அத்தியாயம்: 16, பாடம்: 4, ஹதீஸ் எண்: 2519

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَخْطُبُ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ وَلَا ‏ ‏يَسُومُ ‏ ‏عَلَى ‏ ‏سَوْمِ ‏ ‏أَخِيهِ وَلَا تُنْكَحُ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَلَا عَلَى خَالَتِهَا وَلَا تَسْأَلُ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا ‏ ‏لِتَكْتَفِئَ صَحْفَتَهَا ‏ ‏وَلْتَنْكِحْ فَإِنَّمَا لَهَا مَا كَتَبَ اللَّهُ لَهَا

ஒரு பெண்ணை, தம் (முஸ்லிம்) சகோதரன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது, எவரும் (குறுக்கிட்டுப்) பெண் பேசலாகாது. ஒருவர், தம் (முஸ்லிம்) சகோதரன் (ஒரு பொருளுக்கு) விலை பேசிக் கொண்டிருக்கும்போது, (அப்பொருளை) விலை பேசலாகாது. ஒருவர் ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது அவளுடைய தாயின் சகோதரியையும் (ஒருசேர) மணக்கலாகாது.

ஒரு பெண், தன் (முஸ்லிம்) சகோதரியின் உரிமையைப் பறித்து(த் தனதாக்கி)க்கொள்ளும் பொருட்டு அவளை மணவிலக்குச் செய்யுமாறு (அவளுடைய கணவனிடம்) கேட்கக் கூடாது. மாறாக, (இரண்டாம் தாரமாக) மணந்துகொள்ளட்டும். ஏனெனில், இவளுக்காக அல்லாஹ் விதித்துள்ளது நிச்சயம் இவளுக்குக் கிடைக்கும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith: