حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ عَنْ نُبَيْهِ بْنِ وَهْبٍ أَنَّ عُمَرَ بْنَ عُبَيْدِ اللَّهِ أَرَادَ أَنْ يُزَوِّجَ طَلْحَةَ بْنَ عُمَرَ بِنْتَ شَيْبَةَ بْنِ جُبَيْرٍ فَأَرْسَلَ إِلَى أَبَانَ بْنِ عُثْمَانَ يَحْضُرُ ذَلِكَ وَهُوَ أَمِيرُ الْحَجِّ فَقَالَ أَبَانُ سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ يَقُولُ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَنْكِحُ الْمُحْرِمُ وَلَا يُنْكَحُ وَلَا يَخْطُبُ
உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்), (தம்முடைய மகன்) தல்ஹாவுக்கு ஷைபா பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் மகளைத் திருமணம் செய்ய விரும்பினார். எனவே, (அவ்வாண்டு) ஹாஜிகளின் தலைவராயிருந்த அபான் பின் உஸ்மான் பின் அஃப்பான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பி (அத்திருமணத்திற்கு) வரவேண்டுமென்று அழைத்தார்.
அப்போது அபான் (ரஹ்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘இஹ்ராம் புனைந்தவர் (தாமும்) திருமணம் செய்யக் கூடாது. (பிறரால்) திருமணம் செய்து வைக்கப்படவும் கூடாது. பெண் கேட்கவும் கூடாது’ என்று கூறினார்கள் என (என் தந்தை) உஸ்மான் (ரலி) கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறி(மறுத்து)விட்டார்.
அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக நுபைஹ் பின் வஹ்பு (ரஹ்)