அத்தியாயம்: 15, பாடம்: 05, ஹதீஸ் எண்: 2035

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ بْنِ جُرَيْجٍ ‏

‏أَنَّهُ قَالَ ‏ ‏لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏رَأَيْتُكَ تَصْنَعُ أَرْبَعًا لَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِكَ يَصْنَعُهَا قَالَ مَا هُنَّ يَا ‏ ‏ابْنَ جُرَيْجٍ ‏ ‏قَالَ رَأَيْتُكَ لَا تَمَسُّ مِنْ الْأَرْكَانِ إِلَّا الْيَمَانِيَيْنِ وَرَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ ‏ ‏السِّبْتِيَّةَ ‏ ‏وَرَأَيْتُكَ تَصْبُغُ بِالصُّفْرَةِ وَرَأَيْتُكَ إِذَا كُنْتَ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏أَهَلَّ ‏ ‏النَّاسُ إِذَا رَأَوْا الْهِلَالَ وَلَمْ تُهْلِلْ أَنْتَ حَتَّى يَكُونَ يَوْمُ التَّرْوِيَةِ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏أَمَّا الْأَرْكَانُ فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَمَسُّ إِلَّا الْيَمَانِيَيْنِ وَأَمَّا النِّعَالُ السِّبْتِيَّةُ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَلْبَسُ النِّعَالَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ وَيَتَوَضَّأُ فِيهَا فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا وَأَمَّا الصُّفْرَةُ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصْبُغُ بِهَا فَأَنَا أُحِبُّ أَنْ أَصْبُغَ بِهَا وَأَمَّا ‏ ‏الْإِهْلَالُ ‏ ‏فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُهِلُّ ‏ ‏حَتَّى ‏ ‏تَنْبَعِثَ ‏ ‏بِهِ رَاحِلَتُهُ ‏

‏حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو صَخْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ قُسَيْطٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ بْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ ‏ ‏حَجَجْتُ مَعَ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏بَيْنَ حَجٍّ وَعُمْرَةٍ ثِنْتَيْ عَشْرَةَ مَرَّةً فَقُلْتُ يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏لَقَدْ رَأَيْتُ مِنْكَ أَرْبَعَ خِصَالٍ وَسَاقَ الْحَدِيثَ بِهَذَا الْمَعْنَى إِلَّا فِي قِصَّةِ ‏ ‏الْإِهْلَالِ ‏ ‏فَإِنَّهُ خَالَفَ رِوَايَةَ ‏ ‏الْمَقْبُرِيِّ ‏ ‏فَذَكَرَهُ بِمَعْنًى سِوَى ذِكْرِهِ إِيَّاهُ

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “அபூஅப்திர் ரஹ்மான்! உங்கள் தோழர்களில் வேறெவரும் செய்யாத நான்கு விஷயங்களை நீங்கள் செய்வதை நான் பார்த்தேன்” என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “அவை யாவை, இப்னு ஜுரைஜே?” என்று கேட்டார்கள். “(கஅபாவைச் சுற்றி வரும்போது ஹஜருல் அஸ்வத் மற்றும் ருக்னுல் யமானீ ஆகிய) இரு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடக் கண்டேன். மேலும், தோல் காலணிகளை நீங்கள் அணிவதைக் கண்டேன். நீங்கள் (உங்கள் ஆடைக்கு) மஞ்சள் சாயமிடுவதைக் கண்டேன். மேலும், நீங்கள் மக்காவில் இருக்கும்போது, மக்கள் (துல்ஹஜ் மாத) தலைப் பிறையைக் கண்டவுடன் இஹ்ராம் பூண்டாலும், நீங்கள் மட்டும் துல்ஹஜ் எட்டாம் நாள் (யவ்முத் தர்வியா) வரும்வரை இஹ்ராம் பூணாமல் இருப்பதை நான் கண்டேன் (இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன?)” என்று கேட்டேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “கஅபாவின் (நான்கு) மூலைகளைப் பொருத்தவரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இரு மூலைகளை மட்டுமே தொட்டதை நான் பார்த்தேன். செருப்புகளைப் பொருத்தவரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முடியில்லாத காலணிகளை அணிவதையும் அதனுடன் உளூச் செய்வதையும் நான் பார்த்திருக்கின்றேன். ஆகவே, நானும் அவற்றை அணிவதை விரும்புகின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மஞ்சள் நிறத்தால் (தமது ஆடைக்குச்) சாயமிடுவதை நான் பார்த்திருக்கின்றேன். ஆகவே, நானும் அதனால் (எனது ஆடைக்குச்) சாயமிடுவதை விரும்புகின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தமது வாகனம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும்வரை (இஹ்ராம் பூண்டு) தல்பியா கூறுவதை நான் பார்த்ததில்லை.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்)

குறிப்பு : இபுனு ஸகர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் ஹஜ்ஜையும் உம்ராவையும் பன்னிரண்டு தடவைகள் நிறைவேற்றியுள்ளேன். நான் அவர்களிடம், “அபூஅப்திர் ரஹ்மான்! நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை நான் பார்த்தேன்” என உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) கூறினார்கள் … என ஹதீஸ் ஆரம்பமாகிறது. ஆனால், இஹ்ராம் பூணுவது தொடர்பான மக்பரி (ரஹ்) வழி வரும் மேற்காணும் தகவலுக்கு முரணாகக் காணப்படுகிறது.

Share this Hadith:

Leave a Comment