ ‏قَالَ ‏ ‏الْبَيْدَاءُ ‏ ‏الَّتِي تَكْذِبُونَ فِيهَا عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا ‏ ‏أَهَلَّ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا مِنْ عِنْدِ الشَّجَرَةِ حِينَ قَامَ بِهِ بَعِيرُهُ

‘பைதாஉ’ எனும் இடத்திலிருந்தே இஹ்ராம் பூணவேண்டும் என்று (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், சொல்லப் பட்டால் அவர்கள், “பைதாஉ எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூண்டார்கள் என நீங்கள் சொல்வது பொய்யாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (துல்ஹுலைஃபா பள்ளிக்கு அருகிலிருந்த) அந்த மரத்திற்குப் பக்கத்தில் தமது ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்தபோதே பூண்டார்கள்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக அவரின் மகன் ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment