அத்தியாயம்: 16, பாடம்: 4, ஹதீஸ் எண்: 2520

‏و حَدَّثَنِي ‏ ‏مُحْرِزُ بْنُ عَوْنِ بْنِ أَبِي عَوْنٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ تُنْكَحَ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا أَوْ خَالَتِهَا أَوْ أَنْ تَسْأَلَ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا ‏ ‏لِتَكْتَفِئَ ‏ ‏مَا فِي ‏ ‏صَحْفَتِهَا ‏ ‏فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ رَازِقُهَا

ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மணமுடிப்பதற்கும், (ஒரு பெண்) தன் (இஸ்லாமிய) சகோதரியின் உரிமையைப் பறித்துக் கொள்வதற்காக அவளை மணவிலக்குச் செய்யுமாறு (அவளுடைய கணவனிடம்) கோருவதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்தார்கள். ஏனெனில், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் இவளுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குபவன் ஆவான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)