و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ وَمُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ جَمِيعًا عَنْ الثَّقَفِيِّ قَالَ ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ عَنْ أَيُّوبَ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ:
أَنَّ سَالِمًا مَوْلَى أَبِي حُذَيْفَةَ كَانَ مَعَ أَبِي حُذَيْفَةَ وَأَهْلِهِ فِي بَيْتِهِمْ فَأَتَتْ تَعْنِي ابْنَةَ سُهَيْلٍ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّ سَالِمًا قَدْ بَلَغَ مَا يَبْلُغُ الرِّجَالُ وَعَقَلَ مَا عَقَلُوا وَإِنَّهُ يَدْخُلُ عَلَيْنَا وَإِنِّي أَظُنُّ أَنَّ فِي نَفْسِ أَبِي حُذَيْفَةَ مِنْ ذَلِكَ شَيْئًا فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْضِعِيهِ تَحْرُمِي عَلَيْهِ وَيَذْهَبْ الَّذِي فِي نَفْسِ أَبِي حُذَيْفَةَ فَرَجَعَتْ فَقَالَتْ إِنِّي قَدْ أَرْضَعْتُهُ فَذَهَبَ الَّذِي فِي نَفْسِ أَبِي حُذَيْفَةَ
அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமை(யும் வளர்ப்பு மகனுமான) ஸாலிம் (ரலி), அபூஹுதைஃபாவுடனும் அவருடைய மனைவி ஸஹ்லா பின்த்தி ஸுஹைல் (ரலி) உடனும் அவர்களது வீட்டில் வசித்து வந்தார். நபி (ஸல்) அவர்களிடம் ஸஹ்லா (ரலி) வந்து, “ஸாலிம், ஆண்கள் அடையும் பருவ வயதை அடைந்துவிட்டார். மற்றவர்களைப் போலவே அவரும் அறிந்து கொள்கின்றார். இந்நிலையில் அவர் எங்கள் வீட்டிற்குள் வருகின்றார். இதனால் (அவர் என்னைத் திரையின்றிப் பார்க்க நேரிடும் என்பதால்) அபூஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறதோ என்று நான் எண்ணுகிறேன்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) ஸஹ்லாவிடம், “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. அதனால் நீ அவருக்குச் செவிலித் தாய் ஆகிவிடுவாய். (உன்னுடைய கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் நிலவும் அதிருப்தியும் மறைந்துவிடும்” என்று ஆலோசனை கூறினார்கள்.
அவர் (திரும்பிச் சென்று) மீண்டும் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, “நான் அவருக்குப் பால் கொடுத்துவிட்டேன். அதனால் என் கணவர் அபூஹுதைஃபாவின் மனத்தில் நிலவிய அதிருப்தியும் மறைந்துவிட்டது” என்று கூறினார்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)