அத்தியாயம்: 16, பாடம்: 4, ஹதீஸ் எண்: 2521

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏وَابْنِ نَافِعٍ ‏ ‏قَالُوا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يُجْمَعَ بَيْنَ الْمَرْأَةِ وَعَمَّتِهَا وَبَيْنَ الْمَرْأَةِ وَخَالَتِهَا ‏


و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَبَابَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَرْقَاءُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மணப்பதற்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 4, ஹதீஸ் எண்: 2520

‏و حَدَّثَنِي ‏ ‏مُحْرِزُ بْنُ عَوْنِ بْنِ أَبِي عَوْنٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ تُنْكَحَ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا أَوْ خَالَتِهَا أَوْ أَنْ تَسْأَلَ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا ‏ ‏لِتَكْتَفِئَ ‏ ‏مَا فِي ‏ ‏صَحْفَتِهَا ‏ ‏فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ رَازِقُهَا

ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மணமுடிப்பதற்கும், (ஒரு பெண்) தன் (இஸ்லாமிய) சகோதரியின் உரிமையைப் பறித்துக் கொள்வதற்காக அவளை மணவிலக்குச் செய்யுமாறு (அவளுடைய கணவனிடம்) கோருவதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்தார்கள். ஏனெனில், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் இவளுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குபவன் ஆவான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 4, ஹதீஸ் எண்: 2519

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَخْطُبُ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ وَلَا ‏ ‏يَسُومُ ‏ ‏عَلَى ‏ ‏سَوْمِ ‏ ‏أَخِيهِ وَلَا تُنْكَحُ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَلَا عَلَى خَالَتِهَا وَلَا تَسْأَلُ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا ‏ ‏لِتَكْتَفِئَ صَحْفَتَهَا ‏ ‏وَلْتَنْكِحْ فَإِنَّمَا لَهَا مَا كَتَبَ اللَّهُ لَهَا

ஒரு பெண்ணை, தம் (முஸ்லிம்) சகோதரன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது, எவரும் (குறுக்கிட்டுப்) பெண் பேசலாகாது. ஒருவர், தம் (முஸ்லிம்) சகோதரன் (ஒரு பொருளுக்கு) விலை பேசிக் கொண்டிருக்கும்போது, (அப்பொருளை) விலை பேசலாகாது. ஒருவர் ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது அவளுடைய தாயின் சகோதரியையும் (ஒருசேர) மணக்கலாகாது.

ஒரு பெண், தன் (முஸ்லிம்) சகோதரியின் உரிமையைப் பறித்து(த் தனதாக்கி)க்கொள்ளும் பொருட்டு அவளை மணவிலக்குச் செய்யுமாறு (அவளுடைய கணவனிடம்) கேட்கக் கூடாது. மாறாக, (இரண்டாம் தாரமாக) மணந்துகொள்ளட்டும். ஏனெனில், இவளுக்காக அல்லாஹ் விதித்துள்ளது நிச்சயம் இவளுக்குக் கிடைக்கும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 4, ஹதீஸ் எண்: 2517

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏قَبِيصَةُ بْنُ ذُؤَيْبٍ الْكَعْبِيُّ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ:‏

نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَجْمَعَ الرَّجُلُ بَيْنَ الْمَرْأَةِ وَعَمَّتِهَا وَبَيْنَ الْمَرْأَةِ وَخَالَتِهَا ‏


قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏فَنُرَى خَالَةَ أَبِيهَا وَعَمَّةَ أَبِيهَا بِتِلْكَ الْمَنْزِلَةِ

ஒருவர் ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் (ஒருசேர) மனைவியராக்கிக்கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

“இந்த ஹதீஸின் அடிப்படையில், ஒரு பெண்ணின் தந்தையின் சகோதரியையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒரே தரத்திலேயே நாங்கள் கருதுகிறோம்” என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 16, பாடம்: 4, ஹதீஸ் எண்: 2518

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏أَنَّهُ كَتَبَ إِلَيْهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تُنْكَحُ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَلَا عَلَى خَالَتِهَا ‏

و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

“ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது அவளுடைய தாயின் சகோதரியையும் (ஒருசேர ஒருவர்) மணக்கலாகாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 4, ஹதீஸ் எண்: 2516

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ مَسْلَمَةَ ‏ ‏مَدَنِيٌّ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏مِنْ وَلَدِ ‏ ‏أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا تُنْكَحُ الْعَمَّةُ عَلَى بِنْتِ الْأَخِ وَلَا ابْنَةُ الْأُخْتِ عَلَى الْخَالَةِ

“ஒரு பெண்ணையும் அவளுடைய சகோதரனின் மகளையும் (ஒருவர்) ஒருசேர மணக்கலாகாது; ஒரு பெண்ணையும் அவளுடைய சகோதரியின் மகளையும் ஒருசேர மணக்கலாகாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 4, ஹதீஸ் எண்: 2515

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏عِرَاكِ بْنِ مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ أَرْبَعِ نِسْوَةٍ أَنْ يُجْمَعَ بَيْنَهُنَّ الْمَرْأَةِ وَعَمَّتِهَا وَالْمَرْأَةِ وَخَالَتِهَا

“ஒரு பெண், அவளுடைய தந்தையின் சகோதரி; ஒரு பெண், அவளுடைய தாயின் சகோதரி ஆகிய நான்கு பெண்களை ஒருசேர மனைவியராக ஆக்கிக்கொள்ளக் கூடாது” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 4, ஹதீஸ் எண்: 2514

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يُجْمَعُ بَيْنَ الْمَرْأَةِ وَعَمَّتِهَا وَلَا بَيْنَ الْمَرْأَةِ وَخَالَتِهَا

“ஒரு பெண்ணை மணந்தவர், அவளுடைய தந்தையின் சகோதரி(யான அத்தை)யையோ தன் மனைவியின் தாயின் சகோதரியையோ ஒருசேர மனைவியர் ஆக்கிக்கொள்ளக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)